;
Athirady Tamil News

விழ­லுக்கு இறைத்த நீர்..!! (கட்டுரை)

0

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்­கி­வரும் சூழ்­நி­லையில் அர­சியல் கட்­சிகள் ஜனா­தி­பதித் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­கு­ரிய திட்­டங்­களை வகுத்துக் கொண்­டி­ருக்­கின்­றன. பொதுஜன பெர­முன ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவை தெரிவு செய்­துள்­ளது. மக்கள் விடு­தலை முன்­னணி அதன் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்­கவை ஜனா­தி­பதி வேட்­பாளர் என்று அறி­வித்­துள்­ளது. இந்­நி­லையில் இந்­நாட்டை மாறி­மாறி ஆட்சி செய்த தலைமைக் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இன்னும் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விக்­க­வில்லை. ஐக்­கிய தேசியக் கட்­சியை பொறுத்தவரை அங்கு யார் வேட்­பாளர் என்­பதில் பலத்த போட்டி நிலை காணப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விக்கும் நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. அக்­கட்சி பொது ஜன பெர­மு­னவின் வேட்­பா­ளரை அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பா­ளரை ஆத­ரிக்கும் நிலையைக் கொண்­டி­ருப்­ப­தா­கவே இருக்­கின்­றது.

இவ்­வாறு பெரும் தேசி­ய­வாதக் கட்­சிகள் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து ஆராய்ந்து முடி­வு­களை எடுத்துக் கொண்­டி­ருக்­கின்ற சூழலில் முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் ஒருவர் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டு­மென்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்ளார். இவரின் கருத்தை முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லா­ளரும், ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பின் செய­லா­ள­ரு­மான எம்.ரி.ஹஸன்­அ­லியும் ஆத­ரித்­துள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்லிம் ஒருவர் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வதன் மூல­மாக முஸ்லிம் சமூ­கத்­திற்­காக பேரம் பேச முடி­யு­மென்றும், வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தற்கு தான் தயா­ராக இருப்­ப­தா­கவும் ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்­தலை பொறுத்த வரை அளிக்­கப்­படும் வாக்­கு­களில் 50 சதவீதத்­திற்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெறு­கின்­றவர் வெற்றி பெற்­ற­வ­ராக அறி­விக்­கப்­ப­டுவார். இம்முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் இரண்­டிற்கும் மேற்­பட்­ட­வர்கள் போட்­டி­யிட இருப்­ப­தனால் எந்­த­வொரு வேட்­பா­ள­ரி­னாலும் 50 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள முடி­யாது போய்­விடும். இதனால், முதல் இரண்டு இடத்­தினைப் பெற்­ற­வர்­களைத் தவிர்த்து ஏனைய வேட்­பா­ளர்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­களில் முதல் இரண்டு இடத்­தினைப் பெற்­ற­வர்­க­ளுக்கு அளிக்­கப்­பட்­டுள்ள இரண்டாம் விருப்பு வாக்­கு­களின் அடிப்­ப­டையில் 50 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெறு­கின்­றவர் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவார்.

ஆதலால், முஸ்லிம் ஒருவர் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தோடு, முஸ்­லிம்­களின் கோரிக்­கை­களை ஏற்றுக் கொள்ளும் பிர­தான வேட்­பாளர் ஒரு­வ­ருக்கு இரண்­டா­வது விருப்பு வாக்கை வழங்க வேண்­டு­மென்று ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்­துள்ளார். ஹிஸ்­புல்­லாஹ்வின் இக்­க­ருத்து கேட்­ப­தற்கு சிறப்­பாக இருந்­தாலும், அதி­லுள்ள ஆபத்­தையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனத்­துவ அர­சி­யலும், இன­வா­தி­களின் கெடு­பி­டி­களும் சிறு­பான்­மை­யி­னரை நசுக்கிக் கொண்­டி­ருக்கும் இன்­றைய சூழலில் நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றோம். தற்­போ­தையே நிலையில் முஸ்­லிம்­களின் கை பட்­டாலும் குற்றம் கால் பட்­டாலும் குற்றம் என்­ற­வாறு இனத்­துவ அர­சி­யல்­வா­தி­களும், இன­வா­தி­களும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

முஸ்­லிம்­களின் மீது பழியைப் போட்டு அல்­லது முஸ்­லிம்­களின் மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன் வைத்து அர­சியல் இலாபம் தேடிக் கொள்­ளவும், பௌத்த சிந்­தாந்­தத்­திற்கு பிழை­யான கற்­பித்­தல்­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்கும் கடும்­போக்கு இன­வாத பிக்­கு­களும் முஸ்லிம் ஒருவர் ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டால் அதற்கு இனத்­துவ அர­சியல் சாயமும், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் எனும் நவீன குற்­றச்­சாட்­டையும் முன் வைப்­பார்கள் என்­ப­தனை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், இன்று ஹிஸ்­புல்லாஹ் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. அக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆதா­ர­மில்லை என்­றி­ருந்­தாலும், அதன் தாக்கம் அதிக ஆபத்தைக் கொண்­டது. இந்­நி­லையில் ஹிஸ்­புல்லாஹ் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டால் அவர் மீது முன் வைக்­கப்­படும் இன­ரீ­தி­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆத­ாரமாக ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர் போட்­டி­யி­டு­வ­தனைக் கொள்­வார்கள். குறிப்­பாக, ஹிஸ்­புல்லாஹ் போன்­ற­வர்கள் கிழக்கு மாகா­ணத்தில் இஸ்­லா­மிய ஆட்­சியை ஏற்­ப­டுத்த முனை­கின்­றார்கள் என்ற குற்­றச்­சாட்டைக் குறிப்­பிட முடியும். ஆதலால், முஸ்­லிம்­க­ளுக்கு இருக்­கின்ற தலை­யிடி போதா­தென்று மேலும் தலை­யி­டியை வலிந்து தேடிக்­கொள்ளும் ஒரு நட­வ­டிக்­கை­யா­கவே ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்லிம் ஒருவர் போட்­டி­யி­டு­வது அமைந்­து­விடும்.

இலங்­கையின் அர­சியல் யாப்பில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு இலங்கை பிர­ஜைகள் எல்­லோ­ருக்கும் உரிமை இருக்­கின்­றது. அதன்­படி முஸ்லிம் ஒரு­வரும் போட்­டி­யி­டலாம். ஆனால், இன்­றைய சூழல்­அ­தற்கு பொருத்­த­மில்­லாத ஒன்­றா­கவும், இன­வாத பிக்­கு­களின் எண்­ணங்­க­ளுக்கு ஏற்ப அர­சி­யல்­வா­திகள் செயற்­படும் நிலையும், இச்­சூ­ழலை இன­வாத அர­சி­யல்­வா­திகள் தங்­க­ளுக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொள்ளும் நடை­மு­றையும் காணப்­ப­டு­கின்­ற­மையும், பொய்யும், அநீ­தியும் ஆட்சி செய்யும் கோர நிலையும் இருக்­கின்­றது. ஆதலால், முஸ்­லிம்கள் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும்.

இது­வ­ரைக்கும் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் முஸ்­லிம்கள் பிர­தான அர­சியல் கட்­சி­களில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­க­ளையே ஆத­ரித்து வந்­துள்­ளார்கள். சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­கள்தான் ஜனா­தி­பதி வேட்­பா­ளரின் வெற்­றியை தீர்­மா­னித்­துள்­ளன.

அதனால், இம்­மு­றையும் பிர­தான வேட்­பா­ளர்­களில் ஒரு­வ­ருக்கு நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் ஆத­ரிப்­பதே சிறந்த முடி­வாக அமையும். முஸ்லிம் ஒருவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் போது பிர­தான கட்­சியின் வேட்­பாளர் ஒரு­வ­ருக்கு அதா­வது முஸ்­லிம்­களின் சார்பு கோரிக்­கை­களை ஏற்றுக் கொண்ட ஒரு­வ­ருக்கு இரண்­டா­வது விருப்பு வாக்­கினை அளிக்க வேண்­டு­மென்று, முஸ்லிம் ஒருவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டு­மென்று தெரி­விக்­கின்­ற­வர்­களின் கருத்­தாக இருக்­கின்­றது. இவர்­களின் இந்­நி­லைப்­பாடு இதற்கு முன்னர் நேர­டி­யாக ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை ஆத­ரித்­த­தற்கும், தற்­போது இரண்­டா­வது விருப்பு வாக்கை அளிக்க வேண்­டு­மென்று முஸ்­லிம்­களை கேட்­ட­தற்கும் இடையே வேறு­பா­டு­க­ளில்லை.

மேலும், முஸ்லிம் ஒருவர் முஸ்­லிம்­களின் 16 இலட்சம் வாக்­கு­களில் 10 இலட்சம் வாக்­கு­களை இலக்கு வைத்து போட்­டி­யிடும் போது, பெரும்­பான்­மை­யினர் முஸ்­லிம்­களை இன்னும் தூர­மாக்கிப் பார்ப்­ப­தற்கு வழி அமைத்­து­விடும். முஸ்­லிம்­களின் மீது கொண்­டுள்ள பொறாமை, கோபம், காழ்ப்­பு­ணர்ச்சி என்­பன இன்னும் அதி­க­ரிப்­ப­தற்கு கார­ண­மா­கி­விடும். முஸ்லிம் வேட்­பாளர் ஒருவர் போட்­டி­யிடும் போது முஸ்­லிம்­களின் கோரிக்­கைகள், உரி­மைகள் பற்றி பேச வேண்டி ஏற்­படும். இதற்கு வாக்­க­ளிக்­கு­மாறு கேட்க வேண்­டி­யேற்­படும். உதா­ர­ண­மாக அர­சியல் தீர்வில் முஸ்­லிம்­க­ளுக்கும் அதி­கா­ரமும், அதி­கார எல்­லையும் தரப்­பட வேண்டும் என்று கோரும் போது, அல்­லது இது வரை முஸ்லிம் இழந்­துள்ள காணி­களை மீள கைய­ளிக்க வேண்­டு­மென்று கோரும் போது அதி­லுள்ள உண்­மை­யையும், நியா­யத்­தையும் விளங்கிக் கொள்­ளாது அதற்கு இன­வாத சாயம் பூசி, முஸ்­லிம்கள் நாட்டைப் பிரிப்­ப­தற்கு விரும்­பு­கின்­றார்கள் என்று இன­வா­தி­களும், பௌத்த பிக்­கு­களும் பிர­சாரம் செய்­வார்கள். இந்தப் பிர­சாரம் ஏற்­க­னவே இன­வா­தி­க­ளி­னதும், பௌத்த பிக்­கு­க­ளி­னதும் செல்­வாக்கை அதிகம் பெற்­றுள்ள தரப்­புக்கு சிங்­கள மக்­களின் வாக்­கு­களின் விகி­தா­சா­ரத்தில் அதி­க­ரிப்பை ஏற்­ப­டுத்தும், பெரும்­பான்மை அர­சாங்­கத்தை அமைக்க வேண்­டு­மென்ற அவர்­களின் கோரிக்­கையை நிறை­வேற்றிக் கொடுப்­ப­தற்கு துணை செய்­வ­தாக அமையும். முஸ்லிம் ஒருவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் போது பௌத்த இன­வா­தி­களின் பொய்ப் பிர­சா­ரங்­க­ளுக்கு உரம் ஊட்­டு­வ­தா­கவே அமைந்­து­விடும்.

மறு­பு­றத்தில் முஸ்லிம் ஒருவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டு முஸ்­லிம்­களின் கோரிக்­கை­களை முன் வைக்கும்; போது அதற்கு எதி­ராக வாக்­க­ளிக்­கவும் கூடும்.

இதே வேளை, முஸ்லிம் வேட்­பாளர் தனது சமூ­கத்தின் உண்மைப் பிரச்­சி­னை­க­ளையும், தேவை­க­ளையும் முன் வைத்து போட்­டி­யிடும் போது அந்த வேட்­பா­ள­ருக்கு முஸ்­லிம்கள் வாக்­க­ளிக்­காது போனால், முஸ்­லிம்­களே தங்­களின் கோரிக்­கை­களை நிரா­க­ரித்­த­தாக அமையும். ஆனால், முஸ்­லிம்கள் கோரிக்­கை­களை நிரா­க­ரிக்­க­வில்லை. தேர்­தலின் பின்னர் பெரும்­பான்­மை­யி­னரின் குறிப்­பாக பௌத்த இன­வா­தி­களின் எதிர்­வி­னையில் இருந்து தப்­பு­வ­தற்­காக முஸ்லிம் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு எதி­ராக வாக்­க­ளிக்க வேண்­டிய கட்­டாயம் ஏற்­ப­டலாம்.

ஆகவே, முஸ்லிம் ஒருவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக களம் இறங்கி விஷப் பரீட்­சையில் ஈடு­ப­டு­வ­தனை விடவும், முஸ்­லிம்­களின் கோரிக்­கை­களை ஏற்றுக் கொள்ளும் ஒரு­வ­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வதே புத்­தி­சா­லித்­த­ன­மான முடி­வாக இருக்கும். ஏற்­க­னவே, முஸ்­லிம்­களின் ஒரு சில கோரிக்­கை­களை ஏற்று ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற்­ற­வர்கள் அக்­கோ­ரிக்­கை­களை நிறை­வேற்­ற­வில்லை என்­பது கவ­னிக்­கத்­தக்­கது. இதற்கு அந்த ஜனா­தி­ப­தி­களை குறை காண்­ப­தனை விடவும், முஸ்லிம் கட்­சி­க­ளையும், தலை­வர்­க­ளையும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும்தான் குற்றம் காண வேண்டும். தேர்­தலில் முஸ்­லிம்­களின் வாக்­கு­களை தாம் ஆத­ரிக்கும் வேட்­பா­ள­ருக்கு பெற்றுக் கொடுத்த இவர்கள், தேர்­தலின் பின்னர் முஸ்­லிம்­களின் இலக்­கு­களை மறந்து அமைச்சர் பத­வி­களை இலக்கு வைத்து செயற்­பட்­டார்கள். முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் இந்த இலக்கை மிகவும் சரி­யா­கவே ஜனா­தி­பதி கதி­ரையில் அமர்ந்து கொண்­ட­வர்கள் நிறை­வேற்றிக் கொடுத்­துள்­ளார்கள். முஸ்லிம் சமூ­கத்தின் இலக்­கு­களை நிறை­வேற்றி பௌத்த இன­வா­தி­க­ளி­னதும், இன­வாத பிக்­கு­க­ளி­னதும் எதிர்ப்பை சம்­பா­தித்துக் கொள்­வ­தனை விட, அமைச்சர் பத­வி­களை கொடுத்­து­வி­டு­வது ஆட்­சி­ய­ளார்­க­ளுக்கு இல­கு­வான காரி­ய­மாகும்.

இதே வேளை, ஜனா­தி­பதி தேர்­தலில் முஸ்­லிம்­களின் இரண்­டா­வது விருப்பு வாக்கைப் பெற்றுக் கொடுத்­து­விட்டு, அதன் மூல­மாக தமது இலக்கை அடைந்து கொள்ளும் தந்­தி­ரமும் முஸ்லிம் ஒருவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வதன் பின்­ன­ணியில் இருக்­கலாம்.

இதே வேளை, முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்கள் ஐக்­கிய தேசியக் கட்சி ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­வித்­ததன் பின்­னரே உடன்­ப­டிக்­கையில் கைசாத்­திட முடி­யு­மென்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­களின் எதிர்­காலம், அவர்­களின் தேவைகள், கோரிக்­கைகள் போன்­ற­வற்றை முன் வைக்­காது, வேட்­பாளர் யார் என்று பார்க்க வேண்­டு­மென்­பது முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் சமூ­கத்தை மறந்து செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­ப­தற்கு நல்ல எடுத்துக் காட்­டாகும். யார் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டாலும் முஸ்­லிம்­களின் நலன்­களை கவ­னிக்­காத நிலையே நீடித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், தலை­வர்­களும் யார் ஜனா­தி­பதி வேட்­பாளர் என்று தேடிக் கொண்­டி­ருக்­காது முஸ்­லிம்­களின் அபி­லா­சை­களை உள்­ள­டக்­கிய கோரிக்­கை­களை முன் வைக்க வேண்டும். அந்தக் கோரிக்­கை­களை ஏற்றுக் கொள்ளும் வேட்­பா­ளரை ஆத­ரிக்க வேண்டும். முன் வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதன் பின்னர் நிறைவேற்றாது போகலாம். ஆனால், முஸ்லிம்களின் அபிலாசைகளைக் கொண்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது என்பது கூட ஒரு வெற்றிதான். இது வரைக்கும் பெரும் தேசியவாதக் கட்சிகளும், தலைவர்களும் முஸ்லிம்களின் கோரிக்கைகளை உளரீதியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அக்கோரிக்கைகளை வாக்குகளைப் பெற்றுக் கொள்ளுவதற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள்.

இதே வேளை, முஸ்லிம் அரசியல் தலைவர்களும், கட்சிகளும் சமூகம் சார்ந்த கோரிக்கைகளை ஜனாதிபதி தேர்தல்களிலோ, பொதுத் தேர்தல்களிலோ முன் வைக்கவில்லை. தங்களின் அரசியலுக்கும், சுய தேடலுக்கும் யாரோடு இணைந்து கொண்டால் சுகமோ அவர்களுடன் இணைந்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும் தரகர் வேலைகளையே செய்து கொண்டிருக்கின்றனர்.

எனவே, முஸ்லிம் கட்சிகளும், அரசியல்வாதிகளும் யார் வேட்பாளர் என்றும், முஸ்லிம் வேட்பாளர் என்றும் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்காது, சமூகம் சார்ந்த கோரிக்கைகளில் அவதானம் செலுத்த வேண்டும். அவற்றை ஜனாதிபதி தேர்தலுக்குரிய பேரம் பேசுதலாக முன் வைக்க வேண்டும். அதனைவிடுத்து வழக்கம் போன்று முஸ்லிம் சமூகத்தை பேரினவாத அரசியல் கட்சிகளின் திட்டங்களுக்கு அமைய செயற்பட முற்பட்டால் அது விழலுக்கு இறைத்த நீராக பிரயோசனமில்லாது போய்விடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*