;
Athirady Tamil News

வெள்­ளை­ வேன்­ க­லா­சா­ரத்தை மீண்டும் கொண்டு வரு­வதா ? (கட்டுரை)

0

பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்ற முடி­யாத பல விட­யங்­களை ஆட்சி மாற்­றத்தைத் தொடர்ந்து பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்­றுவோம். பாரிய போராட்­டத்தின் மத்­தியில் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்ட வெள்­ளைவேன் கலாச்­சா­ரத்தை மீண்டும் கொண்டு வரு­வதா என்­ப­தனை மக்­களே சிந்­திக்­க­வேண்டும், அர­சியல் ரீதியில் தூர­நோக்­கத்­துடன் தீர்­மா­னங்­களை நாட்டு மக்கள் முன்­னெ­டுக்க வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும், பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று அலரி மாளி­கையில் இடம் பெற்­றது .அங்கு கருத்­து­ரைக்­கை­யி­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இனங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு எவ்­வித வேறு பாடும் காட்­ட­வில்லை. இதன் கார­ண­மா­கவே அனை­வ­ருக்கும் அடிப்­படை உரி­மைகள் பொது­வாக வழங்­கப்­பட்­டுள்­ளது. பேச்சு சுதந்­தி­ரத்­திற்கு எங்கும் முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளமை மகிழ்ச்­சிக்­கு­ரி­யது.

சர்­வா­தி­கார போக்­கு­களை பிர­யோ­கித்து தமது அர­சியல் தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­ளுதல், வெள்­ளைவேன் கலாச்­சாரம் உள்­ளிட்ட முறை­யற்ற செயற்­பா­டுகள் முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்­ளன. இன்று பொலிஸ், நீதி­மன்றம் ஆகிய முக்­கிய துறைகள் சுயா­தீ­ன­மாக சட்­டத்தின் பிர­காரம் செயற்­படும் நிலை­மை­யினை ஸ்தாபித்து பேச்­சு­சு­தந்­தி­ரத்தை அனைத்து இனங்­க­ளுக்கும் வழங்­கி­யுள்­ளமை இரண்டு அர­சாங்­க­ளுக்கும் இடை­யி­லான பாரிய வேறுப்­பா­டாகும்.

பாரா­ளு­மன்ற செயற்­பா­டுகள் அனைத்தும் எவ்­வித ஒழி­வு­ம­றைவும் இன்றி மக்­க­ளுக்கு காண்­பிக்­கப்­ப­டு­கின்­றன. ஊட­க­சு­தந்­தி­ரத்தை வழங்­கி­யுள்ளோம். எந்த ஊட­கத்­திற்கும் இது­வரை காலமும் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­ப­ட­வில்லை. அமைச்­ச­ரவை பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்பு கூற வேண்­டிய கட்­டாயம் காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லை­மைகள் கடந்த அர­சாங்­கத்தில் வெறும் பேச்­ச­ளவில் மாத்­தி­ரமே காணப்­பட்­டது.

பாரா­ளு­மன்­றத்தின் பெரும்­பான்மை ஆத­ரவு இல்­லாமம் சுதந்­திரம், தேசிய நல்­லி­ணக்கம், மற்றும் பொரு­ளா­தார முன்­னேற்றம் ஆகி­ய­வற்றை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்து சென்­றுள்ளோம்.புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கு­வது கட்­டா­ய­மா­ன­தாகும்.அடுத்த ஆண்டில் இருந்து அதற்­கான அனைத்து செயற்­பா­டு­களும் சுதந்­தி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­படும்.

அர­சாங்கம் தற்­போது பலத்­துடன் இருக்கும் போதே ஜனா­தி­பதி தேர்­த­லிலும் வெற்றிப் பெறும். கட்­சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார்.ஜனா­தி­பதி தேர்­தலின் வெற்­றியை தொடர்ந்து பொதுத்­தேர்­த­லிலும் வெற்றிப் பெறு­வது மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும். பாரா­ளு­மன்­றத்தின் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும்.

அர­சாங்கம் என்ற ரீதியில் பல விட­யங்­களில் வெற்றிக் கண்­டுள்ளோம். ஒரு சில குறை பாடு­களும் காணப்­ப­டு­கின்­றன. அதற்கு பல்­வேறு கார­ணிகள் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன. எவ்­வாறு இருப்­பினும் எந்­நி­லை­யிலும் மக்­களின் ஜன­நா­யக உரி­மை­களில் பங்கம் விளை­விக்­க­வில்லை. அதுவே எமது ஆட்­சியின் பிர­தான இலட்­ச­ன­மாகும்.

மீண்டும் சர்­வா­தி­கார ஆட்சி, வெள்­ளைவேன் கலாச்­சாரம், ஜன­நா­யக உரிமை மீறல் உள்­ளிட்ட கட்­ட­மைப்­பினை கொண்டு வரு­வதா , இல்­லையா என்­பதை நாட்டு மக்கள் தூர நோக்­குடன் சிந்­தித்து தீர்­மா­னிக்க வேண்டும். குறு­கிய காலத்­திற்குள் எந்த அர­சாங்­கத்­திலும் நல்­லாட்சி அர­சாங்கம் வழங்­கிய சுதந்­தி­ரத்தை வழங்க முடியாது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவதை தொடர்ந்து பொதுத்தேர்தலிலும் வெற்றிப் பெற்று சிறந்த அரசியல் கட்டமைப்பினை ஸ்தாபிக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து பலமான அரசாங்கத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும் என்றார்.

இச்சந்திப்பில் தம்பர அமில தேரர்,அமைச்சர் ரவூப் ஹக்கீம்,பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி ஆகியோர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*