;
Athirady Tamil News

பெற்ற மண்­ உ­ரி­மை­யையும் இழக்கும் அபாயம்? (கட்டுரை)

0

நாட்டின் புதிய ஜனா­தி­ப­தியை தேர்ந்­தெ­டுக்க இன்னும் சில நாட்­களே உள்­ளன. தேர்­தலில் யார் வெற்றி பெற்­றாலும் நவம்பர் 16 ஆம் திக­திக்குப் பின்னர் இலங்கை அர­சியல் செல் நெறி­யில் பாரிய மாற்றம் வரலாம். ஏனெனில் போட்­டி­யிடும் 35 வேட்­பா­ளர்­களும் தாம் எவ்­வாறு நாட்டை வழி நடத்­த­வுள்ளோம் என்­பதில் தத்­த­மது கொள்­கை­களை வெளிப்­ப­டுத்தி வரு­வ­துடன், ஜன­நா­ய­கத்­தையும் மனித உரி­மை­யையும் பாது­காக்க திட­சங்­கற்பம் பூண்­டுள்­ள­தாக தத்­த­மது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இது நாட்டின் ஜன­நா­ய­கத்­தன்மை வலுப்­பெ­று­வதை காட்­டு­கின்ற போதிலும் தேர்­தலில் வெற்றி பெற்ற பின் நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் ஆட்­சியை பொறுத்தே ஜன­நா­யகம் வலுப்­பெ­றுமா இல்­லையா? என்­பதை அடை­யாளம் காண­மு­டியும். காரணம் பல உலக நாடு­க­ளி­னதும் நமது நாட்­டி­னதும் அனு­ப­வத்தை எடுத்து நோக்­கினால் மனித உரிமை மீறல்­களை மேற்­கொண்ட ஆட்­சி­யா­ளர்கள் ஜன­நா­யகத்தை வலுப்­ப­டுத்தும் வகை­யி­லான தேர்தல் வாக்­கு­று­தி­களை முன்­வைத்தே ஆட்­சி­ய­தி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

எனவே இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­ப­வர்கள் பரந்த ஜன­நா­யக வாக்­கு­று­தி­களை தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைத்­தாலும் வெற்றி பெற்­றவர் ஆட்­சியை நடத்­து­கையில் அவர் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்தும் வகையில் ஆட்சி செய்­கின்­றாரா? இல்­லையா ? என்­பதை அறி­ய­மு­டியும். ஆயினும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைக்கும் அபி­வி­ருத்தி திட்­டங்கள் தொடர்பில் அவை நன்மை அளிக்­குமா? அல்­லது தீமை அளிக்­குமா? என்­பதை பகுத்­த­றிய தேர்­த­லுக்கு முன்பே மக்­க­ளுக்கு வாய்ப்­புள்­ளது.

அனைத்து வேட்­பா­ளர்­களும் நாட்டின் அபி­வி­ருத்தி தொடர்பில் திட்­டங்­களை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­மொ­ழிந்­துள்­ளனர். நாட்டின் முக்­கிய தொழிற்­து­றை­களில் ஒன்­றான தேயிலைத் தொழில் அபி­வி­ருத்தி தொடர்­பா­கவும் அத்­தொ­ழிலில் ஈடு­படும் தொழி­லா­ளர்­க­ளது சமூக அபி­வி­ருத்தி தொடர்­பா­கவும் திட்­டங்­களை முன்­வைத்­துள்­ளனர். இவர்­களுள் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ முன்­வைத்­துள்ள தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தேயிலை பயிர்ச்­செய்கை தொடர்­பாக பல அபி­வி­ருத்­தித்­திட்­டங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ள­துடன், தோட்டத் தொழி­லா­ளர்­களில் வீட்டுப் பிரச்­சினை தொடர்­பா­கவும் திட்­ட­மொன்று முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது .

இரு­நூறு வருட வர­லாற்றை கொண்­டுள்ள மலை­யகத் தமிழ் மக்­களில் தொண்­ணூறு சத­வீ­த­மானோர் இன்றும் வெள்­ளை­யரால் அமைத்துக் கொடுக்­கப்­பட்ட பத்­தடி லயக் காம்­பி­ராக்­க­ளி­லேயே வாழ்­கின்­றனர். சுமார் பத்து சத­வீ­தத்­திற்கும் குறை­வா­ன­வர்­களே தனி வீடு­க­ளிலும் இரட்டை வீடு­க­ளிலும் மாடி வீடு­க­ளிலும் வாழ்­கின்­றனர்.

மலை­யக மக்­களைப் பொறுத்­த­வரை இன்­றைய அர­சாங்­கத்தின் கீழ் புதி­தாக கட்­டப்­பட்ட தனி வீட்­டுடன் 7 பேர்ச்ஸுக்­கான காணி­யு­று­தியை மிகச் சிலரே பெற்­றுள்­ளனர். இதற்கு முன்பு கட்­டப்­பட்ட சுமார் 37 ஆயிரம் வீடு­களில் வாழும் தோட்­டத்­தொ­ழி­லாளர் குடும்­பங்கள் வீட்­டுக்­கான கடனை திருப்பி செலுத்­தியும் எவ்­வித உரித்­தின்­றியும் வாழ்­கின்­றனர் என்­பது முக்­கிய விடயம்.

இந்­நி­லையில், தற்­போது ஏழு பேர்ச் காணிக்கான உறு­தியைப் பெறு­கின்­றமை மலை­யக மக்­க­ளது வர­லாற்றைப் பொறுத்­த­வரை பிர­ஜா­வு­ரி­மைக்கு அடுத்­த­தாகப் பெற்ற மிகப் பெரிய வெற்­றி­யாகும். மலை­யக மக்கள் மண்­ணுக்கு சொந்­த­மா­ன­வ­னாக மாறு­வதை இலங்­கையின் அர­சியல் தலை­மைகள் ஒரு­போதும் விரும்­பி­ய­தில்லை. மாறாக அவர்கள் நில உரி­மை­யற்ற வீடு­களில் வாழும் மக்­க­ளாக வாழ்­வ­தையே விரும்­பு­கின்­றனர். மலை­யக மக்­க­ளுக்கு காய்­கறித் தோட்டம் செய்ய வெள்­ளை­யர்கள் காணி வழங்கக் கூடாது என்ற கருத்தை டி.எஸ்.சேனா­நா­யக்க மற்றும் எஸ்.டபிள்யூ. ஆர் டி.பண்­டார நாயக்க ஆகியோர் முப்­ப­து­களில் முன்­வைத்­தனர் .

இக்­கொள்­கையை பின்­பற்றும் பிரி­வினர் இரண்டு பிர­தானக் கட்­சி­க­ளிலும் இன்றும் இருந்து வரு­கின்­றனர் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. ஏழு பேர்ச்சஸ் காணிக்­கான உறு­தியை வழங்கக் கூடாது. மாறாக அவர்­க­ளுக்கு நீண்ட கால குத்­தகை அடிப்­ப­டையில் உரிமை வழங்க வேண்டும் எனவும் மற்றும் அவர்­க­ளுக்கு மாடி வீடே வழங்க வேண்டும் என இன்­றைய அர­சாங்­கத்தில் அமைச்சு பதவி வகிப்­ப­வர்­களே கூறி­வரும் வேளை­யி­லேயே இவ்­வு­ரிமை பெறப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­கையில் ஏழு பேர்ச்சஸ் காணி­யென்­பது மிகக் குறை­வா­ன­தாக இருப்­பினும் காணிக்­கான உரித்­து­ரி­மை­யைப்­பெற்­றுள்­ள­மை­யா­னது அவர்­க­ளது வர­லாற்றில் முக்­கிய மைல் கல்­லாகும்.

மலை­யக மக்கள் இவ்­வு­ரி­மை­யுடன் அடுத்த கட்­டத்தை நோக்கி நகர வேண்­டு­மாயின் தமது வாழ்­வா­தா­ரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் விளைச்­ச­லுக்­கான காணி­களை பெற வேண்டும். மறு­புறம் தனி வீடு மற்றும் அதற்­கு­ரிய காணி­யு­றுதித் திட்­டத்தை வேகப்­ப­டுத்த வேண்டும். இதுவே அவர்கள் முன்­னோக்­கிய நகர்­விற்கு அடிப்­ப­டை­யாக அமையும். மாறாக மக்கள் நிரா­க­ரித்த திட்­டங்­களை மீளக் கொண்டு வரு­வ­தா­னது அவர்­க­ளது முன்­நோக்­கிய வளர்ச்­சியை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாகவே அமையும்.

மலை­ய­கத்தில் மாடி வீட்­டுத்­திட்டம்

இப்­பின்­பு­லத்­துடன் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­ப­யவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை நோக்­கு­வோ­மாயின் மலை­யக மக்­க­ளது வீட்­டுப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­காக குறைந்த மட்ட அடுக்கு மாடி வீடுகள் வழங்­கப்­படும் எனக் கூறப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தாபய ராஜ­பக் ஷ திற­மை­யான நிர்­வாகி எனவும் சொன்­னதை சரி­யாகச் செய்­பவர் எனவும் புகழ் பெற்­றுள்ளார். அவ்­வ­கையில் அவர் மக்­களின் ஆணையைப் பெற்று ஆட்சி பீட­மே­றினால் நிச்­ச­ய­மாக குறைந்த மட்ட மாடி வீட்டுத் திட்­டத்தை அமுல்­ப­டுத்­துவார் என்­பதில் ஐய­மில்லை. மாடி வீட்­டுத்­திட்டம் திரு­மதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆட்சிக் காலத்தில் அமுல் படுத்­தப்­பட்­டது. அவ் மாடி வீட்­டுத்­திட்டம் மலை­யக தோட்ட மக்­க­ளுக்க உகந்­த­தல்ல. மாறாக இது அடிப்­படை மனித உரிமை மீற­லாகும்.

நாட்டின் ஏனைய மக்­க­ளுக்கு தனி வீடுகள் காணி உரித்­துடன் வழங்­கு­கையில் இவர்­க­ளுக்கு மட்டும் மாடி வீடு வழங்­கு­வது பாகு­பாடு காட்­டு­வ­தாகும். எனவே நாட்டின் ஏனைய பிர­ஜை­க­ளுக்கு வழங்­கு­வது போல் மலை­யக மக்­க­ளுக்கும் காணி உரித்­து­ட­னான தனி வீடு வழங்­குக என்ற கோரிக்­கையை இக்­கட்­டு­ரை­யாளர் 2003 இல் முன்­வைத்தார். பின்னர் கண்டி சமூக அபி­வி­ருத்தி நிறு­வகம் மலை­யக சிவில் அமைப்­பு­க­ளுடன் ஒன்­றி­ணைந்து கொழும்பு நகரில் கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை நடத்­தி­யது. அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் சபைக்­கான வீட்­டு­ரிமை அதி­கா­ரியை அட்டன் நக­ருக்கு வர­வ­ழைத்து வீட்­டு­ரிமை தொடர்­பான செய­ல­மர்வை நடத்தி மலை­ய­கத்தில் நிர்­மா­ணிக்­கப்­படும் மாடி வீட்டுத் திட்டம் ஒரு அடிப்­படை மனித உரிமை மீறல் என அதி­கா­ரி­யிடம் ஏற்­புரை செய்­தது.

நாடு திரும்­பிய ஐக்­கிய நாடுகள் சபை அதி­காரி மிலன் கோத்­தாரி ஏனைய மக்­க­ளுக்கு வழங்­கு­வது போல் மலை­யக மக்­க­ளுக்கும் தனி வீடுகள் வழங்கும் படி 2003 ஆம் ஆண்டு இறு­தியில் அன்­றைய ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­கா­வுக்கு கடித மூலம் அறி­வித்தார். இருந்த போதிலும் சந்­தி­ரிக்­கா­விற்­குப்பின் ஆட்சி பீட­மே­றிய மஹிந்த ராஜ­ப­க்ஷவும் மாடி வீட்டு திட்­டத்தை முன்­னெ­டுக்­க­லானார். அதற்­கெ­தி­ராக தொடர் ஏற்­பு­ரைகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­துடன் அதன் விளை­வாக மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அர­சாங்கம் மாடி வீட்­டுத்­திட்­டத்தை கைவிட்டு தனி வீட்­டுத்­திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. மஹிந்­தவின் ஆட்­சியில் பங்­கேற்று செயற்­பட்­டு­வந்த இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பிர­தி­நி­திகள் ஆரம்­பத்தில் மாடி வீட்­டுத்­திட்­டத்தை வர­வேற்ற போதிலும் பின்னர் மக்­க­ளது வேண்­டு­கோளைக் கருத்­திற்­கொண்டு இனிமேல் மாடி வீட்­டுத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க ஆத­ர­வ­ளிக்­கப்­போ­வ­தில்லை என வாக்­கு­று­தி­ய­ளித்­தது. இதன் பின்னர் ட்ரஸ்ட் நிறு­வனம் மீண்டும் தனி வீடு­களை அமைக்க ஆரம்­பித்­தது.

இப்­பின்­பு­லத்தில் கோத்­தா­பய ராஜ­பக்ஷ குறைந்த மட்ட மாடி வீட்­டுத்­திட்­டத்தை தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­மொ­ழிந்­தி­ருப்­ப­தா­னது மலை­யக தோட்ட மக்கள் பெற்ற காணி உரி­மையை அவர்­க­ளுக்கு தெரி­யா­மலே தட்­டிப்­ப­றிப்­ப­தாக கரு­த­வேண்­டி­யுள்­ளது.

எனவே கோத்­தா­ப­ய­விற்கு ஆத­ரவு வழங்கும் கட்­சிகள் மற்றும் அமைப்­புகள் இவ்­வி­டயம் தொடர்­பாக உட­னடி பேச்­சு­வார்த்தை மேற்­கொண்டு இம் முன் மொழி­வினை நீக்­கும்­படி கோர வேண்டும். காணி­யு­று­தி­யுடன் தனி வீடு என்­பது மலை­யக மக்கள் குடி­யு­ரி­மைக்கு அடுத்­த­தாகப் பெற்­றுக்­கொண்ட பாரிய உரி­மை­யாகும் . இவ்­வு­ரி­மையை இன்றைய ரணிலின் அரசாங்கமும் தாமாக கொடுக்க முன்வரவில்லை மாறாக இன்றைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் பல அழுத்தங்களை கொடுத்தே இதனை பெற்றுள்ளனர். சிறு துண்டு காணியாக இருந்தாலும் மலையக தோட்ட மக்கள் இதன் மூலம் மண்ணுக்கு சொந்தமானவர்கள் மண்ணின் மைந்தர்கள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்கள்.

மீண்டும் மாடி வீட்டுத்திட்டம் அமுல் படுத்தப்பட்டால் மேலே கூறப்பட்ட உரிமை இல்லாது போய்விடும் என்பது புறமிருக்க தொழிலாளர்களின் தேவைக்கேற்ப தமது வீட்டினை பெரிதாகக் கட்டிக் கொள்வதற்கோ அல்லது தனது விருப்பிற்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வதற்கோ வாய்ப்பு கிடைக்காது.

எனவே மலையக தொழிற்சங்கங்க அரசியற் கட்சிகள், சிவில் அமைப்புகள் அறிவு ஜீவிகள், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் பெற்ற இவ்வுரிமையை இழக்கும் அபாயத்தை மக்களுக்கு எடுத்துரைத்து குறைந்த மட்ட மாடி வீட்டுத்திட்ட முன்மொழிவை வாபஸ் பெறும்படி கோர வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 4 =

*