9 March 2017 0 Comments Report

“எல்.ரீ.ரீ.ஈ யின் முடிவு, ஒரு இரத்தக்களறியாக இருக்கும்” என்று அன்ரன் பாலசிங்கம் முன்கூட்டியே கணித்துக் கூறினார் –பிர்சன்னா சண்முகதாஸ்

“எல்.ரீ.ரீ.ஈ யின் முடிவு, ஒரு இரத்தக்களறியாக இருக்கும்” என்று அன்ரன் பாலசிங்கம் முன்கூட்டியே கணித்துக் கூறினார் –பிர்சன்னா சண்முகதாஸ்

மார்ச் 4, 2017ல் அன்ரன் பாலசிங்கம் ஸ்ரனிஸ்லாஸ் தனது 79 வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார். எல்.ரீ.ரீ.ஈ க்குள் அன்ரன் பாலசிங்கம் ஒரு அரசியல் சிந்தனைவாதி – நடைமுறைக்கேற்ற தீர்வுகளை ஆதரித்த ஒரு மனிதர்.

பிரபாகரன் ஒரு இராணுவ சிந்தனையாளராக இருந்தார். நான் எரிக் சொல்ஹைம் அவர்களை நேர்காணல் செய்தபோது அவர்கள் இருவரது உறவையும் ஒரு கணவன் மற்றும் மனைவிக்கு உள்ள உறவைப் போன்றது என்று அவர் விளக்கினார்,

எப்பொழுதும் ஒருவருக்கொருவர் தேவைப்படும் அதேநேரம் ஒருவருடன் ஒருவர் சண்டையும் போட்டுக் கொள்வார்கள் என்று அவர் சொன்னார்.

அவர்கள் சக்தியை (பாலசிங்கம் மற்றும் பிரபாகரன்) ஒருமித்து இணைந்தால் அவர்கள் ஒரு வலிமையான அணியாக இருப்பார்கள். தனித்தனியாக  அவர்களில் எவராலும் போராட்டத்துக்கு தலைமையேற்க முடியாது.

தனது வாழ்க்கையின் கடைசி காலத்தில் பாலசிங்கம் தனது சக்தி முழுவதையும் இனமோதலுக்கு ஒரு ஐக்கியமான ஸ்ரீலங்காவின் கீழ் மட்டுமே தீர்வு காணமுடியும், தனிநாடு என்பது சாத்தியமான ஒன்றல்ல என்கிற கருத்துக்கு பிரபாகரனை இணங்க வைக்கும் முயற்சியில்தான் செலவிட்டிருக்க முடியும்.

நடேசன் மற்றும் தமிழ்செல்வன் போன்ற புலித் தலைவர்கள் எல்லாம் பிரபாகரனைவிட வயதிலும் மற்றும் அனுபவத்திலும் குறைவானவர்கள்  மற்றும் இன  மோதலை  எப்படி   எல்.ரீ.ரீ.ஈயின் நிலையை விட்டு  விலகிய  வழியில்   உள்ள  சுயாதீனமான எந்த ஒரு வடிவத்திலுமான  அரசியல் யோசனையை அவருக்கு விளக்குவதற்கு அவர்கள் திராணியற்றவர்களாக இருந்தார்கள்.

பிரபாகரனைத் தவிர, பாலசிங்கம் மட்டும்தான் எல்.ரீ.ரீ.ஈக்குள் சுயாதீனமான அரசியல் கருத்துக்களை தெரிக்கக்கூடிய ஒரே ஆளாக இருந்தார்.

balafamily  எல்.ரீ.ரீ.ஈ யின் முடிவு ஒரு இரத்தக்களறியாக இருக்கும் என்று அன்ரன் பாலசிங்கம் முன்கூட்டியே கணித்துக் கூறினார் - பிர்சன்னா சண்முகதாஸ் balafamilyபிரபாகரனை நேரடியாக அவரது முகத்துக்கு நேரே விமர்சிக்கும் தனியான சக்தியையும், மற்றும் எந்த வித மோசமான விளைவுகளையும்   எதிர்கொள்ளாமல் பிரபாகரனில்  இருந்து  மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்த ஒரே மனிதர் அல்லது ஒரே தமிழர் பாலசிங்கம் மட்டுமே.

பிரபாகரன் பாலசிங்கத்தை  தனது மூத்த சகோதரனைப் போலவே கருதினார்,  அவர்களுக்குள் கசப்பான கருத்து வேற்றுமைகள் இருந்த போதிலும் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசித்தார்கள்.

1999ல் பாலசிங்கத்துக்கு முக்கியமான மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டபோது, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக தாய்லாந்து பயணத்தை அவருக்கு ஒழுங்கு செய்தது பிரபாகரனே.

பாலசிங்கத்தின் பெரும் முயற்சியின் விளைவாகவே பிரபாகரன் சமாதான பேச்சு வார்த்தைகளுக்கு கூட ஒப்புக்கொண்டார்.

எல்.ரீ.ரீ.ஈ யில் இணைவதற்கு முன்னர் பாலசிங்கம் பல வருடங்கள் வெளிநாட்டில் வாழ்ந்துள்ளார்.

அரசியல் மற்றும் தத்துவவியல் ஆகியவற்றில் லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டம் பெற்று தனது கல்வியை வளர்த்துக்கொண்ட  அவர் வழக்கத்தில் நடைமுறைக்கு ஏற்ப ஒழுக்கமான சிந்தனையாளராக இருந்தார்.

இருந்தபோதிலும்  பாலசிங்கத்துக்கு எல்.ரீ.ரீ.ஈ யில் ஒரு முக்கிய ஸ்தானம்  இருந்ததுக்கு மாறாக எல்.ரீ.ரீ.ஈ யில் முடிவுகளை எடுக்கும் ஒரே நபர் தான் மட்டுமே என்பதை பிரபாகரன் வெகு தெளிவாக அறிவித்திருந்தார்.

ஊடகவியலாளர் நாராயண் சாமி தெரிவிப்பதின்படி 1985ல் இந்தியா பாலசிங்கம் மற்றும் வேறு இரண்டு ஸ்ரீலங்கா தமிழர்களை, எற்றுக்கொள்ள  முடியாத  அரசியல்  பிரமுகர்கள் என்று அறிவித்தபோது, பிரபாகரன் ராஜீவ் காந்தியை கடுமையாக சாடினாராம்.

“என்மீது செல்வாக்கு செலுத்துகிறார் என்று நீங்கள் (பாலசிங்கம் மீது) பழி சொல்கிறீர்கள். அவர் சொல்வதை நான் செவிமடுக்கிறேன்,

ஆனால் அவர் என்மீது செல்வாக்கு செலுத்த நான் அனுமதிப்பதில்லை. எல்.ரீ.ரீ.ஈக்கு எது சிறந்தது என்று நான் நினைப்பதன்படி நான் முடிவுகளை எடுக்கிறேன்” என்று அவர் சொன்னராம்.

பாலசிங்கத்தின் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், பிரபாகரன்   மற்றும் பாலசிங்கம்  ஆகியோர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை, மற்றும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதில்லை என்றும் சொல்லப்பட்டது.

தனது வாழ்வின் கடைசி வாரத்தின்போது பாலசிங்கம் எரிக் சொல்ஹைம் அவர்களைச் சந்தித்தார் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ வடக்கு மற்றும் கிழக்கை  இழந்துவிடும் என்று அவர் சொல்ஹைமிடம் சொன்னார்.

சொல்ஹைம் சொல்வதின்படி, பிரபாகரனால் பாலசிங்கம் ஏமாற்றம் அடைந்துள்ளார் மற்றும் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு பகுதிக் காரணம் பிரபாகரன்தான் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரபாகரனின் செயற்பாடுகளினால் தமிழர்களின் முடிவு இரத்தக்களரியாக இருக்கும் என்று பாலசிங்கம் முன்கூட்டியே கணித்துக் கூறினார்,

உண்மையில் அதுதான் நடந்தது. அரசியல் ரீதியான நடைமுறைக்கு ஏற்றபடி செயலாற்றும் பாலசிங்கம், டிபிஎஸ் ஜெயராஜூடனான ஒரு சம்பாஷணையின்போது தீர்க்கதரிசிபோல ஒன்றை எதிர்வு கூறினார், சீனா, பாகிஸ்தான் மற்றும் “இந்தியா என்பன ராஜபக்ஸ ஆட்சிக்கு பின்துணை வழங்குவதால் எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்படும்”.;

பாலசிங்கத்தின் சொந்த வார்த்தைகளின்படி “பிரபாகரன் ஒரு போர்த் தலைவன் அவருக்கு அரசியல் கருத்துகளில் உண்மையான ஆர்வம் கிடையாது” என்று அவர் சொல்லியுள்ளார்.

தனது செயல்களால் ஏற்படும் அரசியல் விளைவுகளைப் பற்றிய புரிந்துணர்வு கிட்டத்தட்ட பூச்சியமாக உள்ள ஒரு மனிதர்தான் பிரபாகரன்.

பிரபாகரனின் அரசியல் புரிந்துணர்வின் குறைவுதான் எல்.ரீ.ரீ.ஈயின் தலைவிதிக்கு முடிவு கட்டியது. பல சந்தர்ப்பங்களில் இது வெளிப்படையாகியுள்ளது. மிகவும் வெளிப்படையான ஒரு விடயம்தான், ராஜிவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் மேற்கொண்ட அரசியல் முடிவு.

2005 ஜனாதிபதி தேர்தலை பிரபாகரன் புறக்கணித்தபடியால்தான் மகிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்படுவதற்கு பொறுப்பாக அமைந்தது என்கிற விடயம்தான் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.

பிரிவினைவாத இயக்கத்துக்கு புது சக்தி அளிக்க பிரபாகரன் விரும்பினார். ராஜபக்ஸவை போன்ற ஒரு சிங்கள பௌத்த கடும்போக்குவாதி தெரிவு செய்யப்படுவதன் மூலம், தனது பிரிவினைவாத விடயத்துக்கு  சர்வதேச சமூகத்திடம் இருந்து  அதிக ஆதரவு கிடைக்கும் என பிரபாகரன் எண்ணினார். பிரபாகரனின் பெரும்பாலான முட்டாள்தனமான அரசியல் முடிவுகளில் இதுவும் ஒன்று.

இது ஒரு முட்டாள்தனமான முடிவுதான். ஏனென்றால் 2005 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஸவின் போட்டியாளராக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க, நோர்வேயின் ஆதரவுடனான சமாதான நடவடிக்கை சந்திரிகா குமாரதுங்காவினதுடன் ஒப்பிடுகையில்,எல்.ரீ.ரீ.ஈ தூதுக்குழுவினரால் (பாலசிங்கம் உட்பட) மிகவும் சாதகமாகப் பார்க்கப்பட்டது.

எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் அபிலாசைகளில் விக்கிரமசிங்கா வெகுதூரம் திறந்த மனதுடன் செயலாற்றினார், வடக்கு கிழக்குக்கு ஒரு இடைக்கால அமைப்பை உருவாக்கும் தனது நோக்கத்தையும் அதில் அந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரசியற் கட்சிகளுக்கும் இடம் கிடைக்கும் – தமிழர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஒரு தெளிவான விருதாக அது இருக்கும் – என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

ஒரு முன்னோடியில்லாத நடவடிக்கையாக எல்.ரீ.ரீ.ஈ தூதுக்குழு தங்கள் கோரிக்கைகள் அடங்கிய இடைக்கால தன்னாட்சி அதிகார (ஐ.எஸ்.ஜி.ஏ) முன்மொழிவுகளை விரிவான ஒரு வரைவாக தயாரித்தார்கள்.

இந்த இடைக்கால தன்னாட்சி வரைவை தயாரிக்கும் நடவடிக்கையில் பாலசிங்கம் பெருமளவில் தவிர்க்கப்பட்டதன் காரணத்தால் பாலசிங்கம் தனது ஏமாற்றத்தை வெளியிட்டார்.

சொல்ஹைம் சொல்வதின்படி, அந்த முன்மொழிவுகள் மிகவும் அதிகபட்சமாக இருப்பதாக பாலசிங்கம் கருதினாராம். அது தென்பகுதியில் விக்கிரமசிங்காவின் நிலைப்பாட்டை பலவீனப்படுத்தும் என்று பாலசிங்கம் நம்பினார்.

எனினும் சந்திரிகா, விக்கிரமசிங்கவிடம் இருந்து சமாதான நடவடிக்கைகளின் கட்டுப்பாட்டை தான் எடுத்துக்கொண்டதோடு இடைக்கால தன்னாட்சி அதிகார முன்மொழிவுகளையும் அவர் இரத்துச் செய்தார்.

சந்திரிகா இந்த இடைக்கால தன்னாட்சி அதிகார முன்மொழிவுகளை இரத்துச் செய்ததுக்கு அடிப்படை காரணமாக இருந்தது, எல்.ரீ.ரீ.ஈயுடன் இந்த முன்மொழிவுகளைப் பற்றி பேச்சு வார்த்தை நடத்தும்படி அவரை இணங்க வைப்பதற்கு எற்ற மூத்த தமிழ் அரசியல்வாதிகள் எவரும்  சந்திரிகாவின்   அணியில் இல்லாதிருந்ததே என நான் நினைக்கிறேன்.

antaon-B  எல்.ரீ.ரீ.ஈ யின் முடிவு ஒரு இரத்தக்களறியாக இருக்கும் என்று அன்ரன் பாலசிங்கம் முன்கூட்டியே கணித்துக் கூறினார் - பிர்சன்னா சண்முகதாஸ் antaon Bஎனினும் 1990 களின் நடுப்பகுதி முதல் இறுதிவரை நீலன் திருச்செல்வம் (சர்வதேச அளவில் பெயர்பெற்ற ஒரு அரசியலமைப்பு வழக்கறிஞர்) சந்திரிகாவின்  மூத்த அரசியல் ஆலோசகர்களில் ஒருவராக இருந்தார்.

எல்.ரீ.ரீ.ஈ உடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும்படி தொடர்ச்சியாக வாதிட்ட ஒரு மனிதர், அவர் இந்த இடைக்கால தன்னாட்சி அதிகார முன்மொழிவுகளை கவனத்தில் கொள்ளும்படி சந்திரிகாவை வற்புறுத்தியிருக்கலாம்.

எனினும் திருச்செல்வம் கொல்லப்பட்டதை தொடர்ந்து எல்.ரீ.ரீ.ஈ யின் முன்மொழிவுகள் பற்றி திறம்பட பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவையை பற்றி சந்திரிகாவை இணங்க வைப்பதற்கு விருப்பமுள்ள எவரும் இருக்கவில்லை.

மார்ச் 2003ல் ஒரு எல்.ரீ.ரீ.ஈ வங்கியை திறந்து வைக்கும் நிகழ்வில் பாலசிங்கம் ஆற்றிய உரையில், பிரபாகரன் நீலன் திருச்செல்வத்தை கொன்றதற்காக வருத்தப்பட்டது தெளிவாகத் தெரிந்தது.

ஜி.எல் – நீலன் தீர்வுப்பொதியின் அசல் வடிவத்தை பற்றி பேச்சு வார்த்தை நடத்தும் சந்தா்ப்பத்தை எல்.ரீ.ரீ.ஈ தவறவிட்டதை அவர் மேற்கோள் காட்டியிருந்தார்.

பாலசிங்கம், டிபிஎஸ் ஜெயராஜூடனான ஒரு உரையாடலில், தமிழ்செல்வன், கஸ்ட்ரோ, பொட்டு அம்மான் மற்றும் உருத்திரகுமாரன் போன்ற மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் விக்கிரமசிங்கா மற்றும் எல்.ரீ.ரீ.ஈ இடையேயான ஒஸ்லோ பேச்சு வார்த்தைகளின் பின்னர், தனக்கு எதிராக பிரபாகரன் மனதில் தப்பான அபிப்ராயங்களை விதைத்ததுதான் தன்னை சமாதான நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கி வைத்ததுக்கான உண்மையான காரணம் என வலியுறுத்தியுள்ளார்.

பாலசிங்கம் தெரிவித்ததின்படி, மற்ற மூத்த தலைவர்கள், ராஜபக்ஸ அதிகாரத்தில் இருந்தால் உலகம் எல்.ரீ.ரீ.ஈ க்கு ஆதரவு தெரிவிக்கும் என்று பிரபாகரன் சிந்திக்கும்படி முட்டாள் தனமாக அவரைத் தூண்டி விட்டார்களாம்.

எண்ணற்ற சந்தர்ப்பங்களில் பாலசிங்கம், தனிநாடு என்கிற கருத்தில் எல்.ரீ.ரீ.ஈ செயற்படக் கூடாது, ஆனால் தாயகம் சுய நிர்ணயம் என்ற நிலையில் இயங்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மற்றும் தாயகம் என்பதன் கருத்து தனிநாடு அல்ல, ஆனால் தமிழ் பேசும் மக்கள் வாழும் ஒரு பிராந்தியம் என பாலசிங்கம் வாதிட்டுள்ளார்.

தமிழர்களுக்கு ஒரு தனிநாட்டை பெறுவது சாத்தியமான ஒன்றல்ல என்பதை எப்போதுமே பாலசிங்கம் அறிந்திருந்தார், எனினும் இந்த யதார்த்தத்தை முற்றாக பிரபாகரனுக்கு புரிய வைக்க அவரால் ஒருபோதும் இயலவில்லை.

2006 நடுப்பகுதியில் அவரது வாழ்வின் இறுதி மாதங்களில், பாலசிங்கம் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் (என்.டி.ரி.வி) எல்.ரீ.ரீ.ஈ சார்பாக ராஜீவ் காந்தியை அவர்கள் கொன்றதுக்கு மன்னிப்புக் கோரினார் – இந்தியா பெருந்தன்மையுடன் கடந்த காலத்தை பின்னுக்கு தள்ளிவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சொல்ஹைம் சொல்வதின்படி, பாலசிங்கத்துக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்பனவற்றை அடைவதில் விருப்பம் இருந்தாலும் அவரது உண்மையான நாட்டம் இந்தியாவின் மீதுதான் இருந்ததாம்.

DBS  எல்.ரீ.ரீ.ஈ யின் முடிவு ஒரு இரத்தக்களறியாக இருக்கும் என்று அன்ரன் பாலசிங்கம் முன்கூட்டியே கணித்துக் கூறினார் - பிர்சன்னா சண்முகதாஸ் DBSஎனினும் பிரபாகரனின் குறுகிய அரசியல் சிந்தனைகளுக்கு மாறாக, யுத்தத்தின் வன்முறையான முடிவுக்கு முழுக் காரணமும் பிரபாகரன்தான் என்று சொல்வது சரியாகாது.

ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐ.தே.க கட்சிகளிடையே இருந்த மாறாத கட்சிப் போட்டி, சமாதான முன்னெடுப்புகளின் முறிவிற்கு காரணமாயிற்று.

உதாரணமாக வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்ட சமாதானம் ஒரு குறிப்பிடத் தக்க முன்னுதாரணம், இங்கு ஐக்கிய இராச்சியத்தின் இருபெரும் கட்சிகளான கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிற்கட்சி என்பன சமாதானமாக போரை முடித்து வைப்பதற்காக எப்படி ஒரு ஒருமித்த கருத்தை எடுத்தன என்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அதைத் தொடர்ந்து ஐ.ஆர்.ஏ உடன் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. 2016ல் கொலம்பியாவால் எப்.ஏ.ஆர்.சி கிளர்ச்சிக் குழுவுடனான 52 வருட கால யுத்தத்தை முடிவக்கு   கொண்டுவர முடிந்தது எதனாலென்றால் யுத்தம் கொலம்பியாவில் உள்ள மக்கள்மீது ஆபத்தான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதால் முக்கிய அரசியல் தலைவர்கள் ஒருமித்த கருத்தொற்றுமைக்கு வந்தார்கள்.

இந்த வகையான இரு கட்சி ஒற்றுமை ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐ.தே.க இடையே ஏற்படவில்லை.

எரிக் சொல்ஹைம் உடன் நான் நடத்திய ஒரு நேர்காணலில், சமாதான நடவடிக்கை முழுவதிலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் அன்ரன் பாலசிங்கத்துக்கும் பிரபாகரனுக்கும் இடையே இருந்த சக்தியான உறவைப் பற்றியும் விவாதித்தார்.

நீங்கள் அந்த நேர்காணலை பார்க்க விரும்பினால் “கொழும்பு ரெலிகிராப் – மார்ச் 4, 2017 இதழில் உள்ள மேற்கண்ட கட்டுரையில் பார்க்கலாம்.

நன்றி- தேனீ இணையம்

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Prasanna  எல்.ரீ.ரீ.ஈ யின் முடிவு ஒரு இரத்தக்களறியாக இருக்கும் என்று அன்ரன் பாலசிங்கம் முன்கூட்டியே கணித்துக் கூறினார் - பிர்சன்னா சண்முகதாஸ் Prasanna


Post a Comment

*