;
Athirady Tamil News

‘வயிறு எங்கே கேட்டுச்சு’!! (கட்டுரை)

0

மனிதர்களுக்கு ஏற்படுகின்ற வெவ்வேறு ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, ஒவ்வொரு நிமிடங்களும் பல்வேறான போராட்டங்களை மனிதன் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறான்.

இதில், பாலியல் ரீதியான திருப்தியைப் பெற்றுக்கொள்வது ஒருவகையான ஆசையாகும். அந்த ஆசை, மானத்தையும் விற்றுவிடும் அளவுக்கு சிலருக்கு அமைந்துவிடுகின்றது.

அதனைதான் “பழைய தொழில்”என்பர். உலகிலேயே மிகவும் பழைய தொழிலான அந்தத் தொழிலைச் செய்கின்ற பெண்களைத் தேடி, ஆண்கள் செல்வதற்கும், அந்தத் தொழிலை, பெண்கள் தேடிக்கொள்வதற்கும் அல்லது ஈடுபடுவதற்கும் பல்வேறான காரணங்கள் இருக்கின்றன.

அதிலொரு காரணம் தான் தனித்திருத்தல், அதேபோல, தன்னுடைய ஜோடியைப் பிரிந்திருத்தல் அல்லது மரணமடைந்திருத்தல் அதன்பின்னர் ஏற்படுகின்ற பாலியல் ஆசைகளைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காக, பாலியல் தொழிலாளர்களை நாடுகின்றனர்.

தன்னுடைய ஜோடி, பாலியல் உறவுக்கு மறுகின்ற போதும், இவ்வாறான தொழிலாளர்களை, ஆண், பெண் என இருதரப்பினரும் நாடவேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.

ஜோடியின் ‘சுயநலம் ‘ மற்றும் ‘ஒடுக்குமுறை ‘ ஆகியனவை காரணமாகவும், இந்தத் தொழிலாளர்களை நாடவேண்டிய நிலைமை சிலருக்கு ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அந்த ஆசையைக் கொண்ட ஆண்கள், தங்களுக்கு அருகில் வரும்போது, அவர்களை திருப்திப்படுத்துவதற்காக, பாலியல் தொழிலாளர்களான பெண்கள் எந்நேரமும் தயாராகவே இருக்கின்றனர்.

எனினும், அந்த ஆசையே, இறுதியில் சமூக நோய்களைக் காவிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிடும் என்பதை யாரும் எளிதில் மறந்துவிடக்கூடாது.

அதனால்தான், தேவையான, பாகாப்பான உபகரணங்களைப் பயன்படுத்திக் கொள்வது உசித்தமானதென வைத்தியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இருள் சூழ்ந்த இடத்தில் நிற்கும் அவர்களை, இருட்டும் காட்டிக்கொடுக்கும். காரிருளும் சிவப்பைக் காட்டிக்கொடுக்கும் என்பது போல, அத்தொழிலாளர் இருக்கும் இடத்துக்கு,“ரெட் லைட் ஏரியா” என்பர்.

கூவியழைக்கும் தொழிலாளர்கள், நடமாடும் தொழில்செய்வோர், குளிரூட்டப்பட்ட நன்கு திட்டமிட்ட, செல்வந்தர்கள் மட்டுமே சென்றுவருகின்ற இடங்கள், குடும்ப வறுமைக்காக, வீட்டுக்குள்ளேயே அத்தொழிலைச் செய்​வோரென, இன்னுமின்னும் வகைப்படுத்திகொண்டே போகலாம்.

அத்தொழிலை, சிலர் நிர்ப்பந்தத்தின் பேரில் செய்கின்றனர். இன்னும் சிலர், அத்தொழிலுக்குள் தள்ளிவிட ப்ப ட்டுள்ளனர். குடும்ப சூழ​ல், வறுமை, போதைக்கு அடிமையாகி, அத்தொழிலில் ஈடுபடுவோரும் உள்ளனர்.

பாலியல் தொழிலாளர்களிடம் சென்றவர்கள், திருப்தியுற்றனரா அல்லது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களை இழந்துவிட்டனரா அல்லது எதையாவது காவிக்கொண்டு (நோய்களை) வந்தனரா? என்பதற்கெல்லாம், அவர்களிடம் சென்றுவந்தவர்கள் மனந்திறந்தால் மட்டுமே அறிந்துகொள்ளமுடியும்.

எனினும், சதையை விற்றுப்பிழைக்கும் அப்பாவிப் பெண்களை, பாதுகாப்பு போர்வைக்குள் இருப்போர் உள்ளிட்டோர் சுரண்டாமலும் இல்லை.

கொழும்பு உள்ளிட்ட நகரங்களில், கூவியழைக்கும் பாலியல் தொழிலாளர்கள் பேசிக்கொள்வதையும், தரகுகாரர்கள் முணுமுணுப்பதையும் சாடைமாடையாகக் கேட்கையில், நமகே கூசும்.

அத பிஸ்னஸ் நே, (இன்று வியாபாரம் இல்லை), சின்ன பையன் ஒருத்தன் வந்தான், எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு அனுப்பி​விட்டேன் என்று பாலியல் தொழில் புரிவோரும்;

அத ஒயாட்ட வாசி நேத, (இன்றைக்கு உனக்கு வருமானம் தானே) பொய் சொல்லாதே, நான் பார்த்துகிட்டுதான் இருக்கேன், காலையிலேயே ஐந்து பேருடன் போனாய், எனக்கு உரிய பங்கு எங்கே? என்று தரகுப்பணம் கேட்போர் பச்சைப் பச்சையாக கேட்பதும் உண்டு.

இவையாயும், ஒருவேளை சாப்பாட்டுக்கு மட்டுமே என்று கூறினால் அது சரியாகிவிடும். ஆனால், இன்னும் சிலர் போதையேற்றுவதற்கும், இந்தத் தொழிலை செய்கின்றனர் என, பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தொழில்புரிவோரை, சதைதிண்ணும் மனிதர்களும், சதையில் கிடைத்த வருமானத்தை சுரண்டித் திண்ணும் மனிதர்களும் ஏடெடுத்தும் பார்ப்பதில்லை. ஆனால்,

“ஊரிருல்ல மீசையெல்லாம் என்னை சுத்தி வந்துச்சி,

இள மனச கெடுத்துச்சி,

உசுர விட மானம் பெருசு, புத்திக்குத் தான் தெரிஞ்சிச்சு,

வயிரு எங்கே கேட்டுச்சு.

ஒரு சானு வயித்துக்குத் தான் எல்லாத்தையும் விக்கிறேன்.

நான் எல்லாத்தையும் விக்கி​றேன்”

என்ற பாடல் வரிகள், பாலியல் தொழில் செய்யும் பெண்களின் பரிதாப வாழ்க்கையை, நறுக்கென்று சொல்லியிருக்கும் வரிகள். “ஈசன்” என்ற தென்னிந்தியத் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஜில்லா விட்டு ஜில்லா வந்த என் கதையை கேளுயா…” என ஆரம்பிக்கும் இந்தப் பாடல் அப்போது பட்டிதொட்டியெங்கும் முழங்கியது.

பாலியல் குறித்து, இலங்கையில் அண்மைய காலங்களில் வெளிவந்த செய்திகள், பலரையும் விழி பிதுங்க வைத்திருந்தன. இலங்கையில் பாலியல் தொழிலாளர்கள் அதிகரிப்பு, “SEX” (செக்ஸ்) என்ற வார்த்தையை கூகுலில் தேடிய முதலாவது நகரம் என்பனவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நாடளாவிய ரீதியில், விபசாரம் தொழில் செய்கின்ற பெண்கள், 35 ஆயிரம் பேர் உள்ளனர் என்றும், அவர்கள் நாளொன்றுக்கு மூன்று இலட்சம் ஆண்களுக்கு சேவை வழங்குகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் தொழிலாளர்கள் பெரும்பாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொருட்டே உருவாகின்றனர் அல்லது உருவாக்கப்படுகின்றனர் எனக் கூறலாம். காரணம், பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள், அத்தொழிலுக்குத் தாம் பலவந்தமாகத் தள்ளப்பட்டனர் என்றே கூறுகின்றனர்.

இவர்களில், கிராமப்புறங்களிலிருந்து கஷ்டப்பட்ட குடுப்பங்களிலிருந்து, வீட்டு வேலைக்கென நகரங்களுக்கு அழைத்துவரப்படும் பெண்களே, கூவியழைக்கும் பாலியல் தொழிலுக்கு பலவந்தமாகத் தள்ளப்பட்டுள்ளனரென, பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதான நகரங்களில் தனியே தவிக்கவிடப்படுச் செல்லப்படும் பெண்களும் இத்தொழிலுக்கு பலவந்தமாமாகத் தள்ளிவிடப்படுகின்றனர். தவிர, ஒரு கட்டத்தில் விரும்பி பாலியல் தொழிலை ஏற்றுக்கொள்ளும் பெண்களும் இல்லாமலில்லை.

பாலியல் தொழில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட தொழிலாகக் காணப்படுகின்றது. எனவே, பாலியல் தொழில் மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் தொடர்பில் பொலிஸ் தலைமையக அறிக்கையில் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றன. தடையையும் மீறி, சட்டவிரோதமாக பாலியல் தொழிலை மேற்கொள்ள கையாளப்படும் நுட்பங்கள் மிகவும் விசித்திரமளிக்கக் கூடியனவாகவே இருக்கின்றன.

மசாஜ் நிலையங்களையும் தாண்டி, முச்சக்கரவண்டிகள், வான் உள்ளிட்ட நடமாடும் வாகனங்களிலும் இச்சேவை வழங்கப்படுகின்றது.என அறியக்கூடியதாய் இருக்கின்றது.

தெரிந்தோ அல்லது தெரியாமலே, அத்தொழில் ஈடுபடுகின்ற பெண்கள், தம்மை நாடிவரும் ஆண்களுக்கு, நோய்த்தொற்றைக் கொடுக்காமல் திருப்திப்படுத்தவேண்டும். அதேபோல, வாடிக்கையாளர்களான ஆண்களும், ​​நோயைத் தொற்றிக்கொள்ளாமல் தற்காத்துக்கொள்ளவேண்டும்.

ஏ​னெனில், பாலியல் தொழிலாளர்கள் இருப்பதனால்தான், இளம்பெண்களின் கற்புகள் பாதுகாக்கப்படுவதாக, பரவலாக தெரிவிக்கப்பட்டது. இது எவ்வளவு தூரத்துக்கு உண்மையானது என்பதற்கு பதிலளிப்பதற்கு, அக்கேள்வியை இந்த சமூகத்திடம் பகிரங்கமாகவே விட்டுவிடுகின்றேன்.

எவ்வாறாயினும், பாலியல் தொழிலாளர்கள் மனிதாபிமானமாகப் பார்க்கப்படுகின்றனரா என்ற கேள்விக்கெல்லாம், அத்தொழில் ஈடுபடுவர்களிடமே பதிலிருக்கும். அதற்கான விடையை கட்டுரையாளர் என்ற வகையில், நான் தேடுவது இலகுவான காரியமல்ல.

என்றாலும், இலங்கையில் இருக்கின்ற பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக, உத்தியோகபூர்வமான சங்கமொன்று உருவாக்கப்பட்டதாக 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதியன்று செய்தி வெளியாகியிருந்தது.

சிவில் சமூக அமைப்பைச் சேர்ந்த சிலர் இணைந்து உருவாக்கியிருந்த அவ்வமைப்பு, “பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான மத்திய நிலையம்” என்றே பெயரிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு அமுலால், பாலியல் தொழிலாளர்களும் பெரிதாக பாதிக்கப்பட்டிருந்தன. அதனால்தான், கட்டுபாடுகளை வாபஸ் பெறக்கோரி தாய்லாந்து பிரதமர் மாளிகையின் முன்பாக 2021ஜூலை 03 ஆம் திகதியன்று பாலியல் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாலியல் தொழில் 10 சதவீதமளவுக்கு உள்ளது. பொழுதுபோக்கு துறையின் ஒரு பிரிவாக தாய்லாந்து நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் (செக்ஸ் ஒர்க்கர்ஸ்) நிலைமை, அடுத்தடுத்த ஊரடங்கால் அவர்களின் தொழில் படுத்துவிட்டது.

மேலும், செக்ஸ் தொழிலாளர்களின் அடையாளங்களில் ஒன்றான ‘ஹை ஹீல்ஸ்’ காலணிகளை பிரதமர் மாளிகை முன் வைத்தும், கண்டன அட்டைகளை கையில் ஏந்தியும், ‘பிரா’, ‘பிகினி’ போன்ற உள்ளாடைகளை அணிந்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பாலியல் தொழில் மூலம் 10 சதவீதம் அளவிற்கு அதன் பங்களிப்பு இருந்ததாக மதிப்பிடப்பட்டது. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில், தாய்லாந்து நாட்டின் செக்ஸ் தொழிலாளர்களின் பங்கு மிக அதிகம்.

ஆசையைத் தீர்க்கும், அவ்வாறான தொழிலாளர்களை இல்லாத நாடு என்றொன்றில்லை. அத்தொழிலை முற்றாக ஒழித்த நாடு, என்ற பெயர்பட்டியலிலும் ஒரு நாடேனும் இல்லை. எனினும், அந்தத் தொழிலுக்குத் தள்ளிவிடுபவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 7 =

*