;
Athirady Tamil News

இலங்கையில் கொரோனா தொற்றை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய முறைகள்!! (கட்டுரை)

0

இலங்கையில் ‘சிக்கின்குனியா நோய்’, டெங்கு போன்றவை மக்களை பாதித்தபோது, இன்றுபோல் பலரும் பயந்துதான் நடமாட முடியாது என தவித்தனர். பின்பு மேற்படி நோய் பரவும் காவிகளை, வரமுன் தடுப்பதற்கு, வந்தபின் தடுப்பது என மக்கள் தொடர்பு சாதனம் மூலம் அறிந்து, அதைக் கடைப்பிடித்ததால் மேற்படி இரு நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அதனுடன் இசைவாக்கம் பெற்று உள்ளனர்.
இதேபோன்று எலிக்காய்ச்சல், மலேரியா, மேலும் பல் தொற்றா நோய்கள் பற்றி இசைவாக்கம் அடைந்துள்ளனர்.

மேற்கூறிய அனுபவம் மூலம் ‘கொரோனாவை’ நாம் எதிர்கொள்வோம். எவ்வளவு நாட்களுக்கு நாம் நாட்டை, கிராமத்தை முடக்கி வைத்திருக்க வேண்டும் ? இலங்கையில் 58 வீதமானவர்கள் நாளாந்தம், வாராந்தம் தொழில் செய்து மூன்று வேளை உணவு உட்கொள்கின்றனர். நாட்டை 01 கிழமை, தொடக்கம் 01 மாதம் முடக்குவதன்மூலம் இவர்களின் குடும்பங்கள் சொல்லொணா வேதனைகளை அனுபவிக்கின்றனர். உண்ண உணவில்லை, குடிக்க நீரில்லை, படிக்க பாடசாலைகள் இல்லை, தொழிலில்லை, சமய நடவடிக்கைகள் இ;ல்லை. நடமாட்டமின்றி வீட்டில் அடைபட்டு இருப்பதால் 60 வீதமானனோர் வயோதிபர்கள், கர்ப்பிணி தாய்மார், சிறுவர்கள் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாவதாக உலக ஸ்;தாபனம் அறிவித்துள்ளது.

17.11.20 இல் ‘ஜெர்மனியில்’ கொரோனாவிற்கான முதலாவது தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில நாடுகள் 2021 இல் முற்பகுதியில் மருந்துகள், ஊசிகள், மாத்திரைகள் தயாரித்து வெளியிடுவதில் ஈடுபட்டுள்ளனர். ஓர் தடுப்பூசி, மருந்து குறைந்தது 02 வருடங்களுக்குப் பரீட்சிக்கப்பட வேண்டும். இக்காலப் பகுதியில் அதன் தாக்கம், பக்க விளைவு போன்றன அறியக்கூடியதாக இருக்கும். எனவே 2023ல் தான் இதன் பெறுபேறுகளை உலக சுகாதார ஸ்தாபனம் சிபாரிசு செய்யும். மேலும் இவ்வூசிகள், மாத்திரைகள் பெரும் செலவில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்து இலவசமாகவோ அல்லது குறைந்த விலையில் வழங்க வேண்டும்.

மேலும் இலங்கை சனத்தொகையில் குறிப்பாக வயது குறைந்தோருக்கும், கர்ப்பிணி தாய்மாருக்கும், கடும் தொற்றா நோய் உள்ளவர்களுக்கும் முதலில் வழங்கப்பட வேண்டும். இதற்கு ஏற்படும் செலவு என்ன? 17.11.2020 தரவுகளின்படி 17,516 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டதாகவும், கொழும்பில் எழுந்தவாரியாக நடாத்தப்பட்ட Pஊசு பரிசோதனையில் 05 வீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் 58 மக்கள் இதுவரை இறந்துள்ளனர். மேலும் இறந்த உடலில் 21 நாட்களின் பின் Pஊசு பரிசோதனை செய்தபோது நோய் காவி இருப்பதை வெளிநாட்டில் கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கையில் இந்நோயினால் ஒரு நாளுக்கு 3-4 நபர்கள் இறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது. பலவீனமானவர்கள் கொரோனாவிற்கு இலக்காகக் காணப்படுகின்றனர். மேலும் 11,806 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களும், வைத்தியசாலையிலுமிருந்து வெளியேறியுள்ளனர். இவர்களில் ஒருவர் தனக்கு நடந்த சிகிச்சை பற்றி முகப்புத்தகத்தில் வெளியிட்டதை அவதானிப்பது நலம்.

அவரின் கூற்றின்படி தங்கியிருந்த நாட்களில் மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் தலையிடியின்போது பரசிற்றமோல் வழங்கப்பட்டது. ஒரு நாளுக்குக் குறைந்தது 5-6 தடவைகள் சுடுநீர், இரசம், கஞ்சி, தேநீர்; வழங்கப்படுவதுடன், மரக்கறிச் சாப்பாடு, 2-3 தடவை நீரினால் ஆவிப்பிடித்தல், ஒரு நாளைக்கு 4-6 தடவைகள், கைகள், கால்களை சவர்க்காரமிட்டு கழுவுதல், தேவைப்படின் ளுயnவைணைநச பாவனை, நன்கு காற்றோட்டம் உள்ள படுக்கை, தூய உடை, சுகாதாரத்தை பேணுதல். 02 தடவை Pஊசு பரிசோதனை, மத அனுஸ்தானங்கள் உளவியல் ;தாக்கத்தை குறைப்பதற்காக கடைப்பிடித்ததாக கூறியுள்ளார்.

எமது நாட்டு தொற்றா நோய்கள் என அம்மை, பொக்களிப்பான், சின்னமுத்து போன்ற நோய்கள் குடும்பத்தி;ல் ஒருவருக்கு ஏற்பட்டால் நாம் என்ன செய்வோம்? தனி அறையில் பாதிக்கப்பட்டவரை 7-14 நாட்கள் தனிமைப்படுத்தல், குடும்ப உறுப்பினர்கள்கூட அவசியமின்றி தொடர்பு கொள்ளாதிருத்தல், ஊர் வைத்தியம் ஃ பாட்டி வைத்தியம் என அறை வாயில், வீட்டு வாயில், வேப்பமிலை கட்டுதல், மஞ்சள் நீர் வீட்டை சுற்றி தெளித்தல்,, வேப்பமிலைஃ மஞ்சள் அரைத்து பாதிக்கப்பட்டவருக்கு பூசுதல், மச்சம் தவிர்த்தல், பால், இரசம், சுடுநீர் அருந்துதல், ஆவி பிடித்தல். நோயின் உறங்கு காலம 07,14,21 நாட்களின் பின் ஏனையவருக்கு பரவாது சுடுநீரில் குளித்து இசைவு வாழ்க்கைக்கு வெளிவரல்.

இதை இலங்கை வாழ் மக்கள், உலக சுகாதார ஸ்தாபனம், இலங்கை சுகாதார பிரிவு, அறிவித்தது போன்று நோய் உள்ளவரை தனிமைப்படுத்துங்கள் 07-12-14 நாட்கள் தனிமைப்படுத்துங்கள். மச்சம், குளிர்பானங்கள் தவிர்த்தல், போதியளவு சுடுநிர், இரசம கஞ்சி அருந்துதல் குறைந்தது 02 தடவை சுடுநீரில் வேப்பமிலை, மஞ்சள், கிராம்பு, தேசி இலை ஒன்றை இட்டு ஆவி;பிடித்தல், முகக்கவசம் அணிதல் 03-04 மணித்தியாலயத்திற்கு ஒரு தடைவ அவற்றை மாற்றுதல் வீட்டிற்குள் உள்வரும்போது, வெளிச்செல்லும்போது கை, கால்களை கழுவுதல் ஏனையவருடன் 01- 02 மீற்றர் இடைவெளியில் நடத்தல் அல்லது பழகுதல் 14/21நாட்களின் பின் குளித்து வெளிவருதல் இதனால் ஏனையவருக்கு நோய் பரவாது பாதுகாத்தல்.

மெல்லிய ஆடைகளை அணிதல், மழைகாலம், குளிர்காலங்களில் அவதானமாக இருத்தல்,
தொடர்ந்து சளி பிடித்தல், இருமல் இருந்தால் பொது சுகாதார உத்தியோகத்ததைர நாடுதல். இதன்மூலம் கொரோனாவுடன் நாம் பழகிக்கொண்டு இசைவாக்கம் அடையலாம் என கௌரவ ஜனாதிபதியின் சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். மேற்குறிப்பிட்ட நடைமுறையை ஒவ்வொரு நாட்டு பிரஜைகளுக்கு ஏனையவர்கள் அறிவிப்பதும், பாடசாலை, தொழிற்சாலை, மதஸ்தாபனங்களில் பொது இடங்களில் மக்களுக்கு அறிவிப்பது எமது தலையாய கடமையாகும்.
‘இலங்கையிலிருந்து கொரோனாவை ஒழிப்போம்’ வாரீர்’

தகவல்
திரு.சின்கிலேயர் பீற்றர்
ஆய்வாளர்
மன்னார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − fourteen =

*