;
Athirady Tamil News

வெடிக்குமா இன்னொரு பூகம்பம்? (கட்டுரை)

0

21/4 குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பாக விசா­ரிக்க அமைக்­கப்­பட்ட பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணை­யினால், பெரும் அர­சியல் பூகம்பம் ஒன்று வெடிக்கக் கூடிய நிலை உரு­வாகி வரு­வ­தா­கவே தெரி­கி­றது,

தெரி­வுக்­கு­ழுவின் முத­லா­வது அமர்வு கடந்த 29ஆம் திகதி பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்­றி­ருந்­தது. தெரி­வுக்­கு­ழுவின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி சமூ­க­ம­ளிக்­கா­த­தாலும், அமைச்சர் ராஜித சேனா­ரத்­னவும் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி­ரனும் வெளி­நாடு சென்­றி­ருந்­த­தாலும் இந்த விசா­ர­ணை­களில் பங்­கேற்­க­வில்லை.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன தலை­மை­யி­லான தெரி­வுக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் இந்த விசா­ர­ணை­களின் முதல் நாள் அமர்வை நடத்­தி­யி­ருந்­தனர்.

பாரா­ளு­மன்ற வர­லாற்றில் முதல்­மு­றை­யாக தெரி­வுக்­குழு விசா­ர­ணைகள் அரச தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்ப சபா­நா­யகர் அனு­மதி அளித்­தி­ருந்தார்.

முதலில் தற்­போ­தைய பாது­காப்புச் செயலர் ஜெனரல் சாந்த கோட்­டே­கொ­டவும் இரண்­டா­வ­தாக, தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்­டிஸூம் சாட்­சியம் அளித்­தி­ருக்­கின்­றனர்.

ஆனால், விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டுக் கொண்­டி­ருந்த போதே, அரச தொலைக்­காட்­சியின் நேரலை நிறுத்­தப்­பட்டு விட்­டது. ஜனா­தி­ப­தியின் தலை­யீடு அதற்குக் கார­ண­மாக இருந்­தி­ருக்­கலாம். ஏனென்றால், விசா­ர­ணை­களில் வெளி­யி­டப்­பட்ட பல தக­வல்கள் அதிர்ச்­சியை அளிப்­ப­தாக இருந்­தன.

தெரி­வுக்­குழு விசா­ர­ணை­களில் செய்தி சேக­ரிக்க அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த ஊட­கங்­களின் மூலம், ஜெனரல் சாந்த கோட்­டே­கொட மற்றும் சிசிர மெண்டிஸ் ஆகி­யோரின் சாட்­சி­யங்கள் ஊட­கங்­களில் பகி­ரங்­க­மாக வெளி­யா­கி­யுள்­ளன.

இரு­வ­ரது சாட்­சி­யங்­களும் பாது­காப்பு விட­யத்தில் எந்­த­ள­வுக்குப் பார­தூ­ர­மான கவ­ன­யீ­னங்கள் இருந்­துள்­ளன என்­பதை வெளிச்சம் போட்டுக் காண்­பித்­தி­ருக்­கின்­றன.

இதற்குப் பின்னர் தான் வெடித்­துள்­ளது சிக்கல். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சார்பில், அவ­ரது ஊடகப் பிரி­வினால் ஒரு மறுப்பு அறிக்கை வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது.

அது­போ­லவே, இந்த தெரி­வுக்­ கு­ழுவை புறக்­க­ணிக்கப் போவ­தாக அதில் இடம்­பெற முடி­யாது என்று கூறி­யி­ருந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆகிய கட்­சிகள் இந்த தெரி­வுக்­கு­ழு­வினால் நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் என்று புலம்பத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

தெரி­வுக்­கு­ழுவின் முதல் நாள் விசா­ர­ணை­களில் வெளி­யா­கிய தக­வல்­களே பெரும் பூகம்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் தான், அடுத்­த­டுத்த கட்­டங்­களில் எங்­கெல்லாம் இருந்து ‘அர­சியல் குண்­டுகள்’ வெடிக்கப் போகின்­ற­னவோ என்ற பதற்றம் அர­சியல் மட்­டங்­களில் தொற்றிக் கொண்­டி­ருக்­கி­றது.

பாது­காப்புச் செயலர் ஜெனரல் சாந்­த­ கோட்­டே­கொ­டவின் சாட்­சி­யத்தில், புல­னாய்வுப் பிரிவு பல­வீ­னப்­பட்­டி­ருக்­க­வில்லை என்ற விட­யத்தைக் கூறி­யி­ருக்­கிறார்.

அது­போ­லவே, சிசிர மெண்­டிஸின் சாட்­சி­யத்தில், புல­னாய்வுத் தக­வல்கள் உரிய தரப்­பி­னரால் கவ­னத்தில் எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை என்றும், தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டங்கள் முறை­யாக நடத்­தப்­ப­ட­வில்லை என்­ப­தையும் கூறி­யி­ருக்­கிறார்.

இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவைச் சேர்ந்­த­வர்­களைக் கைது செய்து புல­னாய்வுப் பிரிவை அர­சாங்கம் பல­வீ­னப்­ப­டுத்தி விட்­ட­தாக மஹிந்த தரப்பு உறுப்­பி­னர்கள் பலரும் குண்­டு­வெ­டிப்­புகள் நிகழ்­வ­தற்கு முன்­னரே, குற்­றம்­சாட்டி வந்­தனர்.

21/4 குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து, அவர்­க­ளுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்­தது. இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வி­னரைக் கைது செய்து சட்ட நட­வ­டிக்கை எடுத்­ததால் தான், தாக்­கு­தல்­களை தடுக்க முடி­யாமல் போனது என்று கோத்­தா­பய ராஜபக் ஷ, மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட பலரும் குற்றம் சாட்­டி­யி­ருந்­தனர்.

ஏன், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூட, இரா­ணுவப் புல­னாய்வுப் பிரி­வினர் மீதான சட்ட நட­வ­டிக்­கை­களால் புல­னாய்வுப் பிரிவு பல­வீ­னப்­பட்­ட­தாக கூறி­யி­ருந்தார்.

ஆனால், பாது­காப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்­டே­கொட அதற்கு முர­ணான சாட்­சி­யத்தை அளித்­தி­ருக்­கிறார். அவர் முன்னர் இரா­ணுவத் தள­ப­தி­யாக பத­வியில் இருந்­தவர்.

இரா­ணுவப் புல­னாய்வுத் துறை அதி­கா­ரிகள் சிலர் கைது செய்­யப்­பட்­டதால், அரச புல­னாய்வு சேவைகள் பல­வீ­னப்­பட்டு விட­வில்லை என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அத்­துடன், இலங்­கையில் அடிப்­ப­டை­வாதக் குழுக்கள் பற்­றிய எச்­ச­ரிக்­கைகள் 2014இலேயே கிடைத்­தி­ருந்­தது என்றும் அப்­போதே, அந்த அமைப்­பு­களை தடை செய்­தி­ருந்தால், தாக்­கு­தல்கள் தடுக்­கப்­பட்­டி­ருக்கும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

புல­னாய்வுப் பிரி­வுகள் பல­வீ­ன­மான நிலையில் இல்லை என்ற பாது­காப்புச் செய­லரின் சாட்­சியம், மஹிந்த தரப்­புக்கு மாத்­தி­ர­மன்றி, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், கூட சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

2014ஆம் ஆண்டில் அடிப்­ப­டை­வாதக் குழுக்கள் பற்­றிய எச்­ச­ரிக்­கைகள் விடுக்­கப்­பட்ட போது, அவற்­றுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அப்­போது மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கமே பத­வியில் இருந்­தது.

கோத்­தா­பய ராஜபக் ஷவும் கூட, தமக்கு தக­வல்கள் கிடைத்­தி­ருந்­தன, அதற்­கேற்­ற­வாறு புல­னாய்வுப் பிரிவை பலப்­ப­டுத்­தினோம், அரபு மொழி தெரிந்­த­வர்­களை உள்­ளீர்த்தோம் என்­றெல்லாம் கூறி­யி­ருந்தார்.

ஆனாலும், ஜெனரல் கொட்­டே­கொட கூறி­யது போல, ஏன் அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களை தடை செய்ய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்ற கேள்வி உள்­ளது.

அடுத்து, தேசிய புல­னாய்வுப் பணி­ய­கத்தின் தலைவர் சிசிர மெண்­டிசின், சாட்­சி­யமும் பாது­காப்புத் துறையில் உள்ள பல ஓட்­டை­களை அம்­ப­லப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டங்கள் ஒழுங்­கின்றி நடத்­தப்­பட்­டது குறித்து அவர் தகவல் வெளி­யிட்­டி­ருக்­கிறார். 21/4 தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­வ­தற்கு முன்னர், பெப்­ர­வரி 19ஆம் திக­தியே கடை­சி­யாக தேசிய பாது­காப்புச் சபைக் கூட்டம் நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இதற்குப் பின்னர், கருத்து வெளி­யிட்ட மஹிந்த ராஜபக் ஷ, இரண்டு மாதங்­க­ளாக தேசிய பாது­காப்புச் சபைக் கூட்டம் நடத்­தப்­ப­டா­தது பெரிய தவறு என்றும், எல்­லாமே இல­கு­வாக கிடைத்து விட்­டது என்ற அலட்­சி­யத்­தி­னா­லேயே ஜனா­தி­ப­தியும் அக்­க­றை­யின்றி இருந்து விட்டார் என அவர் சாடி­யி­ருக்­கிறார்.

போர்க்­கா­லத்தில் வாரம் ஒரு­முறை தேசிய பாது­காப்புச் சபைக் கூட்டம் நடத்­தப்­படும் வழக்கம் இருந்­தது அதற்குப் பின்னர், தேசிய பாது­காப்புச் சபை கூட்­டத்தை நடத்­து­வ­தற்­காக ஒரு கிர­ம­மான கால எல்­லையை வகுப்­பதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆர்வம் காட்­ட­வில்லை என்­பது வெளிப்­ப­டை­யா­கி­யுள்­ளது.

சிசிர மெண்டிஸ் அளித்­துள்ள சாட்­சி­யத்­தின்­படி, கடந்த 2018ஆம் ஆண்டு ஜன­வரி, 5, பெப்­ர­வரி 19, மார்ச் 05, மே 02, ஜூலை 10, ஒக்­டோபர் 23, நவம்பர் 13, டிசம்பர் 3 என எட்டு முறை தான், தேசிய பாது­காப்புச் சபைக் கூட்டம் நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த ஆண்டில் ஜன­வரி 14, பெப்­ர­வரி 19 ஆகிய திக­தி­க­ளிலும் அதற்குப் பின்னர், தாக்­குதல் நடந்த மறு­நா­ளான ஏப்ரல் 22ஆம் திக­தி­யுமே பாது­காப்புச் சபைக் கூட்டம் இடம்­பெற்­றுள்­ளது.

அதிலும், கடந்த ஆண்டு ஒக்­டோபர் 26ஆம் திகதி ஆட்­சிக்­க­விழ்ப்பு தோல்­வி­ய­டைந்த பின்னர், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடையில் காணப்­பட்ட கருத்து முரண்­பா­டுகள் தேசிய பாது­காப்புச் சபை­யிலும் எதி­ரொ­லித்­தி­ருக்­கி­றது.

குண்­டு­வெ­டிப்­புகள் நிகழ்ந்த பின்னர், தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டத்­துக்கு கடந்த டிசம்பர் மாதத்­துக்குப் பின்னர் பிர­தமர் மற்றும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ருக்கு அழைப்பு விடப்­ப­ட­வில்லை என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருந்தார்.

அதனை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பொதுச்­செ­யலர் தயா­சிறி ஜய­சே­க­ரவும் ஒப்புக் கொண்­டி­ருந்தார்.

பாது­காப்பு இர­க­சி­யங்கள் வெளியே கசிய விடப்­பட்­டதால் தான், அவர்­களை பாது­காப்புச் சபைக் கூட்­டத்­துக்கு அழைக்­க­வில்லை என்று அர­சாங்­கத்தில் கூட அங்கம் வகிக்­காத அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

தாக்­கு­த­லுக்குப் பின்னர் நடத்­தப்­பட்ட தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டத்தில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­காத தயா­சிறி ஜய­சே­க­ரவும் பங்­கேற்க அழைக்­கப்­பட்­டி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஜனா­தி­பதி ஊடகப் பிரிவு கடந்த வாரம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், “தேசிய பாது­காப்பு சபையில் கலந்­து­ரை­யா­டப்­பட்ட விட­யங்கள் ஊட­கங்­களில் கசிந்­ததால், அதனைக் கூட்­டப்­ப­ட­வில்லை. அதற்குப் பதி­லாக, பாது­காப்பு உயர் அதி­கா­ரி­களின் கூட்டம் கிர­ம­மாக, வாரத்தில் இரண்டு முறை கூட்­டப்­பட்­டது. வாரத்தில் ஒரு­முறை ஜனா­தி­பதி அதில் பங்­கேற்றார் ” என்றும் கூறப்­பட்­டி­ருந்­தது.

சிசிர மெண்­டிஸின் சாட்­சி­யத்­திலும் கூட, தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டத்தில் பங்­கேற்­ப­வர்­க­ளுக்கு கூட்டம் தொடர்­பான நாள் மற்றும் நேரம் பற்­றிய தகவல் பாது­காப்புச் செயலர் மூலம் அனுப்­பப்­ப­டு­வதே வழக்கம் என்றும், நவம்பர் 2018இற்குப் பின்னர், தேசிய பாது­காப்புச் சபைக் கூட்டம் என்று தகவல் அளிக்­கப்­ப­டு­வ­தில்லை. சிறப்புக் கூட்டம் என்றே தகவல் அனுப்­பப்­பட்­டது என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

தேசிய பாது­காப்புச் சபைக் கூட்­டத்தில் இருந்து பிர­தமர் மற்றும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரை ஒதுக்கி வைப்­ப­தற்­கா­கவே, திட்­ட­மிட்டு காய்­ந­கர்த்­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன.

தேசிய பாது­காப்பு சபையில் பேசப்­படும் விட­யங்கள் ஊட­கங்­களில் கசிந்­ததை காரணம் காட்டி அவர்­களை ஓரம்­கட்­டிய ஜனா­தி­பதி, தேசிய பாது­காப்புச் சபையை வினைத்­தி­ற­னுடன் செயற்­ப­டுத்­தி­யி­ருந்தால், தாக்­கு­தல்­களை தவிர்த்­தி­ருக்­கலாம்.

அதை­விட, தேசிய பாது­காப்பு சபையில் இந்த விவ­காரம் பேசப்­பட்டு அது­பற்றி ஊட­கங்­க­ளுக்கு கசிய விடப்­பட்­டி­ருந்தால் கூட, முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்கும்.

சிசிர மெண்­டிஸின் சாட்­சியம் வெளி­யா­னதும், புல­னாய்வு அறிக்கை முன்­கூட்­டியே ஜனா­தி­ப­திக்கு தெரி­யாது என்று மறுப்பு அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. இது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தவ­று­களை மறைப்­ப­தற்­கான ஒரு நட­வ­டிக்­கை­யா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஏப்ரல் 4ஆம் திகதி கிடைத்த புல­னாய்வுத் தகவல் சரி­யான முறையில் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளாலும், அர­சியல் மட்­டங்­க­ளாலும், கவ­னத்தில் எடுக்­கப்­ப­டாத நிலையில் தான், நாடு பேர­ழிவை சந்­தித்­தி­ருக்­கி­றது.

இதற்கு அதி­கா­ரிகள் மட்­டத்தில் மாத்­தி­ர­மன்றி அர­சியல் மட்­டத்­திலும் தவ­றுகள் உள்­ளன. அதனை தெரி­வுக்­குழு விசா­ர­ணைகள் அம்­ப­லப்­ப­டுத்தும் என்றே தெரிகிறது,

அதேவேளை, தெரிவுக்குழு உறுப்பினர்களும் அரசியல் நோக்கில் செயற்பட முனைகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளையும் பாதுகாப்பு இரகசியங்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்றன என்றும் எதிர்க்கட்சிகள் அலறத் தொடங்கியுள்ளன.

பொறுப்பான, எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவில் இடம்பெற்றிருக்க வேண்டும் விசாரணையை நடுநிலையுடன் முன்கொண்டு செல்ல உதவியிருக்க வேண்டும். வெளியே நின்று கத்துவதால் எந்த பயனுமில்லை.

அரசாங்கத்துக்கு எதிராக தாம் முன்னெடுத்த பிரசாரங்களை தெரிவுக்குழு சாட்சியங்கள் பொய்யாக்கி விடுமோ என்ற பயம் அவர்களுக்குத் தொற்றியிருக்கிறது. அது தான் அவர்களின் பிரச்சினை.

ஐ.தே.க தரப்புக்கோ இதனை வைத்து தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை துடைத்து விட்டு ஜனாதிபதியையும், மஹிந்த தரப்பையும் மாட்டி விடலாம் என்று பார்க்கின்றது .

தெரிவுக்குழு விசாரணையின் போக்கு தமக்கு சாதகமற்றது என்பதை ஜனாதிபதியும் உணருவதாகவே தெரிகிறது. அவரது ஊடகப் பிரிவின் அறிக்கையே அதற்குச் சாட்சி.

இத்தகைய நிலையில், தெரிவுக்குழு விசாரணைகள் பெரும் சர்ச்சையாகள ஏன் இன்னொரு அரசியல் குழப்பத்துக்குக் கூட, வழி வகுக்கக் கூடும் போலவே தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 5 =

*