;
Athirady Tamil News

சுமந்திரனின் பிளான் A ஸ்ராட்… ஆனோல்ட்டை மேயராக்கிய அதே “Strategy” மாவைக்கும் வேலை செய்யுமா? (கட்டுரை -VIDEO)

0


எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக விக்னேஸ்வரனை முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் எமக்கு அறவே கிடையாது“- இப்படி சொல்லியுள்ளார் தமிழரசுக்கட்சியின் எம்.பி சுமந்திரன்.

சுமந்திரன் பேச்சு வெளியானதை தொடர்ந்து பெரிய அக்கப்போரே ஆரம்பித்து விட்டது. தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாடாத குறையாக ஆரவாரிக்க, முதலமைச்சர் அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என விக்னேஸ்வரனின் ஆதரவாளர்கள் அந்தரப்பட தொடங்கியுள்ளனர்.

திடீரென யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் ஏன் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டும்? முதலமைச்சர் வேட்பாளர் பற்றி ஏன் இப்பொழுதே சர்ச்சையை கூட்ட வேண்டும்?

இதற்கு பதில் சொல்வதற்கு முன்னர், இன்னொரு விசயத்தையும் சொல்லி விடுகிறோம். அதாவது, சுமந்திரன் 07ம் திகதி தனது வீட்டில் வைத்து சொன்ன விசயம் இப்பொழுது எடுக்கப்பட்ட முடிவல்ல. அது சில மாதங்களின் முன் தமிழரசுக்கட்சிக்குள் உத்தியோகப்பற்றற்ற முறையில் எடுக்கப்பட்ட தீர்மானம். அதை அப்பொழுதே தமிழ் பக்கம் செய்தியாகவும் வெளியிட்டு விட்டது!

ஒரு மாதத்தின் முன்னரே வெளியான செய்திகளை கவனிக்காதவர்களிற்காக, அப்பொழுது நாம் வெளியிட்ட இரண்டு செய்திகளை இப்பொழுது மீளவும் நினைவுபடுத்துகிறோம்.

முதலாவது செய்தி- தமிழரசுக்கட்சி உயர்மட்ட பிரமுகர்களிற்கிடையில் உத்தியோகப்பற்றற்ற முறையில் நடந்த பேச்சுக்கள். தமிழரசுக்கட்சியின் உயர்மட்ட பிரமுகர்கள் என இப்பொழுது இருப்பவர்களை பற்றி முதலிலேயே ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விட வேண்டும்.

நன்றாக வேலை பார்த்து, வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டு அரசியலுக்கு வந்தவர்களாகவோ அல்லது அரசியலுக்கு வந்து வாழ்க்கையில் செட்டில் ஆனவர்களாகவோ தான் இருப்பார்கள். இயக்க பின்புலமுள்ளவர்களிடமிருந்த மக்கள் நேயம்… அர்ப்பணிப்பு எதுவும் கிடையாது. அவர்கள் எல்லோரிடமும் உள்ள பொதுவான இயல்பு- அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போ காலியாகும் மனநிலை.

இதனால் தான்- வடக்கு முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட எல்லோரும் கோயில்மாடு மாதிரி தலையாட்டினார்கள். முதலமைச்சர் பதவி உங்களிற்குத்தான் என்றதும் சீ.வீ.கே.சிவஞானம் முன்னின்று அனைத்தை ஏற்பாட்டையும் செய்தார்.

விக்னேஸ்வரன் இருக்கும்வரை, இப்படி இரண்டாவது ஹீரோவாகவே இருந்துவிட்டு போய்விட வேண்டி வரும் என்ற பயம், 70 பிளஸில் உள்ள எல்லா தமிழரசுக்கட்சி பிரமுகர்களிடமும் உள்ளது.

விக்னேஸ்வரனை அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதில்லையென்ற முடிவு தமிழரசுக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மட்டத்தில் சிலகால உட்சுற்று பேச்சின் முடிவில் எட்டப்பட்டது.

கையில் வெண்ணெயாக மாவை சேனாதிராசா இருக்க, எதற்கு அலைவான் என்பதே அவர்கள் முடிவு. மாவையை மாகாணசபைக்கு அனுப்பினால், எம்.பி பவியொன்று காலியாகும் என்ற அவர்களின் தூரநோக்கு திட்டத்தையெல்லாம் இப்போது யாரும் பேசக்கூடாது!

தமிழரசுக்கட்சியின் இந்த பேச்சில் இறுதியாக தீர்மானம் எட்டப்பட்டது- மார்ட்டின் வீதி அலுவலகத்தில். முதலமைச்சர் வேட்பாளராக மாவையை நிறுத்துவதென அவர்கள் முடிவெடுக்க. மாவை தலையாட்டி சம்மதம் தெரிவித்தார். இந்த தீர்மானத்தின் பின்னால் இருந்தது சுமந்திரன்.

இது சுமந்திரனின் பிளான் A.

மாவையை முதலமைச்சர் வேட்பாளராக்குவதென கடந்த மாகாணசபை தேர்தலிலும் முடிவெடுத்தார்கள் தான். ஆனால் விக்கிதான் முதலமைச்சரானார். ஏன்?

இறுதி முடிவெடுப்பது சம்பந்தன் அல்லவா!

இந்த இடத்தில்ற்காகத் தான் சுமந்திரன் பிளான் B ஐ தயாரித்துள்ளார்.

அதென்ன பிளான் B?

சம்பந்தனை எப்படி கையாள்வதென்பதே அது!

கடைசி நேரத்தில் எல்லோரையும் அழைத்து, “சில கருமங்களை செய்ய விக்னேஷ்தான் நமக்கு பொருத்தமானவர். தம்பி மாவை தமிழினத்திற்காக எத்தனையோ தியாகத்தை செய்தவர். இப்பொழுதும் ஒரு தியாகத்தை செய்ய மாட்டாரா?“ என்ற பாணியில், தான் நினைத்ததை செய்வார் என்பது சுமந்திரனிற்கு நன்றாகவே தெரியும். சம்பந்தனை சமாளிக்க பிளான் B ஐ தயாரித்துள்ளனர்.

பிளான் B இல்- முக்கிய பாத்திரம் வகிப்பது தமிழரசுக்கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள். அனேகமாக எல்லோரும் மாகாணசபைக்குள் இருப்பவர்கள். சம்பந்தனின் முடிவை ஏற்க மாட்டோம் என அவர்கள் விடாப்பிடியாக நிற்பார்கள்.

விக்னேஸ்வரன்தான் முதலமைச்சர் வேட்பாளர் எனில், தமிழரசுக்கட்சி- கூட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டுமென அறிவித்து, சம்பந்தனிற்கு பயங்கர பிரஷர் கொடுப்பார்கள். அது சம்பந்தனிற்கு பயங்கர பிரஷரோ இல்லையோ- அதை வைத்து சுமந்திரன் பயங்கர பிரஷர் கொடுப்பார்.

கூட்டமைப்பை விட்டு வெளியில் வந்து யாரெல்லாம் சம்பந்தனை விமர்சிப்பதென இப்பொழுதே தீர்மானிக்கப்பட்டு விட்டது. (சில தகவல் மூலங்களின் தேவை கருதி அந்த விபரத்தை வெளியிட சிறிது அவகாசம் எடுத்து கொள்கிறோம். எனினும், அது நடப்பதற்கு முன்னர் நிச்சயம் பிளான் B யை செயற்படுத்தவுள்ளவர்களை பகிரங்கப்படுத்துவோம்)

ஒரு வேளை சம்பந்தன் இந்த அழுத்தத்திற்கு மசியாவிட்டால்?

ஒன்றுக்கும் யோசிக்க வேண்டியதில்லை… கூட்டமைப்பை விட்டு வெளியேறி- சம்பந்தரின் பிடியில் இருந்து வெளியேறி மாவையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முயல்வார்கள். தனது பிடி நழுவக்கூடாதென்பதற்காக சம்பந்தன் பணிவார் என்பதே பிளான் B!

தமிழ் பக்கம் முன்னர் வெளியிட்ட இன்னொரு செய்தியையும் நினைவூட்டுகிறோம்.

உள்ளூராட்சி தேர்தலிற்காக வேட்பாளர் தெரிவு நடந்து கொண்டிருந்த சமயம். கூட்டமைப்பின் தலைவர்கள் எல்லோரும் இருந்தார்கள். “என்னைத்தான் அடுத்த முதல்வர் வேட்பாளராக போட்டியிடுமாறு கட்சிக்குள் அழுத்தம் அதிகமாக இருக்கிறது“ என சிரிக்காமல் வெடிகுண்டை வீசினார் மாவை.

“ஓ ரியலி?“ என கேட்காத குறையாக சுமந்திரனும் தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்தார்.

இன்னொரு சம்பவம். மூன்று வாரத்திற்கு முன்னர் கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்து பேசினர். சந்திப்பு முடிய, பங்காளிக் கட்சியொன்றின் தலைவர் சினேகபூர்வமாக சுமந்திரனிற்கும், மாவை சேனாதிராசாவிற்கும் சில ஆலோசனைகள் கூறினார்.

விக்னேஸ்வரனையே அடுத்த முலமைச்சர் வேட்பாளராக்க வேண்டுமென அவர் கூற, சுமந்திரன் அதை மறுத்துள்ளார். “நாங்கள் (தமிழரசுக்கட்சி) கடைசிவரை அதை ஏற்கமாட்டோம்“ என தெளிவாக கூறிவிட்டார்.

இதெல்லாம் சரி, இப்பொழுது ஏன் இந்த விசயத்தை சுமந்திரன் பகிரங்கமாக கூறினார்.

அதுதான் சுமந்திரனின் Strategy.

யாழ் மாநாகரசபை மேயர் யார் என யாரும் கனவே காணத் தொடங்காத நிலையில்- நமது வேட்பாளர் ஆனோல்ட்தான் என சுமந்திரன் அறிவித்தார்.

ஆரம்பத்திலேயே அறிவித்து, இதுதான் எனது- நமது- நிலைப்பாடு என காண்பித்து விட்டால் கட்சிக்குள், கூட்டமைப்பிற்குள் எழும் சிக்கல்களை சமாளித்து விடலாமல்லவா?.

யாழ் மேயர் என்ற சிறிய விசயத்திலேயே தமிழரசுக்கட்சிக்குள் எழுந்த பிச்சல் பிடுங்கள் பயங்கரமாக இருந்தது.

முதலமைச்சர் விசயத்தில் கூட்டமைப்பிற்குள் பிய்ச்சல் பிடுங்கள் எந்த ரகத்தில் வரும் என்பது சுமந்திரனிற்கு தெரியாதா என்ன?. அதனால்தான் முன்கூட்டியே தனது பிளான் A ஐ பகிரங்கப்படுத்தியுள்ளார்.

ஆனோல்ட்டை யாழ் மேயராக்கவதற்கு பாவித்த அதே Strategy யைத்தான், மாவையை வடக்கு முதல்வராக்குவதற்கும் சுமந்திரன் பாவிக்கிறார்.

இப்பொழுது அடுத்த பெரிய கேள்வி, சுமந்திரனின் பிளான்களை எதிர்கொள்ள விக்னேஸ்வரனிடம் ஏதாவது திட்டமுள்ளதா?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*