;
Athirady Tamil News

எமது ஆட்­சியில் தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுப்பேன்.!! (கட்டுரை)

0

நாட்டின் சகல மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் எமது ஆட்­சியில் தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுப்பேன். இந்த நாட்டின் தேசிய பாது­காப்­புக்­கான பொறுப்பை பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவின் கைக­ளி­லேயே ஒப்­ப­டைப்பேன் என்று புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

புதிய ஜனநா­யக முன்­ன­ணியின் முத­லா­வது ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரக்­கூட்டம் நேற்று காலி முகத்­தி­டலில் நடை­பெற்­றது. இலட்­சக்­க­ணக்­கான மக்கள் கலந்­து­கொண்ட இந்தக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே சஜித் பிரே­ம­தாச இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்­டி­னையும் மக்­க­ளையும் வெற்­றி­கொள்ளும் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த மக்கள் கூட்­டத்தில் இலட்­சக்­க­ணக்­கான மக்கள் கலந்­து­கொண்­ட­மைக்கு எனது நன்­றி­களை தெரி­விக்­கின்றேன். எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் இந்த நாட்டு மக்கள் புதிய பயணம் ஒன்­றினை உரு­வாக்க பங்­க­ளிப்பு வழங்கும் வேளையில் இந்த நாட்டில் பாகு­பா­டின்றி இந்த நாட்டில் சகல மக்­க­ளுக்கும் செய்­நன்­றியை வெளிப்­ப­டுத்­துவேன். நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்பு பொது­வா­னதா அல்­லது ஒரு குடும்பம் சார்ந்­ததா? நாட்­டினை கட்­டி­யெ­ழுப்பும் தலை­வரா அல்­லது நாட்­டினை நாச­மாக்கும் தலை­மைத்­துவம் வேண்­டுமா? குடும்ப ஆட்சி, அரா­ஜக ஆட்சி ஒன்­றினை கொண்டு செல்லும் தலை­மைத்­துவம் இந்த நாட்­டுக்கு அவ­சி­ய­மில்லை.

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் பொது மக்­களின் ஒட்­டு­மொத்த குர­லு­மாக நாம் வெற்றி பெறுவோம். இந்த புதிய யுகத்தில் புதி­தாக சிந்­திக்க நாம் பழ­கிக்­கொள்ள வேண்டும். உல­குடன் போட்­டி­யிட்டு முதல்­தர நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைக்க வேண்டும். அதற்­கான புதிய சிந்­தனை, புதிய தொழி­நுட்பம், புதிய இலக்­கு­க­ளுடன் நாம் முன்­னோக்கி செல்லும் நாட்­டினை நாம் உரு­வாக்­கிக்­கொள்ள வேண்டும்.

மனித உரி­மை­களை பலப்­ப­டுத்தும் நாடா­கவும், உற்­பத்­தி­களை உரு­வாக்கும் நாடா­கவும், ஏற்­று­மதி, இறக்­கு­ம­தி­களை கொண்டு குறிப்­பாக ஏற்­று­ம­தியில் அதிக அக்­கறை செலுத்தும் நாடா­கவும், நாட்­டுக்கு வளர்ச்­சியை உரு­வாக்கி சரி­யான இடத்தை மக்­க­ளுக்கு கொடுக்கும் நாடா­கவும் , சகல துறை­யு­டனும் போட்­டி­யிடும் விவ­சாய, மீனவ, நடுத்­தர தொழி­லா­ளர்­களை பலப்­ப­டுத்தும் நாட்­டினை நாம் உரு­வாக்­குவோம்.

எமது நாட்டின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் போராட்­டத்தில் ஒரு குடும்­பத்தின் தீர்­மா­னத்தை மட்டும் கருத்தில் கொள்­ளக்­கூ­டாது. இந்த நாட்­டுக்­காக சிந்­திக்கும் எமது இளம் சமூகம், நாட்­டுக்­காக வேலை­செய்யும் தொழி­லாளர், பெண்கள் என அனை­வ­ரையும் சிந்­தித்து அவர்­களே இந்த நாட்டின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்க இட­ம­ளிக்க வேண்டும். அதை விடுத்து ஒரு குடும்பம் மட்­டுமே இந்த நாட்டின் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்க இட­ம­ளிக்­கக்­கூ­டாது. இது­வரை கால­மாக நாட்டில் இடம்­பெ­றாத அபி­வி­ருத்­தியை எனது ஆட்­சியில் செய்து முடிக்­கவே நான் விரும்­பு­கின்றேன்.

அதற்­கான வேலைத்­திட்­டங்­களை நான் முன்­னெ­டுத்து வரு­கின்றேன். நாம் உரு­வாக்கும் புதிய இலங்­கையில் ஊழல், மோச­டிகள், குற்­றங்கள் இருக்­காது. அரச சொத்­துக்­களை சூறை­யாட இட­ம­ளிக்க மாட்டோம். தூய்­மை­யான மக்கள் மய­மான அர­சாங்­கத்தை நாம் உரு­வாக்­குவோம். அதை விடுத்து ஊழல் வாதி­களை வைத்­துக்­கொண்டு அர­சாங்­கத்தை அமைக்க முயற்­சிக்கும் அனை­வரும் போட்­டியை கைவிட்டு வெளி­யேற வேண்டும். இல்லை என்ற கோசத்தை எமது ஆட்­சியில் நாம் இல்­லாது செய்வோம். மக்கள் எம்மை ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரு­வதே அவர்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வு­களை பெற்­று­கொ­டுபோம் என்ற நம்­பிக்­கையில் தான். அவ்­வாறு இருக்­கையில் உங்­களின் பிரச்­சி­னைகள் அனைத்­திற்கும் தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்கும் தலை­மைத்­து­வத்தை எடுக்க நான் தயா­ராக இருக்­கின்றேன்.

24 மணி­நே­ரமும் மக்­க­ளுக்கு சேவை செய்­வதை பற்­றியே நான் சிந்­திக்­கிறேன். ஒன்­றி­ணைந்த இலங்­கைக்குள் அதன் தன்­மை­களை பாது­காத்து ஜன­நா­ய­கத்தை பாது­காத்து இன மத அடை­யா­ளங்­க­ளுடன் முழு­மை­யாக பாது­காப்போம். அறிவு மிக்க, தொழி­நுட்ப அறிவும், பகுத்­த­றிவும் கொண்ட இளம் சமூ­கத்தை முன்­னோக்கி பய­ணிக்க இட­ம­ளித்து தொழி­நுட்ப அறி­வுசார் இளம் சமூ­கத்­துக்கு அதிக இடம் கொடுப்­பதை எமது அர­சாங்கம் முன்­னெ­டுக்கும். அத்­துடன் இளம் சமு­தா­யத்­திற்­காக உடன்­ப­டிக்கை ஒன்­றினை செய்வோம். இதில் இளம் சமூ­கத்தை பாது­காப்­பது மட்டும் அல்­லாது கடன் உத­விகள் போன்­ற­வற்­றையும் உரு­வாக்­கிக்­கொ­டுப்போம்.

வெளி­நா­டு­களில் வேலை செய்யும் எமது பெண்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். எமது ஆட்­சியில் பெண்­களின் உரி­மையை நாம் பாது­காத்­துள்ளோம். ஆகவே பெண்­களின் உரி­மை­களை மேலும் பலப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு வழங்க வேண்­டிய பொரு­ளா­தார, சமூக, உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுத்து அவர்­களை பலப்­ப­டுத்­துவோம். அ விவ­சா­யி­க­ளுக்கு ஏற்ற சலு­கை­களை கொடுக்க வேண்டும். இதில் ஒவ்­வொரு விவ­சாய குடும்­பத்­துக்கும் ஜனா­தி­பதி செயற்­குழு ஒன்றின் மூல­மாக சகல சலு­கை­க­ளையும் பெற்­றுக்­கொ­டுப்போம்.

தேசிய பாது­காப்பில் பல­வீனம் இருக்­கின்­றது என்றால் அதில் முதல் பொறுப்பை எடுக்க வேண்­டி­யது யுத்­ததை செய்து முடித்­த­வர்­களே ஆவர். அவர்­களே தியாகம் செய்து யுத்­தத்தை வெற்றி கொண்­டனர். ஆகவே தேசிய பாது­காப்­புக்­கான முழு­மை­யான பொறுப்­பையும் வீரர்­களே கையாள வேண்டும். அதற்­க­மைய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு இந்த நாட்டின் பாது­காப்­புக்­கான பொறுப்பை எமது ஆட்­சியில் கொடுப்பேன். அவர் யுத்­தத்தை களத்தில் இருந்து சந்­தித்த நபர்.அவர் வெறும் பொம்மை மனிதர் அல்ல யுத்­தத்தை வெற்றி கொண்ட உண்­மை­யான வீரர். ஆனால் அவ­ருக்கு கடந்த காலங்­களில் நடந்த அநீ­திகள் என்­ன­வென்­பது தெரிந்­த­தே­யாகும். ஆனால் எமது ஆட்­சியில் நாம் அவ்­வாறு செய்­ய­வில்லை. எமது ஆட்­சியில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு நீதி­மன்றம் மூல­மா­கவே தண­ட­னையை பெற்­றுக்­கொ­டுப்போம். எவ்­வா­றான பயங்­க­ர­வா­தத்­திற்கும் இந்த நாட்டில் இடம் கொடுக்­காது அனைத்­தையும் முற்­றாக ஒழிப்பேன்.

வேலை செய்யும் நபர்­களை இணைத்­துக்­கொண்டு அவர்­க­ளுடன் நாட்­டினை முன்­னெ­டுத்து செல்வேன். சரத் பொன்­சே­கா­வுக்கு வெறு­மனே பயங்­க­ர­வ­தத்தை ஒழிக்கும் வேலை மட்டும் அல்ல இந்த நாட்டில் போதை­பொருள் வியா­பா­ரத்தை ஒழிக்கும் கட­மையும் உள்­ளது. இந்த நாட்டில் கொண்­டு­வ­ரப்­படும் போதைப்­பொருள் வியா­பாரம் மூல­மாக இளம் சமூ­கமே நாச­மா­கின்­றது. சிறை­களில் கூட இன்று இளை­ஞர்கள் இந்த வியா­பா­ரத்­தையே செய்­கின்­றனர். இவ்­வா­றான நபர்­களை கண்­ட­றிந்து அவர்­க­ளுக்கு உய­ரிய தண்­ட­னையை பெற்­றுக்­கொ­டுப்பேன்.

இந்த நாட்­டினை பல­ப­டுத்தும் பல­மான பொரு­ளா­தா­ரத்தை கட்டி எழுப்பும் நபர்­க­ளுக்கு தகு­தி­யான அறிவு மிக்க நபர்­க­ளுக்கு நாட்­டினை கட்­டி­யெ­ழுப்பும் பொறுப்­பினை வழங்­குவோம். அதன் மூல­மாக பொரு­ளா­தார கொள்­கையில் அவர்­களின் முழு­மை­யான தகுதி திற­மைக்கு அமைய புதிய பொரு­ளா­தார பய­ணத்தை உரு­வாக்க முடியும். வறுமை ஒழிப்­புக்­கான வேலைத்­திட்­டத்தை மேலும் பலப்­ப­டுத்­துவோம்.

சமுர்த்தி வேலைத்­திட்­டத்தை மேலும் பலப்­ப­டுத்தி அதற்கு அப்­பாலும் வறு­மையை ஒழிக்கும் புதிய புதிய வேலைத்­திட்­டங்­களை உரு­வாக்கி மக்­களை பாது­காப்போம். இதற்கு மேலும் நாம் வெற்­றியை நோக்கி பய­ணிக்க வேண்டும் என்றால் புதிய சிந்­தனை, புதிய வேலைத்­திட்டம், புதிய தலை­மைத்­து­வத்தின் கீழ்தான் பய­ணிக்க வேண்டும். இதில் புதிய யுகத்­துக்கு முன்­னு­ரிமை வழங்கி மாற்­றத்தை உரு­வாக்க வேண்டும். எமது எதிர்­கால பய­ணத்தில் புதிய இலங்­கையை நாம் கட்­டி­யெ­ழுப்­புவோம். பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். எனது தந்தை தான் இந்த நாட்டில் பெளத்த சாசன அமைச்சை உரு­வாக்­கினார். அடுத்த எமது ஆட்­சிக்­கா­லத்தில் சகல விஹா­ரை­க­ளிலும் அற­நெறி பாட­சா­லையை உரு­வாக்கி பெளத்த கொள்­கையை வளர்ப்போம்.

மீண்டும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்ட, காணமால் ஆக்­கப்­பட்ட, தண்ணீர் கேட்ட மக்­களை சுட்­டுக்­கொன்ற , மக்­களை அடக்­கு­மு­றைக்கு உள்­ள­டக்­கிய, ஆயு­தங்­களில் பேசிய யுகம் மீண்டும் வேண்­டுமா அல்­லது நாட்­டினை புதிய திசைக்கு கொண்­டு­செல்லும் மக்கள் நலன் சார் மக்கள் ஆட்சியை உருவாக்கும் எமது பயணத்தில் ஆட்சி வேண்டுமா என்பதை மக்களே தீர்மானியுங்கள்.

குடும்ப அபிவிருத்தியா நாட்டின் அபிவிருத்தியா உங்களுக்கு வேண்டும். நான் சோம்பேறித்தனமான அரசியல் செய்ய மாட்டேன், சகல தேர்தல் தொகுதிகளுக்கும் சென்று சகல மக்களையும் சந்தித்து எனது கருத்துக்களை முன்வைப்பேன். நான் கூறுவது செவிமடுத்து நீங்களே ஒரு தீர்மானம் எடுங்கள். எனது மக்களின் ஆதரவில் எமது அரசாங்கத்தை நான் உருவாக்கிக்காட்டுவேன். நான் கடுமையான பயணத்தை ஆரம்பித்து இன்று இந்த இடத்துக்கு வந்துள்ளேன். இதில் பல தியாகங்களை செய்த தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மனமார்ந்த நன்றிகளை கூறுகின்றேன். இந்த பயணம் இன்னும் முடியவில்லை. இதில் நாட்டினை வெற்றிகொள்ளும் பயணித்தை நாம் முன்னெடுப்போம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + twelve =

*