;
Athirady Tamil News

என்ன பழக்கமிது !! (கட்டுரை)

0

மலைப்பாங்கான பிர​தேசங்களுக்குச் செல்லும் போது, அதற்கேற்ற ஆடைகளை அணிந்துசெல்லவேண்டும். அங்கிருப்பவர்கள் என்னதான் கோடைக்காலமாக இருந்தாலும், குளிர்காலத்துக்குரிய ஆடைகளை அணிந்திருப்பர். அவ்வளவுக்கு அங்கு வீசும் காற்று சாரலுடன் சேர்ந்து முகத்தில் பட்டுத்தெறிக்கும் போது ‘ஜில்’ என்று இருக்கும்.

நீர் வீழ்ச்சிகளில் இருந்து பரந்துவரும் தூவானம் முகங்களில் பட்டால், உடலே சிலிர்க்கும். அங்கிருக்கும் நீர்நிலைகளில் கை,கால்களை வைத்தால் சுரென இழுக்கும் அந்தளவுக்கு குளிர் நி​றைந்திருக்கும். அவ்வளவு இயற்கை ரம்மியத்தை கொண்டிருக்கும் ஒவ்வொரு நீர்வீழ்ச்சிகள், நீர்நிலைகளில் அழகுதான்.

அங்கு செல்கின்ற சிலர், வழுக்கிவிழுந்து மரணித்துள்ளனர். இன்னும் சிலர், தன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர். காதலில் தோல்வியடைந்த பலரும், வாழ்வின் விரக்தியில் இருக்கும் பலரும், வாழ்க்கையே பூஜ்ஜியமாகிவிட்டது என நினைத்து, தங்கள் உயிர்களை மாய்த்துக்கொள்கின்றனர். இவையெல்லாம், அந்த நீர்வீழ்ச்சி, நீர்நிலையில் இருக்கும் அழகையே கொன்றுவிடுகின்றனர்.

எத்தனை உயிர்களை இந்த நீர்வீழ்ச்சியும் நீர்நிலைகளும் தன்னகத்தை இழுத்துக் கொண்டுள்ளன எனக் கேள்விப்படும் பலரும், அந்தப் பக்கங்களுக்கே செல்லமாட்டார்கள். ஆனால், இவையெல்லாம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்குத் தெரியாது. அதனால், அவர்கள் இயற்கையை ரசித்து மகிழ்வர்.

அவ்வாறெல்லாம் பெயர்பெற்று போனதுதான் பலாங்கொடை, பஹந்துடாவா எல்ல நீர்வீழ்ச்சி. ஆனால், அவ்விடத்துக்குச் சென்ற ஆணொருவரும், பெண்ணொருவரும் நிர்வாணமாக இருந்து பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடும் காட்சிகளும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அண்மையில் பரவியிருந்தன. அவை, வெளிநாடுகளைச் ​சேர்ந்தவர்களின் பார்வையையும் இழுத்துவிட்டது.

பாலியல் தொடர்பிலான காட்சிகள் அடங்கிய காணொளிகள், புகைப்படங்களை இணையத்தளங்களில் பார்ப்பது, இந்த கொரோனா முடக்க காலத்தில் அதிகரித்துவிட்டது.

பிரபலங்கள் கூட, பாலியல் காட்சிகளை தரவேற்றி, பெருந்தொகையில் சம்பாதித்துகொள்கின்றனர். அந்தவகையில், பஹந்துடாவாவில் பல ​கோணங்களில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த அந்த ஜோடியின் காட்சிகளை பார்க்கும் போது, கண்களை மூடிக்​கொண்டாலும் காட்சிகள் கண்முன்னே, நிழலாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அந்தளவுக்கு அலங்கோலமானது.

விடயம் வெளிச்சத்துக்கு வந்ததன் பின்னர், இலங்கை பொலிஸ் கணினிப்பிரிவு அவற்றை முழுமையாக அகற்றியுள்ளது. ஆகையால், அக்காட்சிகளை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் இனியும் இல்லை. எனினும், இவ்வாறு உடம்பில் ஒரு துண்டு துணியில்லாம் நிர்வாணமாக இருந்து பாலியல் செயல்களில் ஈடுபட்டு, ஒளிநாடாவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்த ஜோடியை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மஹரகமவில் வைத்து கைதுசெய்யப்பட்ட அந்த ஜோடியில் ஆணுக்கு 34 வயதும் அப்பெண்ணுக்கு 25 வயதும் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவ்விருவரின் உடல் அமைப்புகளைப் பார்க்குமிடத்து, ஆண் 25 வயதான தோற்றத்தை கொண்டவராவும் பெண்​ணே 34 வயதான தோற்றத்தை கொண்டவராகவும் காணப்படுகின்றனர்.

மஹரகமவை சேர்ந்த ஆணும், எல்பிட்டியைச் சேர்ந்த பெண்ணுமே இவ்வாறு, நாடே முடக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், மரங்களையும் நீர்வீழ்ச்சியையும் சாட்சிகளாக வைத்து, தூவானம் வெற்று மேனிகளில் பட்டு சிலிர்க்க அந்தரங்கங்களை அம்பலமாக்கி, ஊர் சிரிக்கச் செய்துள்ளனர்.

பலபிட்டியவைச் சேர்ந்த அந்தப் பெண், மஹகரம பிரதேசத்தில் தங்கியிருந்து, இவ்வாறு அவ்வப்போது, நிர்வாணமாக பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் தரவேற்றியுள்ளார் என்றும் இதுவரையிலும் 50க்கும் குறைவான அவ்வாறான வீடியோக்களை ஒளிப்பதிவுச் செய்து ஏற்றியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

சமூகவலைத்தளங்களின் ஊடாக வீ​டியோக்களை ஏற்றி சம்பாதிக்கும் முறைமையை பலரும் கையாண்டு வருகின்றனர். பலவற்றை பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது. இன்னும் சிலவற்றை குடும்பத்தினருடன் இருந்து பார்க்கவே முடியாது. சில, நேரத்தை வீணாடிக்கும் செயற்பாடாகவே உள்ளது.

வெளிநாடுகளில் (prank) அதாவது குறும்பு, சேட்டை எனும் தலைப்புகளில், வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்படுகின்றன. இந்தியாவில் அதிகரித்துவிட்டது. அதில் பல, சமூகத்துக்கு நல்ல பல கருத்துகளை சொல்பவையாக சில வீடியோக்கள் இருந்தாலும், உணவுகளில் எச்சில் துப்பி கொடுப்பது, உடலமைப்பை விமர்சிப்பது, கைகளை ஓங்கி சண்டைப்பிடித்துக்கொள்வது, கோபத்தை ஏற்படுத்தும் வகையிலான வசனங்களுக்கு பஞ்ச​மே இல்லை.

சமூகத்துக்கு நல்ல கருத்துகளை சொல்லபோய். இறுதியில், ​கொடூரமான காட்சிகளை அவை காண்பிக்கின்றன என்பது வேதனையளிக்கிறது. சில செனல்களில், சிறுவர்களை வைத்து இவ்வாறு குறும்பு செய்யப்படுகின்றது. அவையெல்லாம் தவிர்க்கப்படவேண்டும்.

சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை ஏற்றி சம்பாதிக்கும் சிலரின் பின்னால் பலரும் சென்று, அவர்களை பார்த்து ‘போலச் செய்தல்’ போல பின்பற்றுவதையும் அவதானிக்கமுடிகின்றது. ஒவ்வொரிடத்திலும் ஒவ்வொரு திறமைகள் இருக்கின்றன. அத்திறமைகளை வெளிக்காட்டவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.

கொரோனா வைரஸ் காலத்தில் முடக்கத்துக்கு வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பலரும், ​அலைபேசியே கெதியென கிடக்கின்றனர். அவ்வாறானவர்கள் எழுதில் வீழ்த்தவேண்டுமாயின் வீடியோவே சிறந்ததோர் ஆயுதமாகும்.

அந்த ஆயுதத்தை மேலே குறிப்பிட்ட ஜோடி, பலாங்கொடை பஹந்துடாவாவில் தவறாக பயன்படுத்தியுள்ளது. இது இளம் சமூதாயத்தினரை தீய வழிக்கு இழுத்துச் செல்லும். ஆகையால், வீடியோக்களை பார்ப்பவர்கள் தேர்ந்தெடுத்து பார்க்கவேண்டும். ஏற்றுவோர், பல கோணங்களிலும் சிந்தித்து ஏற்றவேண்டும். இல்லை​யேல், ஜோடி மட்டுமன்றி, குடும்பமும் சமூகமும் ஏன், நாடே நிர்வாணமாகிவிடும் என்பது மட்டுமே உண்மையாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 3 =

*