;
Athirady Tamil News

பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் விடுதலைப் புலிகள்; இவர்களுக்கு (0) ”சைவர்” எனும் இலக்கத்தகடுகள்..! (படங்கள்)

0


பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் விடுதலைப் புலிகள்; இவர்களுக்கு (0) ”சைவர்” எனும் இலக்கத்தகடுகள்..! (படங்கள்)

விடுதலைப் புலிகள் இயக்கம், பல பிரிவுகளை கொண்டு இயங்கி வந்த நிலையில் தலைவர் பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் அனைத்து விடுதலைப் புலிகளும் இயங்கி வந்துள்ளதுடன், இவர்களுக்கு “சைவர்” (0) எனும் இலக்கங்கள் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனையே சில ஊடகங்கள் “சைவர்” படைப்பிரிவு என குறிப்பிட்டு உள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் பல பிரிவுகள இயங்கி வந்த நிலையில் ஒவ்வொரு பிரிவு படையணிகளுக்கும் தமிழ் எழுத்துக்களின் ஒரு எழுத்தை பதித்து அடையாளப் படுத்தியுள்ளதுடன் அந்த எழுத்துகள் ஒவ்வொரு படையணியை குறித்துக் காட்டியது அதாவது “ஜ” என்ற எழுத்து விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு என்பதாகும்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடி காண்காணிப்பில் (அனைத்து விடுதலைப் புலிகளும் இயங்கியதாகவும், இவர்களுக்கு “சைவர்” (0) எனும் இலக்கங்கள் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.

0:01 என்னும் இலக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் விடுதலைப் புலிகளின் பல்வேறு படையணிகள் இருந்த போதும் அவை ஒவ்வொன்றிலும் எத்தனை விடுதலைப் போராளிகள் இருந்தார்கள் என்பது இதுவரை வெளிவராத இரகசியமாக காணப்படுகின்றது.

இறுதி யுத்தம் நடைபெற்ற நந்திக்கடல் பகுதியில் இருந்து இன்று மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சைவர் பிரிவு இலக்கத்தகட்டில் 0:22249 என்று குறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் முறையே 0:01 (பிரபாகரனின்) தொடக்கம் 0:22249; போராளிகள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் இருந்துள்ளார்கள் என்பது வெளிச்சமாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*