;
Athirady Tamil News

பொது இணக்க ஆவணம் பேரத்­துக்கு உத­வுமா? (கட்டுரை)

0

யாழ்ப்­பா­ணத்தில் ஐந்து நாட்­க­ளாக ஆறு தமிழ்க் கட்­சி­க­ளுடன் நடத்­திய தொடர் பேச்­சுக்­களை அடுத்து, யாழ். மற்றும் கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியப் பிர­தி­நி­தி­களால், தயா­ரிக்­கப்­பட்ட ஒரு பொது இணக்­கப்­பாட்டு ஆவ­ணத்தில், ஐந்து கட்­சி­களின் தலை­வர்கள் ஒப்­ப­மிட்­டுள்­ளனர்.

தமிழர் அர­சியல் வர­லாற்றில் கூட்டு அல்­லது பொது இணக்க உடன்­பாடு கைச்­சாத்­தி­டப்­பட்ட குறிப்­பி­டத்­தக்க நிகழ்­வு­களில் ஒன்­றா­கவே, இதுவும் பார்க்­கப்­ப­டு­கி­றது.

1972ஆம் ஆண்டு, தமிழ் காங்­கிரஸ், தமி­ழ­ரசுக் கட்சி, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஆகி­ய­வற்றை இணைத்து, தமிழர் ஐக்­கிய விடு­தலை முன்­னணி என்ற தமிழர் விடு­தலைக் கூட்­டணி உரு­வாக்­கப்­பட்­டது.

ஈழத் தமிழர் அர­சி­யலில், தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் வகி­பா­கத்தை குறைத்து மதிப்­பிட முடி­யாது.

இந்தக் கூட்­டி­லி­ருந்து தமிழ் காங்­கிரஸ் மற்றும் இ.தொ.கா என்­பன வில­கி­யதன் பின்­னரும், 2004 வரை தமிழர் விடு­தலைக் கூட்­டணி வலி­மை­மிக்க ஒன்­றா­கவே இருந்­தது.

அதற்குப் பின்னர், முக்­கி­யத்­துவம் மிக்க ஒரு கூட்டு உடன்­பாடு ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த நான்கு தமிழ் இயக்­கங்­க­ளுக்கு இடையில் செய்து கொள்­ளப்­பட்­டது.

விடு­தலைப் புலிகள் சார்பில் வே.பிர­பா­கரன், ரெலோ சார்பில் சிறி­ச­பா­ரத்­தினம், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் பத்­ம­நாபா, ஈரோஸ் சார்பில் வே.பால­கு­மாரன் ஆகிய நால்­வரும் இணைந்து பொது இணக்­கப்­பாட்­டுடன் செயற்­ப­டு­வது குறித்து ஒரு உடன்­பாட்டில் கைச்­சாத்­திட்­டனர்.

அப்­போது புளொட்டும் ஏனைய சிறிய இயக்­கங்­களும் அந்தக் கூட்­டுக்குள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை.

நான்கு இயக்­கங்­களின் கூட்டு உரு­வா­னதும், ஆயுதப் போராட்­டத்தில் பல­மா­ன­தொரு நிலையை எட்ட முடியும் என்றும் தமிழ் மக்கள் நம்­பினர்.

ஆனால் , குறு­கிய காலத்­துக்­குள்­ளா­கவே அந்தக் கூட்டு முறிந்து போனது. இன்று அந்தக் கூட்டு உடன்­பாட்டில் கையெ­ழுத்­திட்ட நான்கு இயக்­கங்­களின் தலை­வர்­க­ளுமே உயி­ருடன் இல்லை.

இதற்குப் பின்னர், தமிழர் அர­சி­யலில் முக்­கி­யத்­துவம் வாய்ந்த கூட்டு உடன்­பாடு என்றால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்­கிய உடன்­பாடு தான்.

தமிழர் விடு­தலைக் கூட்­டணி தமிழ் காங்­கிரஸ் சார்பில், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்­சிகள் இணைந்து இந்த கூட்டை உரு­வாக்­கின.

விடு­தலைப் புலி­களின் ஆசியும் இருந்­ததால் இந்தக் கூட்டு, இன்று வரை தமிழ் மக்­களால் ஆத­ரிக்­கப்­பட்டு, வலுப்­பெற்ற ஒன்­றா­கவே இருக்­கி­றது.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருந்து, தமிழ் காங்­கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் விடு­தலைக் கூட்­டணி ஆகி­யன வெளி­யேறி விட, தமி­ழ­ரசுக் கட்சி, ரெலோ, புளொட் என மூன்று கட்­சி­களின் கூட்­டாக இன்­னமும் தொடர்­கி­றது. இதற்குப் பின்னர், கடந்த வாரம் கைச்­சாத்­தி­டப்­பட்ட பொது இணக்க உடன்­பாடு தான், முக்­கி­ய­மான ஒன்­றாக இருக்­கி­றது. இருக்கப் போகி­றது. இந்த இணக்­கப்­பாடு ஜனா­தி­பதித் தேர்­தலை முன்­வைத்து உரு­வாக்­கப்­பட்­ட­தாக இருந்­தாலும், அதற்­கா­கவே உரு­வாக்­கப்­பட்­ட­தாக கூறப்­பட்­டி­ருந்­தாலும், அதற்கு அப்பால் இந்தக் கூட்டு நிலை பெறு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ளன.

ஐந்து தமிழ் தேசிய அர­சியல் கட்­சிகள் ஒன்­றி­ணைந்­தி­ருப்­பது இந்தக் கால­கட்­டத்தில் முக்­கி­ய­மா­னது. இது தேர்­த­லுக்­கான கூட்­டாக இல்லா விட்­டாலும், கொள்கை அடிப்­ப­டையில் தமிழ் அர­சியல் கட்­சிகள் ஒரு­மித்த நிலைப்­பாட்­டுடன் செயற்­ப­டு­வ­தற்­கான தரு­ணத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.

இந்த ஜனா­தி­பதித் தேர்­தலை பேரம் பேசும் ஒன்­றாக மாற்­றலாம் என்று தமிழர் தரப்­புகள் கரு­தி­யி­ருந்­தன. அதற்­கான முனைப்­பு­க­ளிலும் இறங்­கின.

ஒரு பக்­கத்தில் சிங்­கள வாக்­கு­களால் ஜனா­தி­ப­தி­யாகி விடலாம் என்று நம்பும், கோத்­தா­பய ராஜபக் ஷவும் சரி, இன்­னொரு பக்­கத்தில் சிங்­கள மக்­களின் வாக்­கு­களால் தோற்றுப் போய் விடக்­கூ­டாது என்று கரு­து­கின்ற சஜித் பிரே­ம­தா­ஸவும், சரி, தமிழர் தரப்­புடன் ஆரோக்­கி­ய­மான கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட விரும்­ப­வில்லை.

தமக்­கான ஆத­ரவைப் பெற்றுக் கொள்ள அவர்கள் எத்­த­னித்­தனர், எத்­த­னிக்­கின்­ற­னரே தவிர, தமிழ் மக்­களின் கோரிக்­கைகள் தொடர்­பான எந்த உறு­திப்­பாட்­டையும் கொடுக்கத் தயா­ராக இல்லை.

அதா­வது எந்தப் பேரத்­துக்கோ, உடன்­பாட்­டுக்கோ அவர்கள் தயா­ரில்லை.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் சரி, ஏனைய தரப்­பு­களும் சரி, தேர்தல் அறிக்­கைகள் வந்த பின்னர் பார்க்­கலாம் என்று கையைப் பிசைந்து கொண்டு, நின்ற தரு­ணத்தில் தான், இந்தப் பொது இணக்­கப்­பாட்டு முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. தேர்­தலைப் புறக்­க­ணிப்­பதை விரும்­பாத – ஏதா­வ­தொரு வழியில் இந்த தேர்­தலில் தமிழ் மக்­களின் பலத்தை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்று கருதும் தமிழ் அர­சியல் கட்­சிகள், இந்த பொது இணக்­கப்­பாட்­டுக்கு உடன்­பட்­டி­ருக்­கின்­றன. 13 அம்­சங்­களைக் கொண்ட ஒரு உடன்­பாட்டு ஆவணம் தயா­ரிக்­கப்­பட்டு கையெ­ழுத்­தி­டப்­பட்­டி­ருக்­கி­றது. அந்த ஆவ­ணத்தை கோத்­தா­பய ராஜ­பக் ஷ, சஜித் பிரே­ம­தாஸ ஆகி­யோ­ரி­டமும், சர்­வ­தேச இரா­ஜ­தந்­தி­ரி­க­ளி­டமும் முன்­வைக்கப் போவ­தாக இந்தக் கட்­சிகள் முடி­வெ­டுத்­தி­ருக்­கின்­றன.

இந்த ஆவணம், தமிழ் தேசம், அதன் இறைமை, தமிழ் மக்­களின் சுய­நிர்­ணய உரிமை ஆகி­ய­வற்றை அங்­கீ­க­ரிப்­பது, சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான, அர­சியல் தீர்வு, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்ட நீக்கம் உள்­ளிட்ட தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­களை முன்­னி­லைப்­ப­டுத்தி தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஆவ­ணத்தில் இடம்­பெற்­றுள்ள விட­யங்­களை தமது வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ ஏற்றுக் கொள்­ள­மாட்டார் என்று விமல் வீர­வன்ச கூறி­யி­ருக்­கிறார்.

இதற்கு ஐ.தே.க வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாஸ பதி­ல­ளிப்பார் என்று அமைச்சர் மங்­கள சம­ர­வீர கூறி­யி­ருக்­கிறார்.

ஆனால், இரண்டு பேருமே இந்த ஆவ­ணத்தை ஏற்றுக் கொள்ளப் போவ­தில்லை.

ஏனென்றால், அவர்கள் தமிழ் மக்­களின் தேசத்தை, இறை­மையை, சுய­நிர்­ணய உரி­மையை ஏற்றுக் கொள்ளத் தயா­ராக இல்­லா­த­வர்கள். சமஷ்டித் தீர்­வுக்கு இணங்கத் தயா­ராக இல்­லா­த­வர்கள்.

அப்­ப­டி­யான நிலையில் இந்த ஆவ­ணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்­வார்கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது. இதனை எந்த பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை என்­பது இந்த ஆவ­ணத்தில் ஒப்­ப­மிட்­டுள்ள அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கும் நன்­றா­கவே தெரியும்.

அவ்­வாறு ஏற்றுக் கொண்டால், அந்த வேட்­பா­ளரால் சிங்­கள மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள முடி­யாது. சிங்­கள மக்­களின் அர­சியல் அவ்­வாறு தான் வளர்க்­கப்­பட்­டுள்­ளது. அது தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான ஒன்­றா­கவே கூர்­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில் இத்­த­கை­ய­தொரு ஆவ­ணத்தை ஏற்­றுக்­கொண்டு, தமிழ்க் கட்­சி­களின் ஆத­ரவைப் பெற்று சிங்­கள மக்­களால் தோற்­க­டிக்­கப்­ப­டு­வதை எந்த வேட்­பா­ளரும் விரும்­ப­மாட்டார். எனவே, இதை ஜனா­தி­பதித் தேர்­தலில் பேரத்­துக்­கான ஒரு ஆவ­ண­மாக கருத முடி­யாது.

அவ்­வா­றாயின் எதற்­காக இந்த ஆவ­ணத்தை அவர்கள் தயா­ரித்து ஒப்­ப­மிட்­டார்கள் என்ற கேள்வி இருக்­கி­றது. இது தனியே ஜனா­தி­பதி தேர்­தலை முன்­வைத்து தயா­ரிக்­கப்­பட்ட ஆவணம் அல்ல.

தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள், அபி­லா­ஷைகள் தொடர்­பாக தமிழ் கட்­சிகள் மத்­தியில் ஒரு பொது­வான நிலைப்­பாட்டை – இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான ஒரு அடிப்­படை உடன்­பா­டாகத் தான் இதனைக் கருத வேண்டும்.

தமிழ் மக்­களின் அடிப்­படை அர­சியல் அபி­லா­ஷைகள், உரி­மைகள், கோரிக்­கை­களில் இருந்து தமிழ்க் கட்­சிகள் விலகிச் செல்­கின்­றன, விலகிச் செயற்­ப­டு­கின்­றன என்ற குற்­றச்­சாட்­டுகள் அண்­மைக்­கா­லத்தில் அடிக்­கடி வெளி­வந்து கொண்­டி­ருந்­தன.

இவ்­வா­றான நிலையில், தமிழ்க் கட்­சி­களை ஒரே கோட்டில் நிற்க வைப்­ப­தற்கும், தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் விட­யத்தில், ஒரு நிலைப்­பாட்டில் செயற்­ப­டு­வ­தற்கும், தமக்­கி­டை­யி­லான விமர்­ச­னங்­களைத் தவிர்த்துக் கொள்­வ­தற்கும், இந்த பொது இணக்­கப்­பாட்டு ஆவணம் உதவும் என்றே கூறலாம்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வ­ரையில், இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுடன் நடத்­திய பேச்­சுக்­களும், சரி­யாக முன்­ன­க­ர­வில்லை. இந்­த­நி­லையில் எத்­த­கைய முடிவை எடுப்­பது என்று குழம்பிப் போயி­ருந்­தது.

இன்­னொரு பக்கம் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வையும், தமிழ் மக்கள் கூட்­ட­ணி­யையும் யாரும் கண்­டு­கொள்­ள­வில்லை. இதனால் தமது அர­சியல் பலம் குறைந்து விடுமோ என்ற பயம் அவர்­க­ளுக்குள் நிச்­சயம் இருந்­தி­ருக்கும்.

இவ்­வா­றான நிலையில், ஐந்து தமிழ்க் கட்­சி­களும் ஒரு நிலைப்­பாட்­டுக்கு வந்­தி­ருப்­பதால், எடுக்­கப்­படும் முடிவு குறித்த விமர்­ச­னங்கள் ஒரு­வரை ஒருவர் பாதிக்­காமல் இருக்கக் கூடும்.

இந்த உடன்­பாட்­டுக்குப் பின்னர் கருத்து வெளி­யிட்ட கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன், வேட்­பா­ளர்­க­ளு­டனும், வெளி­நாட்டு தூது­வர்­க­ளு­டனும் இனி, ஐந்து கட்­சி­களும் இணைந்தே பேச்சு நடத்தும் என்று கூறி­யி­ருந்தார்.

கூட்­ட­மைப்பை சுமந்­தி­ரனே வழி­ந­டத்­து­கிறார், தனி­யாக முடி­வெ­டுக்­கிறார் என்ற குற்­றச்­சாட்­டுகள் இருந்து வந்த நிலையில், அவரே இப்­போது ஐந்து கட்­சி­களும் பேசும் என்று கூறி­யி­ருப்­பது ஒரு திருப்பம் தான்.

அவர் தனது நிலைப்­பாட்டில் இருந்து இறங்கி ஏனைய கட்­சி­க­ளுக்கும் வழிவிட வேண்டிய நிலையை உணர்ந்திருக்கிறார் போலத் தெரிகிறது.

அதைவிட, விக்னேஸ்வரன் – சுமந்திரன் இடையில் இருந்த இடைவெளியையும் இந்த பேச்சுக்கள் குறைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு பக்கத்தில் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவுபட்ட அணிகளின் கூட்டு என்ற விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ் மக்களின் அரசியல் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு முக்கியமான படிக்கல் தான்.

இதனை ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்படப் போகிறார்கள் என்ற சிக்கலான கேள்வி இருக்கிறது.

ஆனாலும், அதற்கு அப்பால் இந்தக் கூட்டை- பொது இணக்க உடன்பாட்டை விரிவுபடுத்தி தமிழ்த் தேசிய அரசியலை பலப்படுத்திக் கொள்ள முடியும்.

ஐந்து கட்சிகளின் தலைமைகளும் தமக்கிடையில் உள்ள கசப்புணர்வுகளையும், ஈகோவையும் ஒதுக்கி வைத்து விட்டு- அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 2 =

*