;
Athirady Tamil News

ஆளப்படாத நாட்டில் அரசியல் 01!! (கட்டுரை)

0

துஷ்யந்தன்.உ
vol-01
இலங்கைளானது ஒர் பூகோள அரசியல் பொருளாதாரம் மற்றும் கலாச்சார சிறப்பு மிக்க இடமாகும். இலங்கையில் இயக்கர், நாகர் வாழ்ந்து வந்ததாக புராணங்கள் வழியில் நாம் அறிந்துள்ளோம். விசேட படை நகர்வுகளும் விசேட மருத்துவ மூலிகைகளினையும் பாண்டித்துவத்தினையும் பெற்ற புவியியல் காலநிலை மிக்க இடமாகக் காணப்படுகின்றது. ஆசியாவினது மிக பெரும் அரசியல் நகர்வுகளில் ஒன்றாக மதங்கள் காணப்படுகின்றன. நாட்டவர்களில் கறுப்புச்சந்தை நடவடிக்கைகள் முன்னரிருந்து காணப்பட்டேவந்துள்ளது.

1948 இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுகந்திரத்தினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது இருப்பினும் உள்நாட்டு இனவிரோத வங்குரோத்து செயற்பாடுகளும் முடிவில்லாது தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இலங்கையின் பெயர் பலதடவைகள் மாற்றப்பட்டு வந்தமையும் அரசியலமைப்புச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வந்தமையும் குடியேற்றத்திற்கான சட்டங்கள் விசேட கபினட் மூலம் தீர்மானிக்கப்பட்மையும் அனைவருமறிந்ததே இருப்பினும் பெறப்பட்ட தகவல்களை தர்க்கரீதியில் கணிப்பிடவேண்டிய தேவைகளும் அவசியமானவையே. இலகையில் நடைபெற்ற சம்பவங்களிளை தர்க்கரீதியில் அறியாவிடின் பிரச்சனைக்கான மூலகாரணத்தினை அறியமுடியாது.
இலங்கையில் நடைபெற்றுவரும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் கடன்கள் வழங்கும் போது வழங்கும் நிபந்தனைகள் என்பவையும் அறிந்திருத்தல் அறியமுற்படுதல் சிறப்பானதுடன் இயற்றப்படும் சட்டங்கள் தொடர்பாக மக்கள் கொண்டுள்ள அறிவு மற்றும் இலகு புரிந்து கொள்ளும் விடயங்களும் முக்கியமானவையாகும்.

இலங்கையில் வரலாற்றினை தேரவாத பவுத்தத்துடன் ஒப்பிடுதல் பவுத்தம் தொடர்பாக கொண்டுள்ள பிழையான கற்பனைவாத எடுகோள்கள் இலங்கை வரலாற்றினை அறிய அறியாமையினையை தோற்றிவிக்கும். தோல்பொருட்கள் தொடர்பான கற்கைகளில் நாட்டவர்களில் பல்தரப்பட்ட இனத்தவர்கள் கற்றும் தன்மை இன்மையும் ஆர்வமின்மையும் சார்பளவில் சிறுபான்மையினருக்கு வீழ்ச்சியே.பவுத்தத்தில் கூறப்பட்டுள்ள கட்டளைகளை பேணுவதில் நடைமுறைப்படுத்துவதில் சிங்கள தேரவாத பவுத்தர்கள் கொண்டுள்ள அக்கறை ஒர் காட்சி பொருளாக பார்பதை அறியமுடிகின்றதுடன் பவுத்தரான புத்தர் கூறிய மூடநம்பிக்கைகளை அகற்றிய அறிவினை தேரவாத பவுத்தர்களிடம் எதிர்பார்ப்பதென்பது முடியாதவையாக காணப்படுகின்றது. தம்மை தேரவாத பவுத்தர்களாக அடையாளம் காட்டிக் கொள்ளும் இலங்கை தேரவாத பவுத்தர்கள் இலங்கை சிங்களவர்களுக்கு மட்டும்தான் சொந்தம் சிங்களம் என்றால் பவுத்தம் தேரவாதம், லங்கா என்ற முரண்பாட்டு கொள்கைகளினை கொண்டுள்ளனர். இவ் மூடநம்பிக்கையினால் மகாயான பவுத்தம் தொடர்பான எச்சங்களை அகற்றுவதற்கும் எத்தனித்து செயற்படுகின்றனர்.
மகாயான பவுத்தம் என்றால் என்ன? இலங்கையில் பூர்வீகக் மக்கள் மகாயானத்தினையும் தழிழ் மொழியினையும் கொண்டிருந்தனரா? என்பது பற்றிய அறிவினை நாம் நடுநிலையிலிருந்தால் தான் தர்கரீதியில் அறிய முடியும்.

நாட்டில் ஏற்பட்ட இனமுரண்பாடுகளினையும் வன்முறைகளினையும் நிலைமாற்றம் செய்யும் செயற்பாட்டில் ஈடுபடும் இலங்கை பெரும்பாண்மையினர்; முரண்பாடுகளுக்கான தீர்வினை (மூலகாரணத்தினை அறியாது) செயற்படுத்த நினைப்பது மீண்டும் ஒர் வன்முறையினை தோற்றுவிப்பதற்கான சந்தர்பத்தினை தோற்றுவிக்கும். ஏதிர்காலத்தில் நடைபெறும் யுத்தம் இணையவடிவிலும் பெருளாதார ரீதியிலும் நடைபெற்றால் நாட்டின் எதிர்காலம் குறித்து பெரும்பான்மை சிறுபான்மையினர் கொண்டுள்ள தந்திரோபாய முன்னாயத்த ஏற்பாடுகள் எவ்வாறிருக்கும்?

இலங்கையின் மிக பெரும் பிரச்சனையாக விடுதலைப்புலிகள் காணப்பட்டனர் அவர்கள் வெளிநாட்டவர் உதவியுடன் அழிக்கப்பட்டது எனில் தற்பொழுது நாட்டில் காணப்படும் அரசியல் ஆளமுடியாமைக்கான காரணங்கள் எவை? நாடாளுமன்றம் கூட்டமுடியாரமக்கான காரணம் எவை? மூன்றில் இரண்டு பெருபான்மை கொண்ட நாடாளுமன்றம் பெரும்பான்மையினரால் ஆளப்பட்டு ஆட்சிபுரியாமைக்கான காரணம் என்ன? இனவன்முறைகளை வெடிபொருள்களை நகர்த்தி அழிவுஏற்படுத்தியவர்கள் பயங்காவாதம் என பெயரிடப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கமா? அல்லது சிங்கள பேரும்பான்மையினரில் ஒர்சாரர் மேற்கொண்ட தீவிரவாத நடவடிக்கையா? புலனாய்வு ஆய்வுகள் எவ்வாறு நடைபெற்றது? சிங்களம் என்னும் கொள்கையினை நாட்டில் நடைமுறைப்படுத்தி பணகையாடல் மற்றும் ஊழலினை மேற்கொண்டு செகுசுவாழ்வினை மேற்கொள்ள பெரும்பான்மையினர் எடுத்த விடயமா? பல்வேறுபட்ட ஜயங்களுக்குள் ஒர் தேடலாக…

இலங்கையில் 2009ல்யுத்தம் முடிவடைந்தும் நாட்டில் பொருளாதாரம் அரசியல் கலாச்சாரம் நிலைபேன்தகு தன்மையில் இல்லாதிருப்பது நாட்டினை வெளிநாட்டவர்களுக்கு அடகுவைத்தமையினை காட்டுகின்றது. முன்னுக்குப் பின்னான கருத்துக்கள் அபிவிருத்தித்திட்டங்கள் ஒத்துமொத்த மக்களினையும் கடனாளிகளாக்கியமை வெளிநாட்டு செலாவனிகளை ஈட்டுவதற்காக நகர்த்தலற்ற திட்டங்கள் மூலமாக குறித்த நபர்கள் மேற்கொண்ட ஊழல் வெளிப்படுகின்றது. நாட்டில் உள்ள வளங்களினை தாம் அனுபவித்து எஞ்சியதினை அல்லது மேலதீகமானவற்றினை ஏற்றுமதி செய்யப்படும் நிலை மாறி தான் உண்ணாது வெளியில் அனுப்பி தன்னையும் நோய்யாளனாக்கும் பொருளாதார நிலையே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டினை அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்றதிலிருந்து மாற்றியமைப்பதற்கான சுயதனிமனித அபிவிருத்தி செயற்றிட்டங்கள் இன்மை குறைபாடாகும். தனிமனித அறிவு முயற்சியினை மளுங்கடிக்கும் திட்டங்களும் நோயாளிகளாக்கும் திட்டங்களும் அபகரிப்பு அரசியல், இன அரசியல், மத அரசியல் போன்றவையே மேலோங்கிக் காணப்படுகின்ற தருவாயில் என்வாறு இலங்கையினை பொருளாதார அரசியல் பிரச்சனைக்குள்ளிருந்து எழுவது? நாடு பெரிதென எண்ணி நாட்டில் நிரந்தர சமாதானம் நல்லிணக்கம் போன்றவற்றினை உணரச்செய்யாத நிலையில் நாடு என்றும் ஆளப்படாததுடன் ஒவ்வொருவரும் நாம்மை நாம் ஆளத்தகுதியற்றவர்களாக எத்தனித்துள்ளோமென்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + eleven =

*