;
Athirady Tamil News

பிள்­ளை­யையும் கிள்ளி தொட்­டி­லையும் ஆட்டும் மைத்­திரி!! (கட்டுரை)

0

எம்.சி.சி உடன்­பாட்டை மஹிந்த தரப்பு எதிர்த்­த­மைக்கும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிரா­க­ரித்­த­மைக்கும் கூறிய ஒரே காரணம், இந்த உடன்­பாட்டின் மூலம் நாட்டின் காணி நிர்­வா­கத்தில் அமெ­ரிக்கா தலை­யீடு செய்யப் போகி­றது, என்­ப­தே­யாகும்.

அத்­துடன், இதனை ஒரு வெளிப்­ப­டைத்­தன்­மை­யில்­லாத இர­க­சிய இரா­ணுவ உடன்­பாடு போலவும் மஹிந்த தரப்பு தெற்­கி­லுள்ள மக்­க­ளிடம் காண்­பித்­தது. நாட்டின் இறைமை அமெ­ரிக்­கா­விடம் அடகு வைக்­கப்­படும் என்­பது போல பிர­சாரம் செய்­யப்­பட்­டது.

இன்­னமும் இரண்டு வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்­டங்­க­ளுக்கு மாத்­தி­ரமே தலைமை தாங்கக் கூடிய நிலையில் இருக்­கின்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கடந்­த­வார அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில், ஆச்­ச­ரி­யப்­படும் வகையில், எம்.சி.சி கொடை உடன்­பாட்­டுக்கு அங்­கீ­காரம் அளிக்க இணங்­கி­யி­ருக்­கிறார்.

எம்.சி.சி எனப்­படும், அமெ­ரிக்­காவின் மிலே­னியம் சவால் கூட்­டுத்­தா­பனம் இலங்­கைக்கு, 480 மில்­லியன் டொலர் கொடையை வழங்க முன்­வந்­தி­ருந்­தது.

நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவே இந்த கொடையைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக கடு­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்தார்.

இந்த கொடையைப் பயன்­ப­டுத்தி, கொழும்பில் வாகன நெரி­சலைக் கட்­டுப்­ப­டுத்தும் வகை­யி­லான போக்­கு­வ­ரத்து நிர்­வா­கத்தை மேற்­கொள்­வ­தற்கும், நாடெங்கும் வீதிக் கட்­ட­மைப்­பு­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­குமே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன், காணி­களின் நிர்­வா­கத்தை ஒழுங்­க­மைக்கும் திட்­டமும், இந்த கொடையைப் பயன்­ப­டுத்தி செயற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இந்த திட்­டங்­க­ளுக்­காக அமெ­ரிக்கா 480 மில்­லியன் டொலர் நிதியை வழங்க முன்­வந்­தி­ருந்த போதும், இதனை ஏற்­றுக்­கொள்­வ­தற்­கான உடன்­பாட்டில் கையெ­ழுத்­தி­டு­வதில் –- கடந்த ஒரு வரு­ட­ மாக இழு­பறி நிலை காணப்­பட்­டது.

எல்லா பேச்­சுக்­களும் முடிந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த உடன்­பாடு கொழும்பில் கைச்­சாத்­தி­டப்­படும் என்றும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், ஒக்­டோபர் மாதம் 26ஆம் திகதி இடம்­பெற்ற ஆட்­சிக்­க­விழ்ப்பும், அத­னை­ய­டுத்து ஏற்­பட்ட அர­சியல் குழப்­பங்­களும், திட்­ட­மிட்­ட­படி, அந்த உடன்­பாட்டை கைச்­சாத்­திட முடி­யாத நிலைக்குள் தள்­ளின.

அதற்குப் பின்னர், மீண்டும் பேச்­சுக்கள் நடத்­தப்­பட்டு, அமெ­ரிக்க அர­சாங்­கத்­தினால், இந்த கொடைக்கு அனு­மதி அளிக்­கப்­பட்ட போதும், அதனை ஏற்றுக் கொள்­வ­தற்­கான உடன்­பாட்டில் கையெ­ழுத்­தி­டு­வதில் இழு­ப­றிகள் ஏற்­பட்­டன.

இந்த இழு­ப­றி­க­ளுக்கு மிக­முக்­கி­ய­மான கார­ணி­யாக இருந்­தவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தான். அவ­ரது இந்த நிலைப்­பாட்­டுக்குப் பின்னால், இருந்­தது மஹிந்த ராஜபக் ஷ தரப்புத் தான்.

எம்.சி.சி உடன்­பாட்டில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்கும், அமெ­ரிக்­கா­வுடன் சோபா அல்­லது வி.எவ்.ஏ உடன்­பாட்டில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்கும் எதி­ராக – மஹிந்த அணி­யி­னரே கடு­மை­யான எதிர்ப்­பு­களை வெளி­யிட்டு வந்­தனர்.

விமல் வீர­வன்ச, தினேஸ் குண­வர்த்­தன, உதய கம்­மன்­பில போன்­ற­வர்கள் அமெ­ரிக்­கா­வு­ட­னான உடன்­பா­டுகள், நாட்டின் இறை­மைக்கும், சுதந்­தி­ரத்­துக்கும் ஆபத்தை விளை­விக்கும் என்று பாரா­ளு­ மன்­றத்­திலும், பொது வெளி­யிலும் எச்­ச­ரித்து வந்­தனர். மஹிந்த ராஜபக் ஷவும் கூட, அவ்­வா­றான பிர­சா­ரங்­க­ளையே முன்­னெ­டுத்து வந்தார். இதற்குப் பின்னர் தான், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, எம்.சி.சி உடன்­பாட்டை தவிர்க்க முனைந்தார்.

அமைச்­ச­ர­வையில் பல மாதங்­க­ளாக அந்த உடன்­பாட்­டுக்கு அனு­மதி கோரப்­பட்ட போதெல்லாம், அவர் இன்னும் அதனைப் பரிசீ­லிக்க வேண்டும், விரி­வாக ஆய்வு செய்ய வேண்டும், சட்­டமா அதி­ப­ரிடம் ஆலோ­சனை கேட்க வேண்டும் என்று அவர் வேண்­டு­மென்றே இழுத்­த­டித்தார்.

ஒரு கட்­டத்தில் அவர் இந்த உடன்­பாட்­டுக்கு ஒப்­புதல் அளிக்­க­மாட்டார் என ஊகங்கள் வெளி­யா­கிய நிலையில், அமெ­ரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், ஜனா­தி­பதி மைத்­தி­ரி பால சிறி­சே­னவைச் சந்­தித்து விளக்­க­ம­ளிக்க முற்­பட்டார். அதற்கும் கூட நேரத்தை ஒதுக்கிக் கொடுக்­காமல் இழுத்­த­டித்தார் ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன. இதை­ய­டுத்து, எம்.சி.சி உடன்­பாட்டில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு அமெ­ரிக்க தூதுவர் ஜனா­தி­ப­திக்கு கடிதம் ஒன்றை எழு­தி­யி­ருந்தார், பின்னர் நேரிலும் அவரைச் சந்­தித்து, உடன்­பாட்டில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்கு ஒழுங்­கு­களை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எனினும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதற்கும் இணங்­காமல், இப்­போ­தைக்கு இந்த உடன்­பாட்டில் கையெ­ழுத்­திட வேண்டாம், அடுத்த அர­சாங்கம் பத­வி­யேற்ற பின்னர் பார்த்துக் கொள்­ளலாம் என்று அமைச்­ச­ர­வையில் கூறி நழுவிக் கொண்டார்.

எம்.சி.சி உடன்­பாட்டை மஹிந்த தரப்பு எதிர்த்­த­மைக்கும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிரா­க­ரித்­த­மைக்கும் கூறிய ஒரே காரணம், இந்த உடன்­பாட்டின் மூலம் நாட்டின் காணி நிர்­வா­கத்தில் அமெ­ரிக்கா தலை­யீடு செய்யப் போகி­றது என்­ப­தே­யாகும்.

அத்­துடன், இதனை ஒரு வெளிப்­ப­டைத்­தன்­மை­யில்­லாத இர­க­சிய இரா­ணுவ உடன்­பாடு போலவும் மஹிந்த தரப்பு தெற்­கி­லுள்ள மக்­க­ளிடம் காண்­பித்­தது. நாட்டின் இறைமை அமெ­ரிக்­கா­விடம் அடகு வைக்­கப்­படும் என்­பது போல பிர­சாரம் செய்­யப்­பட்­டது.

இந்த கொடையின் மூலம், அமெ­ரிக்கா நேர­டி­யாக தலை­யீடு செய்யும் என்றும் கூறப்­பட்­டது.

ஆனால், அமெ­ரிக்­காவோ திரும்பத் திரும்ப, இந்தக் குற்­றச்­சாட்­டு­க­ளை­யெல்லாம் நிரா­க­ரித்த போதும், இந்த நிதி­யு­த­வியின் மூலம் இலங்­கையை எந்த வகை­யி­லும கட்­டுப்­ப­டுத்­தாது என்றும் வலி­யு­றுத்திக் கூறிய போதும், மஹிந்த தரப்பும் விட­வில்லை. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் அச­ர­வில்லை.

இதை­விட, சோபா உடன்­பாட்டில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்­காகத் தான் அமெ­ரிக்கா 480 மில்­லியன் டொலர் கொடையை வழங்­கு­கி­றது என்றும், இந்தக் கொடையை வைத்து, இரா­ணுவ உடன்­பாட்டில் கையெ­ழுத்­திட அழுத்தம் கொடுக்­கி­றது என்றும் கூட பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

சிங்­கள மக்கள் மத்­தியில் மிகத் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்தப் பிர­சா­ரங்­க­ளாலும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பிடி­வா­தத்­தி­னாலும், அமெ­ரிக்­காவே ஒரு கட்­டத்தில் வெறுத்துப் போய் ஒதுங்கிக் கொண்­டது.

தூங்­கு­வது போல நடிப்­ப­வர்­களை எழுப்ப முடி­யாது என்­பது போல, எம்.சி.சி உடன்­பாடு குறித்து புரி­யா­த­வர்­க­ளாக பாசாங்கு செய்யும் மஹிந்த – மைத்­திரி தரப்­பு­க­ளுடன் போராட முடி­யாது என்ற கட்­டத்தில் – அமெ­ரிக்கா இதற்­கான முயற்­சி­களில் இருந்து வில­கி­யது.

எனினும், டிசம்பர் மாதத்­துக்குள் இந்த உடன்­பாட்டில் கையெ­ழுத்­திட வேண்டும்- இல்­லையேல் மாற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்ற அறி­வு­றுத்­தலைக் கொடுத்­தி­ருந்­தது அமெ­ரிக்கா.

புதிய அர­சாங்கம் அமைந்த பின்னர், இது­பற்றி பேசி முடி­வெ­டுக்­கலாம் என்ற நிலைப்­பாட்டை அமெ­ரிக்கா எடுத்­தி­ருந்த சூழலில் தான், கடந்­த­வாரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திடீ­ரென தனது நிலைப்­பாட்டை மாற்றிக் கொண்டார்.

எம்.சி.சி உடன்­பாட்­டுக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் முடிவை மாற்றி, அதற்கு அங்­கீ­காரம் அளிக்க இணங்­கினார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திடீ­ரென ஏன் தனது முன்­னைய முடிவில் இருந்து பின்­வாங்­கினார் என்­பது- இன்­னமும் கேள்­விக்­கு­ரிய விட­ய­மா­கவே இருக்­கி­றது.

ஜப்பான் மற்றும் சிங்­கப்­பூ­ருக்­கான பய­ணத்தை முடித்துக் கொண்டு திரும்­பிய பின்னர், அவர் இந்த முடிவை எடுத்­தி­ருப்­பதன் பின்னால், ஏதேனும், இர­க­சி­யங்கள் இருக்கக் கூடும் என்றே கரு­தப்­பட்­டது.

இந்த உடன்­பாட்டில் கையெ­ழுத்­தி­டு­மாறு, மஹிந்த தரப்பில் இருந்து அவ­ருக்கு கிறீன் சிக்னல் கொடுக்­கப்­பட்­டதா என்ற சந்­தே­கங்கள் எழுந்­துள்­ளன.

பொது­ஜன பெர­மு­னவும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து கோத்­தா­பய ராஜபக் ஷவை ஆத­ரிப்­பதால், தமக்கு 56 வீத வாக்­குகள் கிடைப்­பது உறுதி என்ற நிலைப்­பாட்டில் அவர்கள் இருக்­கி­றார்கள்.

இந்­த­நி­லையில், கோத்­தா­பய ராஜபக் ஷ ஆட்­சியைக் கைப்­பற்­றினால், எம்.சி.சி கொடையை அமெ­ரிக்கா விலக்கிக் கொள்­ளவும் கூடும். அத்­த­கைய நிலை ஏற்­பட்டால், ஐ.தே.க அர­சாங்கம் கொண்டு வந்த பெரும் நிதிக் கொடையை தட்­டி­யெ­றிந்து விட்­டது என்ற அவப்­ப­ழிக்குள் சிக்க நேரிடும்.

அதை­விட, போக்­கு­வ­ரத்து மற்றும் வீதி அபி­வி­ருத்­திக்கு இந்தக் கொடை பெரிதும் உதவக் கூடி­யது, அதுவும் 2020இல் ஆரம்­பிக்கக் கூடிய இந்த திட்­டங்­களின் நன்­மையை, ஆட்­சியைப் பிடித்தால், தாமே அனு­ப­விக்­கலாம் என்றும் மஹிந்த தரப்பு கணக்குப் போட்­டி­ருக்­கலாம் என்றே கரு­தப்­பட்­டது.

ஆனால், அதற்குப் பின்னர் நடந்­தே­றிய சம்­ப­வங்கள், மைத்­திரி- மஹிந்த தரப்­புகள் வேறொரு கணக்கைப் போட்­டி­ருப்­ப­தா­கவே கருத வைக்­கின்­றன.

அமைச்­ச­ரவை தீர்­மானம் எடுக்­கப்­பட்ட பின்னர், மஹிந்த ராஜபக் ஷ இந்த உடன்­பாட்டில் தேர்­த­லுக்கு முன்னர் கையெ­ழுத்­திடக் கூடாது என்று போர்க்­கொடி எழுப்­பி­யி­ருந்தார்.

அவ­ச­ர­மாக ஜனா­தி­ப­தி­யிடம் ஓடிச் சென்ற விமல் வீர­வன்­சவும், உதய கம்­மன்­பி­லவும், அத்­து­ர­லியே ரத்ன தேரரும், உடன்­பாட்டில் தேர்தல் முடியும் வரை கையெ­ழுத்­தி­டப்­ப­டாது என்று வாக்­கு­று­தியைப் பெற்று வந்­தி­ருக்­கி­றார்கள்.

அவர்­க­ளுக்கு முன்­பா­கவே, நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு தொலை­பே­சியை எடுத்து, உடன்­பாட்டில் கையெ­ழுத்­திட வேண்டாம் என்று உத்­த­ரவைப் பிறப்­பித்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி.

இவை­யெல்லாம், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­மிட்டே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றாரா என்ற சந்­தே­கங்­களை எழுப்­பி­யி­ருக்­கின்­றன.

ஏற்­க­னவே, மஹிந்த தரப்பு அமெ­ரிக்க உடன்­பா­டுகள் பற்­றிய பீதியை சிங்­கள மக்­க­ளி­டத்தில் ஏற்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கி­றது. தேர்தல் காலத்தில் அமெ­ரிக்கா வில­கி­யி­ருந்­ததால் இந்த விவ­காரம், அமுங்கிப் போயி­ருந்­தது.

திடீரென தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்தப் பூதத்தை மீண்டும் வெளியே கொண்டு வந்து கோத்தாபய ராஜபக் ஷவுக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்க ஜனாதிபதி முற்பட்டிருக்கிறாரா என்ற கேள்விகள் இப்போது எழுந்திருக்கின்றன.

இலங்கையின் அரசியல் போக்கு தொடர்பாக கவலையடைந்திருந்த அமெரிக்காவுக்கு, எம்.சி.சி விடயத்தில் திடீரென எடுக்கப்பட்ட முடிவு- அதிர்ச்சிகரமான சந்தோசத்தைக் கொடுத்திருந்தது.

அதனால் தான், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ், டுவிட்டரில் இட்டிருந்த பதிவில், இலங்கையில் இருந்து மிகப்பெரிய செய்தி (Great News) வந்திருப்பதாக வர்ணித்திருந்தார்.

ஆனால், தேர்தல் முடியும் வரை இந்த உடன்பாடு கையெழுத்திடப்படாது என்று ஜனாதிபதி அளித்திருக்கின்ற உறுதியானது, இந்த உடன்பாட்டின் எதிர்காலத்தை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

அமெரிக்காவுக்கு திடீரென கிடைத்த சந்தோசத்தையும் தட்டிப் பறித்திருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*