;
Athirady Tamil News

தமிழ்த் தலை­மை­களின் சாபக்­கேடு!! (கட்டுரை)

0

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்தில் மாற்றம் செய்­யப்­பட்டால், மீண்டும் கூட்­ட­மைப்­பு­டன் இணைந்து செயற்­படத் தயா­ராக இருப்­ப­தாக, ஊடகச் செவ்வி ஒன்றில் வெளி­யிட்ட கருத்தின் மூலம், அர­சியல் வட்­டா­ரங்­களில் மீண்டும் பரபரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார் சி.வி.விக்னேஸ்­வரன்.

அவ­ரது இந்தக் கருத்தை சாத­க­மா­ன­தாக பார்ப்­ப­தாக கூறி­யி­ருக்­கிறார் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களில் ஒன்­றான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன்.

மற்­றொரு பங்­காளிக் கட்­சியின் தலை­வ­ரான புளொட் தலைவர் சித்­தார்த்­தனும், இதனை வர­வேற்­றி­ருந்­தாலும், கூட்­ட­மைப்பின் தலை­மைத்­துவ மாற்றம் உட­னடிச் சாத்­தி­ய­மற்­றது என்ற வகையில் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

ஆனால், பிர­தான பங்­காளிக் கட்­சி­யான தமிழர­சுக் கட்­சியின் பேச்­சா­ள­ரான எம்.ஏ.சுமந்­திரன், கூட்­ட­மைப்பு தலை­மைத்­து­வத்தில் இப்­போது மாற்­றங்கள் செய்­யப்­ப­டு­வ­தற்கு வாய்ப்பே இல்லை என்று கூறி­யி­ருக்­கிறார்.

சி.வி.விக்­னேஸ்­வரன் மாத்­தி­ர­மன்றி, வீ.ஆனந்­த­சங்­க­ரியும் கூட, கூட்­ட­மைப்பில் உள்ள இரா.சம்­பந்தன், எம்,ஏ.சுமந்­திரன், மாவை சேனா­தி­ராசா தவிர்ந்த ஏனை­யோ­ருடன் இணைந்து செயற்­படத் தயார் என்றே கூறுகிறார்கள். கூட்­ட­மைப்பில் அதி­காரம் செலுத்தும் நிலையில் இரா.சம்­பந்தன், சுமந்­திரன் போன்­ற­வர்கள் இருப்­பது தான், வீ.ஆனந்­த­சங்­கரி, சி.வி.விக்­னேஸ்­வரன் ஆகி­ய­வர்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி, சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் போன்­ற­வர்­க­ளுக்கும் பிரச்­சி­னை­யாக இருக்­கி­றது.

கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்தின் நிலை வேறு. அவர் எந்த அணி­யு­டனும் சேரத் தயா­ராக இல்லை.

கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்­துடன், குறிப்­பாக எம்,ஏ.சுமந்­தி­ர­னுடன் முரண்­பட்டுக் கொண்டு வெளி­யே­றி­ய­வர்­கள் தான் அதிகம். சுமந்­திரன் தன்­னிச்­சை­யாக முடி­வு­களை எடுக்­கிறார் என்­பது இவர்கள் வெளிப்­ப­டை­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ முன்­வைக்­கின்ற குற்­றச்­சாட்­டாக இருந்து வந்­தி­ருக்­கி­றது.

சம்­பந்­தனே கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக இருந்­த­போதும், சுமந்­தி­ரனே செயற்­பாட்டுத் தலைவர் போல இருக்­கிறார் என்­பது வெளிப்­ப­டை­யான உண்மை. அந்த விட­யத்தில் கட்­சிக்குள் கூட, முரண்­பா­டுகள், மாற்றுக் கருத்­துக்கள் உள்­ளன.

கூட்­ட­மைப்பின் மூத்த தலை­வர்­க­ளான இரா.சம்­பந்தன், மாவை ஆகி­யோ­ருடன், சுமந்­தி­ர­னையும் ஒதுக்­கி­விட்டால், அத­னுடன் இணைந்து செயற்­பட பலரும் தயா­ரா­கவே இருப்­ப­தாக கூறிக் கொண்­டாலும், அது நடை­முறைச் சாத்­தி­ய­மான ஒன்றா என்­பது சந்­தேகம் தான்.

சி.வி.விக்­னேஸ்­வரன் எதிர்­பார்ப்­பது போல, கூட்­ட­மைப்பின் தலை­மைத்­துவம் மாற்­றப்­ப­டு­வது என்­பது, இயல்­பான சூழலில் நடக்க வேண்­டுமே தவிர, ஒரு முன்­நி­பந்­த­னைக்­குட்­பட்­ட­தாக அது இடம்­பெற வாய்ப்­பில்லை.

அவ்­வாறு தலை­மைத்­துவம் மாற்­றப்­பட்டால், கூட்­ட­மைப்பில் ஆளுகை செலுத்தப் போவது யார் என்ற கேள்­வியும் உள்­ளது.

கூட்டுத் தலை­மைத்­துவம், அதற்­கான பொறி­மு­றைகள் என்­பன காத்­தி­ர­மான யோச­னை­க­ளாக இருந்­தாலும், அதனைச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு 2020 பொதுத்­தேர்­த­லுக்கு முன்­ன­தாக உள்ள குறு­கிய இடை­வெளி போதாது.

ஏனென்றால், சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான மாற்­று­அ­ணியே தமக்குள் ஒரு உடன்­பாட்­டை செய்து கொள்ள முடி­யாமல் திண­று­கி­றது. அதில் சிறிய கட்­சிகள் தான் அங்கம் வகிக்­கின்ற போதும், அந்த மாற்று அணிக்­கு­ரிய தலை­மைத்­து­வத்தை ஏற்­ப­டுத்­து­வதில், ஆச­னங்­களைப் பகிர்ந்து கொள்­வதில் இன்­னமும் உடன்­பாட்டை எட்ட முடி­ய­வில்லை.

கூட்­டணி அறி­விப்பு இதோ வெளி­யா­கி­றது என்று பல­முறை செய்­திகள் வெளி­யாகி விட்­டன.

ஆனால் அந்த அறி­விப்பு மாத்­திரம் வர­வில்லை. தனியே ‘பொங்கல் பானை’ தான் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் சின்னம் என்று மட்டும் கூறி­யி­ருக்­கிறார் சி.வி.விக்­னேஸ்­வரன்.

அந்த அறி­விப்பைக் கூட ‘பொங்கல் பானை’ தான் எமது சின்னம் என்று அவர் முறை­யாக அறி­விக்­க­வில்லை.

‘‘பொங்கல் பானை’ தான் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் சின்னம் என்று உங்­க­ளுக்குக் கூறித் தெரிய வேண்­டி­ய­தில்லை” என்று அவர் தைப்­பொங்கல் வாழ்த்துச் செய்­தியில் மறை­மு­க­மாகத் தான் குறிப்­பட்­டி­ருந்தார்.

ஏன் அவர் அவ்­வாறு பூட­க­மான வாக்­கி­யத்தை அமைத்தார் என்­பது மர்­ம­மா­கவே உள்­ளது. ஏனென்றால் அது சாதா­ரண மக்­களால் இல­குவில் விளங்கிக் கொள்ள முடி­யா­தது.

அதை­விட, பொங்கல் பானை சின்­னத்தை முன்னர் யாரும் அறிந்­தி­ருக்­கவும் இல்லை.

மற்­றொரு புறத்தில் பொதுத்­தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான ஆசன ஒதுக்­கீடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஒரு உடன்­பாடு எட்­டப்­பட்டு விட்­டது.

அதிலும் ரெலோ, யாழ்ப்­பாண மாவட்­டத்தில் போட்­டியில் நிறுத்­து­கின்ற தமது வேட்­பா­ள­ராக சுரேந்­திரன் குரு­சாமி என்­ப­வரை அறி­வித்து விட்­டது.

நாடா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டாமல், பொதுத்­தேர்தல் அறி­விப்பே வெளி­யி­டப்­ப­டாத நிலையில், நாடு முழு­வ­தி­லுமே, அறி­விக்­கப்­பட்­டுள்ள முதல் வேட்­பாளர் இவர் தான்.

இவ்­வா­றாக தேர்­த­லுக்­கான தயா­ரிப்­பு­களில் கட்­சிகள் இறங்­கி­யுள்ள நிலையில் தான், தலை­மையை மாற்­றினால் இணைந்து செயற்­படத் தயார் என்று அறி­வித்­தி­ருக்­கிறார் சி.வி.விக்­னேஸ்­வரன்.

தமிழ்த் தேசியக் கட்­சிகள் மத்­தியில் ஒற்­றுமை இருக்க வேண்டும் என்­பது, தமிழ் மக்­களால் வருத்­தத்­துடன் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்ற விட­ய­மாக இருந்­தாலும், அதனை தமிழ் அர­சியல் கட்­சி­களோ, தலை­மை­களோ கண்டு கொள்­வ­தாக இல்லை.

கட்­சி­களை உடைத்து புதிய கட்­சி­களை உரு­வாக்­கு­வதும், புதிய கூட்­டுகள், அணி­களை உரு­வாக்­கு­வ­து­மாக இருக்­கின்­றன.

ஒரு பக்­கத்தில் அர­சாங்கம் தமி­ழர்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு சாத­க­மான சட்­டங்­களை மாற்­றி­ய­மைக்கத் திட்­ட­மிட்­டுள்­ளது. அதற்­காக பொதுத்­தேர்­தலில் மூன்றில் இரண்டு பங்கு ஆச­னங்­களைக் கைப்­பற்றி நாடா­ளு­மன்­றத்தை வசப்­ப­டுத்தும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளது.

பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியும் உள்­ளக மோதல்­களால் சீர­ழிந்து கொண்­டி­ருக்­கி­றது.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில், தமிழ்­மக்­களின் பலம், தெளி­வான முறையில் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது முக்­கியம்.

அதற்கு, தமிழ்க் கட்­சிகள் பிரிந்து சிதறி போட்­டி­யி­டாமல், ஒருங்­கி­ணைந்து போட்­டி­யிட வேண்டும். ஆனால் தமிழ்க் கட்­சிகள் மத்­தியில் அத்­த­கைய ஒற்­று­மையும் இல்லை, அவ்­வாறு போட்­டி­யிடும் எண்­ணமும் இல்லை.

தனக்கு மூக்குப் போனாலும் பர­வா­யில்லை, எதி­ரிக்கு சகுனப் பிழை­யாகி விட வேண்டும் என்­பது தான், பெரும்­பா­லான தமிழ்க் கட்­சி­களின் இலக்­காக இருக்­கி­றது.

தமிழ் அர­சியல் தலை­வர்கள் என்று கூறிக் கொள்­ளு­கின்ற அத்­தனை பேரும், இதற்கு விதி­வி­லக்­கா­ன­வர்கள் அல்ல.

இவ்­வா­றா­ன­தொரு மனோ­நி­லையில் இருந்து கொண்டு, தமிழ் அர­சியல் தரப்­புகள் அனைத்­தையும் ஒன்­றி­ணைப்­பது சாத்­தி­ய­மா­னது அல்ல.

பல கட்­சி­களைக் கொண்டு வந்து, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உரு­வாக்­கமும் கூட, விடு­தலைப் புலி­களின் ஆயு­த­ப­லத்­தினால் தான் சாத்­தி­ய­மா­னது. கூட்­ட­மைப்­புக்கு புலி­களின் ஆசி இருந்­ததால், அந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்டு, வெளிப்­ப­டை­யாக அர­சியல் செய்ய பல கட்­சிகள் முன்­வந்­தன.

அது­போன்­ற­தொரு மேலா­திக்கம் செலுத்­தக்­கூ­டிய நபர்­களோ, அமைப்­பு­களோ எதுவும் தற்­போது கிடை­யாது. அதனால் தமிழ்க் கட்­சிகள் ஒவ்­வொன்றும் தமது நலன்­களை அடிப்­ப­டை­யாக வைத்தே செயற்­ப­டு­கின்­றன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சுய­ந­ல­மாகச் செயற்­ப­டு­கி­றது என்ற விமர்­ச­னங்­களில் எந்­த­ள­வுக்கு நியாயம் உள்­ளதோ, அதே­ய­ள­வுக்கு அதற்கு மாற்­றான அர­சியல் செய்யும் கட்­சிகள், தரப்­பு­களின் செயற்­பா­டு­க­ளிலும் விமர்­ச­னங்கள் உள்­ளன.

தலை­மையை மாற்­றினால் கூட்­ட­மைப்­புடன் இணைந்து செயற்­ப­டலாம் என்று இப்­போது கூறும் சி.வி.விக்­னேஸ்­வரன், அந்த தலைமை மாற்றம் தான் பிரச்­சினை என்றால், அந்த மாற்­றத்­துக்­காக அவர் ஏன் உள்­ளி­ருந்தே போரா­ட­வில்லை?

உள்­ளி­ருந்து போராடி, தலை­மைத்­து­வத்தை மாற்ற முயன்­றி­ருக்­கலாம். அதற்­கான ஆத­ர­வையும், தளத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருக்­கலாம்.

இதே வாதம், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்­துக்கும், சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ர­னுக்கும், சிவா­ஜி­லிங்கம்- சிறி­காந்­தா­வுக்கும் கூட பொருத்­த­மா­னது தான்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் குறிப்­பாக இரா..சம்­பந்தன், சுமந்­திரன், மாவை சேனா­தி­ராசா, சிவிகே.சிவ­ஞானம் போன்­ற­வர்கள்- “கூட்­ட­மைப்பில் இருந்து நாங்­க­ளாக யாரையும் வெளி­யேற்­ற­வில்லை அவர்­க­ளா­கவே பிரிந்து போனார்கள், அவர்கள் திரும்பி வரலாம். வந்தால் இட­மி­ருக்கும்” என்று ஒரு வாதத்தை முன்­வைக்­கி­றார்கள். பிடி­கொ­டுக்­காமல் பேசு­கி­றார்கள்.

அது ஒரு­வ­கை­யில உண்­மை­யான கருத்து தான். கூட்­ட­மைப்பில் இருந்து எந்தக் கட்­சியும் தலை­வரும் வெளி­யேற்­றப்­ப­ட­வில்லை. அவர்­க­ளா­கவே விலகிப் போனார்கள்.

அவ்­வா­றா­ன­தொரு நிலை- அல்­லது நெருக்­கடி அவர்­க­ளுக்கு வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­களில், வெவ்­வேறு சூழ்­நி­லை­களால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அல்­லது ஏற்­பட்­டது.

அப்­போது, உள்­ளி­ருந்து போரா­டு­வதை விட வெளியே போய் தனிக்­கட்சி, கூட்­டணி அமைக்கும் தெரி­வு­களைத் தான் அவர்கள் கையில எடுத்­தி­ருந்­தார்கள்.

அவ்­வாறு வெளி­யே­றி­ய­வர்­களால், இதுவரையில் தனியாகவோ, கூட்டாக சாதிக்கவோ முடியவில்லை. தமக்கான மக்கள் ஆதரவை நிரூபிக்கவும் முடியவில்லை.

இனிவரும் தேர்தல்களில் அவர்கள் அதனை சாதிக்கலாம், நிரூபிக்கலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், அவ்வாறான சாதனைகள் கட்சிகள், கூட்டணிகளுக்கு சாதகமாக அமையலாமே தவிர, தமிழ் மக்களுக்கு, அவ்வாறாக இருக்கப் போவதில்லை.

தமிழ்த் தேசிய கட்சிகள் சிதறிப் பிரிந்து போட்டியிடும் போது, அதன் பலாபலன்களை பேரினவாதக் கட்சிகள் தான் அனுபவிக்கும். அது இந்தப் பொதுத்தேர்தலில் நிச்சயமாக வெளிப்படும் சாத்தியங்கள் உள்ளன.

இவ்வாறான சூழலில் கூட, தலையணையை மாற்றினால் தலைவலி போய் விடும் என்று நம்புகின்ற நிலையில் தான் தமிழ்க் கட்சிகளின் தலைமைகள் இருக்கின்றன.

ஒட்டுமொத்த தமிழ் தேசிய அரசியல் பலம் பற்றியோ, அதனை யாரிடமும், எந்த இடத்திலும், விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பது பற்றியோ சிந்திக்கக் கூடிய நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் இல்லாமல் இருப்பது தான் சாபக்கேடு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 3 =

*