;
Athirady Tamil News

“கட்டமைப்பும்” கட்சியரசியலில் ‘சிறுபான்மையும்’ (கட்டுரை)

0

துஷ்யந்தன்.உ
vol – 03
நாட்டில் தற்பொமுது நடைபெற்ற விட்டுக்கொடுப்பு மற்றும் ‘தந்திரோபாயத்தன்மை கொண்ட பெரும்பான்மையினரின் செயற்பாடுகள்’ மீண்டும் ஒர்வகை இனவாத அரசியல் வரலாற்றினை மீளவும் ஞாபகப்படுத்துகின்றது. ‘இலங்கையில் நீதித்துறையின் தன்மையினை வெளிநாட்டவர்களுக்கு காட்டுவதற்கும்’ ‘வெளிநாடுகளின் தந்திரோபாய பூகோள அரசியல் நிலை எப்போதும் இலங்கையின் பால் இருப்பது தத்தமது தேவைப்பாடுகளை நிறைவேற்றி தம்நாட்டின் அபிவிருத்திகளினை வளப்படுத்தலே’

சர்வதேச அரசியலில் இலங்கையினை அமேரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்றவை என்றும் காட்டிக்கொடுக்க மாட்டாதுடன் தத்தமது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலும் எதிர்கால இலங்கையின் தகுதிகளாகவிருப்பதுடன் நாட்டின் அரசியல் பிரதிநிதிகளைத் தீர்மானிக்கும் மக்களின் உரிமைகள் ஒருவகையில் முட்டாள் தனத்துக் ஒப்பானதாகக் நிலை காணப்படுகின்றது.

ஒருசாரர் பாராளுமன்றத்தில் கட்சியரசியல் தேவையில்லை என்ற வாதத்தையும் இவ் கட்சியரசியல் மூலமாகவே நாட்டின் மக்களினை பிரிக்கும் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாகவுமுள்ளதாக கூறிவருகின்றனர். இலங்கையில் கட்சிமுறைமையினை நீக்குதல் தொடர்பான வாதங்கள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் குரல் கொடுத்த வண்ணம் உள்ளமையும். நாட்டின் பாராளுமன்ற அமைப்புக்களினை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையினையும் காணக்கூடியதாகவுள்ளது. இவ் நோக்கங்களை நாட்டில் ஈடுபடுத்தியாக வேண்டுமென பல சிங்கள சிவில் பிரதிநிதிகள் வெளிநாடுகளில் தாம்கற்ற பல்கலைக்கழகங்களின் உதவியுடன் மற்றும் துறைசார் வல்லுனர்கள் உதவியுடன் நாட்டில் பிரயோகப்படுத்துவதற்கான சம்பாசணைகள் போன்றவற்றினை காலத்துக்கு காலம் பேசியே வந்துள்ளனர். ஆனாலும் தற்போது அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் தேவையென கூறி பல அழுத்தங்களை தந்திரோபாய வழிகளில் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நட்டில் யுத்தத்தின் முன்னர் இருந்த கட்டமைப்புக்கள் நிலைகளினை உடைக்கும் செயற்பாடுகள் சிவில் பிரதிநிதிகள் மூலமாக வெற்றிகரமாக நகர்த்தப்படுள்ளதுடன் நகர்த்தப்படுகின்றது. பல்தரப்பட்ட நிலைகளை குறித்த இடத்தில் வழங்குகின்றனர் பின்னர் ஒர் போட்டி நிலையினை கொண்டுவந்து அப்பிரிவினரை ஒழிக்கும் அல்லது அடிமைப்படுத்தும் கலாச்சார அரசியலினை மேற்கொள்கின்றனர். இதன் மூலமாக சிறுபான்மைப் பிரதேசங்களில் கட்டமைப்பு உடைப்புக்களினை திட்டமிட்டு மேற்கொள்வதனால் அதனை சாதாரணவிதத்தில் ஆராய்ந்து கணிப்பிடுதல் கடினம். உதாரணமாக நாட்டில் சிவில் அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு சார்பாக நடந்துகொள்ளுதல் குறிப்பிடத்தக்கது.

சிறுபான்மையினருக்கான பாரிய சவால் அவர்களுக்குரிய தனித்துவங்களை பாதுகாத்தும் நிலைபேண்தகு தன்மையுடைய அமைப்புக்கள் உருவாக்கப்படாமையும் அவற்றினை வளர்ப்பதற்கு எத்தணிக்காமையும் பாரிய முரண்பாடுகளுக்குட்பட்ட விடயமாகக் காணப்படுகின்றது. அமைப்புக்கள் எப்பொழுதும் தத்தமது வகுப்பு சார்ந்த பொருளாதார, அரசியல், கலாச்சார, மனித அபிவிருத்தி திட்டங்களினை கொண்டிப்பதனால் சிறுபான்மையினருக்கான தலைமையினை யார் எடுப்பதென்ற கேள்வியும் ஒர் தளம்பலுக்குள் தள்ளிவிடப்பட்ட சமூதாயமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனை நாம் உணர்தல் அல்லது இவ்வாறும் ஒர் முரண்பாட்டில் ஒர் சமூதாயம் நிற்கின்றது என்பதை தமிழ் பேசும் அனைவரும் ஆராய்ந்து அறிய முற்படல் வேண்டும்.

மொழிப்பாவனையும் தேவையும் தத்தமது தாய் மொழிகளில் தொழில்நுட்பத்தினை மாற்றியமைத்துக்கொண்டு புதியன புகுத்தி தொழில்முயற்சிகளையும் வருமானசமபங்கீடுப் பிரச்சனையினையும் தர்க்கவிதத்தில் சிந்தனைக்குட்படுத்தி பலவிடயங்களை மெற்கொள்ள வேண்டிய கட்டாயக்கடமையுடையவர்களாக சிறுபான்மையினர் காணப்படுகின்றனர். தமது தாய் மொழிக்கல்வியின் அவசியமற்றுக் காணப்படுகின்ற காலத்தில் மொழிக்கல்வியினை ஆய்வுக்குட்படுத்தி தீர்மானிக்க வேண்டிய கட்டாயதேவையுமுள்ளது.

சிவில் சமூகம் மக்களினை சிந்திக்காது கட்டுப்படுத்தும் நிலைமை மாற்றமடையவேண்டும். ஆத்துடன் ஆய்வு மையங்கள் ஆய்வு நிலையங்களினதும் தேவை சிறுபான்மைச் சமூகத்திற்கு தேவைப்படுகின்றது. மக்களினை சுகந்திரமாக சிந்திப்பதற்கு தமிழ்சிவில் பிதிநிதிகள் அனுமதிக்கவேண்டுவதுடன் புலம்பெயர்ந்த மக்கள் மீள பிரதேசத்தில் குடியமர்ந்து தமது வாழ்வினை மேற்கொள்ள வேண்டிய தேவையும் காணப்படுகின்றது. மக்களிடம் திணிக்கப்பட்ட கட்டமைப்பு சீர்குலைவானது நாட்டில் பாரிய நெருக்கடிக்குள் இட்டுச்செல்வதுடன் எதிர்கால அபிவிருத்திகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் இளைஞர் சமூகத்தினை தோற்றுவிக்கும் நிலைகளினை ஏற்படுத்தாது சிறுபான்மை மக்களின் பொருளாதார அரசியல் கலாச்சார சௌபாக்கிய நிலைமைக்கான திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டியது தற்கால எதிர்கால இருப்பின் தேவையே.

நாட்டில் கட்சியரசியல் முறையினை நீக்குதல் தொடர்பாக தேசிய மட்டத்தில் நடைபெறும் விடயங்களினை நாம் அவதானிக்க கூடியதாகவுள்ளது. கட்சிகள் அதன் மக்களுக்கு ஏற்றவிதத்தில் சில கொள்கைகளைக் கொண்டு இயங்கின ஆனாலும் இவ் கட்சியரசியல் முறையினை நாம் நீக்கிய பின் சிறுபான்மையினரின் விடயங்களை எவ்வாறு கொண்டு சேர்ப்பதென்ற சிந்தனைக்குரிய பகுதியில்… பதில்கள்இ கேள்விகள் மனதில் எழுந்து எவ்வாறான தந்திரோபாய செயற்பாடுகளை தமிழ் பேசும் சமூகமும் தமிழ் சிவில் பிரதிநிதிகளும் மேற்கொள்ளவுள்ளனர்?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − one =

*