;
Athirady Tamil News

கானல் நீராகி விட்ட மலை­யக உயர்­கல்வி வாய்ப்­புகள்!! (கட்டுரை)

0

அர­சியல் தஞ்­ச­ம­டைதல் என்­ப­தற்கு சிறந்த உதா­ரணம் மலை­ய­க­மாகும். இங்கு வசித்து வரும் பொது­மக்­க­ளி­லி­ருந்து வர்த்­தக சமூ­கத்­தினர், கல்­வித்­துறை­யினர், ஏன் மாண­வர்­க­ளையும் கூட தமது அர­சியல் நிகழ்ச்சி நிரல்­க­ளுக்கு ஏற்ப அர­சி­யல்­வா­திகள் பிரித்து வைத்­துள்­ளனர். இதன் கார­ண­மா­கவே சமூக ரீதி­யான தேவைப்­பா­டுகள் எழும்­போது அது குறித்து எவரும் கேள்வி எழுப்ப முடி­யாத நிலைமை உரு­வா­கி­யுள்­ளது.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் தேசிய பல்­க­லைக்­க­ழகம் ஒன்று அமைக்­கப்­படல் வேண்டும் என இம்­மா­வட்­டத்­தி­லி­ருந்து உரு­வான கல்­வி­மான்கள் மாத்­தி­ரமே காலத்­துக்குக் காலம் குரல் கொடுத்­துக்­கொண்­டி­ருக்க அதை கடந்து வெற்­றி­க­ர­மாக 40 வருட தமிழ் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை மட்­டுமே தூக்­கிப்­பி­டித்­துக்­கொண்டு நிற்­கி­றது நுவ­ரெ­லியா மாவட்டம்.

எதற்­கெ­டுத்­தாலும் எமக்கு எல்­லாமே தாம­த­மா­கியே கிடைத்­தது. தட்­டுத்­த­டு­மாறி முன்­னேறி வரு­கிறோம், நாட்டின் தேசிய பிரச்­சி­னை­களால் ஒன்றும் கேட்க முடி­யாது போனது என புளித்­துப்­போன வச­னங்­க­ளையே கூறி மக்கள் மத்­தி­யி­லி­ருந்து மெது­வாக வில­கிச்­சென்று கொண்­டி­ருக்­கின்­றது மலை­யக அர­சியல்.

மலை­யக சமூ­கத்தின் கல்வி வளர்ச்சி மாகாண பாட­சா­லைகள் மட்டும் தங்­கி­யி­ருந்தால் போதும் என்ற அர­சியல் அடக்­கு­மு­றையும் அதைத் தாண்டிச் சென்று விடக்­கூ­டாது என்ற அச்­ச­முமே இன்று மலை­யக உயர்க்­கல்வி வாய்ப்­புகள் மறுக்­கப்­ப­டு­வ­தற்குக் காரணம் என்­பதை அனை­வரும் அறிவர். இது­வரை பெருந்­தோட்ட பாட­சா­லைகள் ஏதா­வ­தொன்றை எந்த அர­சி­யல்­வா­தி­யா­வது தேசிய பாட­சா­லை­யாக்­கு­வ­தற்கு முயற்­சி­களை எடுத்­தி­ருக்­கின்­ற­னரா, அவ்­வாறு ஏன் எடுக்­க­வில்லை? என்­பது குறித்து எவரும் கேள்வி எழுப்­பக்­கூ­டிய நிலை­மை­களில் இல்லை.

மலை­யக சமூ­கத்தை தேசிய நீரோட்­டத்தில் இணைக்க வேண்டும். தேசிய இன­மாக அங்­கீ­க­ரிக்க வேண்டும், தேசிய அர­சி­யலில் பங்­கெ­டுக்கச் செய்தல் வேண்டும் என்­றெல்லாம் கோஷம் எழுப்பி வரும் அர­சியல் பிர­தி­நி­திகள் தேசிய பாட­சா­லைகள் ,தேசிய பல்­க­லைக்­க­ழ­கங்கள் பற்றி வாயே திறப்­ப­தில்லை. ஏனென்றால் மலை­யக சமூ­கத்தை கிணற்­றுத்­த­வ­ளை­க­ளாக வைத்­தி­ருப்­பதால் மட்­டுமே தமது அர­சியல் இருப்பை தக்க வைத்­துக்­கொள்ள முடியும் என்­பதே இவர்­களின் தற்­போ­தைய நிலை.

பல்­க­லைக்­க­ழகம்

உயர்க்­கல்வி வாய்ப்­பு­களில் பல்­க­லைக்­க­ழகக் கல்வி இன்­றைய உலகில் இன்­றி­ய­மை­யா­த­தாகும். க.பொ.த உயர்­தரப் பரீட்சை கல்­வித்­த­கை­மைகள் எல்லாம் ஒரு காலத்தில் தொழில் வாய்ப்­பு­க­ளுக்­காக கோரப்­பட்­டன. ஆனால், இன்­றைய கோள­ம­ய­மாக்கல் உலகில் சவால்­களை சந்­திக்­கவும் தீர்­மா­னங்­களை எடுக்­கவும் பல்­க­லைக்­க­ழக கல்­வித்­த­கை­மை­களே தேவை என்­பதை உல­கமே உணர்ந்­துள்­ளது. ஆனாலும் அந்த வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு மலை­யக மாணவர் சமூ­கத்தை உரு­வாக்­கு­வதில் அர­சியல் பிர­தி­நி­திகள் தோல்­வியைத் தழு­வி­யுள்­ளனர் என்று நாம் எண்­ணிக்­கொண்­டி­ருந்தால் அதை விட மடைமை வேறு ஒன்றும் இல்லை.

அப்­படி அமைப்பை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யா­த­வாறு பல தடை­களை உரு­வாக்கி வரு­ப­வர்­களே இவர்கள் தான் என்­பதே உண்மை. சில வரு­டங்­க­ளுக்கு முன்பு நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் நான்கு பாட­சா­லை­களை தேசிய பாட­சா­லை­க­ளாக தர­மு­யர்த்த முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போது குறித்த பாட­சாலை அதி­பர்­களை கடிதம் எழுத வைத்து அப்­படி ஒரு உரு­வாக்கம் தேவை­யில்லை எனக் கூறிய அர­சி­யல்­வா­தி­களைத் தானே இன்னும் இந்த சமூகம் நம்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றது.

மலை­யக அர­சி­யலால் பல கல்வி வளங்கள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட காலங்கள் இருந்­தன. ஆனால் அதன் நீட்­சி­யாக இப்­போது ஒன்­றுமே நடப்­ப­தில்லை. வளப்­பற்­றாக்­குறை என்­பது ஆசி­ரியர், கட்­டி­டங்கள், மல­சல கூடங்கள் மட்­டு­மில்லை என்­பதை அனை­வரும் அறிவோம். ஐந்து வரு­டங்­க­ளுக்­கொரு முறை ஏதோ சில தெரிவு செய்­யப்­பட்ட பாட­சா­லை­க­ளுக்கு இவற்றைப் பெற்­றுக்­கொ­டுப்­பது மட்­டுமே தமது பணி என எண்­ணிக்­கொண்­டி­ருக்­கின்­றனர் அர­சி­யல்­வா­திகள். ஆனால், கல்­வியின் தரத்தை உயர்த்­து­வ­தற்­கு­ரிய வளங்­களை இது­வரை எவரும் பெற்­றுக்­கொ­டுத்­த­தாக இல்லை.

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 25 வரு­டங்­க­ளுக்கு முன்பு பத்­தனை தேசிய கல்­வி­யியற் கல்­லூரி உரு­வா­னது. அது மத்­திய அர­சாங்­கத்தின் உரு­வாக்கம் என்­றாலும் அதில் சிறு­பான்மை மாணவர் உள்­வாங்­கலில் செல்­வாக்கு செலுத்­தி­யது என்­னவோ மலை­யக அர­சியல் தான். இதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். ஆனால் 25 வரு­டங்­க­ளுக்­குப்­பி­றகு இது வரை ஒரு தேசிய கல்­லூ­ரியை இங்கு உரு­வாக்­கு­வ­தற்குக் கூட இப்­பி­ர­தேச அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு விருப்­ப­மில்லை. எல்­லாமே தமது கட்­டுப்­பாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் இவர்­களா மக்கள் சேவ­கர்கள்?

மலை­யக பல்­க­லைக்­க­ழகம் பற்றி இது வரை எந்த அர­சி­யல்­வா­தி­யா­வது உணர்வு பூர்­வ­மாக அர­சாங்­கத்­திடம் பேசி­யி­ருக்­கின்­றார்கள் என்றால் இல்லை என்­பதே பதில். இச்­ச­மூ­கத்­தி­லி­ருந்து படித்த வர்க்கம் உரு­வா­வதை விரும்­பாத அர­சி­யல்­வா­தி­களைத் தான் நாம் காலங்­கா­ல­மாக தெரிவு செய்து கொண்­டி­ருக்­கிறோம் என்ற உண்மை இங்கு எத்­த­னைப்­பே­ருக்கு தெரியும்?

தனி­யாக ஒரு சமூ­கத்­துக்கு ஒன்­றையும் தூக்­கிக்­கொ­டுத்து விட மாட்­டார்கள் என்­பதால் மலை­யக பல்­க­லைக்­க­ழகம் என்ற விடயம் பொது­வான ஒரு பல்­க­லைக்­க­ழகம் என்று மாற்­றப்­பட்­டது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் எல்லா சமூ­கத்­தி­னரும் கல்வி கற்­கக்­கூ­டிய ஒரு தேசிய பல்­க­லைக்­க­ழகம் ஒன்றை ஸ்தாபிப்­ப­தற்­கு­ரிய பேச்­சுக்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனாலும் அதை வேறு ஒரு கட்­சியோ அமைப்போ செய்து விடக்­கூ­டாது என்று அதிலும் குழப்பம் விளை­விக்கும் செயற்­பா­டு­களே இன்று சிலரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பல்­க­லைக்­க­ழகம் வேண்டாம் ஒரு பல்­க­லைக்­க­ழக கல்­லூரி அல்­லது இலங்கை பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவால் அங்­கீ­காரம் பெற்ற தமி­ழக பல்­க­லைக்­க­ழக கிளை­யை­யா­வது நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உரு­வாக்­கு­வ­தற்கு அர­சியல் தடை­யாக உள்­ளது. மட்­டு­மன்றி மலை­யக சமூ­கத்தின் மீது அக்­கறை கொண்ட கல்­வி­யி­ய­லா­ளர்­களால் அட்டன் நகரில் உரு­வாக்­கப்­பட்ட இலங்கை திறந்த பல்­க­லைக்­க­ழக கிளை­யைக்­கூட கண்டு கொள்­ளாது அதற்­கென ஒரு கட்­டி­டத்­தையோ அல்­லது காணி­யையோ பெற்­றுக்­கொ­டுக்­காத அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் நாம் வாழ்ந்து வரு­கிறோம் என்­பதை சிந்­திக்க வேண்டும்.

இப்­படி எல்லா விதத்­திலும் மலை­யக உயர்க்­கல்­விக்கு தடை­யாக விளங்கும் அர­சி­யல்­வா­திகள் தமது பிள்­ளை­களை வெளி­நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பணம் செல­வ­ழித்து படிக்க வைத்து இதே சமூ­கத்தில் தாம் முன்­னெ­டுத்த அர­சி­யலை முன்னெடுக்க அவர்களை களமிறக்கவும் தயாராகி விட்டனர். அதையும் வரவேற்று கொடி கட்டி கோஷம் போட்டுக்கொண்டிருக்கின்றது

மலையக அரசியல்.

இது குறித்து எவரும் இனி கேள்வி எழுப்பப்போவதில்லை. நாம் ஆரம்பத்தில் கூறியது போன்று இச்சமூகத்தில் அனைவரையும் அரசியல் தஞ்சமடையச் செய்வதில் அரசியல்வாதிகள் வெற்றி பெற்று விட்டனர். தமக்கு கிடைத்துள்ளவை எவை இனி என்ன கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையைத்தூண்டும் அளவிற்கு மக்களை விழிப்படையச்செய்யும் எந்தச் செயற்பாடுகளும் இடம்பெறா வண்ணம் மிகவும் கச்சிதமாக தமது அரசியலை முன்னெடுக்கின்றனர் இவர்கள். இது தொடர வேண்டுமா இல்லையா என்பதை கற்ற சமூகம் தான் தீர்மானிக்க வேண்டும். எமது வாரிசுகளாவது இந்த அடிமை தளையிலிருந்து வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசிப்பார்களா?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*