;
Athirady Tamil News

ஆளப்படாத நாட்டில் சிறுபான்மையின் நடைமுறைப் பொருளாதாரம் உயிற்பிக்குமா?02 (கட்டுரை)

0

துஷ்யந்தன்.உ
vol-02
இலங்கையில் நடைபெற்ற இன முரண்பாடுகள் மற்றும் ஆயுதம் தரித்த இளைஞர்களின் பேராட்டங்கள் தொடர்பாக பார்க்குமிடத்து எமது நாட்டின் பண்டைய வரலாற்றினை நன்கு ஆராயவேண்டியுள்ளது. நாட்டின் வரலாற்றினை தர்க்கரீதியில் அறியமுற்படாது இருப்பதே நாம் இலங்கையர் என்ற ஜக்கிய இலங்கை என்னும் விடயத்தில் காணப்படும் குறைபாடாகும். உலகப் பொருளாதாரத்தில் மதங்கள் வகிக்கும் பங்கு மிகபெரியது. மனிதாவிமான பொருளாதாரம், கிறிஸ்தவ பொருளாதாரம், இஸ்லாமிய பொருளாதாரம், பவுத்த பொருளாதாரம் மிக முக்கிய இடங்களில் காணப்படுகின்றது. இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் பொருளாதாரம் மற்றும் வங்கியல்துறை வளர்ச்சியடையாத வென்றாகக் காணப்படுகின்றது.

ஒருசார் தமிழர்கள் தங்கள் வாழ்கைப் பொருளாதாரத்தினை தங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினரின் பணத்தில் வாழும் தன்மையினை உணரக்கூடியதாகவும் காணப்படுகின்றது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அனுப்பும் பணங்களின் மூலம் சிறப்பாகக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பொருளாதார வங்கிமுறைமைகள் நிதியல் கம்பெனிகள் போன்றவற்றினை நோக்குதல், பகுப்பாய்தல், மிக முக்கியவகிபங்கினை அறிதல், போன்ற வெளிப்பாடுகளின் நிலை குன்றிக் காணப்படுவதுடன் பொருளாதார அபிவிருத்தி மனிதவள அபிவிருத்தி என்பனவையும் மீளப்பார்க்க வேண்டியவையாகவே காணப்படுகின்றது.

போராட்டங்கள் ஏற்படும்போது அவ் போராட்டங்கள் நடைபெற்ற ஆண்டும் செல்வாக்குச் செலுத்திய விடயங்களினையும் பார்த்தால் வன்முறைகள் முரன்பாடுகள் தோற்றம் பெற்ற போது கூடுதலாக சிறுபான்மையினரின் பொருளாதாரம் தலைநகரில் உயர்வடைந்தமையும் அதன் போது அதனை ஏற்றுக்கொள்ள முடியாத தரப்பினர் அழிவுநடவடிக்கையினை ஈடுபட்டதனையும் வரலாறு நிகழ்வுகள் பறைசாற்றுகின்றது.
எம்மை நாம் ஆளுதல் என்ற நிலையில் இலகுவாகக் குறிப்பிடக்கூடிய பொருளாதாரமாக காந்திய பொருளாதாரம் காணப்பட்டது குறிப்பாக சுகந்திரத்திற்கு பின்னரான பொருளாதார நிலையினை பார்க்கும் போது சிறுபான்மையினரது பொருளாதாரம் பாரியளவில் மீள்பார்வைக்குட்படாமை குறிப்பிடத்தக்கது.

ஆயும்தரித்த சிங்கள இளைஞர்களது போராட்டங்கள் ஆயுதம் தரித்த தமிழ் இளைஞர்களின் போராட்டங்களை வலுவிழக்க செய்யும்நோக்கில் நடைபெற்றமையினையும் காணலாம். சிறுபான்மையினரது பொருளாதாரம் உயர்வடையும் போது இவ்வாறான முரன்பாட்டு வன்முறைகள் கட்டிவிடப்படுவதும் இலங்கையில் சாதாரணமானதுடன் இவ்விடயத்தினை நன்கு தர்க்கவிதத்தில் ஆராயப்படல் வேண்டும்.
விடுதலைப்புலிகள் என்னும் இயக்கத்தின் காலத்தில் அவர்கள் நடைமுறைப்படுத்திய பொருளாதாரமாக காந்திய பொருளாதார வங்கியமுறைமைகளினை நாம் காணக்கூடியதாகவிருந்தது. அவர்களது பொருளாதார முறை மற்றும் அரசியல் முறைகள் பற்றிய ஆய்வுகளும் தற்பொழுதான காலத்தில் எம்மை நாம் உணர்ந்து எம்சார்ந்த பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதும் காலத்தின் தேவையே.

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பொருளாதார வளப்பங்கீட்டு முறைகள்பற்றிய விடயங்கள் வேலையினை உருவாக்குதல் தொழில்வாய்ப்பினை வழங்குதல் மற்றும் பணச்சுற்றோட்டம் போன்றவிடயங்கள் முக்கியமானவையே. உள்நாட்டு சிவில் யுத்தம் முடிவடைந்த பின்னர் எவ்வாறானவை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்றது. புலம்பெயர் அமைப்புக்களிடம் நிலைபேன் தன்மையற்ற கொள்கைகளைக் கொண்ட திட்டங்கள் செயற்பாடுகள் மீளவும் இப்பகுதி மக்களினை பாதித்தமை குறிப்பிடத்தக்கது. தமிழர்களது பொருளாதாரம் அல்லது மரவுவழி பொருளாதாரம் கொண்ட உயர் தந்திரோபாய பொருளாதாரக்கொள்கை மிகவும் அவசியமானதுடன் வலுவிழந்த சிறுபான்மைச் சமூகத்தினை வலுவூட்டுவதற்கும் பொருளாதரக் கொள்கை மட்டும் வங்கியில் அவசியமானது.

தமிழ் அமைப்புக்கள் அவர்கள் காட்டும் நிலஅபகரிப்பு அக்கறை பொருளாதார வங்கியல் துறையில் காட்டப்படவில்லை. உற்பத்தியினை அதிகரித்தல் போசாக்குவாய்தவையினை உண்ணுதல் நுகர்வுக்கு மேலதீகமான ஏற்றுமதிக்கான உற்பத்திகள் அதிகரிக்கப்படாமையும் நிலஉரிமைகளில் காணப்படும் தேசியரீதியான கொள்கைகளும் இலங்கையின் ஏற்றுமதிக்கு சவாலாக அமையப்பெறுகின்றதுடன். இறக்குமதியை நுகரும் சமூதாயமாக சிறுபான்மையினர் மாற்றமடைந்திருப்பது தீவிர பின்னடைவுக்கும் நோயாளிகளைக் கொண்ட சமூகத்திற்கும் வழிவகுக்கும். முக்களினை விழிப்படையசெய்யும் உணர்வு கொண்ட சமூகத்தினை வளர்த்தல் தேவையே குறித்தபிரதேசத்தில் குறித்த பொருள்களினை உற்பத்தியினை அதிகரித்தல், பதனிடல் போன்றவையும், பணச்சுற்றோட்டத்தினை குறித்த வகுதிக்குள் உட்படுத்தலும், முதலீட்டு தொழில்வாய்ப்பினை உருவாக்குவதன் மூலமாக பொருளாதாரத்தினை வலுவூட்டல் அவசியமாகின்றது.

தற்காலத்தின் சிறுபான்மையினருகென்ற ஒர் பொருளாதார கட்டமைப்பு தேவையாகவுள்ளது இதனை ஏற்படுத்தாவிடின் பாரிய சுத்திகரிப்புநிலைகளிற்கு இட்டுச் செல்லும். சிறுபான்மையினரின் பொருளாதாரம் அழிக்கப்பட்டு நிலவுரிமைகள் சுவீகரிக்கப்பட்டு குறித்த ஒர் சமூகம் பாதிக்கப்பட்டு அச் சமூகம் முழுச் சமூகத்திற்கும் அச்சுறுத்தலான சூழ்நிலையினை தோற்றுவிக்கும். தற்பொழுது அழிவடைந்து செல்லும் தமிழரது பொருளாதாரம் தமிழரது நிலஉரிமையினை அழித்து கல்வியினை அழித்து அடிமைத்தனங்களுக்கு இட்டுச் செல்லும். தந்திரோபாய நடவடிக்கைகள் மூலமாக கட்டுப்படுத்தி சிறுபான்மைக்கொன ஒர் வங்கியல்துறை மற்றும் பொருளாதாரத்தினை நாம் வலுப்படுத்தவேண்டிய உறுதிப்பாட்டினை கொண்ட பொருளாதாரத்தினை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். தமிழருக்கென ஒர் பொருளாதாரத்தினை வலுப்படுத்தல் காலத்தின் தேவையே…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + eighteen =

*