;
Athirady Tamil News

“ஒட்டுக்குழுக்கள்“, “இனப்படுகொலையாளிகள்“ என தாமே குற்றஞ் சாட்டியவர்களுடன், இணைந்தது தமிழரசுக் கட்சி..! (படங்கள் &வீடியோ இணைப்பு)

0


“ஒட்டுக்குழுக்கள்“ “இனப்படுகொலையாளிகள்“ என தாமே குற்றஞ் சாட்டியவர்களுடன், இணைந்தது சகல சபைகளிலும் ஆட்சியமைக்கிறது தமிழரசு

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவித்தும் காட்டிக்க கொடுத்தும்வந்த இனப்படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தென்னிலங்கை பேரினவாதக் கட்சிகளுடனும், யுத்தகாலத்தில் பேரினவாதிகளின் ஒட்டுக் குழுக்களாகச் செயற்பட்டு, தமிழர் தேசத்தை காட்டிக் கொடுத்தவர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த கட்சிகளுடனும் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றது.

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் எந்த சபையினையும் எக்கட்சியும் ஆட்சியமைக்க முடியா தொங்கு நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஒவ்வொரு சபைக்கும் தவிசாளர்களைத் தேர்ந்தெடுக்கின்ற நடவடிக்கை ஆரம்பமாகியிருந்தது.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈபிடிபியுடன் தரழரசுக் கட்சியின் பேச்சாளராக இருக்கின்ற சுமந்திரன் தமக்கு ஆதரவு வழங்குமாறு நேரடியாகவும் தனது பிரதிநிதிகள் ஊடகவும் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

சுமந்திரனின் எஜனமான ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கியதேசியக் கட்சி உடனடியாகவே தமிழரசுக் கட்சிக்கு சகல சபைகளிலும் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நழுவல் போக்கினைக் கடைப்பிடித்து வந்த ஈபிடிபியுடன், தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சி பேச்சுக்களை மேற்கொண்டு வந்தது.

யாழ்.மாநகரைத்தவிர ஏனைய இடங்களில் பூரண ஆதரவு தரப்படும் என ஈபிடிபியினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாககக் கூறப்படுகின்றது.

எனினும் யாழ் மாநகருக்கும் ஆதரவு தரவேண்டும் எனக் கோரி தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவே நேரடியாக களத்தில் இறங்கி டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சு நடத்தியு்ளளார்.

இதனைடுத்து சில நிபந்தனைகளுடன் ஈபிடிபி தரப்பு இணக்கப்பாட்டுக்கு வந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ் மாநகர சபையில்..

🔷 TNA ஆனோல்ட்டிற்கு ஆதரவளித்தவர்கள் மொத்தம் 18

1) தமிழரசுக்கட்சி – 16
2) ஐக்கிய தேசிய கட்சி – 02

🔷 EPDP றெமிடியஸுக்கு ஆதரவளித்தவர்கள் மொத்தம் 13

1) EPDP -10
2) சிறீலங்கா சுதந்திரக் கட்சி – 02
3) ஐக்கிய தேசிய கட்சி – 01

🔷 TNPF மணிவண்ணனுக்கு ஆதரவளித்தவர்கள் மொத்தம் 13

1) 13 பேரும் முன்னணி உறுப்பினர்கள்.

இறுதியில் ஈபிடிபியில் போட்டியிட்ட றெமீடியஸ் தான் போட்டியிலிருந்து விலகுவதாக தமிழரசுக் கட்சிக்கு விட்டுக்கொடுக்க தமிழரசுக்கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, EPDP, ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆட்சியமைத்துள்ளன.

**************************************
சாவகச்சேரி நகரசபையிலும்…

அதன் தொடர்ச்சியாக சாவகச்சேரி நகரசபையிலும், தாமே “ஒட்டுக்குழுக்கள் எனவும், இனப்படுகொலையாளிகள் எனவும்” தேர்தல் மேடைகளில் விமர்சிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து தமிழரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது.

அவ்வகையில் 12 பேர் தமிழரசுக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்களில்
1. இலங்கை தமிழ் அரசு கட்சி – 05
2. ஈழ மக்கள் சனநாயக கட்சி – 03
3. சிறீலங்கா சுதந்திரக் கட்சி – 02
4. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி – 01
5. ஐக்கிய தேசிய கட்சி – 01

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 06 பேரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பிரேரிக்கப்பட்ட தவிசாளர் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர்.

இறுதியில் தமிழரசுக்கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் சனநாயக கட்சி (EPDP), ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் அணி) ஆகியன இணைந்து சாவகச்சேரி நகரசபையில் புதிய அரசை நிறுவியுள்ளன.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்களான யோகேஸ்வரி பற்குனராசா,கே.வி.குகேந்திரன் ஆகியோருக்கு கைலாகு கொடுத்து நன்றி தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர் சொலமன் சிறில்.

Gepostet von Vigneswaran Kajeepan am Montag, 26. März 2018

யாழ் மநாகர சபையின் மேயராக, த.தே.கூட்டமைப்பின் “ஆர்னோல்ட்” ஈபிடிபியின் ஆதரவுடன் தெரிவு..! (படங்கள்)

கூட்டமைப்பிற்கு குறைந்த ஒரு வாக்கு, ஈ.பி.டி.பியிடம்.. யாரந்த கறுப்பாடு தெரியுமா? (யாழ் மாநகரசபை மேயர் தெரிவின் பின்னால் நடந்த டீல்கள்) (படங்கள்)

கட்சிக் கோட்பாட்டிற்கு அமைய போட்டியிலிருந்து வெளியேறினோம்: ரெமிடியஸ்..!!

மக்கள் வழங்கிய ஜனநாயக உரிமையை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும்: ஆர்னோல்ட்..!!

சர்வமத தலைவர்களிடம் ஆசிபெற்றார் யாழ். மேயர் ஆர்னோல்ட்..!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*