;
Athirady Tamil News

குப்பை கூளங்களால் நிரம்பும் யாழ்ப்பாணம் மாநகரம்.!! (கட்டுரை)

0

கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக நாடு முடக்கப்படட நிலையில் உள்ளமையினால் குப்பை குப்பை கூளங்களும் துப்பரவு செய்யப்படாமல் நிரம்புவதுடன் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக யாழ் மாநகர சபை எல்லைகளான ராசாவின் தோட்டம், ஆரியகுளம், வைத்தியசாலை வீதி, பெரிய கடை, பள்ளிவாசல் என்று சுற்றிச் சுற்றி எங்கும் குப்பை மையமாகவும், அவற்றை நாய்கள் தெருவெங்கும் இழுத்துப் போட்டு அசிங்கம் செய்வதனையும் காணக் கூடியதாக உள்ளது. மேலும் பலரது வீட்டு வாசல்களில் உரை பையில் அடைக்கப் பட்டவாறு குப்பைகள் தவம் கிடக்கின்றன. இது குறித்து யாழ் நகரைச் சேர்ந்த ராஜினி என்பவர் குறிப்பிடும் போது

சாதாரண நிலைமைகளின் போதே குறித்த நேரத்தில் குறித்த காலத்தில் குறித்த முறைப்படி திண்மைக் கழிவு அகற்றும் செயற்பாடு இடம்பெறுவதில்லை. இது இவ்வாறு இருக்க ஊரடங்கு காலத்தில் யார் வருவார்கள். ? நாம் வீட்டுக்குள் இருக்க வேண்டும் மாநகரசபை ஊழியர்கள் எப்படி வெளிய வரவேண்டும் என்று நினைக்க முடியும்?. அவர்களுக்கும் பாதுகாப்பு தேவை என்று தானே சொல்வார்கள்.

அதனால் தான் நாம் எங்களின் வீட்டு வாசலில் வைத்தே எரிக்கின்றோம். மாநகர சபை ட்ரைக்ரர் வாற் நேரம் வரட்டும் என்ற அவர் மேலும் தெரிவிக்கையில் வருசப் பிறப்புக்கு அடுத்த நாள் வீடு வீடாய் வந்து நாளைக்கு குப்பை எடுக்க வருவம் என்று சொல்லிட்டு வருசத்துக்கு கைவிசேஷம் தர சொல்லி கேட்டு வாங்கினவை ஆனால் பிறகு வரவில்லை. ”நாங்கள் அடிக்கடி ரோட்டைப் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறம் வந்தால் தான் தெரியும் என்றார். ஆயினும் கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டங்களில் நேரகாலமின்றி யாழ் நகரின் மத்தியில் சில சுகாதார நடவடிக்கைகளில் மாநகரசபை ஈடுபட்டிருந்த போதிலும் ஊரடங்கின் பின் நகர தூய்மையாக்கல் இடம்பெறாதிருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி பத்மநாதன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*