;
Athirady Tamil News

காங்கிரஸ் தேய்ந்து கட்டெறும்பு ஆனது! (கட்டுரை)

0

அடுத்த தலைவர் யார்?

பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடுகிறது செயற்குழு

காங்கிரஸ் கட்சியில் இன்று நடைபெற உள்ள காரிய கமிட்டி கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்ற கேள்வி கடந்த ஒரு வருடமாகவே விவாதம் செய்யப்பட்டு வந்தது.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அதன் தலைமைக்கு பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. என்ன நடந்தாலும் மீண்டும் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்க மாட்டேன் என்று ராகுல் அறிவித்து விட்டார். இந்த நிலையில் தற்போது சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருக்கிறார். ஆனால் இவரும் கூட வேண்டா வெறுப்பாகவே இடைக்கால தலைவராக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சிக்குள் சிரேஷ்டர்கள் பலர் கடும் குழப்பத்தில் இருக்கிறார்கள். தற்போது இருக்கும் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலிமையான முடிவுகளை எடுப்பதில்லை. ஒரு பேட்டி கூட அவர் கொடுப்பது இல்லை. கட்சியில் ஏதாவது பெரிய பிரச்சினை என்றால் அவர் முடிவு எடுப்பது இல்லை, அனைத்திற்கும் தயக்கம் காட்டுகிறார். சோனியா அவ்வளவு சுறுசுறுப்பாக இப்போது இல்லை என்று காங்கிரஸ் சிரேஷ்ட தலைவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் காங்கிரஸ் கட்சிக்கு அதிரடியான தலைவர் ஒருவர்தான் தேவை என்று சிரேஷ்ட தலைவர்கள் கூறுவதாகத் தெரிகிறது. சோனியா, ராகுல், பிரியங்கா இல்லாமல் வேறு ஒருவர் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும். மொத்தமாக காரிய கமிட்டியில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அனைத்து மாநில காங்கிரஸ் கட்சியிலும் புதிய தலைவர்களை, செயலாளர்களை களமிறக்க வேண்டும், என்று சிரேஷ்ட தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதிலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று மொத்தமாக நேரு குடும்பத்திற்கு எதிராக சிரேஷ்ட தலைவர்கள் கொதித்துப் போய் உள்ளதாக கூறுகிறார்கள். ராகுலும், சோனியாவும் கடந்த ஒன்றரை வருடமாக எதுவும் செய்யவில்லை. மாநிலங்களில் தேர்தலில் வென்றும் கூட ஆட்சியை இழந்து வருகிறோம். ஆனால் இதற்கு இவர்கள் எதுவும் செய்யவில்லை. இதனால் தலைமைக்கு பொறுப்பான தலைவர் ஒருவரை கொண்டு வர வேண்டும் என்று சிரேஷ்ட தலைவர்கள் கூறி வருகிறார்கள் .

இன்று காங்கிரஸ் கட்சி சார்பாக காரிய கமிட்டி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டம் முழுக்க முழுக்க சோனியா மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் என்பதை மட்டுமே மையமாக வைத்து நடக்கும் என்கிறார்கள். சோனியா ஒன்று பதவி விலகி புதிய தலைவருக்கு வழி வகுக்க வேண்டும். அல்லது சோனியாவிற்கு ஆதரவாக முடிவு எடுக்கக் கூடிய அதிகாரம் கொண்ட இரண்டு துணை தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த கூட்டத்தின் கோரிக்கை என்கிறார்கள்.

சோனியாவிற்கு எதிரான கூட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. அதிலும் சோனியாவிற்கு எதிராக 23 மூத்த தலைவர்கள் களமிறங்கி உள்ளனர் என்ற தகவலும் கூட காங்கிரஸ் தலைமை இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காங்கிரஸ் இன்றைய தினமே இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். இன்று காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று இவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது மூத்த தலைவர்கள் இடையே கடுமையான மோதலும், கருத்து வேறுபாடும் நிலவி வருகிறது. அதிலும் மாநிலங்களில் உயர் பதவிகளை வகிக்கும் தலைவர்கள் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

தற்போது தேசிய அளவில் இது எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவர் யார் என்பது தொடர்பான தீவிரமான விவாதங்கள் எழுந்துள்ளது

காங்கிரஸ் கட்சி சார்பாக கடந்த முறை நடந்த காரிய கமிட்டி கூட்டத்திலேயே இது தொடர்பான விவாதங்கள் எழுந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், புதிய தலைவரை உடனே தேர்வு செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அடுத்த வருடம் பல்வேறு மாநில தேர்தல்கள் வருகிறது. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள புதிய தலைவர்களை நியமிக்க வேண்டும், என்று மூத்த தலைவர்கள் சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

முறையாக பொறுப்பேற்ற திறமையான தலைவர் வேண்டும். இடைக்கால தலைவர் கிடையாது. களத்தில் இறங்கி பணிகளை செய்யும் நபர் ஒருவர்தான் எங்களுக்கு தலைவராக வேண்டும், என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகும் திட்டத்தில் இல்லை. சோனியா காந்தியும் முழு நேர தலைவராக வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மன்மோகன் சிங் அல்லது ஏகே ஆண்டனியை தலைவராக தேர்வு செய்ய சில மூத்த உறுப்பினர்கள் முயல்வதாக கூறப்படுகிறது. இன்னும் சில தலைவர்கள் ப. சிதம்பரம், சசி தரூர் ஆகியோர் தலைவராக வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் தலைவராக வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய குழப்பங்களும், மோதல்களும் நிலவி வருகின்றன. இதிலும் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும். மாநில காங்கிரஸ் கட்சிக்கு உள்ளே தேர்தலை நடத்த வேண்டும். நாடு முழுக்க மாநில காங்கிரஸ் கட்சியில் தேர்தலை நடத்த வேண்டும். மாநில காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றங்களை, சீர் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்காக காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் இந்த தகவலை சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மறுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட கூட்டம் எதற்கும் திட்டமிடவில்லை, கடிதங்கள் எதுவும் பரிமாறப்படவில்லை என்று ரன்தீப் சிங் சுரஜ்வாலா உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மறுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*