;
Athirady Tamil News

புலமைச் சொத்துச் சட்டம் !! (கட்டுரை)

0

இன்று இலத்திரனியல் உலகமானது எமது வாழ்க்கையில் முக்கியமானதொரு பங்கினை வகித்து வருகின்றது. புலமைச் சொத்துச் சட்டமானது, எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த உலகத்தை வழிப்படுத்த உதவுகின்ற பல சட்டக் கட்டமைப்புகளில் ஒன்றாகும். ‘சட்ட ஒளி’யானது மும்மொழியிலான சட்டக்கலந்துரையாடல்களின் ஒர் தொடராகும். ‘ignorantia legis neminem excusat’ எனும் இலத்தீன் சொற்தொடர் சட்டத்தை அறிந்திராமை ஒரு சாக்குப்போக்கு அல்ல என்பதைக் குறிக்கின்றது.

இலங்கை சட்ட மாணவர்கள் சங்கத்தின் ‘ப்ரோ போனோ குழு’ சட்டத்தினை இலகுபடுத்துவதன் மூலம் அவற்றைப் பொது மக்கள் விளங்கிக் கொள்வதற்கான முயற்சியை முன்னெடுத்து வருகின்றது. மூன்றாவது கலந்துரையாடலில், ‘புலமைச் சட்டம்’ மீது கவனத்தைச் செலுத்தியது.

இக்கலந்துரையாடலானது, புலமைச் சொத்துச் சட்டத்துறை தொடர்பாக சட்டத்தரணிகளாக பணி புரியும் ‘நீலகண்டன் அண்ட் நீலகண்டன்’ எனும் சட்ட நிறுவனத்தில் சுயாதீன சட்டத்தரணியாகக் கடமையாற்றும் மற்றும் வணிகச் சட்டத்தின் விருத்திக்கான நிறுவனத்தின் வருகைதரு விரிவுரையாளராக சேவையாற்றும் மற்றும் LL.B. (Colombo), LL.M. (Singapore), MCIArb (UK), ACMA (UK), CGMA முதலான கல்வித்தகைமைகளையுடைய திஸ்யா வீரகொட

மற்றும், B.Sc (JPura) B.Sc (OUSL), LLM ( IP law) முதலான கல்வித்தகைமைகளை உடைய சைபர் சட்டத்திற்கான பிளைமவுத் பல்கலைக்கழகம் மற்றும் IJTS இன் வருகைதரு விரிவுரையாளரும் சிலோன் சேம்பர் ஒப் கொமர்சின் சிரேஷ்ட சட்ட ஆலோசகரும் இலங்கை புலமைச் சொத்துச் சட்ட நிறுவனத்தின்

தலைவருமான செல்வி. அபராஜிதா ஆரியதாச என்போரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

புலமைச் சொத்துச் சட்டம் என்றால் என்ன?

சொத்து எனும் விடயப்பொருளானது உங்களால் சொந்தமாக்கிக் கொள்ளக் கூடிய மற்றும் நீங்கள் வைத்துக்கொள்ளக்கூடிய பொருட்களாகும். இவை நீங்கள் காணக் கூடிய, தொடக்கூடிய மற்றும் உணரக்கூடிய தன்மையினை உடைய தொட்டுணர முடியாதவைகளையும் கட்புலனாகாதவைகளால் பெறுமதி நிர்ணயிக்கப்படும் தொட்டுணரக் கூடியவைகளையும் உள்ளடக்கும்.

‘கோகோ கோலா’ என்ற பெயர் உலகில் நன்கு அறியப்பட்ட உற்பத்திப் பொருளாகும். இதன் பெறுமதி மாத்திரம் இவற்றை நிர்ணயிப்பதில்லை. குறித்த அந்த வர்த்தக நாமத்தின் மீதுள்ள விசுவாசமும் இதனை நிர்ணயிக்கின்றது. வர்த்தக நாமம் ஒரு கட்புலனாகாத சொத்து. புகைப்படங்கள், புலமைப் படைப்புகள் என்பதுடன் அதில் இருந்து பெறப்படும் எந்தவொரு நிதிநலனும் அப்புகைப்படத்தை எடுத்த நபருக்கே சொந்தமானது. நீங்கள் உருவாக்குவது பணமாக்கப்படலாம் என்பதுடன் இவை கட்புலனாகாத சொத்துகளாகக் கருதப்படுகின்றன.

சட்டத்தில் நாம் 5 வெவ்வேறு வகையான புலமைச் சொத்துகளை இனங்காண்கிறோம்:

1. பதிப்புரிமை

2. வர்த்தக முத்திரை

3. காப்புரிமை

4. தொழில்துறை வடிவமைப்புகள்

5. இரகசிய தகவல் மற்றும் வர்த்தக இரகசியங்கள்

புலமைச் சொத்துச் சட்டம் இலக்கிய, கலை, அறிவியல் பணிகளைப் பாதுகாக்கிறது. மக்கள் அவர்கள் உருவாக்கியவற்றிலிருந்து பயனடையலாம். புலமைச் சொத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிகின்றது. ஒரு பிரிவுவானது தொழிற்றுறைத் திட்டங்கள், விஞ்ஞானத் தாவரங்கள், காப்புரிமைகள், வர்த்தக நாமங்கள், வர்த்தக இலச்சினைகள் (தொழில்துறைச் சொத்து) போன்ற வர்த்தகத்துடன் தொடர்புடையவை.

மற்றைய பிரிவானது இலக்கியப் படைப்புகள், கலை, அறிவியல் படைப்புகள், நாட்டுப்புறக் கதைகள், கணினி நிரல்கள், கட்டடக்கலைத் திட்டங்கள், வரைபடங்கள் போன்ற வெளியீட்டு உரிமை கொண்ட புலமைசார் சொத்துகளை உள்ளடக்கியதாகும். இவற்றுடன் தொடர்புடைய உரிமைகளும் உள்ளன. இவை நடிகர்களின் உரிமைகள், ஒளிபரப்பாளர்களின் உரிமைகள், ஒலி பொறியாளர்களின் உரிமைகள் போன்றவையாகும்.

புலமைச் சொத்துச் சட்டத்தின் முக்கியத்துவம் என்ன?

கண்டுபிடிப்பாளர்களுக்கும் நுகர்வோருக்கும் பொருளாதார உரிமைகளை வழங்குவதன் மூலமும் உண்மையான தயாரிப்புகளை கொள்வனவு செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலமும் இந்தச் சட்டம் புதிய படைப்புகளைப் பாதுகாக்கிறது. புலமைச் சொத்துச் சட்டத்தால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். ஒரு நாட்டின் செல்வத்தை நீங்கள் மதிப்பிடக்கூடிய ஒரு வழி, அவர்களிடம் உள்ள காப்புரிமைகளின் எண்ணிக்கையால் ஆகும்.

புலமைச் சொத்தின் 5 வெவ்வேறு வகுப்புகள்

பதிப்புரிமை: சட்டத்தில் நாம் மனதின் படைப்புகளை நேரடி படைப்புகள், கலை படைப்புகள், அறிவியல் படைப்புகள் என்று கருதுகின்றோம். இலக்கியம், புகைப்படம், ஓவியங்கள், சிற்பம் அனைத்தும் பதிப்புரிமை பெறக்கூடிய படைப்புகளாக இருக்கும்.

தேசிய புலமைச் சொத்துகள் சட்டத்தின் பிரிவு 5 மற்றும் 6 ஆகியவை பதிப்புரிமை பெறக்கூடிய படைப்புகளை அங்கிகரிக்கின்றன. இந்தச் சட்டத்தின் பிரிவு 9, படைப்புகளை உருவாக்கியவரின் பொருளாதார உரிமைகளைப் பற்றிக் கூறுகிறது. இந்த பொருளாதார உரிமைகள் மற்றொரு நபருக்கு விற்கப்படலாம். பதிப்புரிமை வாழ்நாள் முழுவதுடன் 70 ஆண்டுகாலப்பகுதியின் பின்னர் நிறைவடைகின்றது. மேலும் அதன் பின்னர் அது பொதுக் களத்துக்கு வரும்.

வர்த்தக முத்திரைகள்: இலச்சினைகள் பெறுமதி உடையதாக இருக்கும் பட்சத்தில் வர்த்தக முத்திரையாக அதனைப் பதிவு செய்யலாம். ஓர் இலச்சினை பதிவு செய்யப்பட்டிருந்தாலும் பதிவு செய்யப்படாவிட்டாலும், அதில் உரிமைகளும் இணைக்கப்பட்டுள்ளன. பதிவாளரின் அலுவலகத்துக்கு இலச்சினையைப் பதிவு செய்வதற்கு நீங்கள் பணம் செலுத்தும் வரை அவ்வர்த்தக முத்திரை அங்கிகரிக்கப்படும்.

ஒரு பதிவு காலாவதியாகும் போது எந்த உரிமைகளும் அதற்கில்லை என்பது அதன் அர்த்தமல்ல. பதிவு செய்யப்படாத இலச்சினைகளுக்கும் பாதுகாப்பு இருக்கும். அந்த குறிப்பிட்ட இலச்சினையை அங்கிகாரம் இல்லாமல் பயன்படுத்த முடியாது. தேசிய புலமைச் சொத்துகள் தொடர்பாக வர்த்தக இலச்சினைகளுக்கான பதிவுப் புத்தகம் உள்ளது. அதில் நீங்கள் முரண்பாடான அல்லது ஒத்த இலச்சினைகள் எவையெனும் உள்ளதா என இனங்காணலாம்.

காப்புரிமைகள்: இது புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றியது. புதுமை இருக்க வேண்டும் என்பதுடன் சிக்கலை தீர்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். காப்புரிமை பதிவு செய்யப்பட்டவுடன் அவர்களுக்கு 20 ஆண்டு காலம் கிடைக்கும். அத்தகைய காலம் காலாவதியான பிறகு, அது பொதுக் களத்துக்கு வரும்.

தொழிற்றுறை வடிவமைப்பு: இதில் உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் காப்புரிமைக்குரியவற்றை விட சற்றுக் குறைவானவையாக இருக்கும்.

புவியியல் குறிகாட்டிகள்: பாஸ்மதி அரிசி, ஷம்பேன் போன்றவை ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திலிருந்து வருகின்றன. கென்யாவிலிருந்து தேநீர் தயாரிக்கும் ஒருவர் அதை இலங்கை வைன் தயாரிக்கும் ஒருவர் அதனை ஷம்பேன் என்று கூற முடியாது.

இரகசிய தகவல், வர்த்தக இரகசியங்கள்: இதற்கான சிறந்த உதாரணம் கோகோ கோலா. இதன் செய்முறை எவருக்கும் தெரியாது. இது ஒரு வர்த்தக இரகசியம். அந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் அந்த இரகசியத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது உணவுத் தொழில்களுக்கு மட்டுமல்லாது வேறு பல தொழில்களுக்கும் பொருந்தக்கூடிய விடயமாகும்.

ஒரு நபர், தனது சொந்தப் படைப்பு, கண்டுபிடிப்பை பதிவு செய்ய விரும்பினால், அதற்காக பின்பற்றப்பட வேண்டிய செயன்முறை என்ன?

பாதுகாப்புக்கு 2 முறைகள் உள்ளன. ஒன்று கடுமையான தன்மை குறைந்த ‘தொழிற்றுறை வடிவமைப்புத் திட்டம்; மற்றையது, மிகவும் கடுமையான ‘காப்புரிமைத் திட்டம்’.

இவை இரண்டு வெவ்வேறு பிரிவுகளுக்கு உட்டப்பட்டவை என்பதுடன் அவைகளுக்கான நிபந்தனைகளும் வேறுபட்டவை.

நீங்கள் புலமைச் சொத்துச் சட்டத்தைப் நோக்கும் போது, ​​தொழிற்றுறை வடிவமைப்புகள் அத்தியாயம் 3 இன் கீழ் உள்ளன. மேலும் அவற்றால் ஏதோவொரு புதுமை இருப்பதையும் அதில் ஒரு பயன்பாடு இருப்பதையும் மட்டுமே நிரூபிக்கப்பட வேண்டும்.

நீங்கள் தேசிய புலமைச் சொத்து காரியாலயத்துக்குச் செல்ல வேண்டும். இதில் 2 வகையான பயன்பாடுகள் உள்ளன. ஒன்று தொழிற்றுறை வடிவமைப்பு என்பதுடன் மற்றையது காப்புரிமை ஆகும். உங்களுக்கு எது பொருந்தும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

காப்புரிமையைப் பொறுத்தவரையில், உங்கள் உரிமைக்கோரலை நீங்கள் கூற வேண்டும். ஏனென்றால் விடயங்கள் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றன என்பதற்கான முழு வெளிப்பாட்டை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒருவருக்கு இதற்காக வழக்கறிஞர் ஒருவரின் உதவி தேவையா?

காப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு ஒரு காப்புரிமை வரைவுநரின் சேவைகள் தேவைப்படும். இலங்கையில் அவர்கள் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைப் பார்த்தால் அவை தனிச்சிறப்பு வாய்ந்த வேலைகளாயுள்ளன.

புலமைச் சட்டத்தின் கீழ் எழுத்துபூர்வ வேலை தொடர்பான ​​திருட்டு பற்றி கூறப்பட்டுள்ளதா?

இது நெறிமுறை உரிமை ஆகும். கணிசமான அளவு தகவல்கள் பிரதிசெய்யப்பட்டு நியாயமற்ற போட்டிக்கான சந்தர்ப்பம் உருவாகி இருந்தால், அது புலமைச் சொத்துச் சட்டங்களை மீறும் செயலாகும். அசல் எழுத்தாளரின் பெயர் குறிப்பிடப்படாவிட்டால் அது ஒரு திருட்டுக்கு காரணமாக இருக்கலாம்.

இசையைப் பொறுத்தவரை, பழைய பாடலின் வெவ்வேறு பதிப்புகளைக் காண்கிறோம். வரவிருக்கும் இசைக்கலைஞர்கள் தங்கள் சொந்த பாடலின் பதிப்பை எவ்வாறு உருவாக்க முடியும், அவ்வாறு செய்யும்போது அவர்கள் மற்றொருவரின் உரிமைகளை மீறுவார்களா?

நீங்கள் ஒரு பாடலை மீண்டும் உருவாக்குகிறீர்கள் என்றால், அது புலமைச் சொத்துச் சட்டத்தில் பிரிவு .9 இன் பொருளாதார உரிமைகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாய் இருக்கும். பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளரின் அனுமதி உங்களுக்கு தேவைப்படும்.

மாணிக்கம் மற்றும் நகைத் துறையில் புலமைச் சொத்துச் சட்டத்திற்கு பங்களிப்பு இருக்கிறதா?

நிச்சயமாக. இது பதிப்புரிமைச் சட்டத்தின் எல்லா விடயங்களுக்குள்ளும் அடங்கும்.

பொருட்களை வடிவமைத்தல் பற்றி நோக்கும் போது ​​A-தர வகை மற்றும் புலமைச் சொத்து உரிமைகளை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்க முடியுமா?

சில நேரங்களில் A-தரம் அல்லது B-தரம் கொண்ட பைகள் பிரதிகள் அல்ல என்பதுடன் அவை அசல்களாய் இருப்பதுடன் சில காரணங்களுக்காக உண்மையான உரிமையாளர் அதனை நிராகரிக்கலாம். இவை சந்தையைச் சென்றடைகின்றன. இது ஒரு அசல் தயாரிப்பு. எனினும் சந்தைக்கு அவை வந்திருப்பது அங்கிகரிக்கப்பட்ட வழிமுறைகளூடாக அல்ல. இது க்ரே மார்க்கட் இறக்குமதி என்று அழைக்கப்படுகிறது.

உண்மையான வர்த்தக முத்திரையின் உரிமையாளர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். க்ரே மார்க்கட்டில் இருந்து இறக்குமதியை நிறுத்த முடியுமா? இல்லை, ஏனெனில் இது உண்மையான அசல் தயாரிப்பு. முகவர்களுடன் பிரத்தியேக பிராந்திய ஒப்பந்தங்கள் இல்லையென்றால், அந்த தயாரிப்புகள் சந்தையில் வருவதைத் தடுப்பது சற்று கடினம்.

கள்ளத் தயாரிப்புக்கு இதிலிருந்து வேறுபட்டது. இது ஒரே மாதிரியான பொருட்களாகத் தோன்றலாம் ஆனால் அது அசல் பொருட்டுகள் அல்ல. கள்ள நோட்டுகள் சட்டவிரோதமானவை.

இன்ஸ்டாகிராமில், மக்கள் இலங்கையில் தரம் வாய்ந்த பொருட்களின் பிரதிகளை விற்பனை செய்வதைக் காண்கிறோம். அசல் பொருளின் விலையில் பிரதிகளை விற்க முடியுமா? அசல் விலையில் பிரதி வாங்கும் நுகர்வோருக்கு சட்ட ரீதியான நிவாரணம் உண்டா?

உள்ளூர் முகவர் இருந்தால், நீங்கள் அதற்கெதிராக முறைப்பாடு செய்யலாம்.

புலமைச் சொத்துச் சட்டத்தை மீறுவது குற்றவியல் பொறுப்புக்கு உட்பட்டதா?

சில நேரங்களில், ஆம். வர்த்தக முத்திரையை மீறுவது மிகவும் பொதுவான குற்றங்களில் ஒன்றாகும். புலமைச் சொத்து மீறல் ஒரு சிவில் மற்றும் குற்றவியல் பொறுப்புக்கு வழிவகுக்கும். எடுத்துக்காட்டு – நான் இயற்றிய பாடலை யாராவது பிரதிசெய்து அதை விற்காமல் பணம் சம்பாதித்தால், இந்த குறுந்தகடுகளை அழிக்கவும், தடை உத்தரவைப் பெறவும் நான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செல்லலாம்.

புலமை சொத்துச் சட்டத்தை மீறுவதற்கான தீர்வுகள் யாவை?

முதலில் எங்கள் உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அடுத்து நாம் ஒரு குற்றவியல் மற்றும் சிவில் நடவடிக்கையை தாக்கல் செய்யலாம். உங்கள் உரிமைகளை மீறிய நபரை நீங்கள் கைது செய்யலாம், தடை உத்தரவைப் பெறலாம் அல்லது சேதங்களைப் பெறலாம்.

உரிமையாளருக்கு உரிமைகளை கூறாமல் யாராவது பதிப்புரிமை பெற்ற படத்தைப் பயன்படுத்தினால் எவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்?

பதிப்புரிமைச் சட்டம் கூறுகின்ற படி, படைப்பானது அதற்குரிய நன்மதிப்பின் நிமித்தம் கலைத் தகுதியைப் பொருட்படுத்தாமல் அது பாதுகாக்கப்படுகிறது. நீங்கள் புகைப்படம் எடுக்கும் தருணம், அது பாதுகாக்கப்படுகிறது.

அந்த நபரின் அனுமதியின்றி ஒரு சுய உருவப்படம் பயன்படுத்தப்பட்டால், அந்த நபர் புலமைச் சட்டத்தின் கீழ் அத்ற்கெதிராக நடவடிக்கையொன்றை எடுக்க முடியுமா?

இதற்கு இரு பக்கங்கள் உள்ளன. புகைப்படக்காரர் என் சார்பாக ஒரு புகைப்படம் எடுத்திருந்தால், நான் பதிப்புரிமை உரிமையாளராக இருப்பேன். அதன் இரண்டாவது பக்கத்தினை பொறுத்தவரையில் தனியுரிமையின் ஒரு கூறு அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் சுயவிவரப் படத்தை யாரும் எடுத்து விளம்பரத்திற்கு பயன்படுத்த முடியாது. இதற்கு படத்தில் உள்ள நபரின் அனுமதி உங்களுக்குத் தேவை.

மோனாலிசாவின் உருவப்படம் போன்ற படைப்பினை போன்ற பழங்கால கலைப் படைப்பை மீது வர்ணம் பூசவும் அதிலிருந்து லாபம் பெறவும் ஒருவரால் முடியுமா?

மோனாலிசா என்பது டா வின்சியின் உருவாக்கம் என்பதுடன் ஓவியர் நீண்ட காலத்திற்கு முன்பே இறந்துவிட்டதால் அதன் பதிப்புரிமை பாதுகாப்பு ஆயுட்காலம் காலாவதியானது. அது பொது களத்தின் ஒரு பகுதியாக மாறும். எனவே அதை வரைவது ஒரு பிரச்சினையாக இருக்காது. ஆனால், நீங்கள் ஒரு புதிய ஓவியத்தை எடுத்தால், பதிப்புரிமை இன்னும் செயலில் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.