;
Athirady Tamil News

விடுதலைப் புலிகளின் பாணியிலேயே, வவுனியா நகரசபையை கைப்பற்றியது, ஈ.பி.ஆர்.எல்.எவ்! -நடந்தது என்ன?

0


விடுதலைப் புலிகளின் பாணியிலேயே நகரசபையை கைப்பற்றியது, ஈ.பி.ஆர்.எல்.எவ்!

வவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக்கூட்டணி இன்று கைப்பற்றியுள்ளது. இந்த நகர்வை அவர்கள் கிட்டத்தட்ட ஒரு கெரில்லா தாக்குதல் போலவே நிகழ்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவிசாளரை நிறுத்தும் திட்டம் தம்மிடம் இறுதிவரை இல்லையென்பதை போல காண்பித்து, சபா மண்டபத்திற்குள் நுழைந்ததும் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தவகையான நகர்வுகளிற்கு பெயர் பெற்ற ரிசாட் பதியுதீனும் அவர்களுடன் கைகோர்க்க, வவுனியாவில் உள்ள வயதான தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் மொத்தமாக மண்கவ்வியுள்ளனர்.

நேற்றிரவு தமிழ் பக்கம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய பேச்சுக்களில் சிவசக்தி ஆனந்தன் நேரடியாக பங்குபெற்றவில்லை.

மாறாக கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும், எல்லா தலைவர்களும் சந்திக்க வேண்டுமென நிபந்தனை விதித்தார். அதை கூட்டமைப்பின் தலைவர்கள் ரசிக்கவில்லை. ஆகவே, போகவில்லை.

கூட்டமைப்பின் தலைவர்கள் பேச்சிற்கு வரவில்லை, அதனால் நாம் மாற்றுவழியை கையாண்டோம் என காண்பிக்க, அந்த நகர்வை அவர்கள் செய்யலாமென நேற்று எச்சரித்திருந்தோம். இன்று அதுதான் நடந்தது.

நகரசபை தலைவர் பதவி தமக்குத்தான் என்றுதான் கூட்டம் ஆரம்பிக்கும் வரையும் த.தே.கூ நினைத்திருந்தது. ஆனால் ரிசாட் பதியுதீன், மற்றும் சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்களுடன் இரகசிய திட்டமொன்றை தீட்டி, அதை கச்சிதமாக முடித்துள்ளது சிவசக்தி ஆனந்தன் தரப்பு.

வவுனியா நகரசபை தவிசாளராக தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமன் தெரிவாகியுள்ளார். அவருக்கு 11 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் சேனாதிராசாவிற்கு 9 வாக்குகளும் கிடைத்தன.

வவுனியாவில் ஐ.தே.கவின் நேரடி வேட்பாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தார். ரிசாட் பதியுதீனின் கீழ் ஐ.தே.கவின் கீழ் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் த.வி.கூவை ஆதரித்தனர். சுதந்திரக்கட்சி மொத்தமாக த.வி.கூவை ஆதரித்தது. ஈ.பி.டி.பியும் த.வி.கூவை ஆதரித்தது.

பிரதி தலைவர் தெரிவிலும் இதே கூட்டணிதான் நீடித்தது. பிரதி தலைவர் சுதந்திரக்கட்சிக்கும், ஐ.தே.கவிற்கும் சுழற்சி அடிப்படையில் என்ற உடன்பாட்டின் அடிப்படையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டதாக தெரிகிறது.

பிரதி தலைவராக சுதந்திரக்கட்சியின் குமாரசாமி தெரிவானார். அனைத்து வாக்கெடுப்புக்களும் பகிரங்கமாகவே நடந்தன.

மன்னார் மாந்தை பிரதேசசபை தவிசாளர் தேர்வில் என்ன நடந்ததென்பதை நேற்றிரவு குறிப்பிட்டு, ஒரு எச்சரிக்கையை தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது.

த.தே.கூ உடன் இணக்கமான பேச்சை இறுதிவரை நடத்தி, கூட்டமைப்பை சுதாரிக்க விடாமல் செய்து, இறுதிநேரத்தில் அதிரடி தாக்குதல் நடத்தும் உத்தியையே (அனேகமாக விடுதலைப்புலிகளின் பாணி) கையாண்டார்கள்.

மன்னாரில் இந்த பேச்சுக்களை கையாண்டு, கையை சுட்டுக்கொண்ட ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றிரவு கூட்டமைப்பின் தலைவர்களிடம் தனது அனுபவத்தை குறிப்பிட்டு, எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென குறிப்பிட்ட தகவலையும் இந்த சமயத்தில் குறிப்பிடுகிறோம்.

யாழ்ப்பாணத்தில் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்த த.தே.கூ, வவுனியாவில் மட்டும் ஏன் திடீர் புனிதர் வேடம் போட்டது என்பது வவுனியா நகரசபை த.தே.கூ உறுப்பினர்களின் கோபம்.

தவிசாளர் தேர்விற்கு கண்காணிப்பு விஜயம் செய்த சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் ஆகியோரை மொய்த்த உறுப்பினர்கள் இதை குறிப்பிட்டு தர்க்கத்தில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

வவுனியா நகரசபை: ஐ.தே.க, சு.க ஆதரவுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் கைப்பற்றியது!

வவுனியா நகரசபை தவிசாளராக விடுதலைக்கூட்டணியின் கௌதமன் தெரிவாகியுள்ளார். அவருக்கு 11 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் சேனாதிராசா 9 வாக்குகளையும் பெற்றார்.

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தேர்வு இன்று காலை 10.00 மணிக்கு வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடந்தது.

இதன்போது, பகிரங்க வாக்கெடுப்பா, இரகசிய வாக்கெடுப்பா என்பதை தீர்மானிக்க நடந்த வாக்கெடுப்பில், பகிரங்க, இரகசிய வாக்கெடுப்பிற்கு அதிக வாக்குகள் கிடைத்ததன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடந்தது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சேனாதிராசாவிற்கு ஆதரவாக 9 வாக்குகளும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனிற்கு 11 ஆதரவாக வாக்குகளும் கிடைத்தன. இதனடிப்படையில் கௌதமன் தவிசாளராக தேர்வானார்.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமனிற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். தமிழரசுக்கட்சியின் சேனாதிராசாவிற்கு ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஆதரவளித்தார்.

வவுனியா நகரசபை உபதலைவர் சு.கவிடம்!

வவுனியா நகரசபை உபதலைவராக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் குமாரசாமி தெரிவாகியுள்ளார். அவரை தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஆதரித்தது.

அவரை எதிர்த்து போட்டியிட்ட புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் சந்திரகுலசிங்கம் (மோகன்) 9 வாக்குகளையே பெற்றார். குமாரசாமி 11 வாக்குகளை பெற்றார்.

சபையை இழந்த கோபம்- த.தே.கூ உறுப்பினர்கள் களேபரம்!

வவுனியா நகரசபையில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. சபையை இழந்த த.தே.கூவின் உறுப்பினர்கள் தமது கட்சி முக்கியஸ்தர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

யாழ்ப்பாணத்தில் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து விட்டு, வவுனியாவில் ஏன் எம்மை கை விட்டீர்கள்? என அங்கு வந்திருந்த த.தே.கூவின் எம்.ஏ.சுமந்தரன், செல்வம் அடைக்கலநாதன், சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் ஆகியோருடன் தர்க்கப்பட்டனர்.

சுமந்திரன் உடனடியாக அந்த இடத்திலிருந்து கிளம்பி சென்று விட்டார். சிவாஜிலிங்கத்துடன் சிறிது நேரம் தர்க்கம் நீடித்தது.

இதேவேளை, த.வி.கூட்டணிக்கு ஆதரவளித்த ஈ.பி.டி.பி உறுப்பினரையும் தூசண வார்த்தைகளால் திட்டி, முரண்பட்டனர்.

இதேவேளை, ஐ.தே.கவின் பெண் உறுப்பினரை ரிசாட் பதியுதீன் தரப்பினர் கடத்தி சென்றே ஆதரவாக வாக்களிக்க வைத்ததாக, ஐ.தே.கவின் வவுனியா அமைப்பாளர் அங்கு பரபரப்பு குற்றம் சுமத்தினர்.

ஆனால் அங்கு வந்த ரிசாட் பதியுதீனின் தம்பி அதை நிராகரித்து, குறிப்பிட்ட பெண் வேட்பாளரை ஊடகங்களிடம் பேச செய்தார். அந்த குற்றச்சாட்டை அந்த பெண்ணும் மறுத்தார்.

இதன்பின் ரிசாட் பதியுதீனின் தம்பிக்கும், ஐ.தே.கவின் அமைப்பாளருக்குமிடையில் கைகலப்பு ஏற்படும் நிலையேற்பட, அங்கிருந்தவர்கள் நிலைமையை சமாளித்தனர்.

**** இதுதொடர்பான மேலதிக செய்திகள், படங்கள், வீடியோக்கள் யாவும், “அதிரடி” இணையத்தின் நிருபர்களினால், இன்னும் சிறிதுநேரத்தில் “அதிரடி”யில் பதிவேற்றம் செய்யப்படும்…

** தொடர்புபட்ட செய்திகளுக்கு….

வவுனியா நகரசபை; தவிசாளர் தமிழர் விடுதலை கூட்டணி கௌதமன், உப தவிசாளராக சுதந்திரக்கட்சி குமாரசுவாமி..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*