;
Athirady Tamil News

ஒற்றுமைப்பட்டமை பெரிய விடயம்!! (கட்டுரை)

0

தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஜனாதி பதித் தேர்தல் தொடர்பில் ஆராய்ந்தமை வர வேற்கப்பட வேண்டிய விடயம்.

ஜனதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு குறித்த தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் அனைத் துத் தமிழ் அரசியல் கட்சிகளுடனும் கலந்து ரையாடி ஒரு பொது உடன்பாட்டை ஏற்படுத்துவது என்ற தீர்மானத்தை தமிழ் மக்கள் பேரவை எடுத்ததுடன் அதனை அறிவித்து மிருந்தது.

தமிழ் மக்கள் பேரவையால் எடுக்கப்பட்ட மேற்போந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற் காக சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், துறைசார் வல்லுநர்கள் அடங்கிய சுயாதீனக்குழு வொன்றையும் தமிழ் மக்கள் பேரவை அமைத் திருந்தது.
சுயாதீனக்குழுவானது தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் அனைத்துத் தமிழ் கட்சி களையும் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் அனை வரையும் ஒரே மேசையில் இருத்தி ஒரு பொது உடன்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியபோது,

அதேவிடயத்தை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியமும் முன்னெடுத்திருந்தது.
இந்நிலையில் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றாகச் சந்திக்கின்ற கூட்டங் களில் சுயாதீனக்குழுவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தோடு இணைந்து தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஒரு பொதுவான உடன்பாட்டை ஏற்படுத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளது.

இவ்வெற்றியானது சாதனைக்குரிய விட யம் என்பதைக் கூறித்தானாக வேண்டும்.
தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் ஆறு அரசியல் கட்சிகள் ஒன்றாகப் பங்குபற்றிய போதிலும் தமிழ் மக்கள் சார்பில் பிரதானமான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக் கின்ற கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்ட போதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒப்பமிடவில்லை என்பது கவலைக்குரியது.

ஆறு தமிழ்க் கட்சிகளும் கூட்டாக ஒப்ப மிட்டிருந்தால் அது எங்கள் தமிழினத்தின் பலமான ஒற்றுமையாக இருந்திருக்கும்.
எனினும் ஐந்து அரசியல் கட்சிகள் ஒப்பமிட் டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யுடன் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்பது நம் தாழ்மையான கருத்து.

எம்மைப் பொறுத்தவரை நாங்கள் எடுக் கின்ற அத்தனை விடயங்களும் எங்கள் தமிழ் இனம் வாழ வேண்டும். எங்கள் தமிழ் இனம் படுகின்ற துன்பத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதுதான்.

எனவே எவ்வளவு தூரம் இறங்கிச் சென்று, விட்டுக்கொடுத்து அனைவரையும் அரவணை துச் செல்ல வேண்டும். இப்போதிருக்கின்ற மிக இக்கட்டான சூழ்நிலையில் தமிழினம் ஒற்று மைப்படுவதுதான் ஒரே வழி.

தமிழினத்தின் ஒற்றுமை என்பது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக்கூடாக எழுகை பெறவேண்டும்.
எனவே நல்ல முயற்சி நடந்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் விதைப்பு ஏதோவொரு வகையில் கருக்கட்டியுள்ளது. இனி ஒற்று மைப்பலத்தோடு முயற்சிகளை முன்னெடுப்போம்.
நல்ல சிந்தனைகள், நல்ல எண்ணங்கள் நிச்சயம் வெற்றியைத் தரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*