;
Athirady Tamil News

ஊடக சுதந்திரம் வரையறுக்கப்படுவது அவசியம்!! (கட்டுரை)

0

இலத்திரனியல் மற்றும் புதிய ஊடக உள்ளடக்கம் தொடர்பான விதிமுறைகளையும் உள்ளடக்கி தற்போதுள்ள பத்திரிகை பேரவை சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கு வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அச்சு ஊடகத்தை மட்டுமே நிர்வகிக்குமொரு சட்டத்தை திருத்துவதில் தற்போதைய செயல்முறை மற்றும் அனைத்து ஊடக ச னல்களுக்கும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பைஏற்படுத்துவதற்கு சட்ட விதிகளை எவ்வாறு விரிவுபடுத்த திட்டமிடுகிறார் என்பதுபற்றி சண்டேமோ ர்னிங் பத்திரிகைக்கு அளித்தபேட்டியில் வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார்.

அந்த நேர்காணல் வருமாறு;
கேள்வி ;தற்போதுள்ள பத்திரிகை பேரவை சட்டத்தில் எத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்ற பரிந்துரைகளுடன் ஆய்வுக் குழு பதிலளித்துள்ளதா?
பதில்;பல்வேறு பிரதிநிதி அமைப்புகளிடமிருந்து பல திட்டங்கள் மற்றும் வரைவுகளை நாங்கள் பெற்றுள்ளோம். இந்த திட்டங்கள் இன்னும் ஆய்வு செய்யப்படுகின்றன.“உணர்வுபூர்வமான ஒன்றைப் பற்றி நீங்கள் புகாரளித்திருந்தால், தவறான குற்றச்சாட்டுகளால் அது துன்பத்தை ஏற்படுத்தியது என்பதைக் கண்டறிந்தால்; அச்சு ஊடகங்களில், இரண்டுக்கு இரண்டு பத்தியில் மன்னிப்பு வெளியிடப்படும். ஆனால் சேதம் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கேள்வி ;இணையவழி மற்றும்இலத்திரனியல் தளங்களில் வெளியிடப்படும் ஊடக உள்ளடக்கத்தை எவ்வாறு ஒழுங்கமைக்க திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில்;பல வழிமுறைகள் இருக்கின்றன ,அதேசமயம் , பல்வேறு பிரதிநிதித்துவ அமைப்புகளால் எங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வெவ்வேறுபொறி முறைகளை செயற் படுத்துவதற்கும் பரிந்துரைகள் உள்ளன. இந்த விட யத்தின் உண்மை என்னவென்றால், தற்போது உலகளவில் நடைமுறையில் உள்ள உள்ளடக்கம் மற்றும் ஒழுங்குமுறை பொறி முறைகளைப் பயன்படுத்துவோம். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரினதும் அங்கீகாரத்துடன் இந்த பொறி முறைகளை நாங்கள் உள்ளீர்த்துக்கொள்வோம்

கேள்வி;தற்போதுள்ள பத்திரிகை பேரவை சட்டத்தில் கூட பல குறைபாடுகள் இருப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதை எவ்வாறு சீரமைக்க திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில் ;தற்போது, இலங்கையில் சுமார் 6,000-7,000 ஊடக பணியாளர்கள் மற்றும்இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில்உள்ளனர், சுமார் 10 ஊடக உரிமையாளர்களும் உள்ளனர்; அவர்களின் நலன்களைக் கவனிக்கும் போது, 21.9 மில்லியன் மக்களின் , அவர்களின் நலன்களையும் கவனிக்க வேண்டும்.

எனவே, அது ஒரு பத்திரிகைக் குழு அல்லது ஒரு பத்திரிகை ஆணைக்குழு அல்லது நெறிமுறைகளில் ஆர்வமுள்ள ஒரு சில ஆட்கள் இருந்தாலும், அதே வேளை , பரந்த ளவில் வேறு சிலதரப்புகளும் உள்ளன.முன்மொழியப்பட்ட திருத்தங்களை நாம் ஒரு வழியில் பார்க்க முடியாது. ஊடகங்களில் வெளிவரும் பாதகமான அறிக்கைகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான மக்கள் தொடர்பாக யாராவது பொறுப்பேற்க வேண்டும்.

கேள்வி;தற்போது, ஊடக நெறிமுறைகளை மேற்பார்வையிடும் பல ஒழுங்குமுறை அமைப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. இந்த அமைப்புகள் அனைத்தையும் ஒரேஒழுங்கமைப்பாளரின் கீழ் கொண்டுவருவதற்கு ஊடக ஆர்வலர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதை எவ்வாறு செயற் படுத்த திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்;அந்த கோரிக்கையை கவனத்தில் கொள்ளமுடியும்.. ஒழுங்கமைப்பாள ர் ஒருவரை நியமித்தல் மற்றும் ஒழுங்கமைப்பாளரின் செயற் பாடுகளை வரையறுத்தல் ஆகியவை முக்கியமானவை. உங்களிடம் ஒன்று அல்லது பல ஒழுங்கமைப்பாளர்கள் இருக்கிறார்களா என்பது கேள்வி அல்ல. ஒழுங்குபடுத்தல் முறையில் சீரான தன்மை இருக்க வேண்டும். உங்களிடம் ஐந்து பேர் கூட இருந்தால், விதிமுறைகள் ஒரே மாதிரியாக இருந்தால், அது எக்ஸ் அல்லது வை மூலம் செய்யப்படுகிறதா என்பது விடயம் அல்ல.. ஆனால் அனைத்து ஊடக நிறுவனங்களையும் ஒரே ஒழுங்கமைப்பாளர் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றால், அது நல்லது.

கேள்வி;இந்த ஒழுங்காக்கல் அமைப்புகளுக்கு அரசியல் பிரமுகர்களை நியமிப்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஊடக நிறுவனங்களை ஒடுக்க இந்த அதிகாரிகள் தங்கள் அதிகார நிலையை பயன்படுத்த மாட்டார்கள் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவீர்கள்?
பதில் ;ஒவ்வொருவருக்கும் அவர்கள் நீதி, சட்டரீதியாக அறிக்கையி டுவதற்கு உரிமை உண்டு, ஆனால் நிச்சயமாக ஒழுங்கமைப்பு நிறுவனங்கள் இருக்க வேண்டும், அதில் சில ஆளுமைகள் இருக்க வேண்டும். இந்த ஆளுமைகள் சில அரசியல் கட்சிகளை நோக்கி சாய்ந்திருக்கலாம், மேலும் அனைவருக்கும் ஒருவித அரசியல் பின்னணி உள்ளது.ஒழுங்காக்கல் அமைப்பு மற்றும் ஒழுங்குமுறைகள் சமமாக இருக்கும் வரை, அதற்குள் ஒருவர் நிர்வகிக்க வேண்டியுள்ளது.

கேள்வி;ஊடகங்களின் உள்ளடக்கம் கடுமையானமுறையில் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டுமானால், முக்கியமானஉணர்வுபூர்வமான விட யங்கள் தொடர்பான புகாரளிக்கும் சுதந்திரத்தை இது தடுக்கவில்லையா?
பதில்;உணர்வுபூர்வமான விட யங்களைப்பற்றி முறையிடும்போது போது, ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் குற்றம் சாட்டப்படும்தரப்புக்கு உணர்வுபூர்வமான கவலை இருப்பது குறித்தும் கொஞ்சம் அக்கறை இருக்க வேண்டும். சில நேரங்களில் ஓரளவு உண்மையாகவும் சில சமயங்களில் முற்றிலும் பொய்யாகவும் இருக்கும் ஒன்றை நீங்கள் விட்டுவிட முடியாது. யாராவது அவர்களின் குடும்பங்கள் மற்றும் பிள்ளைகளின் தலைவிதியைப் பற்றி சிந்திக்கிறார்களா; அவர்களின் நலன்களை யார் கவனிக்கப் போகிறார்கள்?
ஒரு முக்கியமான தன்மை கொண்ட ஒன்றைப் பற்றி நீங்கள் புகாரளித்திருந்தால், தவறான குற்றச்சாட்டுகளால் அது துயரத்தை ஏற்படுத்தியது என்பதைக் கண்டுபிடித்தால் ; அச்சு ஊடகங்களில், இரண்டுக்கு -இரண்டு பத்தியில் மன்னிப்பு வெளியிடப்படும். ஆனால் பாதிப்பு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதனால்தான், இந்த சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு வெளியிடப்படுவதற்கு முன்னர் நிருபர் ஒரு முழுமையான ஆய்வை மேற்கொள்வதற்கு ஒருவித வழிமுறை இருக்க வேண்டும். நீங்கள் ஏதாவதொன்றை பற்றிநினைத்துவிட்டு உங்கள் கற்பனை யில் ஒரு கதையை உருவாக்க முடியாது.

கேள்வி;இத்தகைய பின்னணியில், இலங்கையானது ஊடக சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்பதை எவ்வாறு வரையறுப்பீர்கள்?
பதில் ;சுதந்திரத்தின் வரையறை தெளிவாக வகைப்படுத்தப்பட வேண்டும். சுதந்திரம் என்றால் என்ன? சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான கதையை விசாரிக்காமல் எதையும் பற்றி எழுதவும், ஒரு ஆளின் பிரதிமையை கெடுக்கவும் உங்களை அனுமதிக்க வேண்டுமா?

கேள்வி;சமீபத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களை விமர்சிக்கும் ஊடகங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமாக எதிர் கொள்வதிலும்பார்க்க அச்சுறுத்தும் அறிக்கைகளைப் பயன்படுத்துவதை நாங்கள் கவனித்து வருகிறோம். ஊடகச் சட்டங்கள் திருத்தப்பட்டவுடன் இதில் மாற்றம் ஏற்படுமா?

பதில்;நீங்கள் ஒரு சம்பவத்தை மேற்கோள் காட்ட முடிந்தால், அதற்கான பதிலை நான் உங்களுக்கு வழங்க முடியும். ஆனால், அச்சுறுத்தல்என்ன, யார் அதைச் செய்தார்கள் என்று தெரியாமல், சிலர் மிரட்டியதாக நான் வெறுமனே சொல்ல முடியாது
கேள்வி;.ஊடகத்துறை அனுபப்படும் தற்போதைய தண்டனைவிலக்கீட்டு கலாசாரத்தை மாற்ற உங்கள் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும்?

பதில்;அதனால்தான் நாங்கள் கலந்துரையாடுகிறோம்., அங்குதான் நான் உள்ளீர்த்ததன்மையை விரும்புகிறேன் . நான் ஒரு உள்ளீர்த்த ர்த்த அமைப்பை வைத்திருக்கவும் கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்த விரும்புகிறேன், பின்னர் நாங்கள் ஒரு இறுதி ஏற்பாட்டிற்கு வருகிறோம். ஊடக தண்டனைவிலக்கீடு , ஊடக நெறிமுறைகள், நடத்தை விதிமுறை ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் பேசப்பட்ட விட யங்கள், ஆனால் இதுவரை எதுவும் கவனிக்கப்படவில்லை.
எனவே, இறுதியாக அனைத்துதரப்பினரும் ஒவ்வொருவரினதும் மற்றும் முழு நாட்டினதும் கவுரவத்தை பாதுகாக்கும் ஒரு பொறிமுறையை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

கேள்வி;இந்த திருத்தங்கள் இடம்பெற எவ்வளவு காலம் ஆகும்?
பதில்;இதற்கான காலத்தை நான் வழங்கியுள்ளேன், மேலும் இந்த திருத்தங்களுக்கு நான் அவசரப்பட மாட் டேன் . இந்த திருத்தங்களை நான் கொண்டு வர விரைந்தால், அதில் உள்ள சில உட்பிரிவுகளை மறைக்க முயற்சிக்கிறேன் என்று அவர்கள் கூறுவார்கள். எனவே, அதிலிருந்து சிறந்ததைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆட்களுக்கும் ம் நான் சிறிது காலம் கொடுக்கப் போகிறேன், . ஆறு மாதங்களில், இந்த நாட்டின் தற்போதைய ஊடக சட்டங்களுக்கான திருத்தங்களை நாங்கள் இறுதி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + twelve =

*