;
Athirady Tamil News

சமூக நலன்னோம்பலுக்கு சாதாரண வெளிப்படுத்தல்!!(கட்டுரை)

0

By Dhusyanth அம்பாந்தோட்டையும் வடக்கின் கண்ணோட்டமும் சாதாரண கண்காணிப்பு வெளிப்படுத்தல்

பிரித்தானியரிடமிருந்து 1948 மாசி மாதம் 04 ம் திகதி சிலோனாது சுகந்திரத்தினைப் பெற்றுக் கொண்டது. ஆயினும் சுகந்திர சிலோனது காற்றினை சிலோன் வாழ்மக்கள் அனுபவிக்கவில்லை. அனுபவிப்பதற்கும் அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை.

சுகந்திர சிலோனானது சுகந்திரத்திற்கும் பின்னும் ஆயுதம் தாங்கிய இளைஞர்களின் போராட்டங்களுக்கும் முகங்கொடுத்தது. ஆயுதம்தரித்த சிங்கள இளைஞர்கள் உள்நாட்டில் போராட்டங்களை மேற்கொண்டனர்.

பின்னர் ஆயுதம்தரித்த தமிழ் இளைஞர்கள் போராட்டங்களை நடாத்தினர். குறிப்பாக யூலைக்கலவரம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. 23 24 யூலை 1983 தொடக்கம் 30 யூலை 1983 வரைக்குமாக பல்இனக்கலாச்சாரத்தினைக் கொண்டவர்கள் பாதிக்கப்பட்டனர்.

35வருட கொடுர யுத்தத்திற்கு முகங்கொடுக்கப்பட்ட சமூகமாக சிலோன் மக்கள் காணப்பட்டணர். சிங்களவர்கள் தமிழர்கள் என யுத்தம் நடைபெற்றது.

2007-2009வரையான காலப்பகுதியில் ஆயுதம் தரித்த தமிழ் இளைஞர்களுக்கும் சிலோன் நாட்டின் அரச படைக்குமாக உள்நாட்டு யுத்தம் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கில் தமது உரிமைகளுக்காக போராடிய ஆயுதம் தரித்த தமிழ் இளைஞர்களுக்கும் சிலோன் அரச படைக்குமாக யுத்தம் தொடரப்பட்டது.

2004ல் சுணாமியின் போது ஒன்றுபட்டு செற்பட்டனர் ஆயுதம் தரித்த தழிழ் இளைஞர்கள் மற்றும் சிலோன் அரச படையினர். ஏன்? மக்களின் மீட்புப்பணிகளுக்கு பாரியளவில் ஒத்துழைப்புடன் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் முடியாமல் போனமை சிலோனது அபிவிருத்தியில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியது.

2007-2009 காலப்பகுதி உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. இதில் வடக்குகிழக்கு மக்கள் பாதிப்புற்றனர் அதிலும் குறிப்பாக கிளிநெச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் யுத்தத்தினால் பாரியளவில் பாதிக்கப்பட்டது.

மக்கள் பலர் இறந்தனர். ஆயுதம்தாங்கிய அரச படையினர் இறந்தனர் ஆயுதம் தரித்த தமிழ் இளைஞர்கள் இறந்தனர். மொத்தில் இறப்பினை ஒருவர் ஒருவர் கொண்டாடுவதற்கு பழக்கப்படுத்திக் கொண்டனர்.

இறப்பினை சிலோன் மக்கள் கொண்டாடினர். பல்லின மக்களும் இறப்பினை திருவிழாவாக மகிழ்ந்தனர். உண்மையில் சுகந்திரத்திற்காக போராடிய சிலோன் மக்கள் சுகந்திரத்தின் பின் யுத்த காற்றினையே சுவாசிக்க தள்ளப்பட்டனர்.

2009பின் காலப்பகுதியில் உள்நாட்டு போர் முடிவுற்றது. போரின் இறப்பின் வலியினை மறப்பதற்கும் அரசியலிற்குமாக வெற்றிக் கொண்டாட்டமாக்கப்பட்டது. உண்மையில் சிங்களவர்கள் தமிழர்கள் இறக்க வேண்டுமென நினைக்கவில்லை. அதனைக் கொண்டாடவும் விரும்பவில்லை மாறாக தள்ளப்பட்டனர்.

அதேபோல் தமிழர்கள் சிங்களவர்களின் இறப்பினை கொண்டாடவிரும்பவில்லை மாறாக தள்ளப்பட்டனர். சிங்களவர் மற்றும் தமிழர் மனதில் காணப்படும் பயம் இதற்கான காரணமாவுமிருக்கலாம்.

எது எவ்வாறாயினும் இருதரப்பிலும் இழப்புக்கள் நடைபெற்றிருந்தது. இவ் இழப்புக்கள் மற்றும் நீதி மறுக்கப்பட்டது இருதரப்பிலும் சமூக மனவடுக்குள்ளாக்கப்பட்டனர்.

பெரும்பான்மைத் தலைவர்கள் நினைத்திருந்தால் என்றோ சிலோன் சுகந்திர பல்லின பல்கலாச்சார நாடாக சமாதானத்துடன் இருந்திருக்கலாம். கண்டிய சிங்கள பெரும்பான்மையினரின் மனங்களில் மாற்றம் தேவையாகவுள்ளது.

அம்பாந்தோட்டை என்கின்ற போது முன்னாள் சனாதிபதி. பிரேமதாஸ ஞபகத்திலிருந்தாலும் மக்கள் மனங்களில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே உடனடியாக ஞபகத்தில் வருகின்றார். காரணம் மகிந்த அவர்களுக்கு மக்கள் கொடுத்த இடம் இதில் பாரிய பங்கினை வகிக்கின்றது.

அம்பாந்தோட்டை ஒர் வடக்கில் மன்னார் போன்ற வளம்பொருந்திய மாவட்டம் இவ் மாவட்டத்தில் உள்ளவர்கள் தங்கள் தேவைகளினை தாமாக மேற்கொண்டும் உழைப்பின் ஊடாகவும் வளர்ச்சியடைந்தும் உட்கட்டுமான அபிவிருத்திகள் நிறைவுற்றும் தெடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டும் வரும் நிலையில் மக்கள் தங்கள் மனங்களை தாமாக மாற்றியும் புத்தாக்க சிந்தனையிலும் மற்றும் மாற்றப்படாத கசப்பான மனவடுக்களுடனும் வாழ்கின்றனர்.

வடக்கின் பார்வையில் அம்பாந்தோட்டை வளமிக்க இரக்கமுள்ள மனிதர்கள் மனிதத்துடன் வாழும் மாவட்டமாகக் காணப்படுகின்றது. பல்வேறுபட்ட மனிதர்களாகிய எமக்கிடையில் பல்வேறு தனித்துவங்கள் காணப்படுகின்றன. பாரிய பழமையான வரலாறுகளும் காணப்படுகின்றது.

சிலோனில் சமாதானம் என்பதனை ஒவ்வொருவரும் தாமாக உணரவேண்டும். சமாதானத்தினை உணர்வுரீதியாக உயர்ந்துகொள்ளுவதுடனும் இனியொரு முரண்பாட்டினை ஏற்படாவண்ணமும் நாம் அனைவரும் மற்றவர்களின் மனவடுக்களினை புரிந்து உணர்ந்து பயணித்து சுகந்திர காற்றினை சிலோனில் உணரலாம்.

மனிதர்களாகிய நாம் மனிதத்துடன் எதனையும் பார்த்து பகுத்தறிவுடன் செயற்பட வேண்டியுமுள்ளது. பூகோள அரசியலில் சிலோன் இரத்தினதீபமாக பார்க்கின்றனர். சமூக நலன்னோம்பலுக்கு நம் அனைவரது பங்குபற்றலும் முக்கியமானதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × four =

*