;
Athirady Tamil News

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தந்துள்ள பாடங்களும், வடக்கின் அடுத்த முதலமைச்சர் போட்டியும்..! -அம்பலத்தான் (கட்டுரை)

0


உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தந்துள்ள பாடங்களும், வடக்கின் அடுத்த முதலமைச்சர் போட்டியும்..!

2015 ஜனவரி 8 என்பது இலங்கை வாழ் மக்களுக்கு மட்டுமல்ல மேற்குலக நாடுகளையும் திரும்பிப் பார்க்கவைத்த அரசியல் மாற்றம் நிறைந்த ஒரு நாளாகும்.

சர்வதேசத்திற்கே சவால் விடக்கூடிய அளவிற்கு நாடாளுமன்றில் நான்கில் மூன்று பெரும்பான்மையுடன் ஆட்சியை தன்னகத்தே வைத்திருந்து இந்த நாட்டை ஆட்சிபுரிந்த சரித்திரம் ஒன்று எவ்வாறு நிறைவுக்கு வந்தது என்பதும் அனைவரும் அறிந்த விடயமே.

அத்துடன் ஜனநாயக ரீதியாக அந்த ஆட்சி தோற்கடிக்கப்படாவிட்டாலும் கூட ஏதோ ஒரு வகையில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் என்பதற்கு எகிப்து, ஈராக்,ஆப்கானிஸ்தான், லிபியா ஆகியன சான்றாக அமைகின்றன.

இந்த நாட்டில் ஏகாதிபத்திய ஆட்சி நடைபெறக் கூடாது என்பதில் மேற்குலக நாடுகள் கண்ணும் கருத்துமாக இரருக்கின்ற அதேவேளை மீண்டும் புலிகள் எழுந்துவிடக்கூடாது என்பதிலும் மிகவும் அவதானமாகவும் அந்நாடுகள் இருக்கின்றன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது கட்சியையே தோற்கடிக்கும்ற அளவுக்கு எவ்வாறு செயற்பட்டார் என்பது ஒருபுறம் இருக்கஅவர் அவ்வாறு தானாக செயற்பட்டாரா அல்லது மேற்குலகம் அவரை அவ்வாறு செயற்பட வைத்து கூட்டாட்சியை கொண்டு வந்ததா? என்பதை இன்று நடைபெறுகின்ற அரசியல்கள மாற்றங்கள் மக்களுக்கு நன்கு விளக்கியிருக்கின்றது.

2015 ஆண்டுக்குப் பிறகு தங்காலைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இன்று தாமரை மொட்டாக மலர்ந்து இலங்கை அரசியல் களத்தில் சவால் விடக்கூடிய அளவிற்கு சிங்கள மக்களது மனங்கவர் நாயகனாக காணப்படுகின்றார்.

இது அவரை வீட்டுக்கு அனுப்பிய மேற்குலக நாடுகளுக்கு மிகவும் சவால் பொருந்திய விடயமாக உள்ளது.

அன்று மஹிந்த காலத்தில் நடைபெற்ற அனைத்து விடயங்களும் இன்றும் நடைபெற்று வருகின்றன.

மத்திய வங்கி ஊழல், சிறிலங்கா எயார் லைன்ஸ் ஊழல், இலங்கைகிறிக்கெற் வாரிய ஊழல், கொழும்பு போட் சிற்ரி ஊழல், ஆகியவற்றுடன் கடத்தல் கொலை, கொள்ளை, இனமோதல், கப்பம் வாங்குதல் ஆகியன சர்வ சாதாரணமாக இன்றுநாட்டில் நடைபெற்று வருகின்றது.

அன்று நடைபெற்ற ஊடக நிறுவனங்களுக்கெதிரான அச்சுறுத்தல் இன்றும் தொடர்வதனை அண்மையில் நடைபெற்ற சிரச தொலைக்காட்சி நிறுவன தாக்குதல் எடுத்தியம்புகின்றது. அன்று மஹிந்த தனித்து செய்த விடயங்களை இன்று மைத்திரி – ரணில் ஜோடி செய்து வருகின்றது.

ஆனால் எவ்வாறு மஹிந்த ராஜபக்‌ஷ அன்று இந் நாட்டை மேற்குலகம் வியக்கும் அளவுக்கு அபிவிருத்தி செய்தாரோ, அதை இன்று மைத்திரி – ரணில் ஜோடி செய்யவில்லை என்பதையும் காண முடிகின்றது.

இதனுடைய வெளிப்பாடுகள் தான் மகிந்த ராஜபக்சவை அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அமோக வெற்றிபெறச் செய்துள்ளது.

நாடாளுமன்ற கலாச்சாரம் மீறப்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலே அநாகரிகமான முறையில் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

அரசதலைவர் “எந்த நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பேன் என வந்தாரோ, அந்த நிறைவேற்று அதிகாரத்தை வைத்தே நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்துள்ளார்” இன்று.

ஏப்ரல் 19 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படுமானால் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கணிசமான உறுப்பினர்கள் கூட்டு எதிரணியுடன் இணைந்து நாடாளுமன்றத்தில்புதிய கதைவசனம் பேசியிருப்பார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.

இது இப்படி நடந்தால் வெறும் 16 ஆசனங்களை வைத்துக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர முடியுமா? என்ற வினாக்கள் எழத்தான் செய்கின்றன.

ஆரம்பத்தில் மைத்திரி – ரணில் கூட்டு அரசை விரும்பிய மேற்குலகம் திடீரென மைத்திரி ரணில் – சம்பந்தன் ஆட்சியை விரும்பியது ஏன்?

அவர்களுக்கு இந்த நாட்டில் சிங்கள ஏகாதிபத்தியமோ அல்லது தமிழ் ஏகாதிபத்தியமோ வரக்கூடாது என்பதுதான் பிரதான காரணமாக இருக்கின்றது.

மறைமமுகமாகக் கூறினால் தமிழ் தேசியத் தலைவனாக பிரபாகரனும், சிங்களத் தேசியத் தலைவனாக மஹிந்தவும் வலம் வருவதையோ ஒன்று சேருவதையோ உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்த தமிழ் தலைமைகள் விரும்பவில்லை.

ஆரம்பத்தில் மஹிந்தவை வைத்து பிரபாகரனை ஒழித்த தமிழ் தலைமை, பின்பு மேற்குலக நாடுகளை வைத்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பியது.

ஆனால் பிரபாகனிடம் கிடைத்த வெற்றி அவர்களுக்கு மஹிந்தவிடம் கிடைக்கவில்லை.

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் வடக்கு கிழக்கில் கணிசமான ஆசனங்களை மஹிந்தவினது கட்சி பெற்றுள்ளது.

எதிர்வரும் மாகாணசபை தேர்தல் விகிதாசார முறைப்படி நடைபெற்றால் மஹிந்தவுடைய கட்சி பலமான ஆழுங்கட்சியாக மிளிரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்ல.

முன்னைய ஆட்சிக் காலத்தில் அமைச்சுப் பதவிகளுக்காக ஏங்கிய பலர் இன்று அமைச்சுப் பதவியே வேண்டாம் என்று சொல்லுமனளவுக்கு இந்த ஆட்சி பலமற்ற ஆட்சியாகக் காணப்படுகின்றது.

மைத்திரி – ரணில் – சம்பந்தன், இந்த MRS கூட்டணியினுடைய கொள்கை தெற்கில் மஹிந்த கோலோச்சக் கூடாது என்பதிலும், வடக்கில் விக்னேஸ்வன் கோலோச்சக் கூடாது என்பதிலம் உறுதியாக உள்ளது. ஆனாலும் மக்களுடைய முடிவு வேறுவிதமாக இருக்கின்றது.

எந்தத் தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாரென மஹிந்த கூறுவது அவருக்கிருக்கின்ற சிங்கள தேசிய பலத்தைக் காட்டுகின்றது.

இதனுடன் ஒப்பிடுகின்ற போது தமிழ் தேசியம் சிதைவாகக் காணப்படுகின்றது.

அத்துடன தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) என்று அது பிரிவடைந்திருப்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலே வாக்கு வங்கியை அதிகரித்த கட்சிகளாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், தமிழ் தேசிய முன்னணியும் உள்ளது. இ

திலே மிகமுக்கியமான விடயம் என்னவென்றால் தமிழ் தேசியத்தை வீடும், சைக்கிளும் இரண்டாக உடைத்திருக்கின்றன.

சீச்சி.. இந்தப்பழம் புளிக்கும் என சைக்கிள் இருக்க, உன்னை விடமாட்டேன் என வீடு, வீணையின் காலில் விழுந்து போட்டி போட்டுக் கொண்டு உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி ஆடத் தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல உள்ளூராட்சி சபைகளை பாழாக்கப் போகின்றது என்பது வெளிப்படை உண்மை.

இது இவ்வாறிருக்க ஒக்ரோபர் மாதம் நடைபெற இருக்கின்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விக்னேஸ்வரன் தயாராகி விட்டார். அவருக்காக பெருமளவு ஊடகங்கள் சமூக அமைப்புக்கள் செயற்படுகின்றன.

கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைடப்பு அவருடன் மோதி அனுபவித்த பலன்கள் எல்லோருக்கும் தெரியும்.

அவருக்கெதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரை இறக்குமா? அல்லது அதிகாரத்தை தக்கவைக்க ஈ.பி.டி.பியின் காலில் விழுந்தது போல விக்னேஸ்வரனுடைய காலில் விழுந்து அவரையே தமது வேட்பாளராக்குமா என்பதை எல்லாம் பொறுத்திருந்த தான் பார்க்க வேண்டும்.

எது எப்படி இருப்பினும் மைத்திரி ரணில் – சம்பந்தன் கூட்டு என்பது வடக்கு மக்களாலும் தெற்கு மக்களாலும் நிராகரிக்கப்பட்ட கூட்டாகவே தொடர்கின்றது.

இதன்காரணமாகத் தான் வடக்கிலும் கிழக்கிலும் தென்னிலங்கை கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பது அதிகமாக இருக்கின்றது.

இதற்கிடையில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா போட்டியிடப் போவதாக கூறப்படுகின்றது.

தற்போதைய நிலையில் குறித்த சபைக்ககு போட்டியிடக் கூடிய நல்ல தெரிவாக இருக்கக் கூடிய தமிழ் தலைவராகவும் டக்ளஸ் தேவானந்தா காணப்படுகின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு விக்னேஸ்வரனுக்கு எதிராக வேட்பாளரை களமிறக்காமல் விட்டால், அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ டக்ளஸ் தேவானந்தாவையே ஆதரிக்க வேண்டிவரும்.

இதைவிட்டு மாவையையோ அல்லது சுமந்திரனையோ அவர்கள் களமிறக்கினால், விக்னேஸ்வரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மாற்றத் தலைவர்களது ஒருமித்த பங்களிப்பு விக்னேஸ்வரனிடம் போக வாய்ப்புள்ளது.

இதனிடையே சுமார் 25 வருங்கள் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்காக ஓங்கி ஒலித்த நாடாளுமன்ற உறுப்பினராக, கபினெற் அமைச்சராக தமிழ் மக்களது மனங்களைவென்ற இதர தரப்பபுகளால் யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியிலிருந்த தோற்கடிக்கப்பட முடியாத நாயகனாக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா வடக்கு மாகாணமுதலமைச்சராக பதவியேற்றால் இந்த மாகாணம் எவ்வாறு அபிவிருத்தி அடையும் என்பதையும் சொல்லத் தேவையில்லை.

ஒக்ரோபர் மாதம் முதலமைச்சர் வேட்பாளர் நேரடி மோதல்.. விக்கி எதிர் டக்கி என்பதே ஆகும்.

இவர்கள் இருவரை எவர் ஆதரிக்கப் போகின்றார்களோ அவர்கள் இப்பொழுதே வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

-அம்பலத்தான்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*