;
Athirady Tamil News

கொரோனா பீதிக்கு மத்தியில் பஞ்சாங்கம் தரும் நற்செய்தி!! (கட்டுரை)

0

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகமே பதறிப் போய்க் கிடக்கும் இந்த சுழ்நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்துக்களின் பஞ்சாங்கக் கணிப்பு. ஏப்ரல் 4ஆம் திகதி(இன்று) உலகிற்கு ஒரு நற்செய்தி கிடைக்கும் என்று விகாரி வருடத்து ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு பிறந்த போது நன்றாகத்தான் இருந்தது. மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட மரண பயம் ஏப்ரல் தொடங்கியூம் முடிந்தபாடில்லை. யாரும் யாரையூம் நேரில் பார்த்து பேச முடியாத சுழ்நிலை உருவாகி விட்டது. அக்கம் பக்கத்தினருடன் கூட பேச முடியவில்லை. ஆறுதலாக சில வார்த்தைகள் கூற முடியவில்லை. தொட்டால் குற்றம்இ சேர்ந்து நின்றால் நோய் தொற்றிக் கொள்ளும் என்று மாறி மாறி சொல்வதால் அவரவர்கள் வீடுகளில் மக்கள் முடங்கிப் போயிருக்கிறார்கள். என்றைக்கு இந்த பிரச்சினை தீரும். சகஜமாக மக்கள் என்றைக்கு நடமாடப் போகிறார்கள் என்று அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

விகாரி வருடம் முடியப் போகிறது. சார்வரி வருடம் பிறக்கப் போகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமே இந்த பஞ்சாங்கம் எழுதப்பட்டு வெளியிடப்பட்டு விடும். நவக்கிரகங்களின் சஞ்சாரம்இ கோள்களின் சேர்க்கைஇ பார்வைஇ நாள் நட்சத்திரங்களின் அடிப்படையில் பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பஞ்சாங்கத்தில் புதிய வைரஸ் தாக்கும் உலகத்தை ஆட்டிப் வைக்கும் என்று கணித்துள்ளது. சொன்னது போலவே டிசம்பரில் சீனாவில் உருவான கொரோனா உலகத்தை வளைத்துள்ளது.

இந்த சுழ்நிலையில்தான் ஏப்ரல் 4ஆம் திகதி உலகிற்கு ஒரு நற்செய்தி கிடைக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. ஏப்ரல் 4ஆம் திகதி பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமைஇ ஏகாதசி திதி. இந்த நாள் சிறப்பான நாள்இ இந்த நல்ல நாளில் பெருமாளை நினைத்து வணங்கி பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாத்தி வணங்கலாம். சங்கடங்கள் தீரும். நோய் பயம் போகும்.

அதே நேரத்தில் உலகத்திற்கு கிடைக்கக் கூடிய நல்ல செய்தி கொரோனா பற்றிய அச்சத்தை போக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இனி வரக் கூடிய நாட்கள் எல்லாமே சவாலான நாட்கள்தான்.

ஏப்ரல் 4ல் நற்செய்தி கிடைக்கும் என்று கணித்துள்ள பஞ்சாங்கத்தில்தான் ஏப்ரல் 5ஆம் திகதி இராமேஸ்வரத்தில் ஒரு அதிசயம் நிகழும் என்று கணித்துள்ளது. ஏப்ரல் 6ஆம் திகதி பங்குனி உத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நாள்இ கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தால் முருகன் கோவில்களில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 8 முதல் 12 வரை பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளவை பீதியை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன.

இராமநாதபுரத்தில் மதக்கலவரம் வெடிக்கும் என்றும் முக்கிய நகரத்திற்கு ஆபத்து என்றும் கணித்துள்ளது. அதே போல குற்றால அருவியில் அதிசய நிகழ்வூ இருக்கும். அயல்நாடுகளில் பூகம்பம் ஏற்படும் என்றும் கணித்துள்ளது. வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் கலவரம் வெடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம், புயல் பற்றியூம் வைரஸ் தாக்குதல், வெட்டுக்கிளி தாக்குதல் பற்றியூம் பஞ்சாங்கம் கணித்தது பலித்தது. இப்போது உலகத்திற்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது பலிக்க வேண்டும் என்பதே மக்களின் பிராத்தனையாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 7 =

*