;
Athirady Tamil News

அதிகாரப் போட்டியின் உச்சக்கட்டம்!! ( கட்டுரை)

0

நாட்டின் முது­கெ­லும்­பா­கிய அர­சி­ய­ல­மைப்பை முறை­யாகப் பேணி ஆட்சி நடத்த வேண்­டி­யது ஆட்­சி­யா­ளர்­களின் தலை­யாய கட­மை­யாகும். அதே­போன்று அர­சி­யல்­வா­தி­களும், பொது­மக்­களும் அர­சி­ய­ல­மைப்­புக்கு உரிய மதிப்­ப­ளித்து, அதற்­கேற்ற வகையில் ஒழுக வேண்­டி­யதும் நல்­லாட்­சிக்கு அவ­சி­ய­மாகும். ஆனால் இத்­த­கைய போக்கை ஆட்சித் தலை­வர்­க­ளிடம் காண முடி­ய­வில்லை.

இந்த அர­சி­ய­ல­மைப்பு நாட்டின் அனைத்து சமூ­கங்­க­ளையும் சேர்ந்த மக்­களை முதன்­மைப்­ப­டுத்தி, அவர்­க­ளு­டைய இறை­மைக்கு உரிய அங்­கீ­கா­ர­ம­ளித்து, தீர்க்­க­த­ரி­ச­னத்­துடன் உரு­வாக்­கப்­பட வேண்டும். பல்­லி­னங்­களும், பல மதங்­க­ளையும் சேர்ந்த மக்கள் வாழ்­கின்ற நாட்டில், அந்த அர­சி­ய­ல­மைப்பில் பல்­லி­னத்­தன்­மைக்கு முக்­கிய கவனம் செலுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். அவ்­வாறு உரு­வாக்­கப்­ப­டு­கின்ற அர­சி­ய­ல­மைப்பே நீடித்த நல்­லாட்­சிக்கு வழி­கோ­லு­வ­தா­கவும் அமைந்­தி­ருக்கும்.

ஆனால் இலங்­கையைப் பொறுத்­த­மட்டில், பல்­லி­னத்­தன்­மைக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. கடந்த 1978ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட சிறி­லங்கா சோஷ­லிசக் குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு, இந்த நாட்டின் தேசிய இன­மா­கிய சிறு­பான்மை இன மக்­களின் இருப்பை கேள்­விக்கு உள்­ளாக்கும் வகையில் ஓர் உள்­நோக்­கத்­து­ட­னேயே வடி­வ­மைக்­கப்­பட்­டது. முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் பேரின மக்­க­ளா­கிய சிங்­கள மக்­களின் அர­சியல், மத உரி­மை­க­ளுக்கு

வழி­ச­மைத்த இந்த அர­சி­ய­ல­மைப்பு தேசிய சிறு­பான்மை இன மக்­களின் பங்­க­ளிப்பு இல்­லா­ம­லேயே உரு­வாக்­கப்­பட்­டது.

அதில் பெரும்­பான்மை இன மக்­களின் நலன்­க­ளுக்கும் அந்த நலன்­களின் பாது­காப்­புக்கும் அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம் சிறு­பான்மை இன மக்­களின் விட­யங்­களில் அளிக்­கப்­ப­ட­வில்லை. இதனால் சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் தலை­வர்கள் ஏற்­றுக்­கொள்­ளாத சூழ­லி­லேயே அந்த அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு, நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

அந்த அர­சி­ய­ல­மைப்பில் சிறு­பான்மை இன மக்­களின் நலன்­க­ளுக்கு உரிய கவனம் செலுத்­தப்­ப­டாத கார­ணத்தின் நிமித்­தமே 13ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் கொண்டு வரப்­பட்டு, மாகாண ஆட்சி முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. எனினும், அதி­லும்­கூட இந்­திய நலன் சார்ந்த உள்­நோக்கம் படிந்­தி­ருந்­ததை மறுக்க முடி­யாது.

இந்­தி­யாவின் தலை­யீடு

இந்த அர­சியல் திருத்­த­மும்­கூட, இலங்­கையின் ஆட்­சி­யா­ளர்­க­ளால் கொண்டு வரப்­ப­ட­வில்லை. இந்­திய அர­சாங்­கத்­துடன் செய்து கொண்ட ஓர் ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இந்தத் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு, தேசிய சிறு­பான்மை இன மக்கள் அடக்கி ஒடுக்­கப்­பட்­டதன் கார­ண­மாக எழுந்த ஆயுதப் போராட்­டத்­துக்கு எதி­ராக அர­சாங்கம் இறுக்­க­மான இரா­ணுவ நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. யாழ். குடா­நாட்டின் வட­ம­ராட்சி பிர­தே­சத்தில் ஆயு­த­மேந்­திய தமிழ்ப் போரா­ளி­க­ளுக்கு எதி­ராக அரச படைகள் ஒப்­ப­ரேஷன் லிப­ரஷேன் என்ற மோச­மான இரா­ணுவ தாக்­குதல் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­தி­ருந்­தன.

தனது குடி­மக்­களில் ஒரு பகு­தி­யினர் மீது அர­சாங்­கமே வேற்று நாட்டுப் படை­யி­ன­ருடன் மோது­கின்ற வகை­யி­லான இரா­ணுவ நட­வ­டிக்கை ஒன்றை முன்­னெ­டுத்­தி­ருப்­பதைக் கண்ட இந்­திய அரசு இலங்­கையில் இரா­ணுவ ரீதி­யாகத் தலை­யீடு செய்­தது.

‘ஒப்­ப­ரேஷன் பூமாலை’ என்ற பெயரில் யுத்த மோதல்கள் மூண்­டி­ருந்த யாழ். குடா­நாட்டில் சிக்­கி­யி­ருந்த பொது­மக்­களின் அத்­தி­யா­வ­சியத் தேவை­யா­கிய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்­வ­தற்­காக இந்­திய செஞ்­சி­லுவைக் குழுவைப் பயன்­ப­டுத்தி, மனி­தா­பி­மான உத­வி­யாக உணவுப் பொட்­ட­லங்­களை வான் வழி­யாகப் போட்­டது.

இதனைத் தொடர்ந்து இந்­தியப் படைகள், அமைதி காக்கும் படை­யாக இலங்­கைக்குள் காலடி எடுத்து வைத்­தன.

அந்தத் தரு­ணத்­தி­லேயே தமிழ் இளை­ஞர்­களின் போராட்­டத்தைத் தணித்து மாகாண சபை முறை­மையின் கீழ் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணும் வகையில் இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­பட்­டது. இந்த ஒப்­பந்­தத்தில் அப்­போ­தைய இலங்கை ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­த­னவும், இந்­தியப் பிர­தமர் ராஜீவ் காந்­தியும் கையெ­ழுத்­திட்­டி­ருந்­தனர்.

போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த தமிழ் இளை­ஞர்கள் ஆயு­தங்­களைக் கைய­ளித்து ஜன­நா­யக வழி­மு­றைக்குத் திரும்­பி­யி­ருந்­தனர். ஆயு­தங்­களைக் கைய­ளித்­தி­ருந்த போதிலும், விடு­த­லைப்­பு­லிகள் மாத்­திரம் ஏனைய ஆயு­த­மேந்­திய அமைப்­பு­களைப் போன்று ஜன­நா­யக வழிக்குத் திரும்­ப­வில்லை. அதனைத் தொடர்ந்து அமைதி காக்க வருகை தந்­தி­ருந்த இந்­தியப் படை­க­ளுடன் விடு­த­லைப்­பு­லிகள் மோதலில் ஈடு­பட நேர்ந்­தி­ருந்­தது என்­பதும் வேறு விட­யங்­க­ளாகும்.

ஆனால், இந்­தி­யாவின் தலை­யீட்டில் உரு­வாக்­கப்­பட்ட 13ஆவது அர­சி­ய­ல­மைப் புத் திருத்தம் இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய தீர்வை வழங்­க­வில்லை. தமிழ் மக்­க­ளுக்­கென ஒரு தனி­ நாட்­டுக்­காக ஆயு­த­மேந்­திய தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு இரா­ணுவ ரீதி­யாகப் பயிற்­சிகள் உள்­ளிட்ட உத­வி­களை வழங்­கி­யி­ருந்த போதிலும், இலங்­கையில் தனி­ நாடு ஒன்று உரு­வா­­வதை இந்­தியா விரும்­பி­யி­ருக்­க­வில்லை.

இலங்­கையில் உரு­வா­கின்ற தனி ­நாட்டு நிலைமை இந்­தி­யாவின் ஒரு­மைப்­பாட்­டுக்கும் பாத­க­மான நிலை­மை­களை ஏற்­ப­டுத்தும் என்ற கார­ணத்­துக்­கா­கவே, மாகாண சபை முறை­மை­யி­லான நிர்­வாக அலகைக் கொண்ட தீர்வை முன்­வைத்து, 13ஆவது அர­சியல் திருத்தம் கொண்டு வரப்­பட்­டது. அந்தத் திருத்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த ஆட்­சி­யா­ளர்கள் முன்­வ­ர­வில்லை.

இதனால் அந்த அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் ஊடாகக் கொண்டுவரப்­பட்ட மாகாண சபை தமிழ்ப்­ பி­ர­தே­சங்­களில் பய­னுள்ள முறையில் செயற்­பட முடி­யாமல் போனது. அதே­வேளை, நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களில் அவ­சி­யப்­ப­டாத மாகாண சபைகள் அர­சியல் ரீதி­யாகப் பெரும்­பான்மை இன மக்­க­ளுக்குப் பயன்­பட்­டி­ருந்­தன.

தமிழ் மக்­களின் நலன்­களில் உண்­மை­யி­லேயே இந்­தியா அக்­கறை கொண்­டி­ருந்­தி­ருக்­கு­மே­யானால், இலங்கை இந்­திய ஒப்­பந்தம் என்ற சர்­வ­தேச அந்­தஸ்து கொண்ட ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் மாகாண சபை நிர்­வாக முறைமை சரி­யான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வதைத் தொடர்ந்து கண்­கா­ணித்து, இந்­தியா செயற்­ப­டுத்­தி­யி­ருக்கும். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை.

அர­சி­ய­ல­மைப்பின் 18, 19ஆவது திருத்தச் சட்­டங்கள்

இதனைத் தொடர்ந்து பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காகப் பல தட­வைகள் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்கள் கொண்டுவரப்­பட்­டன. அந்த வகையில் 13ஆவது திருத்­தத்தைப் போலவே, அர­சி­ய­ல­மைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தச் சட்­டங்­களும் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­கா­கவே கொண்டு வரப்­பட்­டன.

இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் கீழ் கொண்டுவரப்­பட்ட 13ஆவது திருத்தச் சட்­டத்தைப் போன்று, இந்த இரண்டு திருத்­தங்­களும் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணும் நோக்­கத்தைக் கொண்­டி­ருக்­க­வில்லை. மாறாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் தொடர்­பி­லான விட­யங்­க­ளுக்­கா­கவே இவை உரு­வாக்­கப்­பட்­டன.

மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் கொண்டுவரப்­பட்ட 18ஆவது திருத்தச் சட்டம், ஜனா­தி­பதி ஒருவர் இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் பதவி வகிக்க முடி­யாது என்ற நிய­தியை நீக்கி, மூன்­றா­வது தட­வையும் பதவி வகிக்­கலாம் என்ற உரி­மையை நிலை­நி­றுத்­து­வ­தற்­காக, அவ­ரு­டைய தனிப்­பட்ட அர­சியல் நலனை கருத்திற் கொண்டு, கொண்டுவரப்­பட்­டது. அத்­துடன் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் கீழ் ஜன­நா­யக உரி­மை­க­ளுக்கு காப்­பீட்டு விதி­மு­றை­களைக் கொண்ட நிலை­மை­யையும் அது மாற்றியமைத்­தது.

அர­சியல் நோக்­கத்­துடன், நிறை­வேற்று அதி­காரம் மேற்­கொள்­ளத்­தக்க ஜன­நா­யக உரிமை மீறல்­க­ளுக்குத் தடை­ போடும் வகையில் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த விதி­மு­றை­களை நீக்கி, ஜனா­தி­பதி தனக்கு விருப்­ப­மான முறையில் நீதித்­துறை, தேர்தல் துறை போன்ற முக்­கிய துறை­க­ளுக்­கா­ன­வர்­களை நிய­மனம் செய்­கின்ற அதி­கா­ரத்தை உரு­வாக்­கி­யி­ருந்தார். இதனால் நிறை­வேற்று அதி­காரம், ஏனைய ஜன­நா­யகத் துறை­களை மேவிச் செயற்­ப­டு­கின்ற நிலை­மை­யொன்றே இதன் மூலம் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது.

நாட்டில் புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­பட வேண்­டிய தேசிய முக்­கி­யத்­துவம் மிக்க விட­யத்­துக்கு அப்பால் ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மாக சர்­வா­தி­கார ஆட்சி முறைக்கே 18ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்டம் வழிவகுத்­தி­ருந்­தது.

ஆனால், 2015ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஆட்சி மாற்­றத்தின் பின்னர், நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த எல்­லை­யற்ற அதி­கா­ரங்­களை இல்­லாமல் செய்­வ­தற்­கா­கவே 19ஆவது திருத்தச் சட்டம் 2015ஆம் ஆண்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரால் கொண்டுவரப்­பட்­டது.

சர்­வா­தி­காரப் போக்கில் காலடி எடுத்து வைத்­தி­ருந்த ஆட்சி முறையை மாற்றி ஜன­நா­ய­கத்தைத் தழைக்கச் செய்­வ­தற்­கா­கவே 19ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்­பட்­ட­தாகக் கூறப்­பட்ட போதிலும், அதிலும் ஓர் அர­சியல் உள்­நோக்கம் இழை­யோடி இருந்­தது.

பொது வேட்­பா­ளரின் தெரிவு

மஹிந்த ராஜ­பக் ஷவைத் தோற்­க­டிப்­ப­தற்­காக ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­த­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது வேட்­பா­ள­ராகத் தேர்வு செய்­யப்­பட்­டி­ருந்தார். அன்­றைய அர­சியல் சூழல் ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வேட்­பா­ள­ராகத் தேர்வு செய்­வ­திலும் பார்க்க, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியிலிருந்து ஒரு­வரைத் தெரிவு செய்­வதே சரி­யாக இருக்கும் என்று கரு­தப்­பட்­டது.

தேர்­தல்­களில் வெற்­றி­ பெற்று நல்­லாட்சி அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதன் பின்னர், குறிப்­பாக ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்­லாமல் செய்து பாராளு­மன்­றத்தை அதி­கார மைய­மாக மாற்றியமைக்க வேண்டும் என்­பதே 19ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­தான நோக்கம்.

இரண்டு தட­வை­க­ளுக்கு மேல் ஜனா­தி­ப­தி­யாக ஒருவர் பதவி வகிக்க முடி­யாது. பாராளு­மன்­றத்தைக் கலைக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­தியின் கைகளில் இருந்து பாரா­ளு­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட வேண்டும். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் செயற்­பா­டு­களை கேள்­விக்கு உட்­ப­டுத்த முடி­யாது என்ற நிலை­மையை மாற்றி, பாரா­ளு­மன்­றத்­துக்கு அவர் பொறுப்புக் கூற வேண்டும் என்­பன உள்­ளிட்ட முக்­கிய மாற்­றங்­களை அந்தச் சட்டம் கொண்­டி­ருக்­கின்­றது.

இது பொது­வாக ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற ஒரு­வரை இலக்கு வைத்து ஜன­நா­யக ஆட்சி முறை­மையை வலுப்­ப­டுத்­து­வ­தாகத் தோன்­றி­னா­லும்­கூட, மாற்றுக் கட்­சி­யா­கிய ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ற தனி நபரின் கட்சி அர­சியல் சார்ந்த எதிர்­கால நலன்­களை இல்­லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்­கமே மறைந்­தி­ருந்­தது.

ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது வேட்­பா­ள­ரா­கவே தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தார். அவர் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­ கட்­சியை விட்டு விலகி ஐக்­கிய தேசிய கட்­சியில் இணைந்­தி­ருக்­க­வில்லை. அவர் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட பின்­னரும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லேயே இணைந்­தி­ருந்தார்.

ஜனா­தி­ப­திக்­கு­ரிய நிறை­வேற்று அதி­கா­ரங்­களை ஜன­நா­ய­கத்தின் போர்­வையில் இல்­லாமல் செய்து பாரா­ளு­மன்­றத்தைப் பலப்­ப­டுத்­து­வது என்­பது, பிர­த­ம­ரா­கிய ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பலப்­ப­டுத்­து­வ­தா­கவே அமையும். அத்­துடன், ஐக்­கிய தேசிய கட்சி, ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி ஆகிய இரண்டு கட்­சிகள் இணைந்து அமைத்த நல்­லாட்­சியில் இந்த அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் ஊடாக ஐக்­கிய தேசிய கட்­சியே நன்மை அடையும்.

இத்­த­கைய பின்­புல அர­சியல் உள்­நோக்­கங்­களைக் கொண்டே 19ஆவது அர­சியல் திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. இதனை மைத்­தி­ரி­பால சிறி­சேன காலம் கடந்த நிலை­யி­லேயே உணர்ந்து கொண்டார். அல்­லது நேரத்­தோடு இதனை அவர் உணர்ந்­தி­ருந்­தா­லும்­கூட, நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்­றி­ருந்த அர­சியல் சூழலில் இதற்கு எதி­ராகக் குரல் கொடுக்கத் தக்க அர­சியல் வலிமை அவ­ரிடம் அப்­போது இருக்­க­வில்லை என் றும் கருத முடியும்.

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நாலரை வரு­டங்கள் முடி­வுற்ற நிலை­யி­லேயே, அர­சி­ய­ல­மைப்பு வர­லாற்றில் முக்­கி­யத்­துவம் பெற்­றுள்ள 18, 19 ஆகிய இரண்டு அர­சியல் திருத்தச் சட்­டங்­க­ளையும் நீக்க வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்ளார். அவ­ரு­டைய கூற்று பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் சர்ச்­சை­க­ளையும் உரு­வாக்கி இருக்­கின்­றது. அந்தக் கூற்று வேடிக்­கை­யா­கவும், அதே­வேளை, விப­ரீ­த­மா­க­வும்­கூட நோக்­கப்­ப­டு­கின்­றது.

’19 – நாட்­டுக்கு சாபக்­கே­டா­னது’

அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்டம் நாட்­டுக்கு சாபக்­கே­டா­னது. நாட்டில் உறு­தி­யற்ற அர­சியல் நிலை­மைகள் ஏற்­பட்­டுள்­ள­மைக்கு இந்தச் சட்­டமே கார­ண­மாகும். இந்தச் சட்­டத்­தினால், ஜனா­தி­ப­திக்கு ஒரு பகுதி அதி­கா­ரமும், பாரா­ளு­மன்­றத்­துக்கு ஒரு பகுதி அதி­கா­ரமும் சென்­றன. இது ஒரு வாக­னத்தை இரண்டு சார­திகள் செலுத்­து­வ­தற்கு ஒப்­பா­னது என்று பிர­த­மரே கூறி­யி­ருக்­கின்றார் எனக் குறிப்­பிட்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நாட்டை முன்­னேற்ற வேண்­டு­மானால், அந்தச் சட்­டத்தை இல்­லாமல் செய்­ய ­வேண்டும் எனத் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்­த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற ஒரு நிகழ்வில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அர­சி­ய­ல­மைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தச் சட்­டங்­களை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்று முதலில் கூறி­யி­ருந்தார்.

அர­சி­ய­ல­மைப்பின் 18ஆவது திருத்தச் சட்டம் சர்­வா­தி­காரப் போக்கைக் கொண்­டி­ருந்­தது. ஆனால் 19ஆவது சட்டம் நாட்டில் உறு­தி­யற்ற அர­சியல் நிலை­மை­களை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது. ஆகவே இந்தச் சட்­டங்­களை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்று அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

மூன்று தினங்­களின் பின்னர் ஜனா­தி­பதி மாளி­கையில் தேசிய பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள், ஊடகப் பிர­தா­னி­க­ளுடன் நடத்­திய சந்­திப்­பின்­போது இந்தக் கருத்தை மீண்டும் வலி­யு­றுத்­திய அவர், இன்னும் சில மாதங்­களில் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்தல், அதனைத் தொடர்ந்து நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்தல் என்­பன நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக இந்தச் சட்­டங்­களை இல்லாமல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகின்ற அவர், எல்லையற்ற அதிகாரங்களைக் கொண்ட நிலையிலான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியின் மூலம் அந்தக் கட்சியின் அரசியல் நலன்களைக் கட்டிக்காக்க முடியும். மக்கள் மத்தியில் தொடர்ந்து செல்வாக்குடன் அரசியல் செய்ய முடியும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது.

உண்மையிலேயே தற்போதைய நாட்டு நிலைமையில் அரசியலமைப்பின் 18, 19 ஆவது திருத்தச் சட்டங்களை நீக்குவதிலும் பார்க்க, புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டு நாட்டை முன்னேற்ற வழியில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதே அவசியமாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற அரசியல் நிலைமைகளுக்கு ஜனாதி பதிக்கும் பிரதமருக்கும் இடையில் எழுந்துள்ள அதிகாரப் போட்டியே முக்கிய காரணமாகும். ஜனநாயகத்துக்குப் புத்துயிரளித்து, புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பதாக மக்களிடம் உறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிப் பீடமேறியது.

மக்களுக்கு அளித்த ஆணையை நிறைவேற்ற வேண்டியது ஜனாதி பதியினதும் பிரதமரதும் தலையாய கடமையாகும். அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வருவது என்பதும், அந்த அடிப்படையில் அரசியல் செய்வது என்பதும் இனவாத, மதவாத உணர்வுகள் மேலோங்கி இனக்குழுமங்களை வெறுப் பும் அச்சமும் கௌவிப் பிடித்துள்ள சூழலில் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*