;
Athirady Tamil News

கோவிட் -19: நோர்வேயின் எதிர்வினையும் ‘நோர்டிக்’ நம்பிக்கையின் ஜனுஸ் முகமும்!! (கட்டுரை)

0

இன்று நாம் முகம் கொடுக்கும் நிகழ்வு எம் வாழ்நாளில் நாம் அனுபவிக்கின்ற மிகப் பாரதூரமான உலகளாவிய நிகழ்வு என்பதைத் தாமதமாகவேனும் பெரும்பான்மையினர் உணரத் தலைப்படடுள்ளனர். குறைந்தபட்சம் ஐரோப்பாவில் அது உணரப்பட்டுள்ளது. நாம் செய்வதறியாது தடுமாறிய இந்த நிலையை ‘நெருக்கடி’ எனும் சொற்பிரயோகத்தினூடாகக் குறிப்பிடுவது ஒரு வகையில் குறைமதிப்பீடாகும். இந்தப் பூமியில் நாம் ஏழரை பில்லியனுக்கு மேலுள்ளோம். அம்மக்களில் இதனால் பாதிக்கப்படாதவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் மிகச் சொற்பமானவர்களே.

இதனை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் (மே, 2020) கோவிட்-19 இன் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 300 000ஐ தாண்டியிருந்தது. கடைகளை மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நடமாட்ட சுதந்திரம் கணிசமாக மட்டுப்படுத்தப்பட்டது. பெரு வணிக நிறுவனங்கள் திவாலாவாகும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன. சிறுவணிக நிறுவனங்கள் காணாமற்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுக் கடன் மீள்செலுத்தல் தாமதமாகின்றது. மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை. உலகின் தெற்கிலுள்ள (global south) நிரந்தர தொழிலற்ற தொழிலாளர்கள் மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளனர். மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஒன்று அல்லது இரண்டு மீற்றர் இடைவெளியைப் பேணுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

கை குலுக்குதல் இனி இல்லை. நட்பு ரீதியான கட்டியணைப்பு இனி இல்லை. கண்ணுக்குப் புலப்படாத- அதேவேளை ஒருவரோடொருவர் எம்மைப் பிணைக்கும் உற்பத்திச் சங்கிலி, விநியோகம், தொடர்பாடல் ஆகிய பல பில்லியன் இழைகளுடனான உலகளாவிய அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை இப்பொழுதுதான் பலரும் முதன்முறையாக தெளிவாக (அல்லது மங்கலாக) அறிந்து கொள்கின்றனர்.

நம்பிக்கைகளும் நெருக்கடிகளும்

நெருக்கடிகளின் போதே, ஒரு சமூகத்தினுடைய கூட்டிசைவு – அது நம்பிக்கை அல்லது பயத்தின் அடிப்படையிலிருந்தாலும் சோதனைக்கு உட்படுத்தப்படுவது பொதுவாக நிகழக்கூடியது. தொடர் நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கும் சமூகங்களில் ஒப்பீட்டளவில் நம்பிக்கை குறைவாகவே இருக்கும்

நம்பிக்கை தொடர்பான எண்ணிக்கை சார் கணக்கெடுப்புகளில் (quantitative surveys) நோர்டிக் நாடுகள், உச்சத்திற்கு அருகில் அல்லது மேலாக இருந்துவந்துள்ளன. வைரஸ் பரம்பல் காரணமாக அவசரகால நடைமுறை அமுல்படுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், நெருக்கடியின் விளைவாக ‘நோர்டிக் நம்பிக்கை’ எந்த அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்ற கேள்விளை நாம் கேட்கத் தொடங்கலாம்.

இந்த நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, அமைதி பொருந்திய உலகின் வடக்கு மூலையில் (corner of the Global North) பெரும் திரள்மையப்பட்ட நம்பிக்கை நிலவுகின்றது. ஆனால் இந்த விலைமதிப்பற்ற வளத்தினைக் கட்டியெழுப்புவதற்கு நீண்ட ஆயுளின் காலங்கள் தேவை. அழிப்பதற்கு நொடிப்பொழுதுகள் போதுமானவை. இங்கே மக்கள் இந்நிலையை எதிர்கொள்ள முன்தயாரிப்புகளைக் கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்னர் இதனையொத்த ஒரு வீழ்ச்சியையும் நிச்சயமற்ற தன்மையையும் தூரத்திற்கூட அனுபவித்ததில்லை.

உண்மையில் பன்முகப்பட்ட, குறிப்பாக பெருகிவரும் அதி-பன்முகப்பட்ட சமூகங்களின் நம்பிக்கை தொடர்பான கேள்விகள் சமூக அறிவியலாளர்கள் மற்றும் சமூக பொறியியலாளர்கள் மத்தியில் சில ஆண்டுகளாக இருந்துவருகின்றன. இந்த விடயத்தில் உலகளாவிய வடக்கிற்குள் முக்கிய வேறுபாடுகள் உள்ளதாக சர்வதேச ஆய்வுகள் கூறுகின்றன: ஸ்கன்டிநேவிய மக்கள் பொதுவாக பிறமனிதர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேவேளை அமெரிக்கர்கள் பொதுவாக அவ்வாறில்லை.

ஆனால் நம்பிக்கையின் இரண்டு முதன்மை வடிவங்களை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்: நீங்கள் ஒரு யாராவது ஒரு நபரை அல்லது நபரல்லாத ஏதாவதொன்றை நம்பலாம். பிற மனிதர்களை நம்புகின்ற ஒரு சமூகத்தில் நீங்கள் வாழலாம், ஆனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இதன் தலைகீழ் நிலையும் சாத்தியம்: அதாவது நீங்கள் அரசாங்கத்தை நம்புபவராக இருக்கக்கூடும். ஆனால் அயலிலுள்ள சக மனிதர்களை நம்பாதவராக இருக்கக்கூடும். அப்படியாயின் உண்மையில் நீங்கள் சமூகவெளியைப் பகிர்ந்து கொள்ளும் சந்தேகத்திற்கிடமான மனிதர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அரசாங்கத்தில் தங்கியுள்ளீர்கள்.

நெருக்கடிகள் மற்றும் காலகங்களின் போது இந்த இரண்டு வகையான நம்பிக்கைகளும் சோதனைக்கு உட்படுகின்றன. உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்கள் கொரோனா வைரசின் கட்டற்ற பரம்பலைத் தடுப்பதற்கு ஒப்பிடக்கூடியவாறான பல கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் அமுல்படுத்தின. சில தடவைகள் துப்பாக்கி முனையிலும் சில தடவைகள் தயவான அறிவுறுத்தல்கள் மூலமும் செய்தன.

நோர்வேயின் எதிர்வினை

ஏனைய நாடுகள் சார்ந்த ஒரு பக்கவாட்டுப் பார்வையுடன் நோர்வே மீது பார்வையைச் செலுத்துவோம். கோவிட் – 19 இற்கு எதிராக நோர்வே விரைந்து கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்தது (வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்தல் உட்பட கல்வி நிறுவனங்களை மூடியது வரை). தற்போது தொற்றுத்தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்படியாக மீள்திறப்பு நடைபெறுகிறது.

பின்லாந்த், டென்மார்க், சுவீடன் போன்ற ஏனைய நோர்டிக் நாடுகளுடன் ஒப்பிடுகையில் நோர்வேயில் இறப்பு வீதம் மிகக் குறைவு என்பதோடு பதிவு செய்யப்பட்ட தொற்று எண்ணிக்கையிலும் இரண்டாவது மிகக் குறைந்த நிலையிலும் உள்ளது. எப்படியிருப்பினும் கடைப்பிடித்த மூலோபாயம் வெற்றியளித்ததா என்பதை நெருக்கடியின் முடியும் சூழலில் மட்டுமே கண்டறிய முடியும்

‘தன்னார்வப் பொதுப்பணி’ (dugnad) என்பது நோர்வே தேசியப் பண்பாட்டின் தனிச்சிறப்பான அம்சமாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. உண்மையில் இது சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சியின் (Nitimen) நேயர் வாக்கெடுப்பில் “தேசியச் சொல்” என்று பெயரிடப்பட்டது. தன்னார்வப் பொதுப்பணி என்பது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அவர்களின் சமூக நிலைக்கு அப்பாற்பட்டு, அவர்களின் பங்கேற்பினைக் கோருகின்ற ஊதியம் பெறாத, கூட்டுணர்வை, கூட்டுச்செயற்பாட்டைக் குறிக்கிறது.

வழக்கமான தன்னார்வப் பணிகள் பெற்றோர்களால் முன்னெடுக்கப்படும் முன்பள்ளிகளின் உட்கட்டுமான பராமரிப்பு மற்றும் சிறிய திருத்தவேலைகளைக் குறிக்கின்றன. இவை வழமையாக சனிக்கிழமைகளில் முன்னெடுக்கப்படுவன. அத்தோடு பிள்ளைகள் அங்கத்துவம் வகிக்கும் விளையாட்டுக் குழுக்கள் அல்லது இசை அணிவகுப்புக் குழுக்களுக்கான வருமான ஈட்டல் செயற்பாடுகளுக்குள் அடங்கக்கூடிய பயன்படுத்திய பொருட்களின் விற்பனை, சிற்றுண்டிச் சாலை நடாத்துவதில் பங்களித்தல், குடியிருப்புகளின் பொதுப்பகுதிகளைத் துப்புரவாக்கி அழகுபடுத்துதல் போன்றன பொதுவான தன்னார்வப் பணிகள் எனும் வரையறைக்கு உட்பட்ட செயற்பாடுகளாகும். நிச்சயமாக இதனையொத்த நடைமுறைகள் உலகின் வேறெந்தப் பகுதிகளிலும் காணக்கூடியவை. ஆனால் நோர்வேஜியர்களைப் பொறுத்தவரை, தன்னார்வப்பணி என்பது மொழிபெயர்ப்பதற்குக் கடினமான ஒரு உள்ளூர் சொல் என்பதற்கு அப்பால், ஒரு வகையில் சமத்துவவாதத்தின் குறியீடாகவும், புராதனமாக பிணைப்பினைக் கொண்ட ஒருமைப்பாட்டின் குறியீடாகவுத் உள்ளது.

இந்த இலைதுளிர் காலம், அரசியல்வாதிகள் தத்தமது தேர்தல் தொகுதிகளை அணிதிரட்டுவதற்காக ‘தேசிய தன்னார்வப் பொதுப்பணி’ என்ற சொல்லாடலைத் திரும்பத்திரும்ப பயன்படுத்தியுள்ளனர். இச்சொல்லாடல், தேசமாகச் சிந்தித்து தனித்துவம்மிக்க தனிநபராக நடந்துகொள்வதைப் பரிந்துரைக்கின்றது. – அதாவது தனிநபர்களின் கூட்டுணர்வு மற்றும் கூட்டுணர்வாகச் சிந்திக்கும் தனிநபர். மானிடவியலாளர் டுழரளை னுரஅழவெ, பேரிடர்களிலிருந்து வெளிவர முனையும் நவீன தேசத்தை இப்படியாகச் சித்தரித்தார்.

உண்மையில் இந்தச் சொல்லாட்சி மிகைமதிப்பிற்கு உட்பட்டுவிட்டதாகவும் தலைவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதற்காக, தமது வழமையான வழிமுறைகளிலிருந்து வெளியேறுகின்றனர். இது நிறுவனங்கள் மற்றும் அரசு மீதான நம்பிக்கை மற்ற நாடுகளை விட நோர்வேயில் ஆழ வேரூன்றியுள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகின்றது.

ஒரு சில மேலோட்டமான உதாரணங்கள் மூலம் இந்த விடயத்தை விளக்க முடியும். ஏப்ரல் ஆரம்பத்தில், மக்களின் நடமாட்டத்தைக் கண்டறியும் திறன்பேசிச் செயலி புதிதாக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.

ஒரு வாரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் 1.4 மில்லியன் நோர்வேஜியர்கள் (மொத்தச் சனத்தொகை 5.5 மில்லியன்) தன்னியல்பாக அந்தச் செயலியை தமது திறன்பேசிகளில் தரவிறக்கியிருந்தனர். அந்தச் செயலி மூலம் சேகரிக்கப்படும் இலத்திரனியல் தகவல்களை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தாது என்பதோடு, ஏனைய அனைத்துப் பொறுப்புமிக்க குடிமக்கள் போல தேசிய சிரமதானத்திற்குப் பங்களிக்கின்ற சமிக்ஞை இதன் மூலம் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்தச் செயலியைத் தரவிறக்கிய அனைவரும் அதனைச் செயற்படுத்தியுள்ளனர் என்று அர்த்தமில்லை.

ஒரு மாதத்திற்கு முன்னர், நகரத்திற்கு வெளியேயுள்ள தனியார் ஓய்வுக் குடில்களுக்கும் ஏனைய பொது ஓய்வுக்குடில்களுக்கும் சென்று தங்குவதற்கு அரசாங்கம் தற்காலிகத் தடைவிதித்திருந்தது. ஒரு நாட்டின் மத்தியதர வர்க்கத்தின் பெரும்பகுதி இந்தக் காலப்பகுதியில் ஒரு சமய உள்ளுணர்வோடு ஒரேஞ் பழங்களைச் சுவைப்பதற்கும் நீள்தூரப் பனிச்சறுக்கலுக்காககாகவும் தமது மலைக்குடில்களில் ஈஸ்ரர் காலத்தைக் கழிப்பது வழமை. இத்தகைய சூழலில் ஓய்வுக்குடில் தடை என்பது நுண்ணுணர்வற்ற சர்வாதிகார அரசாங்கத்திடமிருந்து வந்த ஆத்திரமூட்டுகின்றதும் அவமானப்படுத்துகின்றதுமான அறிவித்தலாகப் பார்க்கப்பட்டிருக்கக்கூடியது.

இருப்பினும் எதிர்வினைகள் மிகுந்த புரிதலை வெளிப்படுத்தின. 80 வீதத்திற்கு மேலான மக்கள் தடையை ஏற்றுக்கொண்டதாக கணிப்பு ஒன்று கூறியது. அதேவேளை மிகச் சொற்பமான தொகையினரே தடையைத் தீவிரமாக எதிர்த்தனர்.

கொரோனா வைரசினால் ஏற்பட்ட தன்னார்வக் கூட்டுணர்வின் இசைவுச்சூழல் உச்சத்திலிருப்பதை வேறு புறநிலைகளில் வைத்தும் அவதானிக்கலாம். உதாரணமாக மார்ச் இறுதியிலிருந்து ஓட்டப்பயிற்சி தொடர்பான சர்ச்சை ஊடகத்தளங்களில் முக்கிய இடம்பிடித்தது. உடற்பயிற்சி நிலையங்கள், மற்றும் ஏனைய பொது இடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஓட்டம் (ஜொக்கிங்) என்பது அர்த்தமுள்ளதும் ஆரோக்கியமானதுமான பொழுதுபோக்கு என்பது ஒரு பார்வை. தவிர நடை

அமைதியாக நடை பாதைகளில் செல்பவர்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் குழந்தைகளோடு செல்வபர்கள், குறுகிய பாதைகளின் பாதசாரிகள் மீது வேர்வை, மூச்சுத் துளிகளை உமிழ்ந்து செல்கின்ற பொறுப்பற்றவர்களாக நடைபாதைகளில் ஜொக்கிங்கில் ஈடுபடுபவர்கள் உள்ளனர் என்ற எதிர்ப்பார்வையும் காணப்படுகின்றது. இரண்டாவது பார்வை சமத்துவத்தின் பாற்பட்டது. சலுகைகள் மற்றும் பாரட்ச நடவடிக்கைகளை நிராகரிக்கிறது.

தனிப்பட்ட தொடர்பு வலையமைப்புகள் மற்றெங்கிலும்விட நோர்வேயில் குறைவான முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்ற போதிலும், குறிப்பாக தொழிற்சந்தை, பொருளாதாரத் தளங்களில் அவற்றின் முக்கியத்துவம் குறைவானது. அத்தோடு ஊழல் பற்றிய பார்வை சார்ந்த சர்வதேச ஆய்வுகள் நோர்வேஜியர்கள் அதனை மிகக்குறைவு என நம்புவதாகக் கூறுகின்றது.

தன்னார்வப் பொதுப்பணி எனும் கருத்தியல் பற்றியும் அதன் மீதான அதீத நம்பிக்கையின் அளவீடு பற்றியும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். அது மனிதர்களுக்கிடையிலான பொதுமைப்படுத்தப்பட்ட நம்பிக்கையையும் தனிப்பட்ட உறவுத்தொடர்பற்ற அதிகார நிறுவனங்கள் மீதான நம்பிக்கைக்கும் பொருந்தும்.

நோர்வேஜியர்களின் சுய புரிதல் சார்ந்த விடயத்தைக் குறிக்கின்ற, கவர்ச்சிகரம் குறைந்த ஒரு அம்சத்தினைச் சுட்டிக்காட்டுவதன் மூலம்; இரண்டையும் புரிந்து கொள்ளலாம். அது துயவெநடழஎநnஇ வாந டுயற ழக துயவெந. இது நோர்டிக் நாடுகளின் சமத்துவம் பற்றிய புரிதலுக்கு அடிப்படையாகக் கருதப்படும் ஒரு இலக்கியப் படைப்பில் இடம்பெற்ற அம்சம். யுமளநட ளுயனெநஅழளந (1899 – 1965) எனும் டெனிஸ்-நோர்வேஜிய எழுத்தாளரின் 1933 இல் வெளிவந்த நையாண்டி நாவலான A Fugitive Crosses u;is Tracks (En flyktning krysser sitt spor) இல் இடம்பெற்றிருந்தது. அதில் பத்துக் கட்டளைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும் அடிப்படையில் அது மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று கருதும் உரிமை எவருக்கும் இல்லை என்று அது கூறுகின்றது. Law of Jante இற்குள் ஸ்கன்டிநேவிய தேசியப் பண்புகளின் குறைபாடாகப் பரவலாகக் கருதப்படும் பொறாமை, சமூக அங்கீகாரம் மிக்க நடத்தைகள், மற்றும் சிறுமைத்தன முன்தீர்மானங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

இருப்பினும், மாறுபட்ட வெளிச்சத்தில் புரிந்துகொள்ளப்பட்டாலும், Law of Jante also சுயநல ஆசைகளைப் பின்பற்றுவதைவிடவும், மக்களை மறைமுகமாக கூட்டுணர்வை வெளிப்படுத்தவும் அதற்காக செயற்படவும் வழிகோலுகிறது.

நோர்வேஜிய இலக்கியத்தில், Law of Jante வினை மிகப் பிரபலமாக மீறிய படைப்பு இப்சனின் பேர் கிந்த். அந்தப் பாத்திரம் இப்போதைய தனிமைப்படுத்தல் விதிமுநைகளைப் பின்பற்ற விரும்பியிருக்காது. அத்தோடு ஆபத்து நிறைந்த வயதுப்பிரிவினரை வைரசிலிருந்து பாதுகாப்பதற்குரிய எவ்வித அக்கறையையும் செலுத்தியிருக்க மாட்டாது.

மார்ச் 12 பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய கூட்டு நடவடிக்கை அனைவரிடமிருந்தும் அர்ப்பணிப்பினைக் கோரியிருந்தது. இதன் முதன்மை அழுத்தம் தீவிர கடமைகளைச் செய்யச் சொல்லி வலியுறுத்தும் வகையானதல்ல. மாறாக கட்டியணைத்தல், அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் போன்றவற்றைக் கடமையாக அறிவுறுத்தப்பட்டது. பெற்றோர்கள் தமது பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு இப்படிச் சொன்னார்கள்: உங்களுக்காக அல்ல. உங்கள் தாத்தா, பாட்டிகளைக் கருத்திற்கொண்டு நீங்கள் வெளியில் சென்று உங்கள் நண்பர்களுடன் களித்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் எனச் சொல்ல நேர்ந்தது.

நோர்வேஜியர்களின் நம்பிக்கையின் அடிப்படை என்ன?

முடிவாக நான்கு சாத்தியமான விளக்கங்களைப் பட்டியலிடுகிறேன். நோர்வே மீதான உயர்ந்த நம்பிக்கையும் நாட்டின் வலுவையும் கொண்டு, அச்சுறுத்துவதற்கு மாறாக வேண்டுகோளின் ஊடாக இந்தப் பேரிடர் காலத்தில் அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய முறையில் மக்களை அணிதிரட்டவும் டுயற ழக துயவெநவின் நேர்மறையான அம்சங்களின் பயன்பாடு ஏதுவாக அமைந்துள்ளது.

முதலாவது சமூக இடைவெளி என்பது தற்காலிகம். புரதமரை அறிந்த ஒருவரை அறிந்த இன்னெருவரைப் பலருக்குத் தெரிந்திருக்கும். உயர்மட்டத்திற்கும் அடிமட்டத்திற்குமிடையிலான இடைவெளி வெகுசில நீக்கல்களால் ஆனது. இது ஆளுபவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்குமிடையிலான குறுகிய இடைவெளியைக் குறிக்கின்றது. இதன் ஒரு விளைவு என்பது வலுவானதொரு கூட்டு அடையாளம்.

இரண்டாவது, மற்றைய மேற்கைரோப்பிய நாடுகளைவிடத் தாமதமாக நோர்வே நகரமயமாக்கமடைந்தது. கிராமப்புற விழுமியங்களான ஒருங்கிணைவு, சமத்துவம் போன்றன இன்றும் நீடிக்கின்றன. ஆகையினால் கடைகளுக்குள் மக்கள் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவிடத்து ஒருவரையொருவர் கடிந்துகொள்கின்ற நிலையில், அந்நியர்களுக்கிடையிலான சமூகக் கட்டுப்பாடு என்பது விளைவுத்தாக்கம் மிக்கது

மூன்றாவது, மக்கட்தொகை ஒப்பீட்டளவில் சிறியது. இதனுடன் முதல் இரண்டு விடயங்களுடன் இணைந்து, தவிர்க்க முடியாமல் அதிகளவில் ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கின்றது. இதனால் பரஸ்பரம் உருவக அயலவர்களாக மாறுகிறோம்.

நான்காவது,அரசுக்கும் குடிமக்களுக்குமிடையிலான இணைவாக்கம் என்பது வலுவானதும், பெரும்பாலும் ஒத்திசைவும் கொண்டதுமாகும். அதாவது அவர்களுக்குத் தேவையான சேவைகளை அரசாங்கம் வழங்கும், மேலும் தேவையேற்படின் காவல்துறை உதவிக்கு வரும் போன்ற பொதுவானதொரு பார்வை நோர்வேஜியர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலை செயின்ட் நூயிசில் உள்ள ஆபிரிக்க அமெரிக்கருக்கோ அல்லது பாகிஸ்தானில் உள்ள சுயாதீன சிந்தனையாளர் ஒருவருக்கோ பொருந்தாது.

இது சமூக ஒத்திசைவு மற்றும் கூட்டுணர்வினை உருவாக்குகின்றது. ஆனால் சமத்துவமின்மைக்கு மறைப்பிடுகிறது. மேலும் இதுவொரு சமூகக் கட்டுப்பாட்டு வடிவத்திற்கு வித்திடுகிறது. சமூகக் கட்டுப்பாடு என்பது இசைவாக்கத்திற்கான வலுவான அழுத்தம், விழிப்புணர்வுக்கான போக்குகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதோடு, எல்லை ரோந்துகள், முறைசாரா தடைகள், அதனோடு மேலும் முக்கியமாக இன ரீதியான அந்நியப்படுத்தல்கள், ஏனைய சிறுபான்மையினரை விலக்கிவைத்தல் போன்றவற்றிற்கும் இட்டுச்செல்லும்.

தற்போதைய விவாதம் என்னவெனில், நடைபாதையில் தள்ளுவண்டிகளில் இளம்தாய்மார்களைக் கடந்து வியர்வையைப் பறக்கவிடுவதும், மூச்சுவாங்க ஓடுவதும் பொருத்தப்பாடானதா? அல்லது அயலவர்கள் தம்மைமறந்து முஷ்டியில் இருமுவதாலோ, அல்லது கைகுலுக்க முனைவதாலோ அவர் தவறானவராகப் பார்க்கப்படுவாரா என்பதாகும். இது சிறியளவு செயல்வெளியைக் கொண்ட சாத்தியமான தகவலறிந்த அல்லது பெரும்பான்மையினரின் விழுமியங்களுக்கு இணக்கமில்லாத நெகிழ்வுத்தன்மைகளைக் கொண்ட சமூகத்தைகக் குறிக்கின்றது.

‘பெரியண்ணா’ துண்டுவிரலைக்கூட உயர்த்தத் தேiயில்லாத, அதேவேளை சிறிய சகோதர சகோதரிகள் நெறிமுறைக் கட்டமைப்பின் எல்லைகளை உறுதியாகவும் கூர்மையாகவும் பேணுகின்ற சமூதாயத்தை நோக்கி, ளுயனெநஅழளந பரிந்துரைத்த டுயற ழக துயவெநவின் மூல வடிவத்துக்கு முழுவட்டத்தையும் நாங்கள் நகர்த்தியுள்ளோம்.

Thomas uylland Eriksen: ஒஸ்லோ பல்கலைக்கழகம் சமூக மானிடவியல் துறை பேராசிரியர். சர்வதேச கல்வியாளர்கள் மத்தியில் அறியப்பட்ட, நோர்வேயின் முதன்மையான கருத்தாளர்களில் ஒருவர். தனது ஆய்வு மற்றும் அறிவூட்டல் செயற்பாடுகளுக்கான ‘கல்வியாளர் விருதினை’ 2019இல் பெற்றவர். உலகமயமாக்கல், தேசியவாதம், அடையாளம், சமூக அறிவியல், இனத்துவம், சூழலியல், காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் காத்திரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். மட்டுமல்லாது அவற்றை வெகுமக்கள் மத்தியில் எடுத்துச்சென்று அறிவூட்டுவதிலும் காத்திரமான பங்கினை ஆற்றிவருபவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + six =

*