;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் கமலா ஹரிஸின் கொள்கை ஆலோசகரானார்!! (கட்டுரை)

0

அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் தனது கொள்கை ஆலோசகராக இலங்கை -அமெரிக்கர் ரோகிணி கொசோக்லுவை தெரிவு செய்துள்ளார்.

அமெரிக்க உப ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹரிஸ் இலங்கை -அமெரிக்கர் ரோகிணி கொசோக்லுவை தனது உள்நாட்டு கொள்கை ஆலோசகராக தெரிவு செய்துள்ளதாக NIkkei Asia நேற்று வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொசோக்லுவின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

கமலா ஹரிஸின் செனட் அலுவலகத்துக்கும் பின்பு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கும் தலைமை ஊழியராக இவர் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்க செனட்டில் தலைமைப் பணியாளராக பணியாற்றிய முதல் தெற்காசிய அமெரிக்கப் பெண் இவராவார். மெக்ஸிகன் பல்கலைக்கழகத்திலும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்ற கொசோக்லு மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

“எனது உள்நாட்டு கொள்கை ஆலோசகராக பணியாற்றவுள்ள ரோஹினி கொசோக்லு அமெரிக்க மக்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஆராயும் நிபுணர் மட்டுமல்ல, செனட் மற்றும் ஜனாதிபதி பிரசாரத்தின் போது எனது நெருங்கிய மற்றும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்று கமலா ஹரிஸ் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*