;
Athirady Tamil News

சென்னைக்கு ஏன் இப்படி ஒரு சோதனை? (கட்டுரை)

0

சென்னைக்கு போனால் பிழைத்துக் கொள்ளலாம். கோரோனாவுக்கு முன்பு எல்லோரும் இப்படித்தான் நம்பினார்கள். இன்று சென்னை என்றாலே தலை தெறிக்க ஒடுகிறார்கள்.

தன் கோர முகத்துடன் சென்னையில் தலைவிரித்து ஆடுகிறது கொரோனா மக்கள் சொல்லொன்னா துயரத்தில் தவிக்கிறார்கள்.

முன்னெப்போதும் இல்லாத பாதிப்பு இன்று சென்னை மக்களை கலங்க வைக்கிறது.

சென்னையில் வாழ்ந்தது போதும் சொந்த ஊர் பக்கம் போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று கூட்டம் கூட்டமாக கிளம்பி விட்டார்கள் சென்னைக்கு பிழைக்கப் போனவர்கள்.

“சென்னைக்கு ஏன் இப்படி ஒரு சோதனை ” என்று இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள எனது நண்பருடன் அலைபேசியில் நலம் விசாரித்த போது கேட்டேன்.

“சென்னையில் உள்ளவர்கள் மனிதர்களே இல்லை எல்லாம் எந்திரங்கள் . எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை அரசு சொல்லும் பாதுகாப்பை கடைபிடிக்காமல் திரிகிறார்கள்” என்று ஆதங்கப்பட்டார்.

சென்னை மக்கள் சில நேரங்களில் 90 சதவிகிதம் பேர் அப்படித்தான் இருக்கிறார் 10 சதவிகிதம் பேர் தான் மனித நேயத்துடன் இருப்பார்கள் எனக்கு நேரடி அனுப்பவம் இருந்ததாலே இதை உறுதியாக சொல்கிறேன்

ஒரு முகவரி கேட்டால் கூட அவர்களின் சொத்தையே கேட்டது போல திரும்பிக் கொண்டு பதில் சொல்லாமல் போவார்கள் சென்னை மக்களுக்கு ஒரு துயரம் என்றால் தமிழகமே ஒடிச் சென்று உதவி செய்யும் .ஆனால்.தமிழகத்தின் ஏதாவது ஒரு ஊரில் என்ன துயரம் என்றாலும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள் சென்னை வாசிகள்.

நானும் 2010 ஆம் ஆண்டு சென்னைக்கு குடிபெயர்ந்து விடலாம் என்று ஒரு வருடம் முழுவதும் இருந்து பார்த்தேன். சென்னை வாழ்க்கை துளியும் எனக்கு சரிப்பட்டு வரவில்லை.

மூன்று காரணங்கள் சொல்லலாம் ஒன்று சென்னை வாழ்க்கையில் எவ்வளவு வருமானம் வந்தாலும் பற்றாக்குறையாகவே இருக்கும் .இன்னொன்று வாகன நெருக்கடிக்கள் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போதெல்லாம் உயிர் பயத்திலேயே பயணிக்க வேண்டும்.

மற்றது காற்றில் கலந்துள்ள மாசு . மாசு படிந்த காற்றை சுவாமிக்கும் போதெல்லாம் அடிக்கடி தும்மல் வந்து கொண்டே இருந்தது.

இது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மட்டுமே சொல்கிறேன் இதனாலேயே சென்னை என்னை போடா வெண்ணை என்று சொல்லிவிட்டது.

அதன் பிறகு பணி நிமித்தமாக சென்னைக்கு போகும் போதெல்லாம் எவ்வாளவு விரைவாக பணியை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்து ஊர் திரும்பி விடுவேன்.

சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் மனசாட்சியே இல்லாமல் வாடகை கேட்பார்கள் ஒருசிலர் நியாயமாகவும் இருப்பார்கள் .நான் சென்னக்கு போகும் போது கோயம்பேடு பேருந்து நிலையித்திற்கு அருகில் அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் தங்குவேன் அந்த இடத்திற்கு ஆட்டாவில் பயணிக்க பத்து நிமிடம் தான் ஆகும் . ஆட்டோவாடகை ரூ 50 தான் ஆகும் .ஆனால் , 100 கொடு150 கொடு என்பார்கள் .இந்தத் தொல்லைக்கு பயந்து நான் சில நேரங்களில் காலையில் நடைபயிற்சியாக இருக்கட்டும் என்று நடந்தே போய் விடுவேன்.

இப்படி எனது சென்னை அனுபவங்களை சொல்லிக் கொண்டே போகலாம் .ஆனாலும் இன்று சென்னை மக்கள் படும் துயரத்தைக் கண்டு வருந்தாமல் இருக்க முடியவில்லை . சென்னையின் மக்கள் நெருக்கடி தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஏன் எல்லா வாய்ப்புகளையும் சென்னையிலேயே குவித்து வைக்க வேண்டும் .தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் முக்கிய அலுவலகங்களை கொண்டு வரலாமே.

சர்வதேச விமான நிலையமம் . கப்பல் போக்குவரத்து இவற்றின் பயன்பாடு சென்னையில் அதிகமாக இருக்கிறது சரிதான் .அதே நேரத்தில் மக்கள் நெருக்கடியைக் குறைக்க சில மாற்று ஏற்பாடு செய்வதும் தேவையாக இருக்கிறதே.

திருச்சி தமிழகத்தின் மையப்பகுதி . திருச்சி விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக விரிவுபடுத்தப்படுகிறது. திருச்சியை இரண்டாம் தலைநகராகக் கூட மாற்றலாமே எதிர்கால நலன் கருதி மாற்துவழிக்கு செல்லவில்லை என்றால் சென்னையின் முகம் மாறத் தானே செய்யும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*