;
Athirady Tamil News

உலக நீதி செயற்பாடுகளுக்கு மேலதிக ‘ பதில் ‘ தேவை ! ஜெகான் பெரேரா!! (கட்டுரை)

0

ஐ. நா சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் இதுவரை வெளியாகியுள்ளஅறிக்கையே தற்போதைய கூட்டத் தொடரில் விவாதிக்கப்படுகின்ற
அறிக்கையாகஅதிகளவுக்கு தென்படுகிறது.

அமெரிக்கா இப்பேரவையில் ஒரு அங்கத்துவ நாடாக இல்லாத போதும் ஜோ பி டன் ஜ னாதிபதியானதுடன் அந்நாடு மனிதவுரிமைகள் பேரவையில் தான் மீண்டும் அங்கத்தவராகும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டைப் பொறுத்தமட்டில் இக்கூட்டமைப்பு ஒரு பெரிய சவாலாகவே இருக்கும்.

இலங்கை ஒரு எதிர்ப்பு தீர்மானத்தை பிரேரிக்கலாம் என்று எண்ணுவதற்கு இடமில்லாதிருக்கிறது. சீனா இப்போது ஒரு எழுச்சியுறும் நாடென்பதால் வல்லமை குறைந்து செல்வதாக நம்பப்படும் மேற்கத்தைய நாடுகளின் வல்லமை பற்றிய தவறான ஒரு கணிப்பீடும் இப்போது இலங்கை போன்ற நாடுகளால் தமது வசதிக்காக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே தெரிகிறது.

மேற்குலக வல்லரசுகளே தொடர்ந்தும் சர்வதேச நிறுவனங்களில் இப்போதும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பெரும் வல்லரசு நாடுகளுடன் இலங்கை போட்டியிட்டு போராடி வருவது இந்நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகளில் ஒத்திசைவு இல்லாமையின் காரணத்தினாலாகும்.

ஜ னாதிபதி பி டன் பதவி ஏற்றதனை அடுத்து அவரது நிர்வாக கொள்கைகளில் . அமெரிக்காவின் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய த்துடன் ஒத்த எண்ணங்களுடனான கூட்டு நாடுகளுடன் குறிப்பாக சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஒருமித்த சிந்தனை கொண்ட நாடுகளுடன் இணைந்து செயல்படும் வகையில் தனது செயற்பாடுகளை வடிவமைத்துக் கொண்டே செயற்படுகிறார்.

ஐக்கிய அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை சார் முன்னுரிமைகள் தொடர்பில் தற்போது இலங்கை ஒரு பரிசோதனைக்கான நிகழ்ச்சியாக இருக்கப் போகின்றது. அந்நாடானது மனித உரிமைகளையும் சர்வதேச நிறுவனங்களையும் கட்டியெழுப்பி வலுவடையச் செய்வது தொடர்பில் முனைப்பாக செயல்படும் வகையில் தொடர்ந்தும் பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட அவ்வாறான நிறுவனங்களை வலுவடையச் செய்யலாம் என்பது அதற்கானதோர் சுட்டிக்காட்டலாகத் தென்படுகிறது.

பதவிக்கு வந்த ஆரம்ப கால கட்டங்களிலேயே அவர் அவ்வாறாக சர்வதேச ரீதியில் சிந்தித்து பல பதவிகளுக்கு அவரால் நியமனம் செய்யப்பட்டவர்களில் பலர் தென்னாசிய நாட்டவர்களாகவும் அதுவும் துணை ஜ னாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸ் என்பவரை நியமித்துள்ளமையும் எமக்கு அறிவுறுத்தல்களாக உள்ளன. அவர்கள் இலங்கையை கூடிய ஆர்வத்துடன் கவனிக்கலாம் என்பதற்கான சாத்தியங்களும் உள்ளன.

இன்றைய சமகால சர்வதேச அரசியலில் இலங்கை கவனிக்கத்தகுந்ததும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒரு நாடுமாக உள்ளது. இலங்கைக்கு அடுத்தடுத்து பல பக்கங்களிலிருந்தும் வரும் அழுத்தங்கள் காரணமாக வல்லரசுகளுடன் இலங்கை அரசாங்கம் பல மாற்றங்களையும் அவ்வப்போது விரைவாக செய்து வருகின்றமையிலிருந்து இதனை அறிந்து கொள்ளவும் முடிகிறது.

இலங்கையின் அமைவிடம் வகிக்கும் புவிசார்பரசியல் முக்கியத்துவம் காரணமாக அண்டைய நாடான இந்தியா மற்றும் சர்வதேச பெரிய வல்லரசு நாடுகள் என்பன பயன்படுத்தும் கடல்வழிகள் என்பனவற்றின் பாதுகாப்பு தொடர்பில் பல சாரரும் அக்கறை செலுத்தி வருகின்றனர். இதுவே சடுதியாக இலங்கை மூன்று முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டியதற்கான காரணமாக அமைந்துவிட்டது.

அவையாவன: இந்தியா- யப்பான ஆகிய நாடுகளுக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வழங்கும் தீர்மானம் பின் வாங்கப்பட்டமை, யாழ்ப்பாணத்திற்கருகில் உள்ள மூன்றுத் தீவுகளில் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட மின்சார உற்பத்தி நிலையங்களை சீனாவுக்கு வழங்க செய்த தீர்மானம் நிறைவேற்றப்படாது பின் வாங்கியுள்ளமை, சர்வதேச கிரிக்கட் வீரரும் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமருமான இம்ரான்கானின் இலங்கைவிஜயத்தின்போது பாராளுமன்றத்தில் உரையாற்றும் படி கேட்டுவிட்டு அதனை இப்போது வாபஸ் வாங்கிக் கொண்டமை போன்றவையே அவையாகும்.

இதற்கான பிரதான காரணம் இலங்கை நாடானது இம்மூன்று நாடுகளுக்கு மாத்திரமன்றி முழு உலகிற்கும் முக்கியமானது என்பதாகும். ஏனைய நாடுகளுக்கும் இது ஒரு முக்கிய படிப்பினையாகவும் இருக்க முடியும். ஒரு அரசாங்கம் தனது பிரஜைகளுக்காக தன்னாலான நன்மையான காரியங்களை செய்து முடிக்க வேண்டும். இலங்கை ஒரு சிறிய நாடாக இருப்பதன் காரணமாக எந்தவொரு வலிமை மிக்க நாட்டினையோ அல்லது கூட்டமைப்பு நாடுகளையோ, பகைத்துக் கொள்ளாத வகையில் இ;வ்வாறான தீர்மானங்களைத் தான் செய்துக் கொள்ள முடியும்.
வலுவான அவதானங்கள்

தற்போதைய அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதப் பகுதி மற்றும் 2020 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாத தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய இறைமை மற்றும் இலங்கையின் தேசிய ஆர்வங்களை பாதிக்கக் கூடியதான சர்வதேச தலையீடுகளை அனுமதிப்பதனை தடை செய்தல் போன்றவை பற்றிய தீர்மானம் செய்யப்பட்டது.

பெரும் வெற்றியீட்டிய அரசாங்கத்தின் வருகையால் மக்களிடம் இவ்வரசாங்கம் இலங்கைக்குள் வெளிநாடுகளின் அரசியல் தலையீட்டை இல்லாதாக்க முடியும் என்ற நம்பிக்கையினை கொண்டு வந்தது. மக்களிடம், அரசாங்கம் வெளிநாட்டு தலையீடுகள் உள்நாட்டு விவகாரங்களில் ஏற்பட அனுமதிக்கப்படாது பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை தலைவர்கள் மக்களிடம் வழங்கினார்கள்.

இலங்கை வழங்கிய இணை அனுசரணை . ஐ. நா. மனிதவுரிமைகள் பேரவையின் 2015 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை இப்போது புதிய அரசாங்கத்தினால் வாபஸ் வாங்கப்பட்டது. அது அரசாங்கம் மக்களிடம் தேர்தலுக்காக வழங்கிய உறுதி மொழிக்கு சான்றாகியது. சீனாவும் ரஸ் யாவும் இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதியை மீள வாபஸ் வாங்கியமைக்கு ஆதரவாக முட்டுக் கொடுக்கலாம் அதன் விளைவாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தடைகள் விதிக்கப்படாது என்ற எண்ணத்தில் ஐ. நா சபையின் மனிதவுரிமை பேரவையின் பெரும்பாலான அங்கத்துவ நாடுகள் இதற்கு எதிராக செல்லாது விடலாம் என்ற நம்பிக்கை நிலவியது.

ஆனாலும் ஒரு நாடு தன் நாட்டினுள் இடம்பெற்ற ஆயுத போராட்டத்திற்கு எதிராக ஆவன செய்ய பல்வேறு நாடுகளிடம் ஆதரவைக் கோரி அம்முயற்சியில் வெற்றியும் பெற்றுவிட்டு இப்போது இப்பிரச்சினை எமது உள்நாட்டுப் பிரச்சினை மட்டுமே என்று கூறி ஒதுங்கிக் கொள்ள முடியுமா என்பது வினாவாகிறது. இதனால் இந்த ஆயத போராட்டத்திற்கு அப்போது உதவிகள் வழங்கிய நாடுகளும் அங்கு ஏற்பட்ட அத்து மீறல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியனவாகிவிடலாம்.

ஐ. நா சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் எதிர்வரும் கூட்டத் தொடரின் போது வெளிப்படவுள்ள தீர்மானமும் அதன் வாயிலாக செயற்படுத்தப்பட உள்ள விபரங்களும் ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அறிக்கையில் அதன் வடிவமைப்பாளர்கள் பல்வேறு அரசியல் நிலவரங்களும் இலங்கையில் காணப்படுவதாக பின்வருமாறு கூறியுள்ளனர். “சிவில் அரசாங்க நடைமுறைகளில் இராணுவ மயமாக்கம் விரைவூட்டப்படுகிறது: நீதித் துறையினதும், மற்றும் மனிதவுரிமைகளை ஊக்குவிப்பதற்கும், பாதுகாப்பதற்குமான பிரதான நிறுவனங்களின் சுதந்திர செயற்பாடுகள் தேய்ந்து செல்கின்றன: அடையாளமாக காணப்படும் பொறுப்புக் கூறல் தொடர்பான குற்றங்கள் மற்றும் மனிதவுரிமைகள் மீது ஏற்பட்ட அத்துமீறல்கள் என்பவற்றை வெளிப்படையாகவே எடுத்துக் காட்டும் அடையாள சான்றாதாரங்களை ஒழித்துக் கட்டும் வகையில் குற்றங்கள் செய்தவர்களை தண்டனையிலிருந்து விலக்கீடு செய்யும் அரசியல் தடைகள்: சமயங்கள் மற்றும் நம்பிக்கைகளை பின்பற்றும் உரிமைகள் தொடர்பான சுதந்திரங்களை பாதகமாக பாதிக்கும் கொள்கைகள்:

சிவில் சமூகத்தினர் மீதான கண்காணிப்பு, மற்றும் அவர்களை மிரட்டி அடக்குதலும்ஜ னநாயக செயற்பாடுகளுக்கான வாய்ப்புக்களை இல்லாதாக்குதலும்: கொடுங்கோன்மையாக தடுத்து நிறுத்தி வைத்தல், சித்திரவதை செய்யப்படுவது பற்றிய பல குற்றச்சாட்டுக்கள் மற்றும் துன்புறுத்தல், மனிதாபிமானமற்ற முறையில் (கடுமையாக) நட த்துதல், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான அத்துமீறல்கள், இவற்றின் காரணமாக அண்மைக் காலங்களில் (வருடங்களில்) மேற்கொள்ளப்பட்ட சில நிவாரண நற்பணிகளையும் பழைய நிலவரத்திற்கே கொண்டுசெல்லக் கூடியதாயிருத்தல்: என்பவற்றோடு கடந்த கால பெரும் பாதகமான அச்சந்தரக்கூடிய நிலவரத்திற்கே கொண்டு செல்லும் வகையிலான கொள்கைகளும் நடைமுறைகளும் இடம் பெறுகின்றமை என்பன குறிப்பிடத்தக்கதாகும்.

தீர்மானநகலில் பின்வருவன பிரதான அங்கங்களாக உள்ளன. முஸ்லி ம்களையும் மற்றும் தமது இறந்த உறவினர்களை மண்ணில் அடக்கம் செய்வதனை முக்கிய மத சம்பிரதாயமாக கொண்டுள்ள தரப்பினரையும் கோவிட் – 19 காரணமாக இறந்தால் கட்டாயமாக தகனம் செய்யவே வேண்டும் என்னும் அரச ஆணை: பற்றிய அக்கறையும் கரிசனையும்: இலங்கையில் இடம்பெற்ற அனைத்து மனித உரிமைகள் தொடர்பில் இடம்பெற்ற அத்துமீறல்களும் துஷ் பிரயோகங்களும் பற்றிய யாவற்றையும் உள்ளடக்கியதான பொறுப்புக் கூறல் செய்முறை – இதில் தமிழ் விடுதலைப் புலிகளின் அவ்வாறான குற்றங்கள் உள்ளடங்கலாக: சனநாயக ஆட்சியின் முக்கியத்துவமும் சுதந்திரமும் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் படியான மாகாண சபை பற்றிய நிர்வாகங்கள் போன்றவற்றினை புறக்கணித்திருத்தல்: நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பன உள்ளடங்கலாக மனித உரிமை நிலவரங்கள் பற்றிய கள நிலவரங்கள் தொடர்பாக உயர் ஸ்தானிகரது அலுவலகத்தினால் கோரப்பட்ட கோரிக்கைகள் என்பனவே அவையாகும்.

அண்மையில் இலங்கை பாதுகாப்பு படையினர் மீதான வழக்குகள் யாவும் வாபஸ் வாங்கப்பட்டுள்ளன அல்லது நீதித்துறையுடன் எதுவித கலந்தாலோசனைகளும் இல்லாத வகையில் வாபஸ் வாங்கப்படுதல் வேண்டும் என்று தற்போதைய அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு முரண்பாடான நிலவரமாகவும் உள்ளது.

நம்பிக்கைகீற்று
தீர்மானநகல் வரைபில் உள்ள நம்பிக்கை கீற்று அதாவது சார்பான அல்லது நன்மையான அம்சம் அதுவும் அரசாங்கத்தின் பக்கத்திலிருந்து நோக்கும் போது ஒரு அம்சம் மட்டுமே தென்படுவதாக உள்ளது. அதாவது இத்தீர்மானம் நாட்டை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கோ அல்லது வேறெந்த சர்வதேச அல்லது உயர்மட்ட வழக்காடு மன்றத்திற்கோ கொண்டு செல்ல வேண்டும் என்ற சா ரத்தை கொண்டிருக்கவில்லை என்பதாகும். இப்போதைய தீர்மானமானது மேற்படி பிரச்சினைகளை தேசிய அல்லது உள்ளூ ர், நீதித்துறை முறைமைகளிலேயே கையாளலாம் என்பதாகும். அத்தீர்மானத்தில் உள்ளடங்கும் ஒரு பிரிவில் மனித உரிமைகள் அத்துமீறல் தொடர்பான சான்றாதாரங்களை ஐ.நா முறைமை எதிர்காலத்திலும் பயன்படுத்தக் கூடிய வகையில் பகுப்பாய்வு செய்து பாதுகாப்பதனை உறுதி செய்ய வேண்டும் என்ற ஒரு சரத்தினை உள்ளடக்கியும் உள்ளது.

ஒரு வேளை தேசிய நீதி முறைமை தனது கடமைப் பொறுப்பினை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் அதனால் நிறைவேற்றத் தவறியமை காரணமாக ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப சர்வதேச முறைமையினை அணுகுவதற்கான ஒரு மாற்று வழியும் இதன் மூலமாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இப்போது சடுதியாக எதிர்பாராத வகையில் சர்வதேச நீதியை ஆதரித்து வாதாடுபவராக கர்தினால் மல்கம் ரஞ்சித் முன் வந்து முன் வைக்கும் அணுகுமுறையிலிருந்து இது வேறானதல்ல. கத்தோலிக்க தேவாலயத்தின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் கர்தினால் அவர்கள் செயல்திறன்மிக்க தலைமைத்துவத்தை வழங்குபவர். இலங்கை அரசில் ஏதோ தவறாக போய் கொண்டிருக்கின்றது என்பதற்கு இது ஒரு தெளிவான முன்னெச்சரிக்கையாகும்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிரூ தினத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் கட்டுவ பிட்டிய தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பும் ஒன்றாகும். அத்தேவாலயத்தில் வைத்தே கர்தினால்குறித்த குண்டு வெடிப்பு தொடர்பில் கண்டித்து அரசாங்கத்தின் விசாரணைகள் ஏமாற்றத்தை தருவதாக கூறி வேதனையை தெரிவித்தார். கத்தோலிக்க சமயத்தவர்களை குறிவைத்து நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த நூற்றுக்கணக்கான அச்சமயத்தைச் சார்ந்தவர்கள் அமைதியான முறையில் ஊர்வலம் சென்று தமது கண்டனத்தைத் தெரிவித்தார்கள். பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தினர் உட்பட்ட இக்கூட்டத்தினர் 2019ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் பற்றி விசாரித்து ஜ னாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையைப் பற்றி வாசித்து அறிய நியமிக்கப்பட்டுள்ள ஒரு அமைச்சரவை குழுவுக்கு எதிராக இக்கண்டன ஊர்வலத்தில் கருத்து வெளிப்படுத்தியுள்ளனர்.

கர்தினால் கருத்துக் கூறுகையில் அறிவார்ந்த ஐந்து நீதிபதிகளை கொண்டமைந்த ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அதிலுள்ள சிபாரிசுகளையும் முடிவுகளையும் பயன்படுத்தி அரசாங்கமும் சட்டமா அதிபரும் தேவையான செயல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டார். தேசிய மட்டத்தில் செய்யப்பட்டுள்ள புலன் விசாரணை முடிவுகள் கீழறு நிலைக்கு தள்ளப்பட்டு முறைகேடு செய்யப்படுமானால் அதற்கு எதிராக தான் சர்வதேச புலன் விசாரணைக்கு கோரிக்கை விடுக்க உள்ளதாக கூறியுள்ளதுடன் உலக கத்தோலிக்க ஆலயங்களின்அதிகார மையமான வத்திக்கானின் நீதி அமைப்பிடமும் மேன் முறையீடு செய்யப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது போன்ற ஒத்த பண்பினதான பல பிரச்சினைகளின் போது கர்தினால் ம ல்கம் ரஞ்சித்தின் நிலைப்பாடு இப்போதைய நிலைப்பாட்டிலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒன்றாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவின் பின்னர் மனித உரிமைகள் அத்துமீறியமை தொடர்பில் சர்வதேச சமூகங்கள் பொறுப்புக் கூறலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தபோது இவர் அதற்கு பெரிதும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்.

அவர் தொடர்ந்தும் இலங்கையில் நடந்து முடிந்த போரின் பின்னரான பிரச்சினைகளுக்கு நீதி தீர்மானங்களை செய்துக் கொள்ள இலங்கையிடம் தேவையான வளங்கள் அதாவது வரலாறு, கலாசாரம், மற்றும் நேர்மை என்பன உள்ளதாக கூறி சர்வதேச சமூகங்களது இரட்டைத் தரங்களை தான் கண்டிப்பதாக கூறி சாடி வந்தார். நீதித் தீர்மானங்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் சர்வதேச சமூகங்களின் தலையீடுகளை சற்றுத் தொலைவிலேயே வைத்துக் கொள்ள உதவிய சிவில் மற்றும் மதத் தலைவர்கள் அப்போது அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவு இப்போது மறைந்துள்ளதனைக் காட்டும் வகையினதான கர்தினாலின் மனமாற்றம் அரசாங்கத்தினை துயிலெழுப்பும் ஒரு எச்சரிக்கையாகும். எனவே ஐ. நா வு க்கு சென்று மனிதவுரிமை பேரவையின் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கம் போராட முனைவதனை விட தற்போது தமக்கு நீதி கிடைக்கவில்லையே என்று நாட்டிற்குள் விரக்தியுடன் வாழ்ந்து சர்வதேச சமூகத்தின் தலையீட்டைக் கோரி நிற்கும் மக்கள் மனதை மீள வென்றெடுக்க ஆவன செய்வதே சிறப்பாநாடாக அமையும் .

அனைத்து இலங்கையர்களுக்குமான ஜ னாதிபதிநானே என்று உறுதியாக கூறியஜ னாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் அரசாங்கத்தினால் இலங்கை மக்களில் எந்தவொரு பிரிவினரும் செய்த தவறுகளை திருத்தி நாட்டின் சமாதானம், அபிவிருத்தி ஆகியவற்றை நிலை நாட்டமுடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*