;
Athirady Tamil News

சர்­வ­தேசம் தலை­யி­டு­கி­றதா? (கட்டுரை)

0

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலைப் போலவே, இந்த முறையும், சர்­வ­தேச தலை­யீ­டுகள் இருப்­பதைப் போன்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்தும் முயற்­சி­களில் கோத்­தா­பய ராஜபக் ஷவின் தரப்பு இறங்­கி­யி­ருக்­கி­றது.

2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த பின்னர் மஹிந்த ராஜபக் ஷ, தமது தோல்­விக்கு இந்­திய, அமெ­ரிக்க புல­னாய்வு அமைப்­புகள் தான் காரணம் என்று குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

அதற்கு முன்­ன­தாக, மஹிந்த ராஜபக் ஷவின் தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்­காக சீனா நிதியைக் கொட்­டு­கி­றது என்­றொரு

குற்­றச்­சாட்டு கிளம்­பி­யி­ருந்­தது.

2015 ஆட்சி மாற்­றத்­துக்கு மேற்­கு­லக, இந்­திய தரப்­புகள் துணை­போ­யின என்ற கருத்து இன்றுவரை உள்­ளது. இந்­த­மு­றையும் அவ்­வா­றான தலை­யீ­டுகள் இருக்கும் என்றே பர­வ­லான எதிர்­பார்ப்பும் இருந்­தது.

இலங்கைத் தீவின் அமை­வி­டமும், அதற்கு பூகோள அர­சி­யலில் உள்ள முக்­கி­யத்­து­வமும், இந்தப் பிராந்­தி­யத்தில் நடந்து கொண்­டி­ருக்­கின்ற அதி­காரப் போட்­டியும் தான் அதற்குக் காரணம்.

அமெ­ரிக்கா, சீனா என இரண்டு பிர­தான சக்­தி­களின் போட்டிக் கள­மாக இந்­தோ–-­ப­சுபிக் பிராந்­தியம் மாறி­யி­ருக்­கி­றது.

இந்­தியப் பெருங்­க­டலில் ஆதிக்கம் செலுத்தப் போவது யார் என்­பதை தீர்­மா­னிப்­ப­தற்­கான ஒரு பனிப்போர் ஏற்­க­னவே தொடங்கி விட்­டது.

இந்­தியப் பெருங்­க­டலின் வல்­ல­ர­சாக உள்ள இந்­தி­யாவை தம் பக்­கத்­துக்கு இழுத்து, ஜப்பான், அவுஸ்­தி­ரே­லியா, தென்­கொ­ரியா ஆகிய வல்­லமை மிக்க நாடு­க­ளுடன் இணைந்து, இந்­தியப் பெருங்­க­டலின் மீதான அதி­கா­ரத்­துக்­காக அமெ­ரிக்கா வலு­வாக முயற்­சிக்­கி­றது.

இதனை சீனா ஒற்றை நாடாக நின்று எதிர்­கொள்­கி­றது. ரஷ்­யாவின் பக்கத் துணையும் அதற்கு இருக்­கி­றது.

இவ்­வா­றான ஒரு சூழலில் இலங்கைத் தீவின் அர­சியல் சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கு முக்­கி­ய­மா­னது. இங்­குள்ள அர­சியல் சூழல் தமக்குச் சாத­க­மாக இருக்க வேண்டும் என்­பதில், இரண்டு பிர­தான வல்­ல­மை­மிக்க சக்­தி­களும், எதிர்­பார்க்­கின்­றன.

அது இந்­தியப் பெருங்­க­டலில் தமது நலன்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும், ஆதிக்க விரி­வாக்­கத்­துக்கும் துணை­யாக இருக்கும் என்­பது, அந்த வல்­ல­மை­மிக்க சக்­தி­களின் எதிர்­பார்ப்பு.

இவ்­வா­றா­ன­தொரு சூழலில் இலங்­கையில் நடக்­கப்­போகும், ஜனா­தி­பதித் தேர்­தலில், தமக்குச் சாத­க­மான ஒருவர் ஆட்­சிக்கு வரு­வ­தையே எல்லாத் தரப்­பு­களும் விரும்பும் என்­பதில் சந்­தேகம் இல்லை.

அமெ­ரிக்­கா­வுக்கும், சீனா­வுக்கும், ரஷ்­யா­வுக்கும், இந்­தி­யா­வுக்கும், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்கும், இலங்­கையில் ஆட்­சிக்கு வரப் போகி­றவர் எப்­ப­டிப்­பட்­ட­வராக இருக்க வேண்டும் என்ற தனித்­த­னி­யான எதிர்­பார்ப்­புகள் இருக்கும்.

அதன் அடிப்­ப­டையில், தமது குறைந்த­பட்ச எதிர்­பார்ப்­பு­க­ளை­யா­வது நிறை­வேற்றக் கூடி­ய­வ­ராக எந்த வேட்­பாளர் இருப்­பரோ, அவரை அந்த நாடுகள் ஆத­ரிக்கும்.

யாரா­வது ஒரு வேட்­பாளர் ஆட்­சிக்கு வர வேண்டும் என்று விரும்­பு­வதோ, அவரை ஆத­ரிப்­பதோ ஒவ்­வொரு நாட்­டுக்கும் உள்ள உரி­மை­யாகும். அதில் யாரும் தலை­யிட முடி­யாது.

அதற்கு அப்பால் ஒரு வேட்­பா­ளரின் வெற்­றிக்­காக ஒரு நாடு நேர­டி­யாக கள­மி­றங்கும் போதோ, அவ­ரது வெற்­றியை உறுதி செய்­வ­தற்­கான பக்க நட­வ­டிக்­கை­க­ளையும், பின்­புல நகர்­வு­க­ளையும் மேற்­கொள்ளும் போதோ தான், அது தலை­யீ­டாக பார்க்­கப்­படும்.

இந்த ஜனா­தி­பதித் தேர்­தலைப் பொறுத்­த­வ­ரையில், அமெ­ரிக்­காவும், சீனா­வுமே பிர­தா­ன­மாக தமது நலன்­களை உறுதி செய்­வ­தற்­கான போட்­டிக்­காக பயன்­ப­டுத்திக் கொள்­வ­தாக ஒரு கருத்து உள்­ளது.

அயல்­நா­டான இந்­தியா பற்றி எந்தக் கருத்தோ, குற்­றச்­சாட்டோ வெளி­யா­க­வில்லை என்­பது கவ­னிக்­கத்­தக்­கது.

அதற்கு இவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­க­ளுக்குள் இந்­தி­யாவை இழுத்து வீண் பகையைத் தேடிக்­கொள்ளக் கூடாது என்­பது ஒரு கார­ணி­யாக இருக்­கலாம்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றியைத் தீர்­மா­னிக்கும் போட்­டியில், சீனாவும் அமெ­ரிக்­காவும் இறங்­கி­யி­ருக்­கின்­றன என்று, சில வாரங்­க­ளுக்கு முன்னர் பாராளு­மன்ற உறுப்­பினர் விஜே­தாச ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார் என்­பது நினை­வி­ருக்­கலாம்.

இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற இரண்டு பிர­தான தரப்­பு­க­ளுக்­குமே, சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ரவும் தேவைப்­ப­டு­கி­றது, அதனைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்­ணமும் இருக்­கி­றது.

ஆனாலும், தேர்தல் விவ­கா­ரங்­களில் அமெ­ரிக்கா, சீனா தலை­யீடு செய்­கின்­றன என்­பது போன்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­திலும் கவனம் செலுத்­து­கின்­றன.

குறிப்­பாக, மஹிந்த ராஜபக் ஷ தரப்பு, அமெ­ரிக்­காவின் ஆத­ர­வுடன், பின்­பு­லத்­துடன் தான் ஐ.தே.க செயற்­ப­டு­கி­றது என்ற குற்­றச்­சாட்டை தொடர்ச்­சி­யாக முன்­வைத்து வரு­கி­றது.

ஆனால், ஆச்­ச­ரியம் என்­ன­வென்றால், கோத்­தா­பய ராஜபக் ஷவை கள­மி­றக்­கு­வ­தற்கு அமெ­ரிக்­காவே பச்சைக் கொடி காண்­பித்­தது என்றும், அவ­ருக்கு அமெ­ரிக்கா இர­க­சிய ஆத­ரவு கொடுக்­கி­றது என்றும், நம்­பு­கி­ற­வர்கள் அதிகம்.

அமெ­ரிக்க குடி­யு­ரிமை நீக்கம், அங்கு நடக்­கின்ற வழக்கு ஆகி­ய­வற்றில் இருந்து கோத்­தா­பய ராஜபக் ஷ இல­கு­வாக விடு­பட்டுக் கொண்­டதே அவ்­வா­றான சந்­தே­கங்­க­ளுக்கு முக்­கி­ய­மான காரணம்.

ஆனால், கோத்­தா­பய ராஜபக் ஷ தரப்போ, அமெ­ரிக்­கா­வுடன் அத்­த­கைய உற­வுகள் இருப்­ப­தாக காட்டிக் கொள்­வதை தவிர்க்­கி­றது,

கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஆத­ரவு கொடுக்கும் இட­து­சாரி சக்­திகள் மற்றும் தம்மை இட­து­சா­ரி­க­ளாக காட்டிக் கொள்ளும், கடும்­போக்கு சக்­தி­களும் அமெ­ரிக்­காவை கடு­மை­யாக வெறுப்­பவை.

அவர்­களைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும், சிங்­கள மக்கள் மத்­தியில் உள்ள அமெ­ரிக்க, இந்­தியா தொடர்­பான அச்சம் மற்றும் வெறுப்பை தமக்கு ஆத­ர­வான வாக்­கு­க­ளாக மாற்றிக் கொள்­வ­தற்­கா­கவும், கோத்­தா­பய ராஜபக் ஷ தரப்பு அமெ­ரிக்க விரோத நிலைப்­பாட்டை அவ்­வப்­போது வெளிப்­ப­டுத்தி வரு­கி­றது.

அமெ­ரிக்க தூத­ரக அதி­காரி ஒருவர் ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து நாட்டின் அர­சி­யல்­வா­திகள் சில­ருடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளார் என்றும் அது பிரச்­சி­னைக்­கு­ரிய விடயம் என்றும் பொது­ஜன பெர­மு­னவின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான செஹான் சேம­சிங்க கடந்த வாரம் ஒரு செய்­தி­யாளர் சந்­திப்பில், கூறி­யி­ருந்தார்.

ஆனால், அமெ­ரிக்­காவில் இருந்து வந்­தி­ருந்த குடி­ய­ரசுக் கட்.சி, ஜன­நா­யக கட்சி ஆகி­ய­வற்றின் பிர­தி­நி­தி­களை உள்­ள­டக்­கிய குழு­வொன்று இலங்கை நிலை­வரம், தேர்தல் நடக்­க­வுள்ள சூழல் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து மஹிந்த ராஜபக் ஷவுடன் பேசி­யி­ருந்­தது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

ஐ.தே.க தரப்பின் வெற்­றிக்­கான வியூ­கங்­களை அமெ­ரிக்கா வகுத்துக் கொடுக்­கி­றதா என்ற சந்­தேகம், கோத்­தா­பய ராஜபக் ஷ தரப்­புக்கு ஏற்­பட்­டி­ருக்­கலாம்.

அதே­வேளை , அமெ­ரிக்­கா­வுடன் நேர­டி­யாக முட்டிக்கொள்ளும் வகையில், கோத்­தா­பய ராஜபக் ஷ இன்­னமும் நடந்து கொள்­ள­வில்லை என்­பது கவ­னிக்க வேண்­டி­யது.

இப்­போ­தைய நிலையில், அமெ­ரிக்­கா­வுக்கு வி.எவ்.ஏ, அக்சா உடன்­பா­டுகள் முக்­கி­ய­மா­னவை. இவற்றில் இலங்கை அர­சாங்கம் கையெ­ழுத்­திட வேண்டும், என்று எதிர்­பார்க்கும் அமெ­ரிக்கா, ஏற்­க­னவே செய்து கொள்­ளப்­பட்ட உடன்­பா­டுகள் மீறப்­ப­டாமல் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­ப­திலும் உறு­தி­யாக இருக்­கி­றது.

இந்த விட­யத்தில் கோத்­தா­பய ராஜபக் ஷ தரப்பில் இருந்தோ, சஜித் பிரே­ம­தாஸ தரப்பில் இருந்தோ, மிகத்­தெ­ளி­வான ஒரு சமிக்ஞை இன்­னமும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதே உண்மை.

இரண்டு வேட்­பா­ளர்­க­ளுமே, நாட்­டுக்கு விரோ­த­மான, நாட்டின் இறைமை சுதந்­திரம் ஆகி­ய­வற்­றுக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடிய எந்­த­வொரு உடன்­பாட்­டிலும் கைச்­சாத்­திடப் போவ­தில்லை என்றே கூறி­யுள்­ளனர்.

நாட்டிற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தாத எந்­த­வொரு இரு­த­ரப்பு உடன்­பா­டு­க­ளையும் பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்வோம் என்றும் அவர்கள் கூறி­யி­ருக்­கி­றார்கள்.

இது அமெ­ரிக்கா எதிர்­பார்க்கும் குறைந்த­பட்ச நம்­பிக்­கையை உறுதி செய்­ய­வில்லை.

அதே­வேளை, கோத்­தா­பய ராஜபக் ஷவின் பேச்­சாளர் கெஹ­லிய ரம்­புக்­வெல, தமது தரப்பு ஆட்­சிக்கு வந்தால், தற்­போ­தைய அர­சாங்கம் செய்து கொண்ட நாட்­டுக்கு விரோ­த­மான உடன்­பா­டுகள் மீளாய்வு செய்­யப்­படும் என்று கூறி­யி­ருந்தார்.

இது ஏற்­க­னவே இலங்­கை­யுடன் கைச்­சாத்­திட்­டுள்ள அக்சா உடன்­பாடும் மீளாய்வு செய்­யப்­ப­டுமா என்ற கேள்­வியை அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம்.

ஆனால் அமெ­ரிக்­கா­வுடன் அக்சா உடன்­பாட்டில் முதன்­மு­தலில் கையெ­ழுத்­திட்­டது கோத்­தா­பய ராஜபக் ஷ தான் என்­பதும், அந்த உடன்­பாடு சில உட்­சேர்ப்­பு­க­ளுடன் தான் 2017இல் புதுப்­பிக்­கப்­பட்­டது என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த தேர்­தலில் சர்­வ­தேச சமூகம் தமக்கு ஆத­ர­வாக இருக்­கி­றது என்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள ஐ.தே.க முனை­கி­றது.

கடந்த வாரம் கொழும்பில் உள்ள 34 நாடு­களின் தூது­வர்கள், இரா­ஜ­தந்­தி­ரி­களை அழைத்து தமது ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தா­ஸவை அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்தார் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

இங்கு உரை­யாற்­றிய சஜித் பிரே­ம­தாஸ, எல்லா நாடு­க­ளு­டனும் நட்­பு­றவை பேணு­வதில் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாஸ சர்வதேச சமூகத்துடன் ஊடாடக் கூடிய ஒருவர் அல்ல என்ற கருத்து இருந்து வந்தது. அதனை உடைக்கும் வகையில், முதன்முதலில் சர்வதேச இராஜதந்திரிகளை ஐ.தே.க தரப்பு அணுகியிருக்கிறது.

கோத்தாபய ராஜபக் ஷ தரப்பு இன்னமும், இந்தப் பக்கத்தை கையாள ஆரம்பிக்கவில்லை.

கோத்தாபய ராஜபக் ஷ தொடர்பாக சர்வதேச சமூகத்திடம் நிறையவே நம்பிக்கையீனங்களும், சந்தேகங்களும், இருக்கின்ற நிலையில், இந்த விடயத்தில் அவர்களே முந்திக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், இந்த தேர்தலில் அமெரிக்க விரோத நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வெற்றியை எட்டவே, கோத்தா தரப்பு முனைகிறது.

அமெரிக்காவோ, இந்தியாவோ, சீனாவோ இந்த தேர்தலில் தலையிடுகின்றனவோ இல்லையோ, அதனையே ஒரு பிரசாரமாக்கி தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதில் கோத்தாபய ராஜபக் ஷ தரப்பு உறுதியாக இருக்கிறது.

இவ்வாறான நிலையில் சர்வதேச சமூகத்துடன் சமமான உறவாடல்களை பேணிக் கொள்வது அவர்களுக்கு சிரமமானதாகவே இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 10 =

*