;
Athirady Tamil News

மீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க? (கட்டுரை)

0

தமி­ழ­கத்தின் ஆளும் அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு பிளவு ஏற்­படும் அபாயம் தோன்­றி­யுள்­ளது. அது தற்­போ­தைய முதல்வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி மற்றும் துணை­மு­தல்வர் ஓ.பன்­னீர்­செல்வம் அணி­க­ளுக்கு இடை­யி­லான பிள­வா­கவே இருக்­கக்­கூடும். அ.தி.மு.க. ஆரம்­பிக்­கப்­பட்ட காலம்­மு­தலே அவ்­வப்­போது அந்தக் கட்­சிக்குள் பல பிள­வுகள், வெளி­யேற்­றங்கள், புதிய கட்சி உரு­வாக்கம் என்­பன இடம்­பெற்­றுள்­ளன.

இறு­தி­யாக ஜெய­ல­லிதா மறை­வின்­போது அரச நிர்­வாகக் கட­மை­களை கவ­னிப்­ப­தற்கு ஓ.பன்­னீர்­செல்வம்

முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார். ஆனால், குறு­கிய காலப்­ப­கு­தி­க்

குள்­ளேயே சசி­கலா- டி.டி.வி. தின­கரன் தரப்­பினால் ஓ.பன்­னீர்­செல்வம் அகற்­றப்­பட்டு, புதிய முத­லமைச்­ச­ராக எடப்­பாடி பழ­னிச்­சாமி நியமிக்­கப்­பட்டார். அப்­போது அ.தி.மு.கவுக்குள் ஒரு பிளவு ஏற்­பட்­டது. எனினும் பின்னர் எடப்­பா­டி­யுடன், ஓ.பன்­னீர்­செல்வம் இணைந்­து­கொண்­ட­துடன், துணை­மு­தல்­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்டார்.

அதே­வேளை டி.டி.வி தின­கரன் தனக்கு ஆத­ர­வான 18 எம்.எல்.ஏக்களுடன் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­றி­ய­துடன், அம்மா மக்கள் முன்­னேற்றக் கழகம் என்ற கட்­சியை ஆரம்­பித்து செயற்­பட்­டு­வ­ரு­கின்றார்.

தொடரும் முரண்­பா­டுகள்

முதல்வர் எடப்­பாடி மற்றும் துணை­மு­தல்வர் ஓ.பி.எஸ். (ஓ.பன்­னீர்­செல்வம்) ஆகிய இரு­வரும் ஒற்­று­மை­யுடன் இருப்­ப­து­போ­லவும், ஒன்­று­பட்டு செயற்­ப­டு­வ­து­போ­லவும் வெளியில் காட்­டிக்­கொண்­டாலும், உள்­ளுக்குள் இரு­வ­ருக்­கு­மி­டையில் பலத்த முரண்­பா­டுகள் இருந்து­வந்­தன, இன்றும் அந்த நிலைமை தொடர்­கி­றது. பெய­ர­ள­வி­லேயே தாம் துணை­மு­த­ல­மைச்­ச­ராக இருப்­ப­தா­கவும், தனக்கு அதி­கா­ரங்கள் எதுவும் வழங்­கப்­ப­டா­த­துடன், தமது நெருங்­கிய ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு பத­விகள் எதுவும் வழங்­காமல் ஓரங்­கட்­டப்­பட்டு வரு­வ­தா­கவும் வெளிப்­ப­டை­யா­கவே பல சந்­தர்ப்­பங்­களில் ஓ.பி.எஸ். தெரி­வித்து வந்­துள்ளார்.

குறிப்­பாக, சொல்­வ­தென்றால், அ.தி.மு.க. அணிகள் இணைந்­தாலும் நிர்­வா­கிகள் இடையே ஒற்­றுமை ஏற்­ப­ட­வில்லை. பன்­னீர்­செல்வம் அணி – பழ­னி­ச்சாமி அணி என்­பது தொடர்ந்து இருந்து வந்­துள்­ளது. லோக்­சபா தேர்­த­லுக்கு முன்னர் ஆட்­சி­யிலும் , கட்­சி­யிலும் முக்­கிய முடி­வு­களை முதல்வர் எடப்­பா­டியும், அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளான அமைச்­சர்கள் தங்­க­மணி, வேலு­மணி ஆகி­யோ­ருமே எடுத்­தனர். கொங்கு(கோவை) மண்­ட­லத்தில் கட்­சிக்கு செல்­வாக்கு இருந்­தா­லும்­கூட,

எம்.எல்.ஏ.க்கள் ஆத­ரவு அதிகம் உள்­ள­தாலும் அவர்கள் கூறு­வதை ஏனைய அமைச்­சர்கள் ஏற்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது.

லோக்சபா தேர்தல் தோல்வி

ஆனால், லோக்­சபா தேர்­தலில் கொங்கு மண்­ட­லத்தில் அ.தி.மு.க. படு­தோல்­வியை சந்­தித்­தது. முதல்­வரின் சொந்த தொகு­தி­யான இடைப்­பா­டி­

யி­லேயே அ.தி.மு.க. அதிக வாக்­கு­களைப் பெற­வில்லை. ஆனால், தேனி லோக்­சபா தொகு­தியில் பன்­னீர்­செல்­வத்தின் மகன் வெற்றி பெற்றார். பன்­னீர்­செல்­வத்தின் தொகு­தி­யான போடியில் அ.தி.மு.க. அதிக வாக்­கு­களைப் பெற்­றது. ஆனால், அவ­ரது சொந்த ஊரான பெரி­ய­குளம், அ.தி.மு.க.வின் பாரம்­ப­ரிய தொகு­தி­யான ஆண்­டிப்­பட்டி இடைத்­தேர்­தல்­களில் அ.தி.மு.க. வெற்­றி­பெ­ற­வில்லை.

இதை­ய­டுத்து அமைச்­சர்கள் தங்­க­மணி, வேலு­மணி ஆகி­யோரின் ஆதிக்­கத்தை தடுக்க வேண்டும் என்று ஏனைய அமைச்­சர்­களும் கட்­சி­யி­னரும் வலி­யு­றுத்த ஆரம்­பித்­தனர். இந்த நிலையில் தேர்­தலில் வெற்றி பெற்ற பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்­தி­ரநாத் குமா­ருக்கு மத்­திய அமைச்சர் பத­வியை வழங்­கு­வ­தற்கு பா.ஜ.க. தலைமை முன்­வந்­தது. ஆனால், ராஜ்­ய­சபா எம்.பி.யான வைத்­தி­லிங்­கத்­துக்கே அமைச்சர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை மறை­மு­க­மாக தெரி­வித்து, அதற்கு எடப்­பாடி தரப்பு முட்­டுக்­கட்டை போட்டு விட்­டது. இதனால், இரு தரப்பின­ருக்கும் இடை­யி­லான விரிசல் அதி­க­மா­னது. இதைத் தொடர்ந்தே கட்­சியை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரும் முயற்­சியில் பழ­னி­ச்சாமி இறங்­கி­யுள்­ள­தாக தெரி­ய­

வ­ரு­கி­றது.

இரட்டைத் தலை­மையால் பிரச்­சினை

அதே­நே­ரத்தில் , கட்­சியில் “இரட்டைத் தலைமை“ இருப்­பதால் விரை­வா­கவும் உறு­தி­யா­கவும் முடிவு எடுக்­க­

மு­டி­வ­தில்லை. சுய­ந­ல­மற்ற ஒரு­வரை தலைமை பத­விக்கு தேர்ந்­தெ­டுக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை. ஆளுமை திற­னு­டைய தலைவர் வேண்டும். ஒற்றை தலை­மையில் கட்­சியை கட்­டுப்­பாட்­டுடன் கொண்டு செல்­ல­வேண்டும்’ என்­றெல்லாம் சில எம்.எல்ஏ.க்கள் கோரிக்கை விடுத்­தனர்.

இவ்­வா­றான ஒரு நிலை­யில்தான் மதுரை வடக்கு எம்.எல்.ஏ.வான ராஜன் செல்­லப்­பாவும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வாக ராம­ச்சந்­திரன் உள்­ளிட்ட பலர் வெளிப்­ப­டை­யா­கவே அ.தி.மு.க.வில் ஒரே தலைமை இருக்­க­வேண்டும் என வலி­யு­றுத்தி குரல் எழுப்­பினர்.

ஒருங்­கி­ணைப்­பாளர் பதவி

ஜெய­ல­லிதா மறை­வுக்கு பின்னர், கட்­சியின் பொதுக்­குழுக் கூட்­டத்தில், புதிய பொதுச்­செ­ய­லா­ள­ராக சசி­கலா தெரிவு செய்­யப்­பட்டார். அவர் சிறை சென்­றதும், மீண்டும் பொதுக்­குழு கூடி­யது. பொதுச் செய­லாளர் பத­வி­யி­லி­ருந்து, சசி­கலா

நீக்­கப்­பட்டார். மேலும், பொதுச்­செ­ய­லாளர் பத­வியே நீக்­கப்­பட்டு, ஒருங்­கி­ணைப்­பாளர் மற்றும் இணை ஒருங்­கி­ணைப்­பாளர் பத­விகள் உரு­வாக்­கப்­பட்­டன.

ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக துணை­மு­தல்வர் பன்­னீர்­செல்வம், இணை ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக முதல்வர் எடப்­பாடி ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டனர். ஆனால், எடப்­பாடி முதல்­வ­ராக இருப்­பதால், ஆட்­சியில் மட்­டு­மின்றி, கட்­சி­யிலும் ஆதிக்கம் செலுத்­தத்­தொ­டங்­கினார். கட்சி, ஆட்சி இரண்­டிலும், பன்­னீர்­செல்­வத்­திற்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­வதை தவிர்த்தார். இதன் கார­ண­மாக, இரு­வ­ருக்குமிடையே, கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டது.

தேர்தல் தோல்வி யாரால்?

அண்­மையில், அமைச்­சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை முதல்­வரும், துணை முதல்­வரும் சந்­தித்து தோல்வி குறித்து கேள்வி எழுப்­பினர். அப்­போது, ‘வேட்­பா­ளர்­களை நீங்­கள்தான் தெரி­வு­செய்­தீர்கள், எனவே நாங்கள் எப்­படி பொறுப்­பாக முடியும்’ என, எதிர்க்­கேள்வி கேட்டு, வாய­டைக்கச் செய்­துள்­ளனர். அங்கு ஒவ்­வொ­ரு­வரும், தோல்­விக்கு கார­ண­மா­ன­வர்கள் எனக்­கூறி, தங்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் மீது, நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இதனால் முதல்­வரால் நட­வ­டிக்கை எடுக்க முடி­ய­வில்லை. இதுவும், கட்­சியில் பூசலை அதி­க­ரித்­துள்­ளது.

ஓ.பி.எஸ். தீர்­மானம்

இந்­நி­லையில், பொதுச்­செ­ய­லாளர் பொறுப்பை ஏற்­கவும், துணை முதல்வர் பத­வியை துறக்­கவும், ஓ.பி.எஸ். (பன்­னீர்­செல்வம்) தயா­ராக இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதே­போல், கட்சி, ஆட்சி இரண்­டையும், தன் கட்­டுப்­பாட்டில் வைத்துக் கொள்ள, எடப்­பாடி விரும்­பு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இதனால், அமைச்­சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்­வா­கிகள் இரண்டு பிரி­வு­க­ளாக பிரிந்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

இவ்­வா­றா­னதொரு நிலையில், கட்­சியின் தலைமை பத­வியை கைப்­பற்­று­வ­தற்கு, முதல்வர் எடப்­பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்­னீர்­செல்வம் ஆகி­யோ­ருக்­கி­டையே ஏற்­பட்­டுள்ள கடும் போட்டி, கட்­சியில் பிளவை ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூடும் என்ற அச்சம் ஏற்­பட்­டுள்­ளது.

எனவே, அவ்­வா­றா­ன­தொரு பிளவு ஏற்­ப­டாமல் கட்­சியை பாது­காப்­ப­தற்கும், ஒற்­று­மை­யுடன் செயல்­பட வலி­யு­றுத்­தியும் சம­ர­சத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சியில் சில சிரேஷ்ட நிர்­வா­கிகள், தலை­வர்கள் முயற்­சி­செய்து வரு­கின்­றனர்.-

அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலை­மைதான் வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­வ­ரு­கிறார் ராஜன் செல்­லப்பா. ஏற்­க­னவே மதுரை மாந­கர மேய­ராக இருந்த இவர், அண்­மையில் நடை­பெற்ற லோக்­சபா தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த தனது மகனின் தோல்­வியை சரிக்­கட்டும் வித­மாக, அதே பத­வியை குடும்­பத்தில் உள்ள ஒரு­வ­ருக்கு வழங்­க­வேண்டும் என்று அ.தி.மு.க. தலை­மை­யிடம் கேட்டு வரு­வ­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

திருப்­ப­ரங்­குன்­றத்தில் தனது ஆத­ர­வா­ளர்­க­ளுடன் முக்­கிய ஆலோ­ச­னையில் ஈடு­பட்டு வரு­கிறார் ராஜன் செல்­லப்பா. இந்த ஆலோ­சனை கூட்­டத்தில் 100-க்கும் மேற்­பட்டோர் கலந்து கொண்­டனர். உள்­ளாட்சி தேர்தல் குறிப்­பாக கிழக்கு மாவட்­டத்­துக்கு உட்­பட்ட அனைத்து ஒன்­றிய செய­லா­ளர்கள் இந்த கூட்­டத்தில் பங்­கேற்­றுள்­ளனர். ஒரு­வேளை இது உள்­ளாட்சி தேர்­த­லுக்­கான ஆலோ­சனை கூட்­ட­மாக இருக்­கக்­கூடும் என்றும் சொல்­லப்­ப­டு­கி­றது.

மறை­முக செயற்­பாடு

ஒற்றை தலைமை தேவை என்று ராஜன் செல்­லப்பா அறி­வித்­த­தை­ய­டுத்து அந்த ஒற்றை தலைமை யாராக இருக்­க­மு­டியும் என்­ப­தில்தான் போட்­டியும், சிக்­கலும் எழுந்­துள்­ளது. அ.தி.மு.க.வின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை கைப்­பற்­று­வ­தற்கு எடப்­பாடி பழ­னி­சாமி முழு­மூச்­சாக செயற்­பட்­டு­வ­ரு­கிறார் என்­பதே உண்மை.

எடப்­பா­டியின் தீவிர ஆத­ர­வாளர் செல்­லப்பா என்­ப­தாலும், எனவே அவர் ஓ.பி.எஸ்.க்கு எதி­ரா­கத்தான் பேசு­கிறார் என்­பதும் புரிந்து கொள்­ளப்­பட்­டது. அத­னால்தான் ஒவ்­வொ­ரு­வரும் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலை­களில் மறை­மு­க­மாக இறங்கி உள்­ள­தாக சொல்­லப்­ப­டு­கி­றது. பலம் யாருக்கு? யார் அந்த ஒற்றை தலைமை என்­பது, இவர்கள் பக்கம் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வைத்­துதான் தீர்­மா­னிக்­கப்­படும் என்­பதே நிலைமை.. ராஜன் செல்­லப்பா உள்­ளிட்ட பலரின் ஆத­ரவு இருந்­தாலும், அதி­க­பட்ச பலத்தை தன்­னுடன் வைத்­தி­ருக்க முதல்வர் எடப்­பாடி தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

ஜெய­ல­லி­தாவே வலி­மை­மிக்க ஆளுமை

ஜெய­ல­லிதா எப்­படி முதல்வர் மற்றும் பொதுச்­செ­ய­லாளர் ஆகிய இரண்டு பதவிகளையும் தன்னிடம் வைத்திருந்தாரோ, அதுபோலவே தனக்கும் ஒற்றை தலைமை மூலம் இவை கிடைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் திட்டமாம்- அதற்கான முயற்சியில்தான் தற்போது ஈடுபட்டுள்ளாராம். பொதுச்செயலாளர் பதவியையும் எடப்பாடி பழனிசாமியே வகிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக எம்.எல்.ஏ.க்களை தமது பக்கம் இழுப்பதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் அ.தி.மு.க.வுக்குள் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஜெயலலிதா விசுவாசிகள் செயல்படும் அதேவேளை, பிளவு ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகவே காணப்படுகிறது.

ஆனால், அ.தி.மு.க. பிளவுபடுவதை தடுத்து நிறுத்தி அனைவரையும் ஒரே அணிக்குள் கொண்டுவந்து, அக்கட்சியை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கான முயற்சியில் மத்திய பா.ஜ.க. யும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எனவே, பா.ஜ.க.வை மீறி எதனையும் செய்யமுடியாத ஒரு நிலையும் காணப்படுவதை மறுக்கமுடியாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − five =

*