;
Athirady Tamil News

விலங்கு வேளாண்மையும் மேய்ச்சல்தரையும்!! (கட்டுரை)

0

கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 80% அளவில் மூலதனத்தை பெற்றுத் தருவது விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஆகும். விவசாயம் மற்றும் விலங்கு வேளாண்மை ஆகிய இரண்டையும் வாழ்வாதாரம் மற்றும் பிரதான தொழிலாக மேற்கொண்டுவருகின்ற இடமாகும்.
பயிர்ச்செய்கையைப் பொறுத்தளவில் இரண்டுவகையான போகப் பயிர்செய்கைகளும் இடம் பெற்று வருகின்றது.
* பெரும்போகம்
* சிறுபோகம்
35000 தொடக்கம் 40000வரை கால்நடைகள் காணப்படுகின்றன. கால்நடை வளர்ப்பானது பொதுவாக தனிநபரிடத்திலோ அல்லது நிலவுடமை கொண்ட விவசாயிகளே பெருமளவில் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். கால்நடைகள் அதாவது விலங்கு வேளாண்மையானது கிளிநொச்சி மாவட்டத்தினைப் பொறுத்தளவில் அவர்கள் அதனை விவசாயத்திற்கு பாதகமான செயல் என வரையறுப்பதில்லை. இரண்டும் ஒன்றின் வளர்சரசிக்கு இன்னுமொன்று துணையிருப்பதாகவே அவதாணிக்கின்றனர். அதாவது விலங்குகளின் கழிவுகள் பசளையாகவும் பயிரற்ற காலம் விலங்குகளுக்கான மேய்ச்சல்தரையாகவும் அவதானிக்கப்படுகின்றது. அத்துடன் கால்நடைகள் உரிமெயாளர்களை நிச்சயமாக கொண்டிருக்கின்றன என்றும் அவற்றுக்கான பதிவுகள் உண்டென்பதுடன் அவை கைவிடப்பட்ட நிலையில் இல்லை என்பதும் அந்த பிரதேசவாசிகளின் கருத்தாக உள்ளது.
ஆனால் இங்கு கால்நடை பராமரிப்பு தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக நீண்டகாலமாகவே அந்தப் பகுதிகளில் நிகழ்ந்த வீதிவிபத்துக்களில் பெருமளவில் கால்நடைகள் உயிரிழந்ததுடன் பல முடமாக்கப்பட்டும் உள்ளன. அந்த வகையில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டியது அவை விவசாய காலப்பகுதியில் ஏற்படுத்தும் சிக்கல்நிலைகள். இங்கு கிட்டத்தட்ட ஒரு பிரதேசத்தில் 1000சதுரப்பரப்பலேனும் மேய்சல்தரை இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவிடத்து பற்றாக்குறையே நிலவும்.

கால்நடைகள் தொடர்பில் நாம் அரச திணைக்களங்களை அவதானிப்போம் எனில்
1. கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்
இதேபோன்று கிராம மட்டத்திலும் அவை சார்ந்த அமைப்புக்கள் உள்ளன.
1. கால்நடை வளர்ப்பு கூட்டுறவு சங்கம்
2. பால் உற்பத்தியாளர் சங்கம்

இந்த சங்கங்கள் இருப்பினும் அவர்கள் பிரதானமாக எதிர்கொள்ளும் சிக்கல் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையுடன் தொடர்புபட்டது. கீழ்மட்டத்திலிருந்து நாம் இதனை அவதானிப்போம்.

உரிமையாளர் தொடர்பான பிரச்சனைகள்

இங்கு ஏற்கனவே அவதானித்தது போன்று நில உடமையாளர்கள் அதாவது விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்களே கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர். ஆக இங்கு இரண்டு காலகட்டங்களில் பயிர்செய்கை நடைபெறுகின்றது. இதாவது 12மாதங்கள் எனில் கிட்டத்தட்ட 10மாதங்கள் பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது.
குறிப்பாக தற்போது பெரும்போகம் நடைபெற்று வரும் நிலையில் மீளவும் சிறுபோகமானது ஏப்ரல் மாதமளவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக பயன்படும் நிலப்பரப்பு பெரியது. இந்த காலப்பகுதியில் அந்த கால்நடைகளுக்கான உணவை பெற்றுக் கொடுப்பது சிக்கல் நிலை உள்ளது. அந்த வகையில் இவர்கள் இன்னுமொருவருங்கு அவற்றை நன்கொடையாகவோ அல்லது வேறு மேய்ச்சல் தரைகளுக்கோ அழைத்துச் செல்கின்றனர். அவை நீண்ட தூரத்தில் இருப்பதால் அவர்களுக்கு அதனை கொண்டுசெல்வதில் சிக்கல் நிலை. அதனால் அவர்கள் கைவிடவோ அல்லது இறைச்சிக்காக விற்கவோ உந்தப்படுகின்றனர்.

கிராம மட்ட அமைப்புக்கள்
இந்த அமைப்புக்களை பொறுத்தளவில் அவை விளைச்சல் காலங்களில் எழுகின்ற மேய்ச்சல்தரை தொடர்பான பிரச்சனைகளுக்கு திணைக்களங்களுக்கோ அல்லது பொது காணி உரித்துடையவர்களுக்கோ கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதாவது மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சனைகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றின் பயன்பாட்டுக்கான அனுமதிகளை கோரியுள்ளன. அந்த நிலங்கள் வேறு திணைக்களங்களுக்கு உரித்துடையவை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நீரற்ற தரைகள் போன்றனவற்றில் மேய்வதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளன.

திணைக்களம் சார் நடவடிக்கையில் உள்ள சிக்கல்கள்

இங்கு மேற்பட்ட சங்கங்களிலிருந்து வரும் கோரிக்கைகளை தொடர்ந்து மேய்ச்சல் தரையாக ஒதுக்கப்படும் நிலங்கள் வேறு திணைக்களங்களிற்கு உரிமையானவை. அந்த திணைகளங்களிடம் அவை எடுத்து செல்லப்படும் போது அவர்கள் அனுமதி வழங்குவதுல்லை. உதாரணமாக வனவளதிணைக்கள பகுதி எனில் காட்டுபகுதி அழிவடைதல், கால்நடைகளை பராமரிக்க முடியாமை என பல காரணங்களை சுட்டி அஅவற்றை மறுதலிக்கின்றன.

ஆகவே மேய்சல்தரைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் சிக்கல் நிலை நீண்டகாலமாக உள்ளது. பெரும்பாலும் உரிமையாளர்கள் அவற்றை மருதங்கேணி,செம்பியன் காடு,இரணைமடு குளகரை,நீரேந்துபிரதேசங்கள்,பற்றைக்காடு போன்ற நீண்ட தூரங்களுக்கு கொண்டு செல்கின்றனர். சில நேரங்களில் கொண்டு செல்லப்பட்ட பிரதேசத்தவர்களின் எதிர்ப்பினால் மீளவும் கொண்டு திரும்பியும் உள்ளனர்.

அண்மைக்கால நடவடிக்கைகள்

* அண்மைக்காலமாக கால்நடை சுகாதார பிரிவே இவற்றினை அவதாணித்து வருகின்றது.
* ஒட்டுசுட்டான்,துணுக்காய் ஆகிய பிரதேசங்களில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் முடிவின்படி வேற்று இடங்களிலிருத்து மேய்சல்தரைக்காக கால்நடைகள் அழைத்து வருவது தடைசெய்யப்பட்டுள்ளது.
* விவசாய காலம் என்பதனால் இம்மாதம்(10.20.2020) முதல் 03.10.2021 வரையான காலப்பகுதியில் கால்நடைகளை கட்டி பாரமரிக்க வேண்டும் என கமநலசேவை நிலையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

எதிர்கால திட்டம்

கால்நடை வளர்ப்பு தொடர்பில் கவனம் செலுத்தும்போது இரண்டு வகையான வளர்ப்புமுறை உண்டு.
1. திறந்தவெளி வளர்ப்பு
தற்போது நாம் காணும் மேய்சல்தரைக்கான சிக்கலுடைய வளர்ப்புமுறை. கால்நடைகள் வெளியே மேய்ச்சலுக்கு சென்று பட்டிக்கு திரும்புவது.

2. உள்ளக வளர்ப்பு
உள்ளக வளர்ப்புமுறை என்பது கோழிப் பண்ணைகள் போன்று தொழுவங்களை அமைத்து கால்நடைகளை உள்ளேயே வைத்து உணவினை தவிடு, கொள்ளு, வைக்கோல் போன்றவற்றை அவை இருக்குமடங்களிலேயே வைத்து வளர்க்கும் முறையாகும்

இந்த இரண்டாவது செயற்முறையை பிரதானப்படுத்துவதே முதன்மையாக உள்ளது. ஆக விவசாயத்தை பாதிக்காமல் அவற்றை இவ்வாறு அமைவிடங்களில் வைத்து பாராமரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − eight =

*