;
Athirady Tamil News

மலையக அரசியலில் தொடரும் பழிவாங்கும் படலம்!! (கட்டுரை)

0

ஜனா­தி­பதித் தேர்­தல்­க­ளுக்­குப்­பின்னர் இடைக்­கால அர­சாங்கம் அமைக்­கப்­பட்ட பிறகு பாரா­ளு­மன்றத் தேர்தல் காலம் வரை , மலை­யக சமூ­கத்­துக்குக் கிடைத்­துள்ள அமைச்சுப் பத­வியைக் கொண்டு இம்­மக்­க­ளுக்கு ஏதா­வது நல்ல விட­யங்கள் முன்னெடுக்­கப்­படல் வேண்டும் என்­பது அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. ஆனால் இங்கு நடப்­பதோ வேறு. தனி வீட­மைப்­புத்­திட்­டத்தில் ஊழல்கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தாகவும் அது குறித்த விசா­ர­ணைகள் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஆறு­முகன் கூறு­கிறார். அது மட்­டு­மன்றி, அது தொடர்­பான கணக்­காய்வு விப­ரங்­க­ளையும் கேட்­டி­ருப்­ப­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இ.தொ.கா இப்­படி நடந்து கொள்­வது இது முதல் தட­வை­யல்ல. கடந்த வருடம் நாட்டில் ஏற்­பட்ட அர­சியல் நெருக்­கடி நேரத்தில் கூட திடீ­ரென அமைச்­சுப்­ப­த­வியைப் பெற்ற ஆறுமுகன் இதே போன்று அதி­ர­டி­யாக சோத­னை­களை மேற்­கொள்ள நட­வடிக்கை எடுத்தார்.

இதே போன்­ற­தொரு காரி­யத்தை அமைச்­ச­ராக இருந்த கால­கட்­டத்தில் தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலைவர் பி.திகாம்­ப­ரமும் செய்யத் தவ­ற­வில்லை. அட்­டனில் அமைந்­துள்ள தொண்­டமான் தொழிற்­பயிற்சி நிறு­வனம் மற்றும் அதற்கு நிதி ஒதுக்­கப்­படும் தொண்­டமான் நிதி­யத்தில் கோடிக்­க­ணக்­கான ரூபா பணம் மோசடி செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் செல­வி­டப்­பட்ட பல கோடி ரூபா பணத்­துக்கு கணக்­கு­களே இல்லை என்றும் நிதி மோச­டி­களை விசா­ரிக்கும் பிரி­வுக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்டு அது தொடர்­பான விசா­ர­ணை­களும் இடம்­பெற்­றன. மேலும் இந்­திய அர­சாங்கம் வழங்­கிய 40 பஸ்கள் மாய­மா­னமை குறித்தும் தொழி­லாளர் தேசிய சங்­கத்­தி­னரால் கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

ஆட்­சிக்கு வரும் எந்த அர­சாங்­கமும் மலை­யக சமூ­கத்தின் அபி­வி­ருத்­திக்கு நிதி ஒதுக்­கா­ம­லில்லை. அது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதா இல்­லையா என்­பதை மக்­களும் அறிந்து கொள்ளும் உரிமை உள்­ளது. ஆனால் எத்­தனை மலை­யக அர­சி­யல்­வா­திகள் அர­சாங்கம் ஒதுக்கும் நிதியை முழு­மை­யாக பயன்­ப­டுத்­து­கின்­றனர்? அப்­படி பயன்­ப­டுத்­தி­ய­மைக்­கான கணக்­கு­களை பகி­ரங்­கப்­ப­டுத்­து­கின்­றனரா என்­பது கேள்­விக்­கு­றியே.

தலைவன் எவ்­வ­ழியோ தொண்­டனும் அவ்­வழியே என்­பார்கள். நிதி பயன்­பாடு விட­யத்தில் தலை­வர்கள் எந்­த­ள­வுக்கு நேர்­மை­யாக நடந்து கொள்­கின்­றார்­களோ அதை வைத்தே அவர்­களின் கீழ் தொழி­லாற்றும் ஏனை­யோரும் நடந்து கொள்வர் . ஆகவே மலை­ய­கத்தின் தலை­வர்கள் தொண்­டர்­க­ளைப்­பற்றி இங்கு ஆரா­யப்­போவது இக்­கட்­டு­ரையின் நோக்­க­மு­மல்ல. அதனால் நடக்­கப்­போ­வதும் ஒன்­று­மில்லை.

எனினும், இன்னும் எத்­தனை காலங்­க­ளுக்­குத்தான் இந்த மக்கள் பிர­தி­நி­திகள் சிறு­பிள்­ளைகள் போன்று சண்டை போட்­டுக்­கொண்­டி­ருக்­கப்­போ­கின்­றனர்? மாறி மாறி அமைச்­சுப் ­ப­த­வி­க­ளைப் ­பெற்­றுக்­கொள்ளும் போது யாரு­டைய காலத்தில் அதிக அபி­வி­ருத்­திகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன, அவற்றில் எத்­தனை இம்­மக்­க­ளுக்கு பய­னுள்­ள­தாக இருந்­தன, நீண்ட கால தேவையை கருத்­திற்­கொண்டு உரு­வாக்­கப்­பட்ட திட்­டங்கள் எவை? என்­பதை அடிப்­ப­டை­யாக வைத்தே இன்று மலை­யக பெருந்­தோட்­டங்­களில் வாக்­குகள் முடிவு செய்­யப்­ப­டு­கின்­றன என்­பதை பிர­தி­நி­திகள் புரிந்து கொள்ளல் வேண்டும்.

இன்று வெறும் முகங்­க­ளுக்­கா­கவும் கட்­சி­க­ளுக்­கா­கவும் வாக்கு போடும் நிலை­மைகள் மலை­யேறி விட்­டன. ஆத­ரவு தாருங்கள், செய்து தரு­கிறோம் என்ற கோஷங்­களை கடந்து போய்க்­கொண்­டி­ருக்­கின்­றனர் மலை­யக மக் கள். இதைத்தான் செய்தோம், ஆத­ரவு தாருங்கள் என்ற குரல்­க­ளையே சற்று நின்று கவ­னித்துப் போகின்­றனர் அவர்கள்.

ஆகவே இனியும் போட்டி அர­சி­ய­லையும் பழி­வாங்கும் செயற்­பா­டு­க­ளையும் மலை­யக பிர­தி­நி­திகள் முன்­னெ­டுப்­ப­தா­னது இவர்கள் மீதான வெறுப்­பு­ணர்­வையே மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்தும். இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மலை­ய­கத்தில் பழைமை­யான தொழிற்­சங்­கங்­களில் ஒன்று. அதன் தலை­வ­ராக அமரர் செள­மி­ய­மூர்த்தி தொண்­டமான் செயற்­பட்ட காலத்தில் கட்­டுக்­கோப்­பொன்று மலை­யக பெருந்­தோட்­டப்­ப­கு­தி­களில் இருந்­தது. இதனால் மக்கள் சக்தி மூலம் சில உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

ஆனால் காலமாற்றம் அனைத்­தையும் புரட்டிப் போட்டு விட்­டது. கொள்கை வேறு­பாடு மற்றும் அர­சியல் பழி­வாங்­கல்­களை கார­ண­மாகக் காட்டி அவ் அமைப்­பி­லி­ருந்து பலரும் வெளி­யேறி வேறு கட்­சி­க­ளையும் தொழிற்­சங்­கங்­க­ளையும் ஸ்தாபித்­தனர். தனி ஒரு நிறு­வ­னத்தை எடுத்­துக்­கொண்­டாலே அனை­வ­ரையும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தென்­பது முடி­யாத காரியம். இதில் இலட்­சக்­க­ணக்­கான தொழி­லா­ளர்­களைக் கொண்ட அர­சியல் அல்­லது தொழிற்­சங்க அமைப்­பு­க­ளைப்­பற்றி கூறத்­ தே­வை­யில்லை.

எனினும் தனி­யாக உரு­வான எல்லா கட்­சி­களும் தொழிற்­சங்­கங்­களும் ஒரே குறிக்­கோளைக் கொண்டே இன்று வரை இயங்கி வரு­கின்­றன. இ.தொ.காவி­லி­ருந்து பிரிந்து சென்று உரு­வான தொழி­லாளர் தேசிய சங்­க­மா­கட்டும் அல்­லது மலை­யக மக்கள் முன்­ன­ணி­யா­கட்டும் இந்த சமூ­கத்­துக்கு சேவை­யாற்­று­வ­தையே கட­மை­யாகக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

ஆகவே நோக்­கங்­களும் குறிக்­கோள்­களும் ஒன்­றாக இருக்கும் போது பழி­வாங்கும் செயற்­பா­டுகள் என்ன தான் இந்த சமூ­கத்­துக்கு பெற்­றுக்­கொ­டுத்து விடப்­போ­கின்­றன? மலை­யக கட்­சி­களை மட்டும் நாம் பார்க்­கத்­தே­வை­யில்லை. இன்று தேசிய ரீதி­யான கட்­சி­களும் கூட இவ்­வாறு பிளவு பட்டு இரண்­டாக உடைந்து உரு­வா­ன­வைதான். தேசிய மட்­டத்தில் அவை ஆளும் அல்­லது எதிர்க்­கட்­சி­யாக இருந்து விட்­டுப்­போ­கட்டும், ஆனால் எல்லா வகை­யிலும் இன்று அடி­வாங்­கிக்­கொண்­டி­ருக்கும் மலை­யக சமூ­கத்­துக்கு இந்த கட்­ட­மைப்புத் தேவை­யில்லை. நாம் மட்­டுமே ஆள­வேண்டும் இந்த மக்­க­ளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நிலைப்­பாடும் மன­வோட்­டமும் மிகவும் அபா­ய­க­ர­மா­னவை. அங்கு எல்லா வளங்­களும் சலு­கை­களும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவே இருக்கும் என்­பது பிர­தி­நி­தி­க­ளுக்கும் புரியும்.

மலை­ய­கத்தில் ஒரே பிர­தி­நிதி இருந்தால் ஒரே அமைச்­சுப்­ப­தவி மட்­டுமே கிடைக்கும். அதை வைத்­துக்­கொண்டு அவர் என்ன தான் செய்ய முடியும்? கடந்த காலங்­களில் அந்த நிலைமை மாறி­ய­தையும் அதன் மூலம் அதிக வரப்­பி­ர­சா­தங்­களைப் பெற்­றுக்­கொள்ள முடிந்­த­தையும் இங்கு மக்கள் உணர வேண்டும். நுவ­ரெ­லியா மாவட்­டத்­திற்குக் கிடைத்த மலை­யக புதிய கிரா­மங்கள் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்சு மற்றும் கல்வி இரா­ஜாங்க அமைச்சு மூலம் இந்த சமூகம் பெற்­றுக்­கொண்ட வரப்­பி­ர­சா­தங்­களை அந்த சமூ­கத்­தி­லுள்­ளோரே அறிவர்.

இந்த இரண்டு அமைச்­சுப்­ப­த­வி­க­ளையும் கொண்­டி­ருந்த கட்­சி­க­ளுமே ஒரே அமைப்­பி­லி­ருந்து வெவ்­வேறு கால­கட்­டங்­களில் பிரிந்து வந்த அமைப்­புகள் தாம். ஆனாலும் அவை தமக்குள் எதிர்ப்பு அர­சி­யலை செய்­ய­வில்லை. சமூக கட்­டுக்­கோப்­புக்­கா­கவும் உரி­மை­க­ளைப்­பெற்­றுக்­கொள்­வ­தற்கும் காலத்தின் தேவை­ய­றிந்து ஒரு கூட்­ட­ணிக்குள் வந்­தன. அதன் பிர­தி­ப­லனை கடந்த ஆட்சி காலத்தில் அறு­வ­டை­யாக மக்கள் பெற்­றனர்.

அதே போன்­ற­தொரு தேவை இப்­போதும் எழுந்­துள்­ளது. ஆனால் அதை விடுத்து இங்கு வேறு செயற்­பா­டு­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. செய்­யப்­பட்ட அபி­வி­ருத்­தித்­திட்­டங்­களை குறை கூறியும் அதில் குற்­றங்­களை கண்டு பிடித்து ஊட­கங்­களில் செய்­தி­க­ளாக்­கியும் மலை­யக அர­சி­யலை கட்­டி­யெ­ழுப்பத் தேவை­யில்லை. அது அர­சி­ய­லு­மில்லை. இதை இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், தொழி­லாளர் தேசிய சங்கம் மற்றும் மலை­யக மக்கள் முன்­னணி ஆகிய மூன்று அமைப்­பு­களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மிச்­ச­மி­ருக்கும் திட்­டங்­களை தொடர்­வ­தற்கும் அதற்கு அடுத்த கட்­டத்தை நோக்­கிய பய­ணத்­திற்­குமே வழி­வ­கை­களை ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. தேர்­த­லுக்கு முன்னர் ஒரு பிரத்­தி­யேக நேர்­கா­ணலில், மலை­ய­கத்தில் ஏன் பிர­தி­நி­திகள் எதிர்­ம­றை­யாக சேறு பூசும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­றனர் காலத்தின் தேவை கருதி இவர்கள் ஒன்­று­பட்டு செயற்­பட முடி­யாதா ? என்று கேட்­கப்­பட்ட

கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளிக்கும் போது இ.தொ.கா தலைவர் ஆறு­முகன், நேர்­ம­றை­யான பதில் ஒன்றை வழங்­கி­யி­ருந்தார். ‘நான் தயா­ராக இருக்­கிறேன் அவர்­களை வரச்­சொல்­லுங்கள் இப்­போதே அழைத்­துச்­செல்­கிறேன்’ என்­ப­தாக அந்த பதில் இருந்­தது. ஆகவே என்ன தான் எதிர்ப்பு அர­சியல் சாயலில் அவர் மேடை­களில் பேசி­னாலும் ஒன்­றி­ணைந்து பய­ணிக்க வேண்­டிய தேவை காலத்தின் கட்­டாயம் என்­பதை அவர் உணர்ந்­தி­ருக்­கிறார் என்­பது புரி­கி­றது. மட்­டு­மன்றி அது அர­சியல் பக்­குவ நிலை­யையும் உணர்த்­து­கி­றது.

தமது சமூ­கத்­துக்­காக ஒன்று பட உணர்­வு­பூர்­வ­மாக இவர்கள் தாமா­கவே முன்­வர வேண்­டுமே ஒழிய இதற்கு மூன்­றா­வது பேரி­ன­வாத சக்­திகள் தேவை­யில்லை. அப்­படி இருந்தால் அதுவும் ஒரு அர­சியல் நிகழ்ச்சி நிரலை கொண்­ட­தா­கவே அமைந்து விடும்.

மலை­ய­கத்தில் சிரேஷ்ட நிலை அமைப்­பாக இ.தொ.கா இருப்­பதால் யாரின் பின்­னாலும் போக வேண்­டிய அவ­சியம் இல்லை என அது நினைப்­பது விளங்­கு­கி­றது. ஆனால் எதை­யுமே பேசித் தீர்க்க முடியும் என்­பதில் ஆழந்த நம்­பிக்கைக் கொண்டு அதை சாதித்தும் காட்­டிய பல வர­லாற்­றுப்­பெ­ரு­மைக்­கு­ரி­யவர் அமரர் செள­மி­ய­மூர்த்தி தொண்­டமான். அத்­த­கைய அமைப்­பொன்றை தற்­போது கொண்டு நடத்தும் அமைச்சர் ஆறு­முகன் அனைத்துத் தரப்­பி­ன­ரையும் ஒன்றிணைத்து பயணிக்க வேண்டிய காலகட்டத்தில் மலையகம் தற்போது இருப்பதை உணர்ந்திருக்கிறார் என நம்புகிறோம்.

இதை ஏனைய பிரதிநிதிகள் தமக்கு சாதகமாக அல்லாது மக்களை நினைத்தாவது பயன்படுத்திக்கொள்ளுதல் அவசியம். அத்தகையதொரு அரசியல் கலாசாரம் மலையகத்தில் உருவாக வேண்டும் என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. பல தடவைகள் இது குறித்து நாம் ஊடகங்கள் வாயிலாக சுட்டிக்காட்டினாலும் பிரதிபலிப்புகள் கவலை தருவனவாகவே உள்ளன. ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிக்கு தொலைநோக்கும் பொறுப்பு சொல்ல வேண்டிய கடப்பாடும் இருக்க வேண்டியது கட்டாயம்.. அதே போன்று அச்சமூகத்திலிருந்து உருவான ஒவ்வொருவருக்கும் அது இருக்க வேண்டியது அவசியமாகும். குறை கண்டு பிடித்து, பழிவாங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து அதன் மூலம் தான் எதிர்கால மலையக அரசியல் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றால் அந்த அரசியலை இப்போதுள்ள இளைஞர் யுவதிகளும் கல்வி கற்ற சமூகத்தினரும் வரவேற்பார்களா என்ன?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + four =

*