;
Athirady Tamil News

நல்லூர் முருகனுக்கு தீங்கிழைக்க யார் உளர்!! (கட்டுரை)

0

நல்லூர் முருகன் ஆலயத்துக்குக் குண்டு வைக்கப்படுமென்ற அநாமதேய தகவலை யடுத்து நல்லூர் முருகனுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங் கள் என்பவற்றுக்கான பாதுகாப்பு முக்கியமானது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் நம்மைப் பொறுத்தவரை நல்லூர் முருகனுக்குப் பாதுகாப்பு எனும்போது அதனை ஏற்க முடியாமல் இருப்பதுதான் உண்மை.

ஆம், போர் நடந்த காலமெல்லாம் எங்களைப் பாதுகாத்தவன் நல்லூர் முருகன். இந்திய அமைதிப்படை அமளிப்படையாக மாறி தமிழ் மக்களை நோக்கி குண்டு வீசியபோது, தன் ஆலயத்தில் அடைக்கலம் கொடுத்து உயிர் காத்தவன் நல்லூர் முருகன்.

அதனாலன்றோ, பஞ்சம் பசி வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி கிளியே ஆறுமுகன் தஞ்சமடி என்று நல்லூர் கந்தப் பெருமானைத் தவத்திரு யோகர் சுவாமிகள் முன்னமே பாடிப் பரவினார்.

உலகம் வாழ் தமிழ் மக்கள் மட்டுமன்றி, ஏனைய இனம், மதம் சார்ந்த மக்களும் நல்லூர் முருகன் மீது அளவு கடந்த அன்பும் பக்தியும் கொண்டுள்ளனர்.

இதற்குக் காரணம் அவன் சூர்பகை அழித்து மக்களைக் காப்பவன். எங்களுக்கான பாதுகாப்புப் படைக்கலமே நல்லூர் முருகன் என்ற நாமம்தான்.

அவனே தமிழர்களின் தனிப் பெருந் தலைவன்.
நல்லூர் இராசதானியில் இருந்து ஆட்சி செய்கின்ற நல்லூர் முருகன் எந்த இன மக்களையும் விலத்தி வைத்தவன் அல்ல.

அதனால்தான் நாள்முழுவதும் நல்லூர் முகனை நோக்கி பெளத்த, கத்தோலிக்க, இஸ்லாமிய மக்கள் வந்த வண்ணமுள்ளனர்.

இதுதான் என்றால், இல்லை இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களும் நல்லூர் முரு கனைக் கண்டுவிட வேண்டுமென ஓடோடி வருகின்றனர்.

மேலாடைகளைந்து முருகனின் ஆலயத் துக்குள் நுழைகின்ற வெள்ளைக்காரர்கள் முருகனைப் பார்த்து பரவச நிலையில் இருப்பதைக் காணும்போது, நல்லூரின் முன்னைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருவதுபோல வெள்ளைக்காரர்களின் திகைப்பு சொல்லி நிற்கும்.

ஆக, நல்லூர் முருகன் ஆலயத்தைத் தாக்குதல் என்பது ஒருபோதும் நடக்க முடியாத காரியம். எம்மைப் பொறுத்தவரை நல்லூர் முருகனுடன் எவரும் சேட்டை விட முடியாது. விடவும் மாட்டார்கள்.

வேண்டுமாயின் நல்லூர் முருகனுக்குப் பாதுகாப்புக் கொடுங்கள். அந்தப் பாதுகாப்பு; நல்லூர் முருகனுக்குத் தீங்கு செய்வோம் என்று யாரேனும் நினைத்திருந்தால், அவர் களைப் பாதுகாப்பதற்கானதாக இருக்கும்.

ஆம், வைதாரையும் வாழ வைக்கும் நல்லூர் முருகன் தனக்குத் தீங்கு நினைப்போரை யும் காப்பவன்.

ஆகையால் நல்லூர் முருகனுக்கான பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பு நடை முறை சார்ந்தது.

மற்றும்படி நல்லூர் முருகனுக்கு; அவன் ஆலயத்துக்குத் தீங்கு செய்ய யாராலும் முடி யாது. இது நாம் வணங்கும் நல்லூர்க் கந்தன் மீது ஆணை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + two =

*