;
Athirady Tamil News

நிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி!! (கட்டுரை)

0

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நாட்­சம்­ப­ள­மாக ஆயிரம் ரூபா எதிர்­வரும் மார்ச் மாதத்­தி­லி­ருந்து கிடைப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை அர­சாங்கம் ஏற்­ப­டுத்தி கொடுத்­தி­ருப்­ப­தா­னது பெருந்­தோட்ட மக்­களின் மத்­தியில் ஒரு நம்­பிக்கை ஒளிக்­கீற்றை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இலங்­கையில் தேர்தல் வர­லாற்றை எடுத்து நோக்­கினால் தேர்தல் கால வாக்­கு­று­திகள் எல்லாம் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக சரித்­திரம் இல்லை. மிக முக்­கி­ய­மாக பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாழ்­வா­தாரம் குறித்து கடந்த காலங்­களில் வழங்­கப்­பட்ட தேர்தல் வாக்­கு­று­தி­களில் ஒரு சிலவே நிறை­வேற்­றப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. அதில் வீட­மைப்பு பிர­தா­ன­மா­னது.

எனினும், இவர்­களின் வேதனம் குறித்த எந்­த­வித சாத­க­மான நகர்­வு­களும் கடந்த காலங்­களில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. கடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நிவா­ரணத் தொகை­யாக ஐம்­பது ரூபா வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­துடன் பிர­த­மரின் சம்­மதம் பெறப்­பட்­டி­ருந்­தாலும் கூட தொழி­லா­ளர்­களின் கோட்­டை­யாகத் திகழும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பிர­தி­நி­தி­யா­கவும் பெருந்­தோட்­டத்­துறை அமைச்­ச­ரா­கவும் விளங்­கிய நவீன் திசா­நா­யக்க, அதற்கு தடை­யாக இருந்­ததை எவரும் இல­குவில் மறந்­தி­ருக்க முடி­யாது.

கடந்த ஆட்­சியில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் 6 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் இரண்டு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்கள் இருந்­தாலும் கூட அது குறித்து காத்­தி­ர­மான நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது போனமை துர­திர்ஷ்­ட­வ­ச­மா­ன­தாகும். அது குறித்து உறு­தி­யா­னதும் இறு­தி­யா­ன­து­மான தீர்­மா­னங்­களை எடுக்க அப்­போ­தைய ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அக்­கறை காட்­டி­யி­ருக்­க­வில்லை என்­ப­தையும் நாம் ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்­டி­யுள்­ளது. அல்­லது அவர்கள் இவ்­வி­ட­யத்தை ஒரு பொருட்­டாகக் கூட கரு­த­வில்லை எனலாம்.

எனினும், புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட கோத்­தா­பய ராஜபக் ஷ தொழி­லா­ளர்­களின் சம்­பள விட­யத்தில் அக்­கறை செலுத்தி அமைச்­ச­ர­வையில் அதற்­கான அங்­கீ­கா­ரத்­தையும் வழங்­கி­யுள்ளார். இதற்குப் பின்­ன­ணியில் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ஆறு­முகன் தொண்­ட­மானும் செயற்­பட்­டி­ருக்­கிறார் என்­பது முக்­கிய விடயம்.

ஏனெனில் ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் இ.தொ.கா முன்­வைத்த 32 அம்சக் கோரிக்­கையில் தொழி­லா­ளர்­களின் சம்­பள விடயம் பற்றி எந்த விட­யங்­களும் இடம்­பெ­ற­வில்லை. தோட்டத் தொழி­லா­ளர்­களின் பிர­தான பிரச்­சி­னை­யாக அதுவே கடந்த இரு தசாப்­தங்­க­ளாக விளங்கி வரு­கின்­ற­மையும் முக்­கிய விடயம். எனினும், தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் தொழி­லா­ளர்­களின் நாட்­சம்­ப­ளத்தை ஆயிரம் ரூபா­வாக்­குவோம் என ஜனா­தி­பதி கோத்­தா­பய அப்­போது கூறி­யி­ருந்தார்.

தோல்­வியை அடுத்து ஏற்­பட்ட சந்­தேகம்

ஆனாலும், நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பொது­ஜன பெர­மு­னவின் தோல்­வி­யை­ய­டுத்து இந்த ஆயிரம் ரூபா விவ­கா­ரமும் அப்­ப­டியே கைவி­டப்­பட்டு விடுமோ என்ற எதிர்­பார்ப்பு அனை­வ­ரி­டத்­திலும் எழுந்­தது. எனினும், அதை பொருட்­ப­டுத்­தாத ஜனா­தி­பதி கோத்­தா­பய தேர்­தலில் தனக்கு ஆத­ர­வாக செயற்­பட்டு வாக்­கு­களைப் பெற்­றுத்­தந்த இ.தொ.கா தலைவர் ஆறு­மு­கனை அமைச்­ச­ராக்­கினார். அதே­வேளை தனது பதவிப் பிர­மாண உரையில் அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்­கு­மான ஜனா­தி­ப­தி­யாக நான் இருப்பேன் என்ற உறு­தி­மொ­ழி­யையும் வழங்­கினார்.

இடையே பெருந்­தோட்­டத்­துறை தொடர்பில் தான் வழங்­கிய வாக்­கு­று­தி­களில் பிர­தா­ன­மான மற்­று­மொரு விட­ய­மான மலை­யக பல்­க­லைக்­க­ழகம் தொடர்பில் உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் உரி­யோ­ருக்கு பணித்தார். அது தொடர்பில் தற்­போது ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. தொழி­லா­ளர்­களின் ஆயிரம் ரூபா தொடர்பில் அமைச்சர் ஆறு­மு­க­னிடம் பல்­வேறு தரப்­பி­னரும் (ஊட­கங்கள் உட்­பட) கேள்­விகள் எழுப்­பி­னாலும் அது நிச்­ச­ய­மாக பெற்­றுத்­த­ரப்­படும் என்றே அவர் கூறி வந்தார்.

அது தொடர்பில் பல­கட்ட பேச்சு வார்த்­தை­களும் இடம்­பெற்று வந்­தன. இந்­நி­லை­யி­லேயே கடந்த 14 ஆம் திகதி அமைச்­ச­ரவை தீர்­மா­னத்தின் படி தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா பெற்­றுத்­த­ரப்­ப­டு­வ­தற்­கு­ரிய நிதியை ஒதுக்­கும்­படி ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உத்­த­ர­விட்­டி­ருந்­தார்கள்.

வெற்றி யாருக்கு?

மார்ச் முதலாம் திக­தி­யி­லி­ருந்து ஆயிரம் ரூபா கொடுப்­ப­னவு வழங்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தாலும் இந்த கொடுப்­ப­ன­வுக்கும் கூட்டு ஒப்­பந்­தத்­துக்கும் என்ன தொடர்பு என்­பது பல­ருக்கு எழுந்­துள்ள கேள்­வி­யாகும். கூட்டு ஒப்­பந்­தத்தில் தற்­போது கிடைத்து வரும் நாட்­சம்­ப­ளத்­துடன் மேல­திக நிவா­ரணத் தொகையும் சேர்க்­கப்­பட்டே (தேயிலைச் சபையின் ஊடாக) இந்த ஆயிரம் ரூபா கிடைக்­க­வுள்­ளது. சில சந்­தர்ப்­பங்­களில் நடை­மு­றை­யி­லுள்ள கூட்டு ஒப்­பந்தம் புதுப்­பிக்­கப்­ப­டுமா இதற்­கும்­விட மேல­திக தொகை தொழி­லா­ளர்­க­ளுக்கு அச்­சந்­தர்ப்­பத்தில் வழங்­கப்­ப­டுமா என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும். ஏனென்றால் கம்­ப­னி­க­ளுக்கு நட்டம் ஏற்­ப­டாத வகையில் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டே தொழி­லா­ளர்­க­ளுக்கு இந்தத் தொகை வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

கூட்டு ஒப்­பந்­தத்தின் படி இவ்­வ­ளவு தான் வழங்க முடியும் அதற்கு மேல் வழங்­கினால் தாம் தோட்­டங்­களை அர­சாங்­கத்­தி­டமே கைய­ளித்து விட்டு செல்ல வேண்டி வரும் என கம்­ப­னிகள் கடந்த காலங்­களில் தொடர்ச்­சி­யாக சொல்லி வந்­தன.

இதை எந்த அர­சாங்­கமும் விரும்­பாது. ஏனென்றால் அர­சாங்­கத்தால் முகா­மைத்­துவம் செய்ய முடி­யாத சந்­தர்ப்­பத்­தி­லேயே தோட்­டங்கள், பெருந்­தோட்ட கம்­ப­னி­க­ளுக்கு குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டன. கம்­ப­னிகள் தமது இலாபம் போக ஒரு தொகையை அர­சாங்­கத்­துக்கு குத்­த­கை­யாக செலுத்தி வரு­கின்­றன. ஆகவே இந்த வரு­மா­னத்தை அர­சாங்கம் இழக்க விரும்­பாது. எனவே கம்­ப­னி­க­ளுக்கு நட்டம் ஏற்­படா வண்ணம் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா வழங்­கப்­ப­டு­வ­தா­னது தொழி­லா­ளர்­க­ளுக்கு மட்­டு­மன்றி கம்­ப­னி­க­ளுக்கும் வெற்­றி­யாக அமைந்த ஒரு சம்­ப­வ­மாகும்.

அதே­வேளை, அடுத்த பொதுத்­தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்­கப்­போகும் அர­சாங்கம் துணி­வாக இனி நுவ­ரெ­லியா மாவட்ட தொழி­லாளர் சமூ­கத்தின் முன்பு போய் நிற்­கலாம். இந்த அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்தால் அடுத்­த­டுத்து பல அபி­வி­ருத்­தி­களை பெற்­றுக்­கொள்­ளலாம் என்ற நம்­பிக்­கையை இ.தொ.கா.வும் தொழி­லா­ளர்கள் மத்­தியில் விதைக்க ஒரு சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது. ஆயிரம் ரூபா நாட் சம்­பளம் என்ற விட­ய­மா­னது ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்பே இ.தொ.கா. வால் முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கையாகும். எனினும் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் அது சாத்தியப்படாமல் போனதற்குக் காரணம் அரசாங்கம் இதில் நேரடியாக சம்பந்தப்படாததாகும்.

அது கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்குமிடையிலான விவகாரம் என அலட்சியப்படுத்தப் பட்டிருந்தது. தற்போது இவ்விடயத்தில் நேரடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

எனவே இதை ஒரு ஆரோக்கியமான நகர்வாகவே பார்க்க வேண்டியுள்ளது. மட்டுமன்றி, இதை நிவாரணத் தொகையாக அரசாங்கம் வழங்கினாலும் தொழிலாளர்கள் அதற்கேற்ற பணியிலும் உற்பத்தி அதிகரிப்பிலும் பங்களிப்பு செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றனர். இதை தொழிலாளர் சமூகமும் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 8 =

*