;
Athirady Tamil News

“தமிழ் தேசிய கூட்டமைப்பின்” இன்றைய அவசர கூட்டத்தில் நடந்தது என்ன.? நகர, பிரதேச சபை தலைவர்கள் யார்…? (இது எப்படி இருக்கு?)

0


“தமிழ் தேசிய கூட்டமைப்பின்” இன்றைய அவசர கூட்டத்தில் நடந்தது என்ன.? நகர, பிரதேச சபை தலைவர்கள் யார்…?

இன்றைய தினம் காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கூட்டமானது யாழ் மாட்டின் ரோட்டில் உள்ள தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தில் தமிழ் அரசு கட்சி , புளொட், ரெலோ ,ஆகிய அமைப்புக்களின் தலைவர்கள் , முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பிரகாரம் கூட்டத்தில் நீண்ட நேரம் நடைபெற்ற வாத பிரதிவாதங்களின் முடிவில் எந்த நகர, பிரதேச சபைகளில் யார் பெரும்பான்மை பெற்றிருக்கிறார்களோ அவர்களே ஆட்சி அதிகாரத்தை அமைப்பது எனவும்,

அவர்களுக்கு ஏனைய தமிழ் கட்சிகள் குறிப்பாக இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் ஆதரவு வழங்குமாறு கோருவது எனவும்,

அதே போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெரும்பான்மை பெற்ற இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக, முதற்கட்டமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றியீட்டிய யாழ் மாநகர சபை வேட்பாளர்களுடன் நாளையதினம் (புதன் கிழமை) தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் (தமிழ் அரசு கட்சி, புளொட், ரெலோ) கலந்துரையாட உள்ளதாகவும்,

நாளைமறுதினம் வியாழக்கிழமை மன்னார் , வவுனியா , கிளிநொச்சி , முல்லைத்தீவு ,போன்ற வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றியீட்டிய நகர சபை, பிரதேச சபை, உறுப்பினர்களுடன் கலந்துரையாட உள்ளதாகவும்,

மறுநாள் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்டத்தில் வெற்றியீட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர்கள் அனைவருடனும் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிய வருகிறது.

ஏனெனில் வெற்றியிட்டிய நகரசபை, பிரதேச சபைகளில் யார் தலைவர்?, யார் உபதலைவர்? என்பதில் வெற்றியீட்டிய “தமிழ் அரசு கட்சி” உறுப்பினர்களிடையே முரண்பாடு தோன்றியுள்ளதாகவும் அறிய வருகிறது.

உதாரணமாக யாழ் மாநகர சபைக்கு ஏற்கனவே தமிழ் அரசு கட்சி உறுப்பினரான திரு.அர்னோல்ட் முதல்வர் வேட்பாளராக பிரேரிக்கப்பட்டிருந்த போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் யாழ் மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள், தமிழ் அரசு கட்சி உறுப்பினரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சோலமன் பீரிஸ் என்பவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.

இதே போன்று வேலணை பிரதேச சபையில், புங்குடுதீவை சேர்ந்த தமிழ் அரசு கட்சி உறுப்பினரான திரு.நாவலன் கருணாகரன் பிரதேசசபை தலைவராக பிரேரிக்கபட்டிருந்த போதிலும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசு கட்சியை சேர்ந்த மற்றுமோர் உறுப்பினரான திரு.அசோக் என்பவருக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது போன்றே மேலும் சில பிரதேச சபைகளிலும், “தமிழ் அரசு கட்சி” உறுப்பினர்களிடையே உள்முரண்பாடுகள் தோன்றியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

**இறுதியான, உறுதியான முடிவுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தின் பின்னே (இவ்வார முடிவிலேயே) தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மற்றுமோர் தகவலின்படி ஈ.பி.டி.பி எனும் ஈழ மக்கள் ஜனநாஜக கட்சி, ஏற்க்கனவே தம்வசம் உள்ள ஊர்காவற்றுறை, நெடுந்தீவு பிரதேச சபைகளுடன் (புங்குடுதீவையும் உள்ளடக்கிய) வேலணை பிரதேச சபையையும் கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாகவும், இதுகுறித்து ஏனைய கட்சிகளுடனும் பேசசுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிய வருகிறது.

தகவல்… “அதிரடி”யின் விசேட நிருபருடன், புங்கையூரான்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*