;
Athirady Tamil News

பாலியல் நோயா கொரோணா? பரிசோதனை செய்து கொள்ள அஞ்சும் மக்கள்? (கட்டுரை)

0

அண்மைகாலத்தில் காலையில் எழுந்தாலே கொரோணா பற்றிய பேச்சாக தான் இருக்கிறது. இதிலும் பல பொய்யான செய்திகளும் வதந்திகளும் பரப்பப்படுவதால் மக்கள் பலர் அச்சத்திற்குள்ளாகி இருக்கும் அதேவேளை இந்த தொற்று நோயை பாலியல் நோய் போல கருதி அது சார்ந்து கேளிக்கையான பதிவுகளை பரப்புவதால் இந்த நோயை பரிசோதனை செய்து கொள்ளவும் மக்கள் பயப்படுகிறார்கள். எனவே இது சார்ந்த விளக்கத்தினை மக்களும் பெற்றுக் கொள்வதற்காகவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.

முதலில் கொரோணா வைரஸ் என்றால் என்ன என்பது பற்றியும் அது எவ்வாறு பரவுகிறது. இவற்றில் இருந்து தப்பிபிழைத்து வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பார்ப்போம்.

கொரோணா வைரஸ் அல்லது கொவிட் 19 covid19 என்றால் என்ன?
கொரோணா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கொவிட்_19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோணா வைரஸால் ஏற்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக கொரோணா வைரஸ் தொற்று நோயானது பாலியல் நோய் போன்று வேடிக்கையாகவும் கேளிக்கையாகவும் பார்க்கப்படுவதால் நோயை பரீட்சீத்துக் கொள்ள பயந்து ஒழிந்து கொள்கிறார்கள் பலர். நானும் முகநூலில் சில பதிவுகளை பார்க்கும் போது
” கணவனுக்கு வந்த கொரோணா வைரஸ் மனைவிக்கு தொற்றாமல் மைத்துனிக்கு தொற்றியுள்ளது” இந்த செய்தியானது பரபரப்பை ஏற்படுத்தியதோடு இது ஒரு பாலியல் நோய் போலவும் பார்க்கப்படுவதை கவனிக்க முடிகிறது.இது கேரளாவில் இடம்பெற்ற சம்பவம்.

அடுத்து “இத்தாலியில் மருத்துவரான காதலி மூலம் தனக்கு கொரோணா தொற்றியிருப்பதாகக் கருதி காதலியை கொலை செய்த இத்தாலிய இளைஞன்” இந்த இளைஞன் தன் காதலியோடு சேர்ந்து வாழ்ந்த பட்சத்திலே இவ்வாறு சந்தேகப்பட்டு காதலியை கொன்றதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து கொரோணா வைரஸ் பரவலின் போது பாலியல் உறவுக்கான கணவரின் கோரிக்கையை பெண்கள் நிராகரிக்க முடியும்- சவுதி அரேபிய மதபோதகர் தெரிவிப்பு என்றவொரு செய்தியும் வெளியாகியிருந்தது.

உண்மையில் இது ஒரு பாலியல் தொற்று நோயா என்பதை பற்றி நானும் தேட ஆரம்பித்தேன். இந்த தேடலின் முதற்கட்டமாக கொரோணா பாதிப்பை கட்டுப்படுத்தலாமா? என்ற தலைப்பில் ஓர் விழிப்புணர்வு நேரலையை web conference செய்வதற்கு நானும் நண்பர்களும் திட்டமிட்டிருந்தோம்.

கடந்த 01/04/2020 காலை பத்து மணியளவில் நேரலையில் கொரோணா வைரஸ் covid19 பற்றிய விழிப்புணர்வு நேரலையில் பேச்சாளராக கலந்து கொண்டு வடக்கு கிழக்கின் கல்வித்துறையில் இதன் தாக்கமும் இதிலிருந்து மீழெழுவதற்கான வழிமுறைகள் பற்றியும் தன் எண்ணங்களைப் பகிர்வதற்கு BEETA GROUP OF COMPANIES இன் ஸ்தாபகர் கலாநிதி திரு S.V.விஜிதரன் அவர்களும் நேரலையாக இணைந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கியிருந்த அதே வேளை “இது ஒரு பாலியல் நோய் அல்ல பரிசோதனை செய்வதற்கு வீணாகப் பயப்படத்தேவையில்லை” என அவர் தெரிவித்திருந்தார்.

முத்தமிடுவதன் மூலம் கொரோணா பரவ வாய்ப்பிருக்கிறது. என்றே வல்லுஞர்கள் கருதுகிறார்கள் அதே நேரத்தில் உடலுறவு மூலம் கொரோணா பரவும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்கிறார்கள் வல்லுஞர்கள்.

இந்த கொரோணா தொற்று எவ்வாறு பரவுகிறது என்ற சரியான அறிவை பெற்றுக் கொள்வதன் மூலமும் அவற்றிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும் சரியாக தெரிந்து கொள்ளாமையே மேலே சொல்லப்பட்ட செய்திகளின் அடிப்படைக்காரணமாக காணப்படுகிறது.

எனவே இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை பார்த்தோமானால்
கொரோணா ஒரு உலகளாவிய தொற்று நோயாகும். இது ஒரு பாலியல் நோயில்லை. Covid19 ஒருவர் மூலம் குறைந்தது 400 பேருக்கு பரவுமாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பரவும் முறை பார்ப்போம்

பரவல் முறை
கொரோணா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தும்மல், இருமல், வழியாக பரவக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின் இந்த கொராணா வைரஸ் வேறு எவ்வாறெல்லாம் பரவக்கூடும் என ஆராய்ந்தனர். வெளியிடத்தில் ஒவ்வொரு பொருளின் மீதும் எவ்வளவு காலம் வாழும் என்ற ஒரு பட்டியலை ஆய்வாளர்கள் வெளியிட்டனர். கொடிய கொரோணா வைரஸ் தூசுப்படலங்களில் மூன்று மணி நேரம் வரையும், தாமிரம்/செம்பில் நான்கு மணிநேரம் வரையும், அட்டைப்பெட்டியில் 24 மணி நேரம் வரையும், பிளாஸ்திக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்/எஃகு பொருட்களின் மீது இரண்டு முதல் மூன்று நாள்கள் வரையும் உயிருடன் இருக்கக்கூடியது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை நாடுவதும் தனிமைப்படுத்திக் கொள்வதும் முக்கியமாகும்.
சீனாவில் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோணா வைரஸ் ஒருவரைத் தாக்கினால், அது பின்வரும் அறிகுறிகளை வெளிக்காட்டும்.
அவை சளி, காய்ச்சல், வறண்ட இருமல், தொண்டை வறட்சி, லேசான நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை. சிலருக்கு இந்த வைரஸ் தொற்றால். வயிற்று பிரச்சினைகளான வயிற்றுப்போக்கு , வயிற்று வலி, செரிமான பிரச்சினைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

புதிய அறிகுறிகள்
இதுவரை கொரோணா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சளி, இருமல், காய்ச்சல் , வயிற்று பிரச்சினைகள் போன்றவற்றால் அவஸ்தைப்படக் கூடும் என்றுதான் பலரும் நினைத்தோம். ஆனால் இந்த வைரஸ் தாக்கப்பட்ட நோயாளிகளுள் சிலர் நாவில் சுவை தெரியாமல் இருந்ததாகவும், அதே சமயம் வாசனை எதுவும் தெரியாமல் இருந்ததாகவும் கூறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நோய் வந்தால் தனிமைப்படுத்திக் கொள்வதே தீர்வாகும் இதனை தெளிவாக கூறாமல் பாலியல் உறவுக்கு மறுப்பு தெரிவிக்கலாம் என போதகர் தெரிவித்த யோசணையானது இது பாலியல் நோய் என்பது போல மக்கள் விளங்கிக் கொள்ள வழிவகுத்துவிடும். அத்தோடு சமூக வலைத்தளங்களில் பேசப்படுகின்ற கேலிப்பேச்சுகளும் இவ் நோய் பாலியல் நோய் என்ற அச்சத்தை தோற்றுவித்து பரிசோதனை செய்து கொள்ள பயந்து ஒழிந்து கொள்ளவும் காரணமாகி விடுகின்ற அதே வேளை பாலியல் உறவில் ஈடுபட்டதன் மூலம் டாக்டரான தன் காதலி மூலம் தனக்கும் நோய் ஏற்பட்டு விட்டதாக பயத்திலே தன் காதலியை கொலை செய்ததாக தன்னுடைய கொலையை நியாயப்படுத்தி இருக்கிறார் இத்தாலியில் வாழும் இளைஞன். ஆனால் அவருக்கோ அவரது டாக்டர் காதலிக்கோ கொரோணா தொற்று ஏற்படவில்லை என மருத்துவ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்த்தீர்களா நமது அறிவீனத்தால் ஏற்படும் விளைவுகளை தயவு செய்து இவ்வாறான போலிச்செய்திகளையும் தகவல்களையும் தவிர்த்து நம் சமூகத்தை காத்திட அறிவை வளர்த்துக் கொல்லுங்கள். அறிவால் உலகை வெல்லுங்கள். மற்றும் கொரோணா தொற்றிலிருந்து எம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுகாதாரமான வாழ்க்கை முறையையும் உணவுப்பழக்கத்தினையும் கடைப்படியுங்கள். முடிந்தவரை கூட்டமாக செல்வதை தவிர்த்து வீட்டில் இருங்கள். அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்

நன்றி
பிரியா நடேசன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 14 =

*