;
Athirady Tamil News

20 ; உள்ளேயும் வெளியேயும் குழப்பங்கள்! (கட்டுரை)

0

2020 வருடத் துவக்கத்திலிருந்தே கொரேனாவின் அதிரடித் தாக்குதல்கள். இந்தக் கொரோனா அட்டகாசத்தில் அமெரிக்காவையும் முந்திக் கொண்டு நமது பக்கத்தது நாடான இந்திய முதலிடத்தை பிடிக்கின்ற நிலையில் இருக்கின்றது. என்னதான் இருந்தாலும் இலங்கை கொரோனா விவகாரத்தில் இந்தளவு தப்பிப் பிழைத்துக் கொண்டிருப்பது கடவுளின் புன்னியமா அல்லது ஜனாதிபதியின் நிருவகத் திறமையா என்று தெரியவில்லை.

இந்த ஆண்டில் நமது 20வது அரசியல் திருத்தம் தற்போது உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் ஒரு பேசு பொருளாக மாறி இருக்கின்றது. உள்நாட்டைப் பொறுத்தவரை என்னதான் சர்வதேச அச்சுறுத்துதல்கள் வந்தாலும் நாம் இதில் மாற்றத்தை கொண்டு வந்துதான் தீருவோம் என்று ஆளும் தரப்பில் ஜனாதிபதி ஜீ.ஆருக்கு விசுவாசமான சிலர் இருக்கின்றார்கள். பிரதமர் எம்.ஆருக்கு விசுவாசமானவர்கள் இந்த விவகாரத்தில் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் இருப்பது தெரிகின்றது. ஆனால் அவர்களும் இப்போது தம்மை சரி செய்து கொண்டு ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பேசும் நிலை. அரசியலில் தம்பி ஜம்பவானா அண்ணன் ஜம்பவானா என்று மொட்டுக்ள் அணியில் அரசியல் செய்பவர்கள் இன்னும் புரிந்து கொள்ள முடியாத ஒரு நிலை என்றுதான் நாங்கள் கருதுகின்றோம். அதனால் அவர்களில் சிலர் தடுமாறுகின்றார்கள்.

அதே நேரம் இது மிகவும் ஆபத்தான ஒரு விளையாட்டு இந்தியாவும் சர்வதேசமும் இதனை ஏற்றுக் கொள்ளாது இதனால் நாடு மிகவும் ஆபத்தான விளைவுகளை எதிர்நோக்க வரும் என்று பலமான ஒரு கருத்தும் இருக்கின்றது. ஆனால் கடும் போக்காளர்கள் வட கொரியா, அல்லது ஈரான் பாணியில்தால் பேசி வருகின்றார்கள். பொறுப்பில்லாதவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் பொறுப்பான பலரும் தெருச் சண்டியர்கள் போல் இதற்கு ஆதரவாகப் பேசி வருகின்றார்கள். அவர்கள் இந்தியாவை மட்டுமல்ல உலகையே பகைத்துக் கொள்ள வந்தாலும் அதற்காக கவலைப்படாதவர்கள் போல்தான் காரியம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மைத்திரி ரணில் நல்லாட்சி காலத்தில் சரத் வீரசேக்கரவைத் தவிர அனைவரும் கைதூக்கி கொண்டு வந்த 19ஐ அனேகமான அதே ஆட்கள்தான் இப்போது அதற்கு முற்றிலும் எதிராக 20 ஐக் கொண்டு வருவதிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். 19 திருத்தத்தின் மூலம் பொரும்பாலும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப் பட்டது. அடுத்து வருகின்ற அரசிலும் தானே பிரதமர் என்ற எண்ணத்தில் ரணில் இதனைக் கொண்டு வருவதில் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் இன்று அவர் அரசியல் ரீதியில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு மனிதானக இருந்த வருகின்றார்.

இப்போது அண்ணன் எம்.ஆர் பிரதமர். தம்பி ஜீ.ஆர். ஜனாதிபதி. 19 அரசியல் திருத்தப்படி பிரதமர் எம். ஆருக்கே அதிககாரம். ஜனாதிபதித் தம்பி ஜீ.ஆர். பெயரலவில் அதிகாரம் உள்ளவராக இருக்கின்றார். உள்நாட்டு அரசியலில் கடும்போக்கு பௌத்தர்களின் விருப்பின் அடிப்படையிலே மொட்டுக்கள் அணி அரசியலில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது. எமது அவதானப்படி இப்போது இந்த பௌத்தர்கள் மத்தியில் இரு பிரிவுகள் உருவாகி இருக்கின்றது. பிரதமர் எம்.ஆரை ஆதரிக்கின்றவர்கள். அடுத்து ஜனாதிபதி ஜீ.ஆரை. ஆதரிக்கின்றவர்கள். இதில் ஜனாதிபதி ஜீ.ஆரை ஆதரிப்போரே 20 திருத்தத்துக்கு முனைப்புடன் ஆதரவாக காரியம் பார்த்தக் கொண்டிருக்கின்றார்கள்.

ராஜபக்ஸாக்கள் தரப்பு அரசியல் இராஜதந்திரியான பசில் இது விடயத்தில் நடுநிலையான போக்குடன் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றார். இந்த முரன்பாடான குழுக்களையும் ஒரு இணக்கப்பாட்டுக்குள் கொண்டு வந்து ராஜபக்ஸாக்களுக்கு சேதம் இல்லாத ஒரு 20து தான் அவரது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இரட்டைப் பிரசா உரிமை உள்ளவர்களுக்கு அரசியலில் அதிகாரம் மிக்க பதவிகள் இருப்பதை இந்த கடும் போக்கு பௌத்தர்களில் ஒரு பிரிவு கடுமையாக எதிர்க்கின்றது. இதனால் பசில் தனக்கு உடனடியாகப் பாராளுமன்றம் வரும் தேவையே எண்ணமே இல்லை என்று இப்போது பேசுகின்றார்.

இந்தியாவில் கூட இரட்டை பிரசா உரிமைக்காரர்களுக்கு அரசியலில் இடம் கிடையாது என்பது எதிர்ப்பாளர்கள் வாதம். ஆனால் இரட்டை பிரசா உரிமையுள்ள பசில் பாராளுமன்றம் வருவதாக இருந்தால் எமது பதவிகளைத் துறந்து அந்த இடத்தை நாம் அவருக்கு கொடுக்கவும் தயாராக இருக்கின்றோம் என்று பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மனதளவில் இதனைச் சொல்லாவிட்டாலும் ராஜபக்ஸ அரசியலில் பசிலுக்கு உள்ள செல்வாக்கை இது கோடிட்டுக் காட்டுகின்றது. இதன் மூலம் ஏதாவது தமக்கு சாதகமான வேலைகளைச் செய்து கொள்ளலாம் என்பது அவர்களது எதிர் பார்ப்பாக இருக்கின்றது. இது அவர்களது இராஜதந்திரம்.

இந்த 19 நீக்கிவிட்டு அந்த இடத்தில் 20 ஐக் கொண்டு வருவது என்பது அண்ணன் எம்.ஆர். சிறகுகளை பிடுங்கி தம்பிக்கு ஜீ.ஆருக்கு பொருத்துதல். அல்லது பிரதமர் சிறகை உடைத்து ஜனாதிபதிக்கு அதனைப் பொறுத்துவது என்பது என்று இதனை நாம் அடையாளப்படுத்த விரும்புகின்றோம். 19-20 என்பது நமது அரசியலில் இப்போது ராஜபக்ஸாக்கள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்கின்ற ஒரு அரசியல் தீர்மானம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் மக்கள் நலன்கள் என்னதான் இருக்கின்றது என்று நாம் கேள்வி எழுப்புக்கின்றோம்.

இது பற்றி கருத்துத் தெரிவிக்கின்ற ஜேவிபி தலைவர் அணுரகுமார திசாநாயக்க நவீன யுகத்தில் இருந்து வேடுவர் யுகத்துக்கான பயணம் இது. நாடு அடக்கு முறையை நோக்கி செல்கின்றது என்று கூறி வருகின்றார். அவர்களது தொழிற்ச் சங்கத் தலைவர் லால் காந்த தனி ஒரு குடும்பத்துக்கு ராஜ சுகபோகங்களை கையாளிக்கின்ற ஏற்பாடுதான் இது என்று குறிப்பிடுகின்றார். பெரும்பாலான மொட்டு ஆதரவளர்கள் இந்த நாட்டில் ராஜபக்கஸ குடுபத்தினரை அல்லது மெதமூலன பிரபுக்களை நாட்டில் மன்னர்களாக அரியாசனத்தில் அமர்த்த தமது ஒப்புதல்களை வழங்குவதற்காக தயாராக இருக்கின்றார்கள். ஆனால் இதிலுள்ள தற்போதய பிரச்சினை அண்ணனா தம்பியா ஜம்பவான் என்பது மட்டுமே. எனவே பாராளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாரை இந்த இடத்தில் அமர்த்துவது என்பதற்காக தமது சம்மதத்தை தெரிக்க வேண்டி இருக்கின்றது.

மேற்சொன்ன குடும்பத்துக்குள் அதிகாரப் பகிர்வு என்ற விடயத்துக்கு அப்பால் அரசியல் பகிர்வு என்ற விவகாரத்தில் மொட்டுக்களுக்கு ஆதரவளித்த பௌத்த மக்களிடையே ஒரு நிலைப்பாடுதான் இருக்கின்றது. அவர்கள் அனைவரும் போல் அதிகாரப் பகிர்வை எதிர்க்கின்றார்கள். 13 ஐ அடியோடு நீக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நிலைப்பாடாக இருக்கின்றது. இது தொடர்பாக நாம் பலருடன் பேசிப்பார்த்ததில் அவர்கள் உணர்வுகள் அனைத்தும் ஒரே விதத்தில் இருக்கின்றது. பெரும்பாலான படித்தவர்கள் கருத்தும் இதுவாகத்தான் தெரிகின்றது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி தம்பி ஜீ.ஆர். சிந்தனையை அமுல்படுத்துவதில் தானும் முழு மனதுடன் பங்களிப்புச் செய்ய இருப்பதாகக் குறிப்பிடுகின்ற பிரதமர் எம்.ஆர். இது விடயத்தில் எமக்கு யாரிடமும் பாடம் கற்றுக் கொள்ள நாங்கள் தயாரில்லை என்று பகிரங்கமாகப் பேசி வருகின்றார். கடந்த வாரம் மோதானந்த எல்லாவெலத் தேரர்தான் இப்படிப் பேசி இருந்தார். இப்போது பிரதமரும் அதே வார்த்தையை உச்சரித்திருக்கின்றார். இது விடயத்தில் நமக்கு இப்படி ஒரு கருத்து இருக்கின்றது.

ஒரே நாடு என்ற வார்த்தை தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களுக்கு சம்மட்டியால் அடிப்பதும். ஒரே சட்டம் என்ற வார்த்தையால் முஸ்லிம்களின் தனித்துவமான சட்டங்கள் கலதச்சாரப் பாரம் பரியங்களுக்கு கண்ணத்தில் அறைவதும் இதன் நோக்கமாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது. எனவே இந்தியாவோ சர்வதேசமோ முஸ்லிம் நாடுகளோ எமது விவகாரங்களில் தள்ளி நின்று கொள்ளுங்கள் என்ற செய்தியாகத்தான் இது இருக்க முடியும். எனவே 20 அரசியல் திருத்தத்தில் அவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். மேலும் உள்நாட்டில் மாடுகளை அறுக்க கூடாது என்று பிரதமர் ஆளும் தரப்பு கூட்டத்தில் கூறியபோது அதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள்.

அனைத்து பௌத்த பீடாதிபதிகளும் பிரதமர் முன்வைத்துள்ள இந்த பிரேரணைக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள். இது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மாட்டிரைச்சி சாப்பிட விரும்புபவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அதனைத் தருவித்துக் கொடுக்கும் திட்டம் ஒன்றும் கிடப்பில் இருக்கின்றது. அப்படியானால் அந்த மாடுகள் பாவம் இல்லையா அவற்றுக்கும் உயிர் இருக்கின்றதே என்று வாதிட்டால் அதற்கு மாடு அப்பவர்கள் சொல்லும் விளக்கம் நமது நாடு பௌத்த நாடு இங்கு அந்தக் காரியம் நடக்கக் கூடாது என்று வாதிடுக்கின்றார்கள்.

கடும்போக்கு பௌத்தர்கள் 20 மூலம் இந்த நாட்டில் பௌத்த ஆதிக்கத்தை மேலும் வழுப்படுத்திக் கொள்ளும் கடும் முயற்ச்சியில் இருக்கின்றார்கள். அதனால்தான் 13 வது திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரான பல தீர்மானங்களை இதில் உள்வாங்கிக் கொள்ள அவர்கள் துடியாய் துடிக்கின்றார்கள். ஆளும் தரப்பில் 20 தொடர்ப்பில் இப்படி இணக்கப்பாடுகளும் முறன்பாடுகளும் இருக்கின்ற போது எதிராணியின் அரசியல் சக்திகள் நிலை என்ன என்று பார்ப்போம். சஜித் தரப்பினர் இந்த நாட்களில் தமக்குச் சரிந்துள்ள சிங்கள வாக்குகளைச் சரி செய்து கொள்வதற்காக முனைப்புடன் செயலாற்றுகின்றனர். அத்துடன் நாட்டில் ராஜபக்ஸாக்கள் பரம்பரை- மன்னராட்சி நாட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைக்கின்றார்கள.; அதே நேரம் தமிழருக்கு அரசியல் அதிகாரங்கள் கொடுக்கும் வகையில் அவர்கள் அழுத்தங்களைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுள்ளது. என்னதான் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சஜித் அணியினருக்கும் சிறுபான்மை சமூகங்கள் வாக்களித்தாலும் அவர்கள் தற்போது பௌத்த வாக்குகளைத்; தமது அணிக்குத் திரட்டுகின்ற விடயத்தில்தான் ஆர்வமாக இருக்கின்றார்கள். நாட்டில் அதிகாரத்தை எப்போவாவது கைப்பற்றுவதாக இருந்தால் அது அவர்களுக்குத் தேவையும் கூட.

வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் சக்திகள் அனைத்து ஆளும்தரப்பின் இந்த கடுமையான தீர்மானங்களுக்கு எதிராக ஓரணியில் ஐக்கியப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் இது விடயத்தில் இந்திய எந்த விட்டுக் கொடுப்புகளையும் செய்யக்ககூடாது கடுமையாக இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று சம்பந்தன் அணி எதிர்பார்க்கின்றது. இதற்காக அவர்கள் இந்தியாவிலுள்ள பல்வேறுபட்ட அரசியல் தலைவர்களுடன் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். 13 விவகாரத்தில் இந்தியா பின்வாங்குமாக இருந்தால் தெற்காசியாவில் அது தனக்குள்ள தலைமைத்துவத்துக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் என்பது நமது பார்வை.

சஜித் அணியிலுள்ள குறிப்பாக முஸ்லிம் மற்றும் மலைய அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்று பார்த்தால், அதிலுள்ள ராஜபக்ஸாக்களின் தனிப்பட்ட ரீதியில் நலன்களையும் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் மீண்டும் கையளிக்கப்படுகின்ற விவகாரங்கள் என்று வரும் போது முஸ்லிம் தனித்துவக் கட்சிகளிலுள்ளவர்கள் பலர் பல்டி அடிக்க நல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றன. அது பற்றி தகவல்களை நாம் தேர்தலுக்கு முன்பிருந்தே சொல்லி வருகின்றோம். இதனை நமது வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

இந்ந நாட்டில் வாழ்கின்ற கிருஸ்துவ மக்களைப் பொருத்த வரையில் அவர்கள் சிங்கள் மொழி பேசுகின்றவர்கள் பௌத்த மக்களுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருபவர்கள். அவர்களின் அரசியல் தலைவர்கள் ஐரோப்பியர் காலத்தில் சுகபேகங்களையும் அரசியல் இலாபங்களை அனுபவிக்கும் நோக்கில் அந்த கிருஸ்தவர்களாக மாறியவர்கள். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பௌத்தம் அரசியிலில் ஆதிக்கம் செலுத்துவதால் இப்போது அவர்களில் அனேகமானவர்கள் மீண்டும் பௌத்தர்களாக மாறி அரசியலில் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டு வருகின்றார்கள் எனவே அவர்கள் கடும் போக்கு பௌத்த அரசியல் செயல்பாடுகளுடன் இணைந்து போகவே தயாராக இருக்கின்றார்கள். அதே நேரம் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மொழி பேசுகின்ற கிருஸ்துவர்கள் வடக்கு கிழக்கு தமிழ் இந்து சமூகத்துடனும் அரசியலுடன் பின்னிப் பிணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களின் அரசியல் தலைவர்களும் அந்த சமூகமும் தெற்கில் இருக்கின்ற சிங்களக் கிருஸ்துவ சமூகத்துடன் இணைந்து பயணிக்கத் தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

ஆளும் தரப்பிலுள்ள சிறு தொகை சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அரயில்வாதிகள் அந்த அணில் எந்த அரசியல் தீர்மானங்கள் மீதும் அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய நிலையில் இல்லை. அவர்களுக்கு அங்கு எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு பெம்மைகள் போல் கைகளை உயர்த்துவதைத் தவிர வேறு எதைத்தான் செய்யமுடியும் என்று நாம் கேள்ளி எழுப்புகின்றோம். உதாரணத்துக்கு வடக்கு கிழக்கிழக்கிற்கு அரசியல் அதிகாரம் என்ற விவகாரத்தில் அவர்களின் தனிப்பட்ட கருத்தகள் என்னவாக இருந்தாலும் 13 விவகாரத்தை அரசு அடியோடு வெட்டிச் சாய்க்கின்றது என்றால் டக்லஸ், அஞ்சகன், பிள்ளையான் போன்றவர்கள் என்னதான் பண்ண முடியும்.

அதே போன்று முஸ்லிம்களுக்கு எதிரான தீர்மானங்கள் மேற் கொள்ளப்படும் போது அலி சப்ரி போன்ற சட்டம் தெரிந்த வல்லுனர்கள் கூட என்னதான் பண்ண முடியும்.? வேண்டுமானால் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் ஏதாவது கெஞ்சிப் பார்ப்பதை தவிர எதுவுமே பண்ண முடியாத ஒரு அரசியல் பின்னணிதான் இன்று நாட்டில் காணப்படுகின்றது. இதனை சிறுபான்மைச் சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இந்த விவகாரத்தை நேரடியாக சொல்வதாக இருந்தால் நமது நாட்டு அரசியலில் பௌத்த ஆதிக்கம் கொடிகட்டிப ;பறந்து கொண்டிருக்கின்றது. அல்லது சக்கை போடு போடுகின்ற ஒரு காலம் இது. ஆனால் இந்தப் பயணம் எந்தளவு தூரம் தொடர்ச்சியாக நகர முடியும் என்ற விடயத்தில் எமக்கும் சில அனுமானங்கள் இருக்கின்றன இது பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.

சுதந்திரக் கட்சியில் தற்போது 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். கடந்த தேர்தலில் மிகவும் நெருக்கடியான ஒரு சூழ்நிலையிலே இவர்கள் தமது மொட்டு அணியில் எதிர்நீச்சல் போட்டுக் கரை சேர்ந்தார்கள். ஆனால் வழுவா ராஜபக்ஸாக்கள் முன்னிலையில் இவர்கள் தமது பலத்தை எப்படிப் பிரயோக்கி முடியும். அரசங்கத்தின் மூன்றில் இரண்டு பலத்தில் நாங்கள் தீர்க்கமான சக்தி என்று அந்த அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தயாசிரி கூறுகின்றார். ஆனால் அவர்களின் தலைவர் மைத்திரியையே ராஜபக்ஸாக்கள் குட்டி மூளையில் வைத்திருக்கின்றார்கள் என்பதனையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும். இது பற்றி அந்த அணியினர் கேள்விகளை எழுப்ப முடிந்ததா? மைத்திரிக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க முடிந்ததா என்று நாம் கேடக்கின்றோம்.? மேலும் தீர்க்கமான ஒரு கட்டத்தில் இந்த அணியும் நிச்சயம் பிளவுபடும் என்பதனை நாம் முன் கூட்டியே சொல்லி வைக்கின்றோம்.

இவர்கள் துணை இல்லாமல் மூன்னிறில் இரண்டை எப்படி எட்டுவது என்பதற்கான காய்நகர்த்தல்களை ஏற்கெனவே பசில் ராஜபக்ஸ தீட்டி இருக்கின்றார். திறை அகலும் போது அந்தக் காட்சிகளையும் நாடு பார்க்கும். இவர்கள் துணை இல்லாமல் மூன்றில் இரண்டை எப்படி எட்டுவது என்பதற்கான காய்நகர்த்தல்களை ஏற்கெனவே பசில் ராஜபக்ஸ தீட்டி இருக்கின்றார். திறை அகலும் போது அந்தக் காட்சிகளையும் நாடு பார்க்கும். தற்போது 20 தொடர்ப்பில் ஜனாதிபதி ஜீ.ஆர். மொன்போக்கில் பேசி இருக்கின்றார். இதற்கான அந்தரங்கக் கதைகளை அடுத்தவாரம் பேசலாம் என்று எதிர் பார்க்கின்றோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*