;
Athirady Tamil News

மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதி குறித்து, சிலர் பொய்யான பரப்புரை செய்கின்றனர்.. – “புளொட்” சித்தார்த்தன் (படங்கள் & வீடியோ)

0


மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதி குறித்து, சிலர் பொய்யான பரப்புரை செய்கின்றனர்.. – புளொட் சித்தார்த்தன் (படங்கள் & வீடியோ)

மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதி குறித்து, சிலர் பொய்யான பரப்புரை செய்கின்றனர்.. – புளொட் சித்தார்த்தன்

வவுனியா திருநாவற்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் எஸ்.காண்டீபனின் தேர்தல் அலுவலகம் இன்று (21) மாலை 4.30 மணிக்கு யாழ் பாராளுமன்ற உறுப்பினர் திரு.தர்மலிங்கம் சித்தாத்தன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமாகிய தர்மலிங்கம் சித்தாத்தன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இடைக்கால அறிக்கையை பற்றி இப்போது பேசப்படுகின்றது அது இறுதி அறிக்கை அல்ல! அது முழுமையடையும் போதுதான் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வதா? நிராகரிப்பதா? என்பதனை முடிவெடுக்க முடியும்

மைத்திரிபால சிறிசேனாவிற்கு ஜனாதிபதியாக வருவதற்கு என்பது வீதமான தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். காணாமல் போனோர், அரசியல் கைதிகள் விவகாரங்களில் அரசு மெத்தனமாக இருந்தாலும், தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி, நாங்கள் பொறுமை காக்கின்றோம்.

அரசினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது” ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கவில்லை!

பட்ஜெட்டுக்கு வாக்களிப்பதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கபட்ட நிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுடன், வன்னி மக்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரூடாக வரும் அபிவிருத்தியை இழந்துள்ளார்கள் என தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் அந்தந்த மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதியானது, மாவட்ட அபிவிருத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது அனைவருக்கும் தெரியும், இதனைத் திரித்து சிலர் பொய்யாக பரப்புரை செய்கின்றனர்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அரசிடமிருந்து பிரத்தியமாக நிதியை பெற்று, அபிவிருத்தி வேலைகளை செய்திருந்தார் எனவும் சுட்டிக்காட்டினார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா… (மேலதிக படங்கள்.. திரு.ஆர்.ஆர்.-புளொட்-)

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*