;
Athirady Tamil News

மக்­க­ளுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்­பிக்­கையில் மஹிந்­த­வுடன் இணைந்­துள்ளேன்!!(கட்டுரை)

0

இலங்கை தொழி­லாளர் ஐக்­கிய முன்­னணி தலைவர் சதா­சிவம் கூறு­கிறார்

இந்­திய வம்­சா­வளி மக்­க­ளுக்கு கடந்த காலங்­களை விட மஹிந்த அர­சாங்­கத்தில் நன்­மைகள் கிடைக்கும் என்ற நம்­பிக்­கை­யி­லேயே அவ­ருடன் இணைந்­துள்­ள­தாக இலங்கை தொழி­லாளர் ஐக்­கிய முன்­னணி தலை­வரும் மத்­திய மாகாண சபை முன்னாள் உறுப்­பி­ன­ரு­மான எஸ். சதா­சிவம் “கேசரி” வார இத­ழுக்கு தெரி­வித்தார். அவ­ருடன் இடம்­பெற்ற நேர்­காணல் வரு­மாறு:

கேள்வி: இன்­றைய அர­சியல் நிலைப்­பாடு பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ஜனா­தி­பதி, பிர­தமர் இவர்­களில் யாருக்கு பொறுப்பு இருக்­கின்­றது என்றே தெரி­ய­ வில்லை. யாரும் தீர்க்­க­மான முடி­வு­களை எடுக்கக் கூடிய நிலையில் இல்லை. மக்­க­ளுக்கும் ஜன­நா­ய­கத்­துக்கும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. தமிழ் மக்கள் குறிப்­பாக, தோட்டத் தொழி­லா­ளர்கள் மிகவும் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றார்கள். இன்­றைய சூழ்­நி­லையில் மக்கள் ஏதா­வது ஒரு தேர்­த­லையே விரும்­பு­கி­றார்கள்.

நாட்டின் நடை­மு­றைப்­படி மாகாண சபைத் தேர்­தலை நடத்­தி­யி­ருக்க வேண்டும். ஆனால் நடத்­த­வில்லை. மத்­திய மாகாண சபையில் சிறு­பான்மை மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 16 உறுப்­பி­னர்கள் இருந்தோம். மாகாண சபைத் தேர்தல் நடத்­தப்­ப­டா­ததால் உறுப்­பி­னர்­க­ளுக்கு நிதி கிடைக்­க­வில்லை. அதனால் அபி­வி­ருத்திப் பணி­க­ளையும் மேற்­கொள்ள முடி­யா­துள்­ளது. இது மலை­யக மக்­க­ளுக்கு பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. நமது நாட்டில் மாகாண சபை ஆட்சி முறையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்­பட்­டது. ஆனால், அந்த உரி­மையும் மறுக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு, மத்­திய, ஊவா மாகா­ணங்­களில் இது­வரை காலமும் இருந்து வந்த தமிழ்க் கல்­வி­அ­மைச்சை இல்­லா­தொ­ழிக்­கவும் ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. 1988 இல் மத்­திய மாகாண முழு கல்­வி­ய­மைச்­சுக்கும் இரா­ம­நாதன் தொண்­டமான் இருந்தார்.

ஆனால், 1992 இல் கல்­வி­ய­மைச்சை இந்­திய வம்­சா­வளி தமி­ழ­ருக்கு வழங்க முடி­யாது என்று தெரி­விக்­கப்­பட்­டது. அன்­றைய மத்­திய மாகாண ஆளு­ந­ராக இருந்த பி.சி. இம்­பு­லா­னவின் வாசஸ்­த­லத்­துக்கு முன்னால் போராட்டம் செய்தோம். அப்­போது அமைச்­ச­ராக இருந்த டொஸ்கி மத்­திய மாகாண கல்­வி­ய­மைச்சின் செய­லா­ள­ருடன் பேசி­யதன் பய­னாக தமிழ்க் கல்­வி­ய­மைச்சும், முஸ்லிம் கல்­வி­ய­மைச்சும் பிரித்துக் கொடுக்­கப்­பட்­டன. அவ்­வாறு போராடி பெற்ற அமைச்சை நாம் இழந்து விட முடி­யாது. மாகாண தமிழ்க் கல்­வி­ய­மைச்சை இல்­லாமல் செய்யப் போவ­தாகக் கூறு­வது அர­சாங்­கத்தின் தேவை கரு­திதான் என்­பதை விளங்கிக் கொள்­ளலாம். இன்­றைய பிர­தமர் தமிழ்க் கல்­வி­ய­மைச்சு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­வதை விரும்­ப­வில்லை.

கேள்வி: மலை­யக அர­சி­யலை எவ்­வாறு பார்க்­கி­றீர்கள்?

பதில்: கடந்த காலத் தேர்­தல்­களை விட 2015 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் பொதுத் தேர்­த­லிலும் சிறு­பான்மை மக்கள் எல்­லோரும் சேர்ந்து பெரும்­பான்­மை­யாக நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்ந்து விட்­டனவா? மலை­யக மக்­களின் சம்­பளப் பிரச்­சினை தீர்க்­கப்­பட்டு விட்­டதா? இந்த நாட்­டுக்கு அந்­நியச் செலா­வ­ணியை ஈட்டித் தரு­கின்ற தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியும் மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொண்டு பத­விக்கு வந்த பிர­த­மரும் ஏன் சம்­பள உயர்வை வழங்க முன்­வரக் கூடாது? வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு உரிய சேவை கிடைக்­க­வில்லை.

அந்­நியச் செலா­வ­ணியை ஈட்டிக் கொள்­வ­தற்­காக வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­க­ளுக்கு சலு­கை­களை அள்ளித் தரும் அர­சாங்கம் நிரந்­தர வரு­மா­னத்தை தேயிலை உற்­பத்தி மூலம் ஈட்டித் தரும் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஏன் கொடுக்கக் கூடாது? எதிர்­வரும் ஜூலை மாதத்­தி­லி­ருந்து அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு 2500 ரூபா சம்­பள உயர்வை வழங்க வரவு செலவுத் திட்­டத்தில் யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 50 ரூபா சம்­பள உயர்வும் கிடைக்­க­வில்லை. இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை சம்­பள உயர்­வுக்கு போராட்டம் நடத்த வேண்­டிய நிலையில் தான் மலை­யக மக்கள் இருக்­கின்­றார்கள். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பதவிக் காலத்தில் தான் 1992 இல் வாழ்க்கைச் செலவுப் புள்­ளிக்­கான கொடுப்­ப­னவு நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இல்­லையேல் தொழி­லா­ளர்­களின் சம்­பளம் பல மடங்கு அதி­க­ரித்­தி­ருக்கும்.

கேள்வி: வாழ்க்கைச் செலவுப் புள்ளி நிறுத்­தப்­ப­டு­வ­தற்கு அப்­போது அமைச்­ச­ராக இருந்த இ.தொ.கா. தலைவர் சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானும் இணக்கம் தெரி­வித்­தி­ருந்தார் தானே?

பதில்: அதற்கு நானும் அன்­றைய இரா­ஜாங்க அமைச்சர் பி.பி. தேவ­ராஜும் கண்டி குயின்ஸ் ஹோட்­டலில் நடை­பெற்ற கூட்­டத்தில் இ.தொ.கா. தலை­வ­ரிடம் கடு­மை­யான எதிர்ப்பை தெரி­வித்­தி­ருந்தோம்.

கேள்வி: மலை­ய­கத்தின் அபி­வி­ருத்தி வேலைகள் பற்றி ?

பதில்: இந்­திய அர­சாங்கம் கட்டிக் கொடுத்­துள்ள வீடு­களைத் தவிர எமது அர­சாங்­கத்தின் நிதி­யி­லி­ருந்து பெரு­ம­ளவு வீடுகள் கட்­டப்­ப­ட­வில்லை என்­பதே உண்­மை­யாகும்.

கேள்வி: அமைச்சர் திகாம்­பரம் முன்­னெ­டுக்கும் தனி வீட்டுத் திட்­டத்­திற்கு அர­சாங்கம் நிதியை ஒதுக்­கி­யுள்­ளது. தலா ஏழு பேர்ச் காணியில் அமைக்­கப்­படும் வீடு­க­ளுக்கு உறுதிப் பத்­தி­ரங்­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன. பிர­தேச சபைகள் அதி­க­ரிக்­கப்­பட்டு பிர­தேச செய­ல­கமும் அமை­ய­வுள்­ளன. இவையும் அபி­வி­ருத்தி தானே?

பதில்: தனி வீட்டுத் திட்டம் போது­மா­னது அல்ல. நிறைய வீடுகள் கட்­டப்­பட்டு எமது மக்­களின் தேவைகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும். இதை நான் வெறு­மனே விமர்­ச­னத்­துக்­காக கூற­வில்லை. பிர­தேச சபைகள் அதி­க­ரிப்பு சந்­தி­ரிகா அம்­மையார் ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது அன்­றைய பிர­தமர் ரட்­ன­சிறி விக்­கி­ர­ம­சிங்­கவால் கொண்டு வரப்­பட்ட பிரே­ரணை ஆகும். அந்­தந்த காலகட்­டத்தில் மக்­களின் வாக்­கு­களைப் பெற்று அமைச்­சர்­க­ளாக இருப்­ப­வர்கள் மக்­க­ளுக்கு செய்ய வேண்­டி­யதை செய்யத் தானே வேண்டும்? அன்று 103 பேருக்கு மலை­ய­கத்தில் கிராம சேவகர் நிய­மனம் பெற்றுக் கொடுத்தோம். இன்­றைய அர­சாங்­கத்தில் எத்­தனை பேருக்கு அர­சாங்க நிய­ம­னங்கள் கிடைத்­துள்­ளன என்று கூற முடி­யுமா? மலை­யகம் புறக்­க­ணிக்­கப்­பட்ட நிலை­யி­லேயே இருந்து வரு­கின்­றது.

கேள்வி: கடந்த வாரம் நீங்கள் மஹிந்த ராஜ­பக் ­ஷ­வுடன் இணைந்து கொண்­ட­தாக செய்தி வந்­துள்­ளது. சென்ற முறை ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் மஹிந்­த­வுக்குத் தானே ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தீர்கள்?

பதில்: கடந்த தேர்­தலில் ஆத­ரவு வழங்­கி­யி­ருந்தேன். இந்த முறை அவ­ரோடு இணைந்து செயற்­ப­ட­வுள்ளேன்.

கேள்வி: மஹிந்­த­விடம் உங்­க­ளு­டைய எதிர்­பார்ப்பு என்ன?

பதில்: அவர் ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது தமிழ் மக்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­டி­ருந்­தாலும்

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமை­தியை நிலை­நாட்­டி­யி­ருந்தார். 2009 முதல் 2015 வரை அமை­தி­யான சூழல் காணப்­பட்­டது. மஹிந்த ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது பாதை­களை அபி­வி­ருத்தி செய்யும் வேலைத் திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்டு வந்தார். அதில் முதன் முறை­யாக பெருந்­தோட்­டங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டன. குறிப்­பாக வலப்­பனை, ஹைபொரஸ்ட் பாதை அர­சாங்க பணத்தில் செப்­ப­னி­டப்­பட்­டதால் தோட்ட மக்­களும் கிராம மக்­களும் பய­ன­டைந்­தார்கள்.

அவ­ரது காலத்தில் “அருகில் உள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை” வேலைத் திட்டம் மற்றும் தொழில்­நுட்ப விஞ்­ஞான ஆய்வு கூடம் போன்­றவை தான் இன்று நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்சு சந்­தி­ரிகா அம்­மையார் காலத்தில் உரு­வாக்­கப்­பட்­ட­தாகும். இன்­றைய அர­சாங்­கத்தில் புதி­தாக எதையும் செய்­ய­வில்லை.

மஹிந்த ராஜ­பக்ஷ தொழில் அமைச்­ச­ராக இருந்த காலம் முதல் அவரை நன்­றாகத் தெரியும். அவ­ரோடு நேர­டி­யாகப் பேசி எதையும் செய்து கொள்ள முடியும். சிறு­பான்மை மக்­களைப் பொறுத்த வரையில் தகுந்த முடிவை எடுக்கக் கூடிய தலைவர் ஒருவர் நாட்­டுக்குத் தேவை­யாக உள்ளார். அவர் தீர்­மானம் எடுக்கக் கூடிய சிறந்த தலை­வ­ராக இருக்­கின்றார். எனவே சிறு­பான்மை மக்­களின் நலன் கருதி அவ­ருடன் இணைந்­துள்ளேன். கடந்த காலங்­களை விட எதிர்­கா­லத்தில் அதிக நன்­மைகள் கிடைக்கும் என்ற நம்­பிக்கை இருக்­கின்­றது. முதலில் ஆட்­சியைக் கைப்­பற்ற முழு­மை­யான ஆத­ரவை வழங்­குவோம். ஆட்சி அமைத்த பிறகு எமது மக்கள் சார்ந்த கோரிக்­கை­களை வென்­றெ­டுப்போம். மஹிந்த செய்­தது மக்கள் ஆட்சி: இன்று நடப்­பது முதலாளித்துவ ஆட்சியாகும்.

கேள்வி: கூட்டு எதிரணியினர் “ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன” அமைப்பை உருவாக்கிய நேரத்தில் மலையக இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் முதன் முதலாக இணைந்து கொண்டு ஆதரவு தெரிவித்திருந்தார். இப்போது நீங்கள் இணைந்திருப்பது அவருக்கு போட்டியாக இருக்காதா?

பதில்: நான் யாருக்கும் போட்டியாக இணையவில்லை. எமது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பதால் மஹிந்தவுடன் கூட்டு சேர்ந்துள்ளேன். தவிர யாருக்கும் போட்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது. எதிர்காலத்தில் இன்னும் பலர் அவருக்கு ஆதரவு வழங்க முன்வரலாம். அப்போது அதை போட்டி என்று எடுத்துக் கொள்ள முடியுமா?

கேள்வி: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த அணியுடன் இணைந்து போட்டியிடுவீர்களா?

பதில்: நிச்சயமாக போட்டியிடுவேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*