;
Athirady Tamil News

இன்றைய பாடசாலை கல்வியில் மாணவர் போக்கும் ஆசிரியர்களின் வகிபங்கும்!! (கட்டுரை)

0

இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே “கல்வியின் சம வாய்ப்பு” எல்லோருக்கும் வழங்கப்படவேண்டும் என்ற கொள்கை முன் வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் முழுமையான சமவாய்ப்புக்கள் மாணவர்கள் அனுபவிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

கல்வியினைப் போதிக்கின்ற பாடசாலைகள் உலக மாற்றங்களுக்கு ஏற்ப இயைந்து கொடுக்கக்கூடிய வகையில் கற்றல் – கற்பித்த லில் புதுப்புது திறன் விருத்திகள், கல்வியல் முறையில் விசேட சீர்திருத்தங்கள் போன்றன உள்வாங்கப்பட்டு இயக்கத்திறன், ஆக்கத் திறன்களை அதிகரித்து வருகின்ற உலகில் மாத்திரமன்றி நமது நாட்டிலும் பாரிய மாற்றத்தை நோக்கியதாகவே கல்வித்திட்டம் காணப்படுகின்றது.

“இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள்” என்கிற ரீதியில் மாணவர் சமுதாயத்தினை கல்வி அறிவில் முன்னேற்றுதல், எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய ஆளுமையும் திறனும் கொண்டவரகளாக உருவாக்குதல், அவர்களை முழுமையான மனி தர்களாக்குதல் போன்ற பணிகளில் பாடசாலையா னது மிகப்பெரிய வகிபங்கி னைக் கொண்டுள்ளது. அத்தகைய வகிபங்கில் ஆசிரியர்கள் முதன்மை பெறுகின்றனர். பாடசாலைகளின் வகுப்பறையிலிருந்தே சமூக ஆளுமையுடைய அறவுபூர்வமான மாணவர்களையும் நாளைய சிறந்த தலைவர்களையும் வளர்த்தெடுப்பதற்குரிய சிறந்த கற்றல் – கற்பித்தல் முறைமைகளை ஆசிரியர்கள் சரியான முறையில் முன்னெடுக்கின்ற போது அது சாத்தியமா கும்.

தரமான கல்விக்கு தரமான ஆசிரியர் என்ற பதம் இன்று எல்லோராலும் முன்னெடுக்கப்படுகின்றது. வேமாக மாறிவரும் கற்பித்தல் உத்திகளை ஆசிரியர்கள் கற்பித்தலில் உள்வாங்கு வதன் ஊடாகவே ஆர்மான கற்றல் சூழ்நிலை ஏற்படுகின்றது.

வகுப்பறையில் மாணவர்களின் ஆக்கத்திறனுக்கும் ஆர்வத்திற்கும் ஈடுகொடுக்கக் கூடிய ஆசிரி யர்கள் மட்டுமே இப் பணியில் நிலைத்துச் செயலாற்ற முடியும். இன்று தகவல் தொழில்நுட்ப பிரயோகமானது மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது. மாறி வருகின்ற நிலைமைகளுக்கு ஏற்ப பாடசாலைகளில் புதிய பல உத்திகளைக் கையாளுவதன் மூலம் மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான கற்றலை ஏற்படுத்த முடியும் என்பதுடன் சுய சிந்தனை, புத்தாக்க சிந்தனை என் பவற்றையும் ஏற்படுத்த முடியும்.

மாணவர்களிடத்தே சுய கற்றலுக்கான வாய் ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பாடசாலைகளில் மாணவர்களின் பெறுபேறுகளையும் உயர்த்த முடியும்.குழந்தையானது கேள்வி கேட்கின்ற போதுதான் மனிதன் தனக்கு எவ்வளவு குறைவாகத் தெரிந்திருக்கின்றது என்பதனை உணருகின்றனர் என “Maichael Block Fort” என்றஅறிஞர் குறிப்பிட்டுள்ளார். இன் றைய நவீன உலகின் போக்குகள் அறிவுடைமை சமகத்தை உருவாக்கியுள்ள நிலையில் பிள்ளைகள் பல்வேறு கோணங்களில் திறன் படைத்தவர்களா
காணபபடுகின்றனர். இதற்கு ஏற்ற வகையில் முகங்கொடுக்கக்கூடியவர்களாக ஆசிரிய சமூகமும் மாற்றமடைந்து காணப்பட வேண்டும்.

அதாவது தரம் ஒன்றுக்கு நுழையும் ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு விதமான மனநிலையுடனேதான் காலடி எடுத்து வைக்கின்றான். சில மாணவர்கள் இயல்பூக்கம் கொண்டவர்களாகவும் சில மாணவர்கள் சாதாரண நிலையிலும் காணப்படுகின்றனர். சிலர் கூச்சசுபாவம், அதீத அமைதி, குறும்புத்தனம், அழுகை போன்ற பல மனப்பாங்குகளுடன் காணப்படுவர். இந்நிலையில் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு அவரவர் நடத்தைக்கு ஏற்பவும் மனநிலைக்கு ஏற்பவும் அணுகி சமநிலைப்படுத்தும் திறன் ஆசிரியரிலேயே தங்கியுள்ளது. ஆசிரியரின் நடத்தைக் கோலங்களை மாணவர்களுக்கேற்ற விதமாக மாற்றியமைக்க வேண் டியது கட்டாயமாகும். அப்போதுதான் சமூகம் எதிர்பார்க்கின்ற நற்பண்புள்ள மாணவ சமூகத்தை உருவாக்க முடியும்.

மாணவர்களின் இயலுமை, இயலாமையை கண்டறிந்து மாணவர்களின் தேவைக்கு ஏற்ப கற்றல் முறைமைகளைக் கொண்டு கற்பித்தலில ஈடுபடுதல் அவசியமாகும். மாணவர்கள் ஆசிரியர் கற்பிக்கின்ற போது குறு கியநேரத்திற்கே கவனித்துக் கொண்டிருப்பார்கள். அதன் பின்னர் அந்த மாணவரின் கவனம் வேறுபக்கமாகிவிடும்.

கவனத்தினை திசை திருப்பாத வண்ணம் ஒரு பாடத்தினுள் பல்வேறு கவர்ச்சியான உபகரணங்களைக் கொண்டு கற்பித்தலில் ஈடுபட்டு உறுதி செய்வதன் ஊடாகவே மாணவர்களின் அடைவினை மேம் படுத்த முடியும்.

ஆசிரியர் தமது வகிபாகத்தில் பயனுறுதியுடன் செயற்பட வேண்டுமாயின் அவர்கள் தமது அறிவை இற்றைப்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய அனுபவங்களை, அறிவை மீள உயிர்த்தெழ செய்வதற்கான நுட்பங்களை அடையாளம் காணல், தனித்துவமான பாடசாலைக் கலாசாரத்தை வளம்படுத்த பகுத்தறிவயும் புத்தறிவையும் மேம்படுத்திக் கொள்ள, வெற்றிகரமான கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடும் மனப்பாங்கினை உயிர்ப்புடன் வைத்திருந்து எதிர்பாராத சந்தர்ப்பங்களில் எதிர்பாராத வகையில் தோன்றும் பிரச்சினைகளையும் அறைகூவல்களையும் மற்றும் கற்றல் மையத்தின் அக புறசசூழல்களையும் வெற் றிகரமாக எதிர்கொள்ளல், ஆய்வுநிலையில் சிந்தித்தல், விமர்சன சிந்தனையை வளர்த்தல், சமூகப் பொறு ப்புடன் செயலாற்றுவதற்கான மனப்பாங்கை கொண்டிருத்தல், முறையான பணபுகளைக் கொண்டதாக கல்விச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.எனவே இன்றைய ஆசரியர்களின் வகிபங்கானது மாணவர்களை நல்வழிப் படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றது.

மாணவர்களுக்கு சீரிய கல்வியினை சிறந்த முறை யில் வழங்குவதற்கு ஆசிரியர்கள் கவனம் செலுததுகின்றபோது நற் சமூகத்தை கட்டியெழுப்பலாம் என்பது திண்ணம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 14 =

*