;
Athirady Tamil News

முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­படும் தேசிய பாது­காப்பு!! (கட்டுரை)

0

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இன்­னமும் இரண்டு வாரங்­களே எஞ்­சி­யுள்ள நிலையில், பிர­சா­ரங்கள் சூடு பிடித்­தி­ருக்­கின்­றன.

இந்த ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரங்­களில், பொரு­ளா­தார, அர­சியல், சமூகப் பிரச்­சி­னை­களைப் பின்­னுக்குத் தள்ளி விட்டு, முத­லி­டத்தைப் பிடித்­தி­ருப்­பது பாது­காப்பு சார்ந்த விட­யங்கள் தான்.

2009 ஆம் ஆண்டு விடு­தலைப் புலிகள் தோற்­க­டிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னைய காலங்­களில் ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளிலும், பாரா­ளு­மன்றத் தேர்­தல்­க­ளிலும், போரை முடி­வுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமை­தியை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும், என்­றொரு வாக்­கு­றுதி கொடுக்­கப்­படும் வழக்கம் இருந்­தது.

போர் முடி­வுக்கு வந்து பத்து ஆண்­டுகள் கழித்து, இப்­போது மீண்டும் தேசிய பாது­காப்பு சார்ந்த விவ­கா­ரங்­க­ளுக்கு, தேர்­தல்­களில் முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்டு வரு­கி­றது.

கடந்த வாரம் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவின் தேர்தல் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது, 10 பிர­தான அம்­சங்­களை உள்­ள­டக்­கிய அந்த தேர்தல் அறிக்­கையின், முத­லா­வது விட­ய­மாக இருந்­தது தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­ப­தே­யாகும்.

மற்­றைய எல்லா விட­யங்­க­ளையும் பின்­னுக்குத் தள்ளி விட்டு, தேசிய பாது­காப்பு என்ற விட­யத்தை முன்­னி­லைப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­னது, நாடு மீண்டும் பாது­காப்­பற்ற நிலையில் சிக்கி இருக்­கி­றது. பதற்­றத்தில் இருக்­கி­றது என்­றொரு சூழலை ஏற்­ப­டுத்­து­கின்ற யுக்தி­யா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள், இந்தப் பிர­சா­ரங்­க­ளுக்கு வலு­வான துணை­யாக அமைந்­தி­ருக்­கின்­றன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

அந்த தாக்­கு­தல்கள் நிக­ழாமல் போயி­ருந்தால், தேசிய பாது­காப்பு என்ற விட­யத்­துக்கு, தற்­போது கொடுக்­கப்­படும் உய­ரிய முக்­கி­யத்­துவம் குறைந்து போயி­ருக்கும்.

கோத்­தா­பய ராஜபக் ஷ ஒரு முன்னாள் இரா­ணுவ அதி­காரி என்ற வகையில், முன்னாள் பாது­காப்புச் செயலர் என்ற வகையில், தேசிய பாது­காப்பு என்ற விட­யத்தை முக்­கி­யத்­து­வப்­ப­டுத்தி – இந்த விவ­கா­ரத்தை பிர­சா­ரங்­களில் முன்­னி­லைக்குக் கொண்டு வர முனை­கிறார் என்­றொரு கருத்து உள்­ளது.

ஆனால், கோத்­தா­பய ராஜபக் ஷ மாத்­தி­ர­மன்றி, அவ­ருக்கு எதி­ராகப் போட்­டி­யிடும், பிர­தான வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தா­ஸவும் கூட, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு இணை­யாக இரா­ணு­வத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி, தேசிய பாது­காப்பை முக்­கி­யத்­து­வப்­ப­டுத்தி உரை­யாற்றி வரு­கிறார்.

அவ­ரது தேர்தல் அறிக்­கை­யிலும் கூட படை­களை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வது, புல­னாய்வுப் பிரி­வு­களை வலுப்­ப­டுத்­து­வது பற்­றிய வாக்­கு­று­திகள் தான் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுமே, தேசிய பாது­காப்பு தொடர்­பா­கவும், இரா­ணு­வத்­தினர் தொடர்­பா­கவும் கொடுக்­கின்ற வாக்­கு­று­தி­களைப் பார்க்­கின்ற போது, அடுத்­த­தாகத் தெரி­வாகப் போகின்ற ஜனா­தி­பதி யாராக இருந்­தாலும், பாது­காப்புக் கட்­ட­மைப்பை பலப்­ப­டுத்­து­வதில் கூடுதல் கவனம் செலுத்­தப்­படும் என்­பது உறு­தி­யா­கவே தெரி­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷ, ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்கப் போவ­தாக அறி­வித்த நாளில் இருந்தே, தேசிய பாது­காப்பை வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக, புல­னாய்வுக் கட்­ட­மைப்பு மறு­சீ­ர­மைக்­கப்­பட்டு, பலப்­ப­டுத்­தப்­படும் என்றும், படைகள் நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­படும் என்றும் கூறி வரு­கிறார்.

தற்­போ­தைய அர­சாங்கம் படை­யி­னரைப் பல­வீ­னப்­ப­டுத்தி விட்­டது என்றும், பாது­காப்பை கோட்டை விட்டு விட்­டது என்றும் காட்­டு­வதன் மூலம், தம்மைப் பற்­றிய ஒரு பெரிய எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்த முனை­கிறார் அவர்.

அதே­வேளை, மறு­பக்­கத்தில் சஜித் பிரே­ம­தாஸ தேசிய பாது­காப்­புக்கும், இரா­ணு­வத்தைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான விட­யங்கள் குறித்தும், தெற்கின் கிரா­மங்­களில் தீவி­ர­மாக பிர­சா­ரங்­களைச் செய்து கொண்­டி­ருக்­கிறார்.

அக்­மீ­ம­னவில் நடந்த கூட்­டத்தில் உரை­யாற்­றிய அவர், ஆயு­தப்­ப­டைகள் நவீன மயப்­ப­டுத்­தப்­படும் என்றும், பொலி­ஸா­ருக்கு புதிய தொழில்­நுட்­பமும் பயிற்­சி­களும் பெற்றுக் கொடுக்­கப்­படும் என்றும், இதன் மூலம் தேசிய பாது­காப்­புக்கு ஏற்­படக் கூடிய அச்­சு­றுத்­தலை எதிர்­கொள்­வ­தற்கு தயார்­ப­டுத்­தல்கள் மேற்­கொள்­ளப்­படும் என்றும் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.

இப்­போ­தைய சவால்­களை எதிர்­கொள்­வ­த ற்கு ஆயு­தப்­ப­டை­யி­னரை நவீ­ன­ ம­யப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சியம் என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

இதி­லி­ருந்து, சஜித் பிரே­ம­தா­ஸவின் இலக்கும், கோத்­தா­பய ராஜபக் ஷவின் இலக்கும் ஒன்­றா­கவே இருப்­பது போலத் தெரி­கி­றது, அதா­வது, தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வது என்ற பெயரில், பாது­காப்புக் கட்­ட­மைப்­பு­களை வலுப்­ப­டுத்­து­வது தான் இரண்டு பேரி­னதும் திட்­ட­மாகும்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே, தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் தோன்­றி­யி­ருக்­கி­றது என்­ற­தொரு விம்பம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விம்பம் குண்­டு­வெ­டிப்­பினால் ஏற்­பட்­ட­தல்ல, அதற்குப் பின்னர் திட்­ட­ மிட்டு உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பது தான் உண்மை.

இந்­த­நி­லையில், தேசிய பாது­காப்பே முதன்­மை­யா­னது. முக்­கி­ய­மா­னது என்ற விட­யத்தில், இரண்டு தரப்­பு­க­ளுமே, விட்டுக் கொடுக்கத் தயா­ராக இல்லை.

ஏனென்றால், இலங்­கையில், இரண்­டரை இலட்­சத்­துக்கும் அதி­க­மான முப்­ப­டை­யினர், பொலிஸார் இருக்­கி­றார்கள். அவர்­களின் குடும்­பத்­தினர் எண்­ணிக்­கை­யையும் சேர்த்தால், 15 இலட்சம் பேர் வரையில் – பாது­காப்புச் சார்ந்த தொழிற்­து­றை­யுடன் நேரடித் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக இருப்­பார்கள்.

இவர்­களின் ஆத­ரவை தமது பக்கம் இழுத்துக் கொள்­வ­தற்­கான போட்­டியே பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்கு இடையில் நிகழ்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

2005ஆம் ஆண்­டுக்குப் பின்னர், நடந்த தேர்­தல்­களில் பெரும்­பாலும். இரா­ணு­வத்­தி­னரின் ஆத­ரவைப் பெற்­ற­வர்­க­ளாக, மஹிந்த ராஜபக் ஷவே இருந்து வந்­தி­ருக்­கிறார்.

இரா­ணு­வத்­தினர் மற்றும் பொலி­ஸாரின் அஞ்சல் வாக்­கு­களும் சரி, அவர்­களின் குடும்­பங்கள் அதி­க­ளவில் வசிக்­கின்ற வட­மத்­திய, வடமேல், தென் மாகா­ணங்­க­ளிலும் சரி, மஹிந்த ராஜபக் ஷவின் தரப்­புக்கே ஆத­ரவு அளித்து வந்­தி­ருக்­கி­றார்கள்.

இவ்­வா­றான நிலையில் இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில், கோத்­தா­பய ராஜபக் ஷ போட்­டி­யி­டு­கின்­றமை, அவர்­க­ளுக்கு இன்­னமும் கூடு­த­லான உற்­சா­கத்தை கொடுத்­தி­ருக்கும்.

ஏனென்றால், கோத்­தா­பய ராஜபக் ஷ இரா­ணு­வத்தில் கஜபா ரெஜி­மென்ட்டில், ஒரு பற்­றா­லியன் கட்­டளை அதி­கா­ரி­யாக, லெப்.கேர்ணல் தரத்தில் உள்ள அதி­கா­ரி­யாகப் பதவி வகித்து ஓய்வு பெற்­றவர் மாத்­தி­ர­மல்ல. நாட்டின் பாது­காப்புச் செய­ல­ராக 10 ஆண்­டுகள் பணி­யாற்­றி­ய­வரும் கூட.

அவ்­வா­றான ஒருவர், கள­மி­றங்­கி­யுள்ள சூழலை இரா­ணு­வத்­தி­னரும், பொலி­ஸாரும் தமக்குச் சாத­க­மான ஒருவர், தம்மைச் சேர்ந்த ஒருவர் கள­மி­றங்­கி­யுள்ள சூழ­லா­கவே பார்க்­கின்­றனர்.

அதற்கு அப்பால், இரண்டு பேருமே, குற்­ற­மி­ழைத்த படை­யி­னரைப் பாது­காப்போம், ஐ.நா.வோ அல்­லது எந்­த­வொரு சர்­வ­தேச சக்­தியோ அதில் தலை­யி­டவோ, அவர்­களின் மீது கைவைக்­கவோ விட­மாட்டோம் என்று உறுதி கூறு­வ­திலும் உறு­தி­யா­கவே இருக்­கி­றார்கள்.

ஆக, படை­யி­னரைக் கவ­ரு­வதும், அவர்­களின் நலன்­களை உறு­திப்­ப­டுத்­து­வதும், தேசிய பாது­காப்பை வலுப்­ப­டுத்­து­வதும் தான் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளி­னதும், பிர­தான தேர்தல் உத்­தி­யாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைத் தீவு கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாகவே, பாதுகாப்பு, போர் என்ற வட்டத்துக்குள்ளேயே சுற்றிப் பழகி விட்டது.

அதனை முன்வைத்து, அரசியல் செய்வது அரசியல்வாதிகளுக்குப் பழக்கப்பட்டு விட்டது.

அந்த வட்டத்தை விட்டு வெளியே வருவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

அதற்கு மாற்றான உத்திகளும் அவர்களிடம் இல்லை. அவ்வாறு மாற்று உத்திகளை முன்வைக்கத் தயாராக இருப்பவர்களுக்கும் கூட, தமது அரசியல் எதிரியிடம் தோல்வியடைந்து விடுவோமா என்ற பயம் இருக்கிறது.

இதனால், தேசிய பாதுகாப்பு என்ற வட்டத்துக்குள்ளேயே நின்று கொண்டு வாக்குவேட்டையாட முனைகிறார்கள்.

இந்தச் சூழல் உள்ளவரைக்கும், கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி, தொழில்நுட்பம் மற்றும் ஆக்கபூர்வமான விடயங்களில் கொடுக்கப்படுகின்ற வாக்குறுதிகள் வலிமையானவையாக இருக்கப் போவதில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*