;
Athirady Tamil News

இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டை மீட்க – பொதுபலசேனா!! (கட்டுரை)

0

இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டை மீட்க பொதுபலசேனா முழுமூச்சுடன் செயற்படும்

சுறாமீன்கள் தப்பிக்க நெத்தலி மீன்கள் துரத்தப்படுகின்றன என்கிறார் கலகொட அத்தே ஞானசார தேரர்

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­களை இல்­லா­தொ­ழிப்­பது அவ­சி­ய­மாகும்.அழி­வுற்­றுள்ள இந்த நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப தேசிய மட்­டத்தில் வேலைத்­திட்டம் ஒன்று மேற்­கொள்­ளப்­பட வேண்டும். அதற்­கான தலை­மைத்­துவம் ஒன்றும் தேவை. பொது­பல சேனா இந்த அச்­சு­றுத்­தலில் இருந்து நாட்டை மீட்­டெ­டுக்க முழுமூச்­சுடன் செயற்­படும் என்று பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்தை ஒப்­பிட முடி­யாது. மீண்டும் நான் சிறை செல்ல நேரிட்­டாலும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ராகப் போரா­டுவேன். சுறா­மீன்கள் தப்­பித்துக் கொள்ள வெறும் நெத்­தலி மீன்­க­ளையே புல­னாய்வுப் பிரி­வினர் துரத்­து­கின்­றனர். திரு­டனை பிடித்துக் கொடுப்­ப­வனை சிறையில் அடைக்கும் நாடா­கவே இலங்கை விளங்குகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அவருடனான விசேட செவ்வி

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் இலங்­கையைப் பீடித்­துள்ள இரத்தப் புற்­று­நோ­யாகும். இதி­லி­ருந்து நாட்டைப் பாது­காப்­பது எளி­தான விட­ய­மல்ல என்­பதை அனை­வரும் உணர வேண்டும். ஆகவே தய­வு­செய்து நாட்டில் காணப்­ப­டு­கின்ற இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அச்­சு­றுத்தல் குறித்து அர­சி­யல்­வா­திகள் கருத்துக் கூறு­வதைத் தவிர்க்க வேண்டும். பொது­ப­ல­சேனா இந்த அச்­சு­றுத்­தலில் இருந்து நாட்டை மீட்­டெ­டுக்க முழுமூச்­சுடன் செயற்­ப­டு­மென கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

தமிழ்­நாடு தௌஹீத் ஜமா அத் அமைப்­பி­ட­மி­ருந்தே இலங்கை தௌஹீத் அமைப்­பு­க­ளுக்கு பெரும்­பாலும் கட்­ட­ளைகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. கோவை ஐயூப் போன்ற இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­திகள் இலங்­கையில் மிக மோச­மாக பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். எனவே இந்த வாரத்­திற்குள் அப்துல் ராஷிக் என்ற நபரை உட­ன­டி­யாகக் கைது செய்ய வேண்டும். இல்­லை­யென்றால் பொது­ப­ல­சேனா அவரைக் கண்­டு­பி­டிக்கும் எனவும் ஞான­சார தேரர் குறிப்­பிட்டார்.

சிறை­மீண்ட பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்

வீர­கே­சரி வாரவெளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறினார். அந்தச் செவ்­வியின் முழு­வி­பரம் வரு­மாறு :

கேள்வி : சிறை வாழ்க்கை எவ்­வாறு இருந்­தது ?

பதில் : பல்­க­லைக்­க­ழகம் ஒன்றில் பட்­டப்­ப­டிப்­பினை முடித்­தது போன்று காணப்­பட்­டது. பல விட­யங்­களை கற்­றுக்­கொண்டேன். ஆன்­மிகத்­திற்கு சிறந்த கால­மா­கவும் அமைந்­தது. அது மாத்­தி­ர­மல்ல , நாட்டில் அத்­தனை துறை­களும் எந்­த­ளவு சீர­ழிந்­துள்­ளன என்­பதை அறி­யவும் சிறை வாழ்க்கை சிறந்த வாய்ப்­பாக அமைந்­தது. குறு­கிய கால சிறை­வாழ்க்கை முடிவில் திருப்­தி­யான பரீட்சை ஒன்றை எதிர் கொண்­டது போன்று உணர்ந்தேன். 100 புத்­த­கங்­களை வாசித்து பெற்­றுக்­கொள்ள முடி­யாத அறி­வினை பெற்­று­கொண்டேன்.

கேள்வி : உங்­க­ளது விடு­தலை, அர­சியல் என கூறு­கின்­றனர். அது குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன ?

பதில் : அர­சியல் , கலா­சாரம் மற்றும் சமூக ரீதி­யாக எதனை எமது நாட்டில் செய்­தாலும் அதனை தவ­றாக அர்த்­தப்­ப­டுத்­து­வது வழ­மை­யா­கி­யுள்­ளது. மக்­க­ளுடன் பேச இய­லாது . வேறு இனத்­த­வர்­க­ளுடன் நட்பை பேண முடி­யாது. அவ்­வாறு நட்­பு­ற­வுடன் செயற்­படும் போது அதனை விமர்­சிப்­பது எம்­ம­வர்­களின் இழி­வான குணத்­தினை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

உண்­மையை ஜனா­தி­பதி

உணர்ந்­துள்ளார்

ஆனால், எனக்கு என் மீது நம்­பிக்­கை­யி­ருந்தது. எனது இலக்கு சரி­யா­னது என்­ப­தா­லேயே அந்த நம்­பிக்­கையும் உற்­சா­கமும் கிடைத்­தது. தியா­கங்கள் செய்­யாது ஒரு தேசிய இனத்தின் நலன்­க­ளுக்­காக செயற்­பட முடி­யாது. துர­திஷ்­ட­வ­ச­மாக நாம் சந்­தித்த அர­சி­யல்­வா­திகள் மற்றும் மதத் தலை­வர்கள் எனப் பலரும் வாய்ச்சொல் வீரர்­க­ளா­கவே காணப்­பட்­டனர். இவ்­வா­றா­ன­வர்­க­ளி­ட­மி­ருந்து போத­னைகள் மாத்­தி­ரமே கிடைக்­கின்­றன. தேசிய நலன்­க­ளுக்­காக தியாங்கள் செய்ய முன்­வ­ரு­வ­தில்லை. எனவே எவரின் வழிக்­காட்­டலும் எனக்கு தேவை­யில்லை. புத்­த­பெ­ரு­மானே எனது தலைவர். அவர் வழி­யி­லேயே நான் செல்­கின்றேன். இவ்­வு­லகில் இழி­வு­ப­டுத்­தப்­ப­டாத எவரும் இருந்து விட முடி­யாது என்­பதே புத்த பெரு­மானின் போத­னை­யாகும். எனவே எமக்­கெ­தி­ராக பல்­வேறு இழி­வுச்­சொற்­களைப் பயன்­ப­டுத்­தலாம். ரணில், மஹிந்த, கோத்தா அல்­லது நோர்வே என்­று­கூட எம்மை அவர்­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்தி பிர­சா­ரங்­களை மேற்­கொள்­வார்கள். அவை எமக்கு எவ்­வி­தத்­திலும் பிரச்­சி­னை­யில்லை.

நீதி கிடைக்­கு­மென்ற எதிர்­பார்ப்­பு­ட­னேயே நாட்­டுக்­கான எனது தியா­கங்­களைச் செய்தேன். ஆனால் இந்­த­ளவு நிறை­வே­று­மென நான் எதிர்­பார்க்­க­வில்லை. ஜனா­தி­பதி என்னைப் பார்ப்­ப­தற்­காக சிறைச்­சா­லைக்கு வந்தார். வர­லாற்றில் பௌத்த பிக்கு ஒரு­வ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள பாரிய கட­மையே எனக்கு உள்­ளது. எனவே ஜனா­தி­பதி என்னை சந்­தித்­தது மற்றும் அதன் பின்­ன­ரான விடு­த­லைக்­கான பெருமை அவ­ருக்கு வழங்­கப்­பட வேண்டும். அதே­போன்று ஏதோவோர் சந்­தர்ப்­பத்தில் இடம்­பெற்ற தவ­றினைத் திருத்திக் கொள்­வ­தற்­கா­கவே இந்த விடு­த­லையும் அமைந்­துள்­ளது. புத்­த­ பெ­ரு­மா­னுக்கு நேர்ந்­து­விட்ட நாடு இது. என­வேதான் எனது தியா­கத்­திற்கு நீதி கிடைத்­துள்­ளது. நாடு எதிர்­கொண்­டுள்ள அச்­சு­றுத்­த­லான நிலைமை குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் பரந்­து­பட்ட பேச்­சுக்­களை முன்­னெ­டுக்க முடிந்­தது. உண்மை நிலை­மை­யினை அவர் உணர்ந்து கொண்­டா­ரென நான் நினைக்­கின்றேன். இதன் வெளிப்­பா­டா­கவே எனது விடு­த­லைக்­கான சந்­தர்ப்பம் கூட ஏற்­பட்­டி­ருக்­கலாம்.

கேள்வி : உங்­க­ளது விடு­தலை குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் யாரேனும் மத்­தி­யஸ்தம் வகித்து செயற்­பட்­டார்­களா?

பதில் : நான் சிறை­யி­லி­ருந்த காலப்­ப­கு­தியில் கட்சி பேதங்­க­ளின்றிப் பலரும் என்னைச் சந்­தித்­தார்கள். ஒரு தடவை பேராயர் கர்­தினால் கூட என்னை வந்து சந்­தித்துச் சென்றார். அதே­போன்று அனைத்து பௌத்த பீடங்­க­ளி­னதும் மகா­நா­யக்க தேரர்­களும் எனது விடு­தலை குறித்து கோரிக்­கை­களை விடுத்­தி­ருந்­தனர். பௌத்­தர்கள் மாத்­தி­ர­மல்ல, வடக்கு, கிழக்கு மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் வாழும் தமி­ழர்கள் கூட எனது விடு­தலை தொடர்பில் பேசி­னார்கள். இந்து சம்­மே­ளனம் கோரிக்கை விடுத்­தி­ருந்து. அதே­போன்று முஸ்லிம் சமூ­கத்­தி­னரும் எனது விடு­தலை குறித்து பல­முறை பேசி­யி­ருந்­தனர். ஆகவே எவ்­வித பேத­மு­மின்றி எனது விடு­த­லைக்­காகப் பலரும் கோரிக்கை விடுத்­தனர். இதுவே ஒரு­கட்­டத்தில் ஏகோ­பித்த கருத்­தா­கவும் மாறி­யது.

எனக்கு விதிக்­கப்­பட்ட தண்­டனை ஏற்­பு­டை­ய­தல்ல என்­பதை வெளிப்­ப­டுத்தும் விட­யமே நாட்டின் அனைத்து இன மக்கள் மத்­தி­யிலும் பேசப்­பட்ட விட­ய­மா­கி­யது. இதுவும் எனது விடு­த­லைக்கு வழி­வ­குத்­தது.

கேள்வி : இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் கொடூ­ரத்­தன்­மையை முன்­கூட்­டியே நீங்கள் எவ்­வாறு கணித்­தீர்கள்?

20 வரு­டங்கள் கண்­கா­ணித்தோம்

பதில் : நாங்கள் வெறு­மனே செயற்­பட்ட குழு­வொன்­றல்ல. இரு­பது வரு­ட­கா­ல­மாக இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் செயற்­பா­டுகள் குறித்து கண்­கா­ணித்தோம். எனது விகா­ரையை சற்­றுப்­பா­ருங்கள். மூன்று ஏக்கர் நிலப்­ப­ரப்பில் இந்த விகாரை அமைந்­துள்­ளது. ஆனால் இதில் வழி­பாட்­டிற்­கென்று எந்­த­வொரு பகு­தியும் விசே­ட­மாக அமை­யப்­பெ­ற­வில்லை. அதே­போன்று தொடர்­மா­டிக்­கட்­ட­டங்­களை அமைக்க வேண்­டிய தேவையும் எனக்கு ஏற்­ப­ட­வில்லை. இரு­பது வரு­ட­கா­ல­மாக எமது நாட்டைப் பாது­காக்­கக்­கூ­டிய பிர­ஜை­க­ளையே நான் உரு­வாக்­கி­யி­ருக்­கின்றேன்.

சிறந்த பிர­ஜை­களை உரு­வாக்­கு­வது எமது கட­மையே தவிர, பெரிய தொடர்­மா­டிக்­கட்­ட­டங்­களை நிர்­மா­ணிப்­ப­தல்ல. நூறு அறைகள் இருந்­தாலும் ஒரு அறையில் தான் நித்­திரை செய்­யலாம். நாட்­டுக்­காக எமது தியா­கங்­களை செய்­ய­வேண்­டு­மென நான் மனச்­சாட்­சிக்கு நேர்­மை­யா­கவே தீர்­மா­னித்தேன். இதனால் என்னை நானே அழித்­துக்­கொண்டேன். என்னைப் போன்று இழிவுச் சொற்­களால் எந்­த­வொரு தேரரும் சாடப்­பட்­டி­ருக்க மாட்டார். என்­மீது எத்­த­னையோ குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர். இவற்றைத் தாண்டி நான் ஒரு சுதந்­தி­ர­மான பௌத்த பிக்­கு­வா­கவே எப்­போ­து­மி­ருந்தேன். எனக்­கென்று ஒன்­று­மில்லை.

அர­சி­யல்­வா­தி­களின்

சக­பாடி அல்ல

அர­சி­யல்­வா­தி­களின் சக­பா­டி­யாக இருக்­க­வேண்­டிய தேவை எனக்­கில்லை. என­வேதான் நாட்­டுக்­கான அனைத்துச் சந்­தர்ப்­பங்­க­ளிலும் தன்­னம்­பிக்­கை­யுடன் பின்­வாங்­காமல் முன்­நின்று செயற்­பட்டேன். புத்­த­பெ­ரு­மானின் சீட­னா­கவே நான் எப்­போதும் இருக்க விரும்­பு­கின்றேன். 2012 ஆம் ஆண்டு தேசிய அர­சியல் கட்­சி­க­ளுடன் சில நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டோம். ஜாதிக ஹெல­உ­று­மய மற்றும் தேசிய பிக்கு முன்­னணி ஆகி­ய­வற்றை ஸ்தாபிக்கும் போது நாம் பங்­க­ளிப்புச் செய்தோம். ஜாதிக ஹெல­உ­று­ம­யவில் இருந்து ஒன்­பது பேரைப் பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பினோம். இது­கு­றித்து வேறொரு நாளில் பேச­வேண்டும். இவர்கள் நாட்டை வழி­ந­டத்­திய விதம் குறித்து நிச்­ச­ய­மாக வேறொரு தினத்தில் பேசப்­பட வேண்டும். அர­சியல் அதி­கா­ரங்­களை மையப்­ப­டுத்­திய தலை­வர்­களின் நிலை­மையை உணர்ந்தே ஒரு இலக்கை நோக்கி நாம் பய­ணிக்கத் தீர்­மா­னித்தோம்.

கட­மையை மறந்து விட்­டனர்

எனவே, முதன்­மு­த­லாக இந்தத் தாக்­கு­தல்­களை நடத்­தி­யது தமி­ழர்­களோ, முஸ்­லிம்­களோ அல்ல. சிங்கத் தோலைப் போர்த்­திய எம்­ம­வர்­களே முதலில் எம்மைத் தாக்­கினர். இதனைக் கண்டு நாங்கள் அஞ்­சி­ய­தில்லை. 2012 மே மாதம் பொது­ப­ல­சேனா அமைப்பு ஸ்தாபிக்­கப்­பட்­டது. நாட்டில் சிங்­கள பௌத்­தர்­க­ளுக்குப் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. அதற்குள் சிக்­குண்டு சிங்­க­ள­வர்கள் அழிந்­து­போ­கின்­றனர். இதி­லி­ருந்து மீள தலை­மைத்­து­வத்தை வழங்க வேண்டும் என்ற பாரிய இலக்­கு­ட­னேயே நாம் பொது­ப­ல­சேனா அமைப்பை உரு­வாக்­கினோம். பௌத்த இன­வ­ழிப்பு, மத­மாற்றம், கலா­சார அழி­வுகள் என பல்­வேறு வகையில் பௌத்த மக்­க­ளுக்­கெ­தி­ராக அடிப்­ப­டை­வாத சக்­திகள் தீவி­ர­மாக செயற்­பட்­ட­மையைக் கவ­னத்­திற்­கொண்டு எமது நட­வ­டிக்­கைகள் தீர்­மா­னிக்­கப்­பட்­டன. எனவே பொது­ப­ல­சேனா என்ற அமைப்பு யாரு­டை­யதும் துணைக்­கு­ழு­வல்ல. புத்­தரின் சேனை­யா­கவே பொது­ப­ல­சேனா காணப்­ப­டு­கின்­றது.

பொது­ப­ல­சே­னாவை உரு­வாக்­கி­யதன் பின்னர் மஹ­ர­க­மவில் இடம்­பெற்ற கூட்­டத்தின் போது நாட்டில் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கும், இந்­துக்­க­ளுக்கும் அமைப்­புக்­களை உரு­வாக்கிக் கொள்­ளு­மாறு கூறினோம். பூகோள பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் எமது நாட்­டிற்குள் ஊடு­ருவப் போகின்­றது. என­வேதான் நாங்கள் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கும், இந்­துக்­க­ளுக்கும் அவ்­வாறு கூறினோம். மூன்று தசாப்­த­கால கொடு­மை­யான வேத­னை­களை அனு­ப­வித்­த­வர்­க­ளா­கவே நாம் காணப்­ப­டு­கின்றோம். ஆனால் போர் முடி­வ­டைந்­ததன் பின்னர் மக்கள் தேசிய கட­மையை மறந்­து­விட்­டனர். வேறு உல­கத்­தி­லேயே வாழ்ந்­தார்கள். கையில் தேசிய அடை­யாள அட்டை கூட இருக்­க­வில்லை. தேசிய பாது­காப்பை முழு­மை­யாகப் புறம்­தள்­ளி­யி­ருந்­தனர்.

இதன் விளை­வாக பல்­வேறு சக்­திகள் நாட்­டிற்குள் உரு­வா­கின. பொது­ப­ல­சேனா அமைப்பை உரு­வாக்­கி­யதன் பின்னர் எமது நாட்டின் பாரம்­ப­ரிய முஸ்­லிம்­க­ளுக்கு வேறு­பாடு இருக்­க­வில்லை. இவ்­வா­றான பல முஸ்­லிம்கள் விகா­ரை­க­ளுக்குக் காணி­களை வழங்­கினர். தான­சா­லை­களை அமைக்கும் போது அரிசி வழங்­கு­வார்கள். இன்றும் விகா­ரை­க­ளுக்கு கொடை­களை வழங்கும் முஸ்­லிம்கள் உள்­ளனர். எவ்­வி­த­மான பேதங்­களும் காணப்­ப­ட­வில்லை. மத ரீதி­யான அடிப்­ப­டை­வா­தி­களை இனங்­கண்டு அவர்­களை பல­வீ­னப்­ப­டுத்­து­வதும் பொது­ப­ல­சே­னாவின் முக்­கிய குறிக்­கோ­ளாகக் காணப்­பட்­டது. இதன்­போது நாம் முதலில் கண்ட அடிப்­ப­டை­வாத சக்­தி­க­ளாக கிறிஸ்­தவ சபை­களைச் சார்ந்­த­வர்­களை அடை­யா­ளங்­கண்டோம்.

முத­லைக்­கண்ணீர் வடிக்கும்

கத்­தோ­லிக்க சபைகள்

இன்று முத­லைக்­கண்ணீர் வடிக்கும் கத்­தோ­லிக்க சபைகள் அன்று அவ்­வா­றான அடிப்­படை சக்­தி­க­ளுக்கு எதி­ராக நாங்கள் சட்டம் கொண்­டு­வ­ரு­மாறு வலி­யு­றுத்­திய போது வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்­தினர். அன்று அவர்கள் அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்தால் சஹ்ரான் போன்­ற­வர்கள் இன்று தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளாக மாறி­யி­ருக்க மாட்­டார்கள். அழிவு ஏற்­பட்­டதன் பின்னர் மக்­களின் கண்­ணீ­ருடன் விளை­யா­டு­வது தலை­மைத்­து­வ­மல்ல. அழிவு ஏற்­ப­டு­வ­தற்கு முன்­னரே அதனைத் தடுப்­பது சிறந்த தலை­மைத்­து­வ­மா­கவே நாம் கரு­து­கின்றோம்.

நாட்டில் 455 அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. இது எமது தாய்­நாடு. சிங்­கள மக்­களின் நாடா­கவே காணப்­ப­டு­கின்­றது. கலா­சாரம், மர­பு­ரி­மைகள், மொழி, மதம் என அனைத்­தையும் நாங்­களே உரு­வாக்­கினோம். எமக்­கெனத் தனித்­து­வ­மான பௌத்த சம்­பி­ர­தா­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றி­ருந்தும் ஏனைய மதங்­க­ளுக்கும் சுதந்­தி­ர­மாகச் செயற்­பட எவ்­வி­த­மான தடையும் காணப்­ப­ட­வில்லை. பௌத்­தர்­களைப் போன்று நல்­லி­ணக்­க­மாக வாழக்­கூ­டிய மதம் உலகில் வேறெந்த மதமும் இல்லை. இவ்­வா­றி­ருக்க, பௌத்த இனத்­திற்கு அச்­சு­றுத்­த­லாகும் வகையில் சில சக்­திகள் செயற்­ப­டு­வதால் தான் அந்த அடிப்­ப­டை­வாத சக்­தி­களை அழிக்க வேண்­டு­மென்று நாங்கள் கூறினோம். இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் தான் வஹாப்­வா­தத்தைப் போன்று சலா­பிஸ அடிப்­ப­டை­வா­தங்கள் குறித்தும் பாரம்­ப­ரிய முஸ்லிம் மக்கள் எமக்குத் தகவல் வழங்­கினர்.

இந்த இஸ்­லா­மிய சலா­பிஸ மற்றும் வஹா­ப் அடிப்­ப­டை­வா­தத்­தினால் நாட்டில் வாழும் முஸ்­லிம்கள் படு­மோ­ச­மாகப் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர் என்­பதை அதே சமூ­கத்தைச் சார்ந்­த­வர்­களே எமக்குக் கூறினர். அவர்கள் கூறி­ய­தற்­காக நாங்கள் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. மாறாக பல வரு­டங்­க­ளாக இந்த விட­யத்தைக் கூர்­மை­யாக அவ­தா­னித்தோம். பல்­வேறு தக­வல்­களைச் சேக­ரித்தோம். உலகில் பௌத்த நாடு­களில் இடம்­பெற்ற அழி­வு­களின் பின்­னணி குறித்து அவ­தா­னித்தோம். பௌத்த நாடுகள் மிக எளி­தாக இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத ஆக்­கி­ர­மிப்­பிற்குள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளதை நாம் கண்­ட­றிந்தோம்.

எமது இந்தப் பிராந்­தி­யத்தை எடுத்­துக்­கொண்டால் மாலை­தீவு என்­பது ஒரு பௌத்த நாடாகும். ஆப்­கா­னிஸ்தான், பாகிஸ்தான், மலேஷியா, இந்­தோ­னே­சியா ஆகிய நாடுகள் பௌத்த நாடு­க­ளாகும். மலே­ஷியா ஒரு பௌத்த நாடு என்­ப­தற்­கான ஆதாரம் சிங்­கப்பூர் நூத­ன­சா­லையில் இன்றும் காணப்­ப­டு­கின்­றது. பிராந்­தி­யத்தில் பெரும்­பா­லான பௌத்த நாடுகள் மிக வேக­மாக இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத ஆக்­கி­ர­மிப்­பிற்குள் உள்­வாங்­கப்­பட்­டன. அவ்­வா­றான ஆக்­கி­ர­மிப்­புக்­க­ளி­லி­ருந்து இலங்­கையைப் பாது­காக்க 800 போர்கள் இடம்­பெற்­றுள்­ளன. நாட்டில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் வலு­வாக மேலோங்கி வரு­கையில் அதற்கு எதி­ராகப் பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள் குரல் கொடுக்கும் போது அவர்கள் தாக்­கப்­ப­டு­வ­தா­கவும், கொலை செய்­யப்­ப­டு­வ­தா­கவும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் எம்­மிடம் முறை­யிட்­டனர்.

ஹலால் விவ­காரம்

என­வேதான் இந்த விட­யத்தை ஆழ­மாகக் கவ­னத்­திற்­கொண்டு இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ராக நாங்கள் குரல்­கொ­டுக்க ஆரம்­பித்தோம். இதன்­போது முத­லா­வது விட­ய­மாக ஹலால் விவ­கா­ரத்தைக் கையில் எடுத்தோம். அர­சி­யல்­வா­திகள் இந்த விட­யத்தை தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்­தி­னார்கள். 70 ஆண்டு கால­மாக நாட்டின் எந்­த­வொரு பிரச்­சி­னை­யையும் அர­சி­யல்­வா­திகள் தீர்க்­க­வில்லை. இன்று இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ராகக் குரல் கொடுக்கும் சிங்­கத்தோல் போர்த்­தி­ய­வர்கள் அன்று நாங்கள் பேசும் போது எம்மை இன­வா­தி­யா­கவே பிர­சாரம் செய்­தனர். 2013ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தியில் கிழக்கு மாகாணம் குறித்து நான் முக்­கிய விட­ய­மொன்றைக் குறிப்­பிட்டேன். அதா­வது சஹ்ரான் என்ற நபர் கிழக்கு மாகா­ணத்தில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை மிகத் தீவி­ர­மாகப் போஷித்து வரு­கின்றார். அவர் ஆயு­தங்­களை ஏந்தி ஏனைய இனத்­த­வர்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­ப­டு­மாறு இஸ்­லா­மிய இளை­ஞர்­களைத் தூண்­டு­கின்றார் என்ற விட­யத்தை வெளிப்­ப­டுத்­தினேன்.

சஹ்­ரானை கைது­செய்ய

2013 இல் கோரினேன்

ஷிப்லி பாரூக் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோர் சஹ்­ரானை வெளி­நாட்­டிற்கு அனுப்­பு­வ­தற்கு முற்­பட்­டனர். நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி என்ற அமைப்பை உரு­வாக்கி அத­னூ­டா­கவே இவர்கள் செயற்­பட்­டனர். சஹ்­ரானைக் கைது செய்­யு­மாறு கடந்த 2013 ஆம் ஆண்டில் நான் கோரினேன். அதற்­கான எழுத்­து­மூல ஆவ­ணங்கள் என்­னிடம் உள்­ளன. 2007 ஆம் ஆண்டில் அலவி மௌலானா இதே­வி­ட­யத்தைக் கோரி­யி­ருந்தார். அஸாத் சாலியின் சகோ­த­ர­ரான ரியாஸ் சாலி தெவட்­டகா பள்­ளி­வா­சலில் பொறுப்­பா­ளர்­களில் ஒரு­வ­ராக உள்ளார். இவர்கள் கிழக்கில் மேலோங்­கி­வரும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நிலைப்­பாட்டில் செயற்­பட்­டனர். குரு­ணா­கலை – பர­கா­தெ­னிய, நிட்­டம்­புவ – திஹா­ரிய, சிலாபம் – மாதம்பே மற்றும் காத்­தான்­கு­டியில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் மிகத் தீவி­ர­மாக வளர்­கின்­றது. இவை தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் என்று அவர்கள் ஏற்­க­னவே எச்­ச­ரித்­தி­ருந்­தனர். பொது­ப­ல­சேனா செயற்­ப­டு­வ­தற்கு முன்­னரே ரியாஸ் சாலி மற்றும் அலவி மௌலானா ஆகியோர் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ராகச் செயற்­பட்­டனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நீதி வழங்­காது இதனை தற்­போது அர­சி­ய­லாக்கிச் செயற்­ப­டு­கின்­றனர். பிரச்­சி­னையைத் தீர்க்­காது வாக்­கு­களை மையப்­ப­டுத்திச் செயற்­ப­டு­கின்­றனர். இவ்­வா­றான பேர­ழிவு இடம்­பெற்றும் கட்சி பேதங்­களை மறந்து தேசிய நலன்­க­ருதி ஓர­ணி­யாகத் திரள இன்றும் முடி­யாமல் போயுள்­ளது. இவர்கள் பிள­வு­பட்டு நாட்டு மக்­களை ஒன்­று­சே­ரு­மாறு கூறு­கின்­றனர். நாட்டு மக்­க­ளுக்கு ஒரு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த இவர்­களால் முடி­யா­மற்­போ­யுள்­ளது.

விடு­தலைப்புலி­க­ளுடன்

ஒப்­பிட முடி­யாது

விடு­தலைப் புலி­க­ளுடன் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை ஒப்­பிட முடி­யாது. விடு­தலைப்புலி­களின் தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளுக்கு ஒரு இலக்கு காணப்­பட்­டது. அது அர­சியல் ரீதி­யான ஒன்­றாகும். அவர்­க­ளு­டைய நோக்­கமும் அர­சி­யல்­ம­யப்­பட்­டது. ஆனால் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­களின் இலக்கு அவ்­வா­றா­ன­தல்ல. காபீர்கள் மற்றும் அந்­நிய மதத்­த­வர்­களைக் கொலை செய்­வதே எமது இலக்­கென ஐ.எஸ் தலைவர் அபூபக்கர் அல்-­பக்­தாதி கூறு­கிறார். உலகம் இருக்கும் வரையில் இந்த இலக்­கி­லி­ருந்து நாம் வில­கப்­போ­வ­தில்லை என்­கிறார். நாளை ஐ.எஸ் அல்­லது வேறொரு அமைப்பும் இதே இலக்­குடன் வரலாம். தலிபான், அல்­கொய்தா, அல்-­ஷபாப் மற்றும் ஜமாத் இஸ்லாம் இவ்­வாறு 52 இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் உலகில் காணப்­ப­டு­கின்­றன. இவை­ய­னைத்­துமே தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன.

மீண்டும் சிறை சென்­றாலும் போரா­டுவேன்

இலங்­கையில் நாளை மற்­று­மொன்று வெளி­வ­ரலாம். என­வேதான் இதற்கு எதி­ராக பொது­ப­ல­சேனா 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து மிகத் தீவி­ர­மாகச் செயற்­படத் தொடங்­கி­யது. கொச்­சிக்­கடை தேவா­ல­யத்தில் கொல்­லப்­ப­டு­ப­வர்கள் யாரென சஹ்ரான் கருத்­திற்­கொள்­ள­வில்லை. வெடி­குண்­டிற்கு இது­வொன்றும் தெரி­யாது. இந்த அச்­சு­றுத்­தல்கள் குறித்து நாங்கள் செயற்­படும் போது மக்கள் கூட எம்மை இன­வா­தி­யாக விமர்­சித்­தார்கள். ஆனால் விமர்­ச­னங்­க­ளுக்கு பொது­ப­ல­சேனா அடி­ப­ணி­ய­வில்லை. இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் என்­பது இலங்­கையை ஆக்­கி­ர­மித்­துள்ள இரத்தப் புற்­று­நோ­யாகும். எனவே இது­கு­றித்து மிகத் தீவி­ர­மாகச் செயற்­பட வேண்­டிய கால­மா­கவே தற்­போ­தைய கால­கட்­டத்தை நான் காண்­கின்றேன். மீண்டும் என்னைச் சிறை­யி­லிட்­டாலும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான போராட்­டத்தைக் கைவிட இய­லாது.

மியன்­மாரில் நடந்­தது என்ன?

இந்த அச்­சு­றுத்­தலை எம்மால் எதிர்­கொள்ள முடியும். மக்­களை அவ­தா­னத்­துடன் இருக்கச் செய்து தேசிய அளவில் ஒற்­று­மை­யாகச் செயற்­பட்டால் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை நாட்­டி­லி­ருந்து துடைத்­து­வி­டலாம். இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­திகள் தொடர்பில் முழு­மை­யான தக­வல்கள் என் வச­முள்­ளன. மியன்­மாரில் என்ன நடந்­தது? தெற்கு தாய்­லாந்தில் எவ்­வாறு பௌத்­தர்­க­ளுக்கு எதி­ராக சதித்­திட்டம் தீட்­டப்­பட்­டது? பங்­க­ளா­தேஷில் பௌத்­தர்கள் மலைப்­பாங்­கான பகு­தியில் இருப்­பது ஏன்? ரோஹிங்­கியா முஸ்­லிம்கள் வெளி­யு­ல­கிற்குக் காட்டும் போலி­யான முகத்தை கண்­டி­ருக்­கிறேன். எனவே இலங்­கையில் அவ்­வா­றா­ன­தொரு நிலைமை ஏற்­ப­டா­தி­ருக்க நிபந்­த­னை­யற்ற வகையில் பொது­ப­ல­சேனா செயற்­படும்.

இன்னும் நூறு சஹ்­ரான்கள் வரு­வார்கள். அவர்­களை நாம் அடை­யாளம் காண­வேண்டும். பாரம்­ப­ரிய முஸ்­லிம்­க­ளையும், அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்­க­ளையும் வேறு­ப­டுத்தி இனங்­கா­ண­வேண்டும். தய­வு­செய்து அர­சி­யல்­வா­திகள் இந்த விட­யத்தைப் பேசக்­கூ­டாது. பொது­ப­ல­சேனா இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான விட­யங்­களைக் கருத்­திற்­கொண்டு செயற்­படும். மத்­ர­ஸாக்கள் தேவையா இல்­லையா என்­பதை நாம் கூறு­கின்றோம். 2013 அக்­டோபர் 9ஆம் திகதி பது­ளையில் இடம்­பெற்ற பொது­ப­ல­சேனா மாநாட்டின் போது கிழக்கில் ஸ்தாபிக்­கப்­படும் ஹிஸ்­புல்லா மண்­டபம் குறித்துத் தகவல் வெளி­யிட்டேன். சவு­தி­அ­ரே­பி­யா­வி­லி­ருந்து ஷரியா ஆலோ­சகர் அடிக்கல் நாட்­டு­வ­தற்கு இலங்­கைக்கு வருகை தந்தார். மலிக் அப்­துல்லா பல்­க­லைக்­க­ழ­கமே கிழக்கில் ஸ்தாபிக்­கப்­ப­டு­வ­தாக 2013 ஆம் ஆண்டில் நான் வெளிப்­ப­டுத்­தினேன். அன்றே குரல் கொடுத்­தி­ருந்தால் இந்த ஷரியா பல்­க­லைக்­க­ழகம் என்ற ஒன்று வந்­தி­ருக்­காது. சஹ்­ரானின் குண்டு வெடித்­த­வுடன் தான் அர­சி­யல்­வா­திகள் இந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தைக் கண்­டு­கொண்டு, குரல்­கொ­டுக்­கின்­றனர்.

முது­கெ­லும்­பில்லை

ஹிஜாப், நிகாப், புர்கா குறித்து முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ரிடம் கருத்­துக்­களை வின­வு­வோ­மென கடந்த வாரத்தில் சில அர­சி­யல்­வா­திகள் கூறி­யதை நான் அவ­தா­னித்தேன். ஏன் அவர்­க­ளிடம் கேட்க வேண்டும்? இது எமது நாடு. புர்கா தடை, மத்­ரஸா தடை, ஷரியா தடை என நாம் தீர்­மா­னிக்க வேண்டும். இதனைத் தைரி­ய­மாகக் கூறு­வ­தற்கு யாருக்கும் முது­கெ­லும்பு இல்லை. இது சிங்­கள பௌத்த நாடு. எனவே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்குக் கார­ண­மாகும் இவ்­வா­றான விட­யங்­களை உட­ன­டி­யாகத் தடை செய்ய வேண்டும். அதனை நாம் தீர்­மா­னிக்க வேண்டும். அவ்­வாறு தீர்­மா­னிக்கும் இடத்­திற்கு நாடு வரும்­பட்­சத்தில் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு கிடைத்­து­விடும்.

ஹலால் திட்­டத்தை இலங்­கையில் கொண்­டு­வரும் போது ஜம்­இய்­யத்துல் உல­மாக்கள் பௌத்­தர்­க­ளிடம் கேட்­டார்­களா? ஷரியா வங்­கி­களைக் கொண்­டு­வந்­தார்கள். அதற்கு சிங்­களப் பெரும்­பான்மை மக்­க­ளிடம் அனு­மதி பெற்­றார்­களர்? அல்­லது கத்­தோ­லிக்­கர்­க­ளி­டமோ, இந்­துக்­க­ளி­டமோ கேட்­டார்­களா? இல்லை, யாரி­டமும் கேட்­க­வில்லை. மிகவும் சூட்­சு­ம­மான முறையில் இவ்­வா­றான அடிப்­ப­டை­வாத விட­யங்­களை விதைக்கும் போது யாரும் அதனை எதிர்க்­க­வில்லை.

திரு­டனைப் பிடிப்­ப­வனை சிறை­யி­ல­டைக்கும் நாடு

பொது­ப­ல­சேனா அதனை எதிர்த்த போது எம்மை சிங்­கள சக்­திகள் அடக்­கி­யது. திரு­டனைப் பிடித்துக் கொடுப்­ப­வனை சிறை­யி­ல­டைக்கும் நாடா­கவே எனது தாய்­நாடு காணப்­ப­டு­கின்­றது. அதே­போன்று இலங்கை நீதித்­துறைக் கட்­ட­மைப்­பிற்குள் காதி நீதி­மன்­றங்கள் காணப்­ப­டு­கின்­றன. இதற்கு யார் அனு­மதி வழங்­கி­யது? ஷரியா சட்டம் எமது அர­சி­ய­ல­மைப்­பிற்குள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. நாம் சவு­திக்குச் சென்றால் நாம் அந்த நாட்டுச் சட்­டத்தின் பிர­காரம் செயற்­பட வேண்டும். ஏன் இலங்­கையில் மட்டும் இவ்­வா­றா­ன­தொரு நிலைமை? நாட்டின் அபி­மா­னத்தை அர­சி­ய­லுக்­காக எமது தலை­வர்கள் அழித்­து­விட்­டனர். எனவே இதனைத் தொடர்ந்தும் அனு­ம­திக்க முடி­யாது.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான போராட்­டத்­திற்கு பொது­ப­ல­சேனா தலைமை தாங்கும். இரட்டை நிலைப்­பாட்­டுடன் செயற்­ப­டு­ப­வர்­களை நாட்­டு­மக்கள் முன்­நி­றுத்தி வெளிச்­சத்­திற்குக் கொண்­டு­வ­ருவோம். இதற்கு நாங்கள் அஞ்­சப்­போ­வ­து­மில்லை.

கேள்வி : அர­சியல் எதிர்­பார்ப்­பு­ட­னேயே நீங்கள் விடு­தலை பெற்­ற­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இது­பற்றி?

எமது இலக்கு

பதில் : இதற்குப் பதி­ல­ளித்து நான் காலத்தை வீண­டிக்க விரும்­ப­வில்லை. பொது­ப­ல­சே­னாவின் இலக்கு இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை இலங்­கை­யி­லி­ருந்து முற்­றாக இல்­லா­தொ­ழிப்­ப­தே­யாகும். இந்த இலக்கை முன்­னெ­டுக்க அனைத்துப் பிர­ஜை­களும் சீருடை அணி­யாத பொலி­ஸா­ராக செயற்­பட வேண்டும். முஸ்­லிம்­களைத் தாக்­கு­வ­தற்­காக அல்ல. தாம் வாழும் சூழலில் என்ன நடக்­கின்­றுது என்­பதை மக்கள் அவ­தா­னிக்க வேண்டும்.

கேள்வி : நாட்­டிற்குள் தற்­போது தலைத்­தூக்­கி­யுள்ள இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் பின்­னணி குறித்துப் பல தக­வல்கள் இருப்­ப­தாகத் தெரி­வித்­துள்­ளீர்கள். அந்தப் பின்­ன­ணியில் வெளி­நா­டுகள் உள்­ள­னவா?

பதில் : இது ஓர் பரந்­து­பட்ட விட­ய­மாகும். தனித்­த­லைப்பின் கீழ் இதனை மாத்­திரம் கருத்­திற்­கொள்ள வேண்டும். ஒரு குழந்தை பிறப்­ப­தற்கு முன்னர் ஒன்­பது மாதங்­க­ளேனும் தாயின் கரு­வ­றையில் இருக்கும். அதே­போன்று தான் சஹ்ரான் போன்­ற­வர்­களும் தானாக உரு­வா­க­வில்லை. அர­சியல், சர்­வ­தேசத் தொடர்­புகள் தேவைப்­ப­டு­கின்­றன. நாலா­தி­சை­யிலும் உள்ள கடல் இலங்­கைக்கு இயற்­கையின் பாது­காப்­பாக அமைந்­துள்­ளது. இருப்­பது ஒரே­யொரு விமா­ன­நி­லையம். இவ்­வா­றி­ருந்தும் எமது தாய்­நாட்டைப் பாது­காத்­துக்­கொள்ள முடி­ய­வில்லை என்றால் அது எமது இய­லா­மை­யாகும். எமது அர­சியல் தலை­வர்கள் இந்த விட­யத்தில் தோல்­வியைச் சந்­தித்­துள்­ளனர். ஐரோப்­பிய நாடு­களின் எல்­லைகள் வெறும் வேலி­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றி­ருந்தும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை மிகத் தைரி­ய­மாக எதிர்­கொள்­கின்­றனர். அந்த முன்­னு­தா­ர­ணங்­களை நாம் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும்.

பாது­காப்பு குறித்து பேச விரும்­ப­வில்லை

எனவே குழப்­ப­ம­டையத் தேவை­யில்லை. நான் ஆவே­சப்­பட்டு வார்த்­தை­களை வெளியில் விடவும் விரும்­ப­வில்லை. தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும் எந்­த­வொரு விட­யத்­தையும் நான் கூற­வி­ரும்­ப­வில்லை. இதன் பின்­ன­ணியில் சீ.ஐ.ஏ உள்­ளதா? அல்­லது சவுதி உள்­ளதா என்­பதை வேறொரு நாளில் பேசுவோம். அதே­போன்று எவ்­வாறு நிதிப்­ப­ரி­மாற்றம் இடம்­பெற்­றது? ஆயு­தங்கள் எவ்­வாறு கொண்­டு­வ­ரப்­பட்­டன? அவர்­க­ளது கோட்­பா­டுகள் என்ன? அது எவ்­வாறு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது? இவை­ய­னைத்­தையும் ஆதா­ர­பூர்­வ­மாக எம்மால் வெளிப்­ப­டுத்த முடியும். எனவே எதி­ரிக்கு வாய்ப்புக் கொடுக்க நாம் விரும்­ப­வில்லை. இப்­ராஹிம், சஹ்ரான் இவர்­க­ள­னை­வரும் பிறப்பில் நல்­ல­வர்கள். ஆனால் இவர்­களைத் தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளாக உரு­வாக்கும் இடம் எது­வென்­பதை வெளிப்­ப­டுத்­துவோம். அந்த இடத்தை இலக்­கு­வைத்துத் தான் தாக்­கு­தல்கள் அமைய வேண்டும். இல்­லை­யென்றால் பல­நூறு சஹ்­ரான்­களை நாம் சந்­திக்க நேரிடும். சொகுசு வாழ்க்கை வாழ்ந்­த­வர்கள் இறை­வனின் பெய­ரைக்­கூறி தற்­கொலைக் குண்­டு­தா­ரி­க­ளாக செல்­கி­றார்கள் என்றால் அதனை சாதா­ரண விட­ய­மாக நாம் கரு­த­மு­டி­யாது.

பொது­ப­ல­சேனா பிரச்­சி­னையைத் தீர்க்கும்

இதனால் அதே சமூ­கத்­தி­லுள்ள ஏனை­ய­வர்­க­ளுக்கு அவர்கள் வழங்கும் செய்தி என்ன? சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அவர்­களே இறை­வ­னுக்­காகத் தற்­கொலை செய்து கொள்­கின்­றார்கள். நாமும் செய்து கொண்டால் என்ன என்று நினைத்து பல­நூ­றுபேர் முன்­வந்­து­விட்டால் நிலைமை என்­ன­வாகும்? அர­சி­யல்­வா­தி­களின் முட்­டாள்­த­ன­மான செயற்­பா­டு­க­ளினால் இவ்­வா­றா­ன­தொரு நிலை­மையே ஏற்­படும். எனவே அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும், ஏனைய தரப்­பி­னர்­க­ளுக்கும் அநா­வ­சிய பிர­சா­ரங்­களைக் கைவி­டு­மாறு கோரு­கின்றோம். பொது­ப­ல­சேனா இந்தப் பிரச்­சி­னையைத் தீர்த்து வைக்கும். ஏதேனும் அறிய வேண்­டு­மென்றால் எம்­மிடம் கேட்டு அறிந்­து­கொள்­ளுங்கள். அர­சி­ய­லுக்­காக ஒரு­வ­ரை­யொ­ருவர் தூற்­றிக்­கொள்­வதை விட யாசகம் செய்­வதே மேலென்று கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றேன்.

கேள்வி : உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் குறித்து இந்­தியா இரு தட­வை­க­ளுக்கு மேல் எச்­ச­ரித்­தி­ருந்­தது. ஆனால் எமது அர­சாங்கம் இதனைக் கருத்­திற்­கொள்­ளா­தது ஏன்?

பதில் : இது நேற்று இன்று வந்த பிரச்­சி­னை­யல்ல. இதன் ஆரம்ப வேர்­களை நோக்கிச் சென்று பார்த்தால் 1983 ஆம் ஆண்டு காலப்­ப­குதி வரை சென்­றி­ருக்கும். முத­லா­வது தௌஹீத் ஜமா அத் முகாம் 1983 ஆம் ஆண்டில் தான் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவில் தமிழ்­நாடு தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பு காணப்­ப­டு­கின்­றது. அதன் தலை­வர்­களில் ஒரு­வ­ராக கோவை ஐயூப் என்ற ஒருவர் இருந்தார். ஷேக் ஆப்தீன் என்ற நபரும் அவ்­வ­மைப்­புடன் செயற்­பட்­டி­ருந்தார். இவர்கள் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்­தனர். இவர்கள் அப்துல் ராஷிக் என்ற நப­ருடன் தொடர்­பு­பட்டு, புத்­த­பி­ரா­னுக்கு எதி­ரான பிர­சா­ரங்­களைச் செய்­தனர். மனித மாமி­சத்தை புத்தர் உண்டார் என்று மிக இழி­வாகப் பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டனர். அதிஷ்­ட­வ­ச­மாக புத்­தரை இழி­வாகப் பேசினால்,பேசு­ப­வனின் கழுத்தை வெட்டு என்ற அடிப்­ப­டை­வாத சிந்­தனை பௌத்த மதத்தில் இல்லை. என­வேதான் நாங்கள் வாய்மூலமாக எச்சரித்தோம்.

இந்திய இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனை கொண்ட நபர்கள் இலங்கையில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அதேபோன்று அகில இலங்கை தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பையும் அவர்கள் நிறுவினார்கள். அப்துல் ராஷிக் என்ற நபர் இந்த தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பின் ஊடாக பௌத்தர்களுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்னெடுத்தார். அவருக்கு எதிராக நாங்கள் முறைப்பாடு செய்தோம். எந்தவொரு மகாநாயக்க தேரரோ அல்லது பௌத்த மதம் குறித்து தற்போது பேசுபவர்களோ அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கிற்குக் கூட யாரும் ஒழுங்கு செய்யவில்லை. கனிஷ்டநிலை சட்டத்தரணி ஒருவரே அந்த வழக்கிற்காக ஆஜராகியிருந்தார்.

இவ்வாறு பௌத்தர்களுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்த போது ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா அத் அமைப்பிற்கு தலைமைத்துவத்தை மாற்றுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. இதன் பின்னர் தௌஹீத் ஜமா அத் அமைப்பு ஒன்பதாகப் பிரிக்கப்பட்டது. ஒன்பது தலைமைத்துவத்தின் கீழ் தௌஹீத் ஜமா அத் அமைப்பினர் இலங்கையில் மிகத் தீவிரமாக செயற்பட ஆரம்பித்தனர். இன்றுவரையில் எமது பாதுகாப்புத் தரப்பு ஏன் அப்துல் ராஷிக் என்ற நபரைக் கைது செய்யவில்லை? இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரங்களின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவராகவே அவர் காணப்படுகின்றார். இதற்கான ஆதாரங்களை ஜனாதிபதியிடம் நான் கையளித்திருக்கின்றேன். இன்னும் ஒருவார காலத்திற்குள் அப்துல் ராஷிக்கை கைது செய்யாவிட்டால் பொதுபலசேனா அவரைக் கண்டுபிடிக்கும்.

நெத்தலி மீனே துரத்தப்படுகிறது

பாதுகாப்புத் தரப்பை அப்துல் ராஷிக் தற்போது திசை திருப்பி வருகின்றார். சுறா மீன்கள் எல்லாம் தப்பித்துக் கொள்ள வெறும் நெத்திலி மீன்களைப் புலனாய்வுப் பிரிவினர் துரத்திவருகின்றனர். கொள்ளைக் கூ;டத்தின் தலைவரிடமே கொள்ளையர்கள் குறித்துத் தகவல்களைக் கேட்டறியும் நிலையில் பாதுகாப்புத் தரப்பு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா அத், சிலோன் தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பை உருவாக்கியிருந்தது. இவர்கள் யாருமே தௌஹீத் என்ற சொற்பதத்தைக் கைவிட விரும்பவில்லை. இலக்கு ஒன்றுதான்: அவற்றை அடைய வெவ்வேறு வழிகளில் பயணிக்கின்றார்கள். சஹ்ரான் உருவாக்கியது தான் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு. இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் உச்சநிலையாக மற்றுமொரு நபர் யுனைட்டட் தௌஹீத் ஜமா அத் என்றதொரு அமைப்பை உருவாக்கினார். இவ்வாறு 50 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் காணப்படுகின்றன. எனவே நாம் எதிர்பார்க்கின்ற இடத்தில் இந்தப் பிரச்சினையில்லை.

சிங்களவர், தமிழர் மத மாற்றம்

30 ஆயிரம் தமிழர்களை இஸ்லாமிய மதத்திற்கு அடிப்படைவாதிகள் மதம் மாற்றியுள்ளனர். சுமார் 80 ஆயிரம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற சிங்களப் பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியுள்ளனர். கடந்த 5 வருடகாலத்திற்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள யுவதிகள் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளனர். குருணாகலை நகர எல்லைக்குள் மாத்திரம் சுமார் 1000 பௌத்த பெண்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவையனைத்திற்கும் எழுத்துமூல ஆதாரங்கள் எம்மிடமுள்ளன. இந்நிலையை மாற்றுவதற்காக நாங்கள் செயற்படுவோம். இது எமது நாடு. எமது நாட்டுக் கலாசாரத்தைச் சீரழிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + four =

*