;
Athirady Tamil News

தொழில்நுட்ப, வேலைவாய்ப்பு கல்வியை இணையத்தில் அறிமுகப்படுத்த வேண்டும்!! (கட்டுரை)

0

ஐ.நா.வில் நடைபெற உள்ள கல்விக் கருத்தரங்கத்தின் 4வது இணையவழி கல்வி ஆலோசனைக் கூட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் வேலைவாய்ப்பு தரும் கல்வியை இணையத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் வி.ராதாகிருஷ்ணன் மற்றும் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் மூலமாக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை ஐ.நா சபைக்கு அழைத்துச் சென்று ‘கல்வியில் புதுமை’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் செய்து அவர்களது கருத்துகளை ஐ.நாவில் சமர்ப்பிக்கிற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும்பன்னாட்டு கல்வியாளர்களும்

இரண்டாம் ஆலோசனைக் கூட்டத்தில் தெலுங்கானா மாநில ஆளுநர் ​ெடாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நிகர்நிலை பல்கலைககழகங்களின் வேந்தர்கள் மற்றும் துணைவேந்தர்கள் பங்கேற்றனர். மூன்றாவது கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் பன்னாட்டு கல்வியாளர்கள் கலந்து கொண்டு கருத்துக்கள் பகிர்ந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து நான்காவது இணையவழி ஆலோசனை கூட்டம் கடந்த 14.8.2020 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். ஊடகப் பிரிவைச் சார்ந்த ​ேஜான் தன்ராஜ் இணைப்புரையாற்றினார்

இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் இலங்கை முன்னாள் இணை அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் எம்.பி, மலேசிய முன்னாள் இணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ எஸ்.கே.தேவமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்

இதில் பன்னாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். லண்டன் ​ெகாலேஜ் ஒஃப் மீடியா இயக்குனர் மைக்கில் பேசும் பொழுது கனடாவில் கல்வித்துறையில் பயன்படுத்துகின்ற தொழில்நுட்பங்கள் மற்றும் அதிகமாக புரஜக்டர் பயன்படுத்தி மாணவர்களுக்கு மீடியா துறையில் கல்வி பயிற்றுவிக்கும் முறை குறித்து பேசினார். புதிய தொழில்நுட்பத்தை வரவேற்க வேண்டும் ,அதை செயல்படுத்த வேண்டும், என்பது குறித்தும் அவர் பேசினார்.

செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பேசும் பொழுது “முன்பு கைபேசியை எடுத்தால் கல்வி கெட்டு விடும் என்பார்கள், இன்று கைபேசி இல்லாமல் கல்வியே இல்லை என்ற நிலைக்கு காலம் மாறி விட்டது. எனவே, இதில் இருக்கும் சாதக பாதகங்களை அறிந்து பாதுகாப்பான சமூக முன்னேற்றத்திற்கான கல்வியை வழங்க வேண்டும் வேண்டும்” என்றார்.

வணக்கம் மலேசியாவின் நிறுவனர் தியாகராசன் பேசும் பொழுது “ஊடகத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் செய்தியை பார்ப்பவர்களாக மட்டுமே இல்லாமல் செய்தியை வழங்குபவர்களாகவும் மாறி வருகிறார்கள்”என்று வலியுறுத்தினார்.

டென்மார்க்கிலிருந்து டியூப் தமிழ் இயக்குனர் துரை பேசும் பொழுது “டென்மார்க்கில் டேனிஸ் மொழி இணையாக தமிழ் மொழியின் பயிற்சி முறையும் இருக்கிறது. இங்கே தமிழ்மொழியின் சிறப்பை பார்த்து உலகநாடுகள் வியக்கின்றன. இளைஞர்கள், மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகிற இணையத்தில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முறையான பயிற்சி பெற வேண்டியது மிக அவசியம்” என்றார்.

ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா பேசும் போது “ஊடகத்துறையை இரண்டாக பிரிக்க வேண்டுமேயானால் கொரானாவிற்கு முன், கொரானாவிற்கு பின் என இரண்டாக பிரிக்கலாம், அந்த அளவிற்கு ஊடகத்துறையில் கொவிட்டுக்கு பின் பெரும் தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் சினிமாத் துறையிலும், அச்சு ஊடகத்திலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

விளம்பரங்களை நம்பி இயங்குகிற ஊடகங்கள் விளம்பரம் மிகக் குறைவாக இருப்பதால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. பல ஊடக நிறுவனங்கள் இயங்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் வீட்டில் இருந்து கொண்டே ஃபேஸ்புக், யூடியூப், வட்ஸ் அப் , போன்ற இணைய செயலிகளை அதிகமாக மக்கள் பயன்படுத்த விரும்புகின்றனர்” என்றார். ‘நீயா நானா’ கோபிநாத் பேசும்போது “இன்றைக்கு ஊடகத்தில் இருக்கிற போட்டி என்னவென்றால் ஒரு செய்தியை யார் முதலாவதாக கொடுக்கிறார்கள் என்பதும் உண்மை போல் செய்தியை போடுவதும்தான்.செய்தித் துறையில் சுவாரசியத்தை சுவாரசியத்தை எதிர்பார்க்கிறார்கள்.

அப்படி சுவாரஸ்யமான செய்திகளை சொன்னால் உண்மைத் தன்மை இருக்காது, மக்களுக்கு நம்பிக்கையும் ஏற்படாது. எனவே உண்மையான செய்திகளை சுவராசியமாக சொல்லுதல்தான் கலை. அதை வளர்த்தெடுக்க வேண்டும். நாம் சொல்லுகிற செய்தி ஜனநாயக தன்மையாக வேண்டும், நாம் சொல்லுகிற செய்தி மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதே, முதலாவது நோக்கமாகக் கொண்டு மக்கள் நலனில் அக்கறை கொண்ட செய்திகளை சொல்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்” என்றார்.

மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ தேவமணி பேசும் பொழுது “ஏழை எளிய மாணவர்கள் பயன்படுத்தும் அளவிற்கு இன்னும் டிஜிட்டல் சென்றடையவில்லை. இணையத்தை மட்டுமே நம்பி இருக்கிற கல்வியாக இல்லாமல் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கிற கல்வியை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியர் பயிற்சியில் புதிய மாற்றங்களை நாம் கொண்டு வர வேண்டும். பரீட்சை என்று சொல்லி தொழில்நுட்பத்தை நம்பியே சென்று கொண்டிருக்கிறார்கள். அது ஒரு இயந்திரமயமான வாழ்க்கையை மட்டுமே நமக்குத் தரும். எனவே நல்ல மனிதனாக பண்புள்ள மனிதனாக வளர்த்தெடுப்பதற்கு முறையான கல்வியும், சரியான தீர்வு முறைகளும், இருக்க வேண்டும். கற்றல்-கற்பித்தல் சூழலில் புதிய தொழில்நுட்பங்கள் அனைவருக்கும் சென்றடைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

இலங்கையின் முன்னாள் அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன் எம்.பி பேசும் பொழுது இலங்கையின் கல்வி முறைகள் குறித்தும் இலங்கையில் பயிற்றுவிக்கும் முறைகள் குறித்தும் ஆசிரியர்கள் பயிற்சி முறைகள் குறித்தும் இலங்கையில் பயிற்றுவிக்கப்படும் ஒன்லைன் பயிற்சி முறைகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

“தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள கல்வியை இணையத்தின் வழியாக கொடுக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். இதுவே இந்த சூழலில் மிக அவசியம்” என்றார்.

இறுதியாக ஊடகப் பிரிவைச் பிரிவைச் சார்ந்த ​ேஜான் தன்ராஜ் நன்றியுரை கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + eighteen =

*