;
Athirady Tamil News

கூட்டமைப்பை உடைக்கும் திட்டம் தோல்வி… மிஸ் பயரானது, வித்தியின் போன் கோல்.. முன்னணியை விமர்சிப்பதற்கு காரணம் இதுதான்..!

0

கூட்டமைப்பை உடைக்கும் திட்டம் தோல்வி… மிஸ் பயரானது, வித்தியின் போன் கோல்.. முன்னணியை விமர்சிப்பதற்கு காரணம் இதுதான்..!

காலைக்கதிர் நாளிதழில் கடந்த சில தினங்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக திடீரென ஏன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி விமர்சிக்கப்படுகிறது?

அதற்கு பின்னால் சுவாரஸ்யமாக சம்பவமொன்று உள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரை எதிர்த்து, தமிழரசுக்கட்சியின் குழப்ப அணி வேட்பாளர் ஒருவர் திடீரென களமிறங்கியிருந்தார். இந்த அரசியல் நகர்விற்கு பின்னால் காலைக்கதிர் நாளிதழின் ஆசிரியர் ந.வித்தியாதரனே இருந்தார். தனது அரசியல் நகர்வை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முறியடித்து விட்டது என்ற ஆத்திரத்திலேயே இந்த கரிந்து கொட்டல்கள் நடந்து வருகின்றன.

ஜி.பிரகாஷ் ஒரு பாலியல் நடத்தை பிறழ்வுள்ளவர் என்று தெரிந்தும், பொறுப்பான பதவியொன்றிற்கு அவரை நியமிக்க ந.வித்தியாதரன் முயன்றதற்கு ஒரேயொரு காரணம் தான்.. தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான கோபம்.

ஆரம்பத்தில் பாராளுமன்றம், பின்னர் வடக்கு முதலமைச்சர், இறுதியாக யாழ் மாநகரசபை மேயர் என அவர் கண்ட கனவுகளை தமிழரசுக் கட்சியினர் தகர்த்து விட்டனர். இதனால் சம்பந்தன், மாவை, சுமந்திரன் அணி மீது அவர் கடுமையான கோபத்தில் இருக்கிறார்.

கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, தமிழரசுக்கட்சிக்கு குடைச்சல் கொடுக்க வேண்டுமென்பதே அவரது திட்டம்.

இந்த சமயத்தில் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்குள் தவிசாளர் குழப்பம் எழுந்தது. அது புளொட்டிற்கு வாக்களிக்கப்பட்ட சபை. ஆனால் தமிழரசுக்கட்சியின் குழப்ப அணியொன்று அதில் சிக்கலை கொடுக்க, அதை சாதகமாக பயன்படுத்த வித்தியாதரன் நினைத்தார்.

புளொட்டிற்கு வாக்களிக்கப்பட்ட சபையில் தமிழரசுக்கட்சி அணி வெற்றி பெற்றால், அதிருப்தியடைந்த புளொட்- தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும், அல்லது வெளியேற்றலாமென்பதே, ஜி.பிரகாஷ் முன்னிறுத்தப்பட்டதன் பின்னாலிருந்த திட்டம்.

இதற்காக பிரதேசத்தில் இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுடன் பிரகாஷ் அணி பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களும் பிரகாஷை ஆதரிக்க சம்மதித்தனர்.

எல்லாம் சரியாக இருந்த சமயத்தில், ஒரேயொரு தொலைபேசி அழைப்பு எல்லாவற்றையும் குழப்பிவிட்டது. அந்த தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியவர்- வித்தியாதரன்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்ட வித்தியாதரன், ஜி.பிரகாஷ் அணிணை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அந்த உரையாடலில், வித்தியாதரனின் கோரிக்கையை மணிவண்ணன் மறுக்கவில்லையென கூறப்படுகிறது. எனினும், தமிழ் பக்கத்தால் அதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

தமது பிரதேசசபை உறுப்பினர்கள் பிரகாஷை ஆதரிக்க போகிறார்கள் என்ற தகவல் தெரிந்ததும், உசாரடைந்த த.தே.ம.முன்னணியினர்- உறுப்பினர்களை தொடர்பு கொண்டு, த.தே.கூட்டமைப்பின் எந்த வேட்பாளரையும் ஆதரிக்ககூடாதென அறிவித்தனர்.

அதுவரை வடக்கில் நடந்த வேறெந்த சபை தவிசாளர் தெரிவையும் கண்காணிக்க சென்றிருக்காத த.தே.ம.முன்னணியின் செயலாளர் கஜேந்திரன், அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியொர் சுன்னாகத்திற்கு நேரில் சென்று, அமர்வை கண்காணித்தனர்.

கட்சி முடிவை மீறி யாராவது வாக்களித்தால், கூட்டம் முடிந்ததுமே கட்சியை விட்டு நீக்கும் கடிதம் தரப்படும் என எச்சரித்தே, முன்னணியின் உறுப்பினர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.

இறுதியில் சதிக்குழு உறுப்பினர் ஜி.பிரகாஷ் மண் கவ்வினார்.

தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டும், மணிவண்ணன் ஆதரவளிக்கவில்லையென்பதே வித்தியாதரனது ஆத்திரம். இதனால் கடந்த சில நாட்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை கடுமையாக சாடி எழுதி வருகிறார்.

(நன்றி…. “பேஜ் தமிழ்”)

சுன்னாகம் பிரதேசசபையில் பரபரப்பு; அம்பலத்துக்கு வந்தது, “ஊழல் பேர்வழியான” ஜி.பிரகாஷ் என்பவரின் தில்லுமுல்லு..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − two =

*