;
Athirady Tamil News

சமூக இடைவெளியை தவறிய மக்கள்!! (கட்டுரை)

0

நாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் வடக்கிலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பலர் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது தவித்து வருகின்றனர். அந்த நிலையில் வடக்கில் நேற்று[ 20.04.2020] ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது தமது சொந்த இடத்திற்கு மீள திரும்பும் நடவடிக்கையில் குறித்த மக்கள் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் மிகவும் நெருக்கமாகவும் இடைவெளி இன்றியும் தமக்குரிய பகுதியில் அலுவலர்கள் எவருமின்றி காத்திருந்தனர். சிலர் நிழல் பகுதியில் அடுக்கப்பட்டிருந்த கதிரைகளிலும் , சிலர் கட்டட தூண்களிலும் , புல் தரையிலும் காத்திருந்தனர். மக்கள் முகக் கவசங்கள் அணிந்த போதும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்த பட்டாலும் மக்கள் எந்த அவசரமும் இன்றி சுகாதார நடைமுறைகளையும் சமூக இடை வெளியினை பின்பற்றி தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கவும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நேற்று முன்தினம் [19.04.2020] யாழ்மாவட்ட மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள போதும் .குறித்த விடயத்தினை யாழ்.மாவட்ட செயலகத்தின் எந்த அலுவலரும் நெறிப்படுத்தியதாகவும் தெரியவில்லை.

வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு சில நடைமுறைகள் விதிக்கப் பட்டுள்ளன. அந்த நடைமுறைகளின் பிரகாரம் அவற்றிற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளும் வரை மாவட்ட செயலகத்திற்கு வருகை தர வேண்டாம் என்றும் வீடுகளில் இருக்கும் படியும் கடந்த வாரம் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அறிவிப்பு செய்திருந்தார் . இருந்த போதும் மீள ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தும் முன் தமது இருப்பிடங்களுக்கு செல்ல விரும்பிய மக்கள் தமது பாதுகாப்பு குறித்தும் அக்கறை கொள்ளவில்ல.

யாழ் நகரில் வங்கி மற்றும் மருந்தகம் , கடைகள், என்று மேலதிகமாக இராணுவமும் போலீசாரும் கடமையில் உள்ளனர். அவர்களின் வழிப்படுத்தலை செவிமடுக்கும் மக்கள் சுய கட்டுப்பாடு இன்றி தமது பயண அனுமதிக்காக கூட்டம் கூடிய நிலையில் மாவட்ட செயலகத்தில் காத்திருந்தனர். இது குறித்து வவுனியாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் குறிப்பிடுகையில். நாங்கள் இருக்கும் முகவரிக்குரிய பகுதி விதானையிடம் கடிதம் வாங்கி பிரதேச செயலாளரிடம் குடுத்து சைன் வாங்கினோம். எங்கட பிரிவுக்குரிய எம் .ஓ .எச் இடம் போய் மெடிக்கல் வாங்கிக் கொண்டு வந்தனங்கள் . ஜி .ஏ யிட்ட குடுத்தால் சரி எண்டு சொன்னவை.

நான் அவசரம் வீட்டை டை போகவேணும் . போகவழி இல்லாமல் நிக்கிறன் .அரசாங்கம் தானே எங்களுக்கு வழி செய்ய வேணும் .என்றவர் தாம் முக கவசம் அணிந்திருப்பதால் சனக்கூட்டத்துக்க நிக்கலாம் தானே. காலையில் 11 மணியில் இருந்து நிக்கிறன் . எங்களுக்கு முதல் அப்பிளிகேஷன் குடுத்தவையும் இருக்கினம் போல. இப்ப சாப்பாட்டு நேரம் இனி 2 மணிக்கு தான் வருவினம் போல . வரத்தான் என்ன என்று தெரியும் ”என்ற அவரின் பதிலுடன் . சாப்பாட்டு நேரம் முடியும் வரை அந்த மக்கள் அந்த அலுவலக கவுண்டரை மொய்த்தபடி நின்றமையினைக் காணமுடிந்தது.

மேலும் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்து தற்பொழுது தமது சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாது யாழ்ப்பாண மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் தமது பதிவுகளை தாங்கள் வசித்து வரும் கிராமசேவையாளர் மற்றும் அந்தப் பிரிவு பிரதேச செயலரிடம் பதிவினை மேற்கொள்ளுமாறும் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான அனுமதி தேசிய மட்டத்தில் வழங்கப்பட்டதன் பின்னர் தங்களை அனுப்புவதற்குஉரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யாழ் மாவட்ட செயலகத்துக்கு வருவதை தவிர்த்து வீடுகளில் இருக்குமாறும் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கடந்த 10.04.2020 அன்று தெரிவித்துள்ள நிலையில் இன்று [ 21.04.2020] இம் மக்கள் கூட்டத்தினை செயலக வளாகத்தில் காண முடிந்தமை குறிப்பிடத்தக்கது .

யாழ்.தர்மினி பத்மநாதன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 19 =

*